அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம்

அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம்

அனைவருக்கும் வணக்கம்.
அட்சயலக்ன பத்ததி ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் பற்றி பேச போகிறோம்.
ஏன்னா? மருத்துவம் என்பது நிறைய பேருக்கு தேவை படக்கூடிய ஒரு விஷயமாகவே இருக்கு.
ஏன்னா நம்ம உடம்பில் எந்த பாகத்தில் என்ன பிரச்சனை என்றாலும் நாம் ஜாதகத்தை பார்க்க ஆரம்பிக்கிறோம்.

அதனுடைய விளைவுகள் என்ன?
அது எப்படி இருக்கும்?
ஒரு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தாலும் செய்யலாமா வேண்டாமா அப்படிங்கிற முடிவு எடுப்பதற்கு எல்லாம் இந்த ஜோதிடம் நமக்கு இன்றியமையாத ஒரு விஷயமாக இருக்கு.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் உங்க எல்லாருக்கும் தெரியும் நல்ல accurate ஆன
பலன்களை தரக்கூடியதில் ரொம்ப சிறப்பான பலன்களை தருகிறது.

இதில் மருத்துவ ஜோதிடமும் நமக்கு மிகவும் அவசியமானது,
ஆனால் இன்றைக்கு உள்ள காலகட்டங்களில் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வதில் அதிக சிரமமான சூழ்நிலைகளை கொடுத்துட்டு இருக்கு.

என்ன உணவு முறைகளும் சரி, நம்முடைய உடல் தேவைகளை கவனித்துக் கொள்வதற்கு கால அவகாசமும் இல்லை,
அவசரமான உலகத்தில் நாம் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்காக கொஞ்சம் செலவு பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அந்த ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எந்த கிரகங்களோடு எந்த மாதிரியான சூழ்நிலைகள் சம்பந்தப் படும் பொழுது நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் அப்படிங்கறத பல வருடங்களாக ஆய்வுகள் மேற்கொண்டு ஒவ்வொரு நோய்க்கான காரணங்கள், காரணிகள் எந்த கிரகத்தினோடு இணைவு ஏற்பட்டால் அவங்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் வரும், அப்படிங்கற மாதிரியான விஷயங்களெல்லாம்
திரு பொதுவுடைமூர்த்தி ஐயா, இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கியவர்.
ஆய்வு செய்து நிறைய விஷயங்களை நமக்கு கொடுத்து இருக்காங்க.

இந்த நோய்களைப் பற்றியும்,
நோயினுடைய தன்மைகள் பற்றியும்,
அதற்கு எந்தெந்த காரகங்கள்,
எந்தெந்த கிரகங்கள்,நமக்கு அந்த நோய்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகிறது, அதற்கு நம் தடுப்பு முறைகள் என்னென்ன பண்ணிக்கணும்,
இந்த ஒரு விஷயம் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்தால் அது வராமல் தடுப்பதற்கும் அல்லது அது வந்தபிறகு நாம் என்னென்ன பரிகாரங்கள் செய்யணும், என்னென்ன மருத்துவங்கள் எடுத்துக் கொள்ளணும், என்பதை நாம் எளிதாக இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்பது ஒவ்வொருவரும் உணர்ந்து அவங்க அவங்களே பார்த்து சரி செய்துக் கொள்ளக்கூடிய ஒரு ஜோதிட முறையாக இன்றைக்கு வளர்ந்து கொண்டு இருக்கு.

ஏன்னா ? வீட்டுக்கு ஒரு ஜோதிடர். பொதுவுடை மூர்த்தி சாருடைய ரொம்ப முக்கியமான ஒரு குறிக்கோளாக இருக்கு.
அதனால் நிறைய Class எடுத்துட்டு இருக்காங்க.
இந்த ஜோதிட துறையில் இன்னும் தேடல்கள் நுணுக்கமாக ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க.

அதில் மருத்துவ ஜோதிடத்திற்காக தான் நிறைய நேரம் செலவு செய்றாங்க. அதனால் தான் நிறைய பேருக்கு ஜோதிடம் பார்ப்பதற்கு அவகாசம் இல்லாமல் போகிறது.

இந்த மருத்துவ ஜோதிடத்தில் என்னென்ன எல்லாம் தெரிந்து கொள்ள முடியும்.
இப்போ ஒருவருக்கு தைராய்டு வருது அந்த தைராய்டுக்கு என்னென்னவெல்லாம் பண்ண முடியும்?
அந்த காரணிகள் ஏன் கெட்டுப் போகிறது?
அந்த தைராய்டு சுரப்பிகளில் எதனால் பிரச்சனை ஏற்படுகிறது?
அது எப்படி பிரச்சனைகளை உண்டாக்குகிறது?
அதற்கு என்னென்ன கிரகங்கள் காரணமாக அமைகிறது?
அதை சரி செய்வதற்கு எந்த கிரகம் உறுதுணை செய்யும்?
நம்ம உடம்பில் எந்த கிரகத்தினுடைய தன்மைகளை எந்த சுரப்பியை அதிகப்படுத்திக்கனும், என்கிற விஷயத்தை எல்லாம் ரொம்ப நுணுக்கமாக ஆய்வு செய்து இருக்காங்க.

அதேபோல் பாராதைராய்டு எப்படி வருகிறது,
அந்தப் பாராதைராய்டு வேலை என்ன,
ஏன்னா? ஒரு நோய்கள் என்று எடுத்துக்கொண்டால் ஒரு உறுப்பை பற்றி சொல்லி ஆகணும்.
நம் உடலில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு பாகங்களுக்கும் நம்முடைய கடமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இயந்திரம் என்பது மனித உடல் மாதிரிதான்.
நல்லா ஓடுறவரையும் தான் அதனுடைய மதிப்பு,
என்றைக்கு சிறிய பாதிப்பு ஏற்படுகிறதோ அன்றைக்கு நாம் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைய வேண்டியதாக இருக்கும்.

அந்த இயந்திரத்தில் எந்த பாகம் பழுது படப் போகிறது என்று தெரிந்தால் அதை தடுக்க வேண்டிய தடுப்பு முறைகளை நாம் எளிதாக தெரிந்துகொண்டு செய்தால் அது சுலபமாக இருக்கும்.

நமக்கு என்ன பிரச்சனைகள் வரப்போகிறது, அதை எப்படி சரி செய்து கொள்ளலாம்,
நாம் தெரிந்து அதை உணர்ந்து செய்தால் நம்மை நாமே சரி செய்ய முடியும்.
அதற்கு ஒரு சுலபமான வழியாக இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் என்பது நமக்கு ரொம்ப ரொம்ப useful ஆக இருக்க போகிறது.

ஏன்னா? நம்முடைய உடல் காரணிகள் அத்தனையும் ஏதோ ஒரு கிரகங்கள் செயல்படுத்தக் கூடிய ஒரு பொறுப்பில் இருக்கு.

இந்த கிரகத்தோடு இந்த கிரக இணைவுகள் சேர்ந்தாலோ அல்லது நோய் ஸ்தானத்தின் அதிபதியோடு சம்பந்தப்பட்டாலோ நமக்கு ஆரோக்கியத்தில் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்.

இதற்கு அறிவியல் சிகிச்சை வேண்டுமா, இல்லை அலோபதியில் சரி செய்ய முடியுமா,
இல்லை ஆயுர்வேதத்தினால் சரிசெய்ய முடியுமா,
இல்லை சித்தா எடுக்கணுமா, யோனி எடுக்கணுமா,
இந்த மாதிரி நிறைய மருத்துவ முறைகளில் எதைப் பின்பற்றினால் நாம் எளிதாக நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்,
ஒரு அற்புதமான ஜோதிட முறை தான் இந்த
அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிட முறை.

நோய்களைப் பற்றியும் சார் பேச போறாங்க.
அதை எந்த கிரகங்களோடு தொடர்புபடுத்தி பார்க்கணும் என்பதை சொல்ல இருக்காங்க.
தொடர்ந்து நீங்க பாருங்க, உங்களுக்கு ஏற்படக்கூடிய நோய்என்ன,
அதற்கு எந்த மாதிரி சிகிச்சை எடுக்குறீங்க ,
எந்த வருடத்தில் நோய் ஆரம்பித்தது,
எப்போ உணர்திங்க,
என்பதை பின்னோட்ட பதிவுகளாக உங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த வருடம் கொடுத்து உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு, அந்த பிரச்சனை எப்பொழுது ஆரம்பித்தது, என்பதை பதிவு செய்தால் அது எங்களுடைய மருத்துவ ஜோதிடத்திற்கு ஆய்வு ஜாதகத்துக்காக நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

இது எல்லோருக்கும் பயனுள்ள பகுதியாக இந்த ஜோதிட முறை இருக்கும். அதை புரிஞ்சிப்பிங்க. அதை பற்றி நிறைய வீடியோக்கள் சார் பேச இருக்காங்க. தைராய்டு சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது, ஒரு மனச்சிதைவுக்கு, மனதில் உள்ள பிரச்சனைகளுக்கு என்ன காரணம் உடல் மட்டும் காரணமா மனது மட்டும் காரணமா இதை எப்படி நாம் பிரித்துப் பார்ப்பது ,மூளை என்றால் அந்த தலைப்பகுதியில் என்னென்ன விஷயங்கள் எல்லாம் இருக்கு அது ஒரு மருத்துவரே ஆச்சரியப்படக் கூடிய அளவில் மூர்த்தி சாருடைய ஆய்வுகள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும்.கண்டிப்பாக பெரிய அளவில் பயன்படும் .

அட்சய லக்ன பத்ததியில் 18 Volume எழுதி வெளியிடுறாங்க.அதில் மருத்துவ ஜோதிடம் என்ற நூல் முடிவு நிலையில் இருக்கு. கண்டிப்பாக அந்த நூல் வெளி வரும்பொழுது உங்கள் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப பயனுள்ள நூலாக அமையும்.
நம் முடைய உடல் கூறுகளை அங்கம் அங்கமாக பிரித்து எந்தந்த கிரகம் ஆதிக்கம் செலுத்தும், அது எந்த கிரகத்தினுடைய இணைவு இருந்தால், சேர்க்கை இருந்தால் எந்த நேரத்தில் அதன் தாக்கம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளகூடிய ஒரு அரிய பொக்கிஷமாக அட்சய லக்ன பத்ததியின் மருத்துவ ஜோதிடம் Book உங்களுக்கு சிறந்த வழிக்காட்டியாக இருக்கும்.

நன்றி

https://youtu.be/4RryvGGhenc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *