ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
அட்சய லக்ன பத்ததி முறையில் நிறைய விஷயங்களை ஆய்வு செய்கிறோம்.

இன்றைக்கு அட்சய லக்ன பத்ததி முறை மூலம் ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?
அட்சய லக்கனம் என்பது ஒரு லக்னம் நகர்வது என்பது எல்லோருக்கும் தெரிந்தது. ஜென்ம லக்னம் மேஷம்,
யாரோ ஒருவருக்கு மட்டும் அந்த சூத்திரம், அந்த வழிமுறைகள், தெரிந்து வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே இருப்பார்.
ஆனால் கடவுள் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பார், வரம் கொடுப்பார், அதை தெரிந்து நாம் செயல்படுவது நம் கையில் தான் உள்ளது.

பூட்டும், சாவியும் வெவ்வேறு கையில் இருக்கும் அதை இணைப்பது தான் நம்முடைய வாழ்க்கை முறை.

நம்முடைய எண்ணங்களும், செயல்பாடுகளும் இணைந்து செயல்படும் பொழுது காலங்கள் நமக்கு வழி கொடுக்கும்.
இந்த காலம் தான் நம்முடைய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை.

காலத்தில் ஏற்படக்கூடிய செயல்முறைகள் சரியாக இருந்தால் ஜெயித்து விடுவார்கள்.
இடத்திற்கு தகுந்த மாதிரி நம்முடைய பொருளையும்,நம்முடைய லாபத்தையும்,நம்முடைய வழிமுறைகளும் மாற்றினால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

ஒருவர் மட்டும் ஜெயிப்பதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையின் வழிமுறைகளை தெரிந்து வைத்திருப்பார்கள்.

மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு
வயது 29.
இப்பொழுது மிதுனலக்னம்.
மிதுன லக்னத்தின் 2ம் அதிபதி சந்திரன்.மேஷ லக்னத்திற்கு 2ம் அதிபதி சுக்கிரன்.சுக்கிரனையும் ,சந்திரனையும் நினைத்து வழிபட வேண்டிய விஷயம். இரண்டுமேபெண் தெய்வம் ஆக இருக்கு. மகாலட்சுமி, பத்மாவதி தாயார்.
அப்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பெருமாள் சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு வெள்ளிக்கிழமை,திங்கட்கிழமை செல்லவேண்டும்.
திங்கட்கிழமை சோமவார நாள் நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதும் சிவபெருமான் இல்லை தாயார் சன்னதிக்கு செல்லலாம்.
காலத்திற்கு தகுந்த மாதிரி இந்த தெய்வத்தை வணங்கினால் பலன் கிடைக்கும்.

நம்முடைய வாழ்க்கையில் செலவு செய்யக் கூடிய வழிமுறைகளை பொருத்து பணம் நம்மிடம் வந்து கொண்டு இருக்கும்.

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன், சந்திரன் என்பது வெண்மை, வெள்ளை என்று வரும்.
வெள்ளை கிளாஸ் டம்ளரில் தண்ணீர் வைத்து வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை உங்களுக்கு தெரிந்த ஸ்லோகத்தை கூறி அந்த தண்ணீரை பருகினால் எளிதாக பணம் சேரும்.

சுக்கிரனும் ,புதனும் சேரும் பொழுது கண்டிப்பாக அந்த நாளில் நீங்கள் பணம் பற்றி பேசி இருக்க வேண்டும், பணம் வாங்கி எண்ணியிருக்கலாம் ஏதாவது ஒரு விஷயம் வாழ்க்கையில் நடந்து இருக்கும்.
இந்த மாதிரி ஒவ்வொரு 12 லக்னத்திற்கும் மேஷ ராசியிலிருந்து மீனம் ராசி வரை பலன் எடுக்க வேண்டும்.

“வழி தெரியாமல் நாங்கள் தேடலே ஆனால் வழி தெரியல” என்பதுதான் இங்கு பொருள்.
வீட்டு தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை சந்திர ஹோரையில் வழிபாடுகள் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இந்த நாட்களில் சந்திரனும் ,சுக்கிரனும் சம்பந்தப்படும்போது பணம் வந்திருக்கும்.

ஜோதிடர்களுக்கு மட்டும் இல்லாமல்
பொது மக்களுக்கும் இந்த அட்சய லக்ன பத்ததி நல்ல பலன்களை கொடுக்கும்.
நல்லதொரு நிகழ்வு அமையட்டும்.
நன்றி, வணக்கம்.

One Reply to “ஒரு ஜாதகருக்கு பணம் எப்படி வரும்?”

  1. Very useful messag .very thank you sir. Narpavi. I am always very intresting learning astrology .Narpvi. your fan sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *