செக்கு இருந்த இடத்தில் வீடு கட்டலாமா

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். கேள்வி ஊரில் செக்கு இருந்த இடத்தை வாங்கக்கூடாது என்கிறார்கள். ஏன் இது வாங்கக் கூடாதா? வாங்கலாமா? ஊரில் செக்கு இருந்த இடத்தை யாரும் வாங்க மாட்டார்கள். குறிப்பிட்ட ஒரு சில நபர்கள் தான் வாங்குவார்கள். செக்கு இருந்த இடத்தில் வீடு கட்டினால், செக்கு சுழலும் கஷ்டப்படும் அந்த மாதிரி இடத்தில் வீடு கட்டினால் ஒரு சந்தோஷமான நிலையை குறிக்காது. அதை வாங்க மாட்டார்கள். அந்த இடத்தில் வீடு கட்டமாட்டார்கள். செக்கு இந்த இடத்தில் இருந்தது, இந்த இடத்தில் இல்லை என்று தெரிந்துகொள்ள அந்த நிலத்தை சுற்றி சுத்தி செய்ய வேண்டும். சுத்தி என்பது மண்ணில் இருக்கக்கூடிய சல்லிய தோஷத்தை நீக்குவது. அந்தக் காலத்தில் நவதானியங்களை தெளித்து விட்டு உழுவார்கள். சிலபேர் அந்த இடத்தில் மாடு கட்டிமையாக்குவார்கள். அதுபோல் செய்து வந்த இடத்தை சுத்தி செய்வார்கள். சுத்தி என்பது அந்த இடத்தை சமநிலைப்படுத்துவது சாந்தப்படுத்துவது,அந்த இடத்தை சுத்தப்படுத்துவது. இன்றைக்கு நாம் அவசர உலகத்தில் இருக்கிறோம். அந்த இடத்தை சுற்றி எலும்புகூடோ அல்லது புதைகுழியோ ஏதாவது ஒரு பிரச்சனை அந்த இடத்தில் இருந்தால் ALP க்கு 4ம் இடத்தில் ராகு சம்பந்தப்பட்டு இருந்தால் கண்டிப்பாக வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். இதை அட்சய லக்ன பத்ததி ஜோதிட மென்பொருளில் இரண்டு பகுதியாகப் பிரித்து உள்ளேன். வீடு சம்பந்தப்பட்ட கேள்வி என்றால் 4ம் பாவகத்திற்கு மேல் சிகப்பு கலர் இருக்கா? 4ம் பாவகத்திற்கு கீழ் சிகப்பு கலர் இருக்கா? 4ம் பாவகத்திற்கு கீழ் சிகப்பு கலர் இருந்தால் அந்த வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட குறைபாடு இருக்கும். வாஸ்து சம்பந்தப்பட்ட நிபுணர்களை அழைத்து சரி செய்யணும். ஜாதகருக்கு நேரம் நன்றாக இருக்கும்பொழுது வாஸ்து சம்பந்தப்பட்ட நிபுணர்களை அழைத்து சரியான வழிகாட்டுதல் கொடுப்பாங்க. ஜாதகம் ,தசா புத்தி நன்றாக இருந்தால் இதை மாற்றி வையுங்கள் என்று சொன்னால் உடனே மாற்றுவார்கள். அதில் ஒரு மாற்றம் உண்டாகும் அந்த மாற்றத்தை பிடித்து ஏணிப்படியாக அந்த ஜாதகர் முன்னேறுவார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அதனால் மனை என்பது மிக மிக பார்த்து சதுரமாக இருக்கிறதா, செவ்வகமாக இருக்கிறதா, நீள் வடிவமா,வடக்கும் தெற்கும் அருங்கோணம் ஆக இருக்கா, ரொம்ப ரொம்ப கவனமாக பார்க்கணும். கண்டிப்பாக மனை பார்க்கும்பொழுது நல்ல ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் நிலத்தில் தோஷம் இல்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய மற்ற பொருள்கள் மீது இருக்கும். பொருள்கள் மீது இருக்கும் தோஷம் மற்றொருவரிடம் தானமாக கொடுக்கும் பொழுது அதன் பிறகு அந்த ஜாதகர் சந்தோஷமாக இருப்பார். கண்டிப்பாக இதை உணரவேண்டும் உணரக் கூடிய அமைப்பு உள்ளது. உங்கள் ஜாதகத்தில் இப்படி அமைப்பு இருந்தால் அதை நாம் தான் மாற்றிக் கொள்ள வேண்டும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கண்டிப்பாக எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். Alp Astology வீடியோஸ் நிறைய உள்ளது. பாருங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் உருவாக வேண்டும். நன்றி.

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/Mw-8lbxUXu4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *