அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும்

Spread the love

அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நீங்கள் கொடுக்க கூடிய பிறந்த நேரம் சரியாக இருக்க வேண்டும்.
பிறந்த நேரத்தை சரியாக அமைத்தால் நாங்கள் சொல்லக்கூடிய பலன் சரியாக இருக்கும்.

அட்சய லக்ன பத்ததியில் எப்படி பிறந்த நேரத்தை வைத்து துல்லிதமாக சொல்லமுடியும் என்பதை ஆய்வு செய்கிறோம்.ஆய்வு முறைகள் எந்த அளவிற்கு துல்லிதமாக இருக்கிறது என்பதை எங்களால் உணர முடியும்.
ஏன்னா?
கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிடு செய்யும் பொழுது, இந்த ஜாதகம் இந்த கிரகங்களோடு ஒப்பிடும் பொழுது, இந்த தசாபுத்தி ஒப்பிடும்போது ,இந்த அட்சய லக்கனம் செல்லும் பொழுது, இந்த
லக்கன புள்ளி செல்லும் போது இது நடந்ததது அப்படின்னா? அந்த ஜாதகர் கொடுத்த 5 மணி 45 நிமிடம் சரி.
5 மணி 45 நிமிடம், 5 மணி 42 நிமிடமாக கணக்கிடப்பட்டால் 8 வது மாதம் 5 வது மாதம் ஆகும்.

கல்யாண தேதியை வைத்து எளிதாக கூறமுடியும்.பிறந்த தேதி, பிறந்த நேரம், கல்யாண தேதி இதை கொடுத்தால் 1, ,7 , ஜனன லக்னத்திற்கோ அட்சய லக்னத்திற்கோ சம்பந்தப்பட்டால் அவர்களுக்கு கல்யாணம் நடந்திருக்கும்.இல்லை என்றால் கல்யாணம் நடந்து இருக்காது. இதுதான் அட்சய லக்ன பத்ததியை பொருத்தவரை என்னுடைய ஆய்வு.

உதாரணமாக அட்சய லக்கனத்திலும் செல்லாமல், அட்சய புள்ளியிலும் செல்லாமல்,நேரத்தை ஒரு சில நிமிடங்கள் குறைத்து வைத்து அட்சய லக்ன பத்ததி மூலம் பலன் சொல்ல முடியும்.
இந்த மாதிரி ஒரு சில விஷயங்களை அட்சய லக்ன பத்ததி மூலம்தான் மிக துல்லிதமாக கூறமுடியும்.

இன்று எளிதாக அட்சய லக்ன பத்ததி மென்பொருள் மூலம் பிறந்த இடம் ,பிறந்த நேரம்,
பிறந்த ஊர், கல்யாண தேதி கொடுத்து உங்கள் ஜாதகத்தை எளிதாக ஆய்வு செய்யலாம்.

அட்சய லக்ன பத்ததியில் ஒரு சில விஷயங்களை வைத்து மாறின தூரம் எவ்வளவு சரியாக இருக்கு என்பதை நம்மால் உணர முடியும்.
கடந்த கால நிகழ்வுகள் சரியாக இருந்தால் மட்டும் தான் எதிர்காலம் பலன்களை நம்மால் சரியாக கூற முடியும்.
துல்லிதமாக மாற்றியமைக்கக்கூடிய முறை அட்சய லக்ன பத்ததியில் மிக எளிமையான முறை.

அட்சய லக்னபத்ததி முறையில் பிறந்த ஊர் ,பிறந்த இடம், பிறந்த தேதி ,பிறந்த நாள், பிறந்த நேரம் வீட்டில் கடைசியாக நடந்த சுப நிகழ்வுகள் , துயர சம்பவங்கள் இதை வைத்து ஜாதகம் உண்மையா? பொய்யா? என்பதை அட்சய லக்ன பத்ததி முறை மூலம் சரியாக கூறமுடியும்.
நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *