தெய்வ வக்ஞர்

Spread the love

பரிகாரம் என்பது, செய்வதும், தாம் முன்னின்று
செய்வதும் விளையாட்டா
ஜோதிடர் என்பவர் இதை மனதில் கொண்டு
செயல்பட வேண்டும்.

உருவாக்கும் பிரம்மாவும்,படிஅளக்கும்
பரமனும்,துஷ்ட்டர்களை அழிக்கும் விஷ்ணுவும்
இதில் பங்கு பெறுகின்றனர்.

பிரம்மன் உருவாக்கிய ஒரு ஜாதகத்தை எடுத்து
பொருத்தம் பார்க்கும் பொழுது இந்த ஜாதகம் சரியில்லை
என்று கூறும் பொழுது பிரம்மன் படைப்பு சரியில்லை
என்று ஆகிவிடுகிறது.

பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு உயர்த்துவதும்
தாழ்த்துவதும்,கிரகங்களுடைய வேலை.
இந்த கிரகங்களின் பணிகளை இடர்பாடு செய்யவும்,
சரிசெய்யவும்,ஆண்டவன் ஒருவனால்
தான் முடியும்.

அந்த கிரகங்கள் செய்யும் பணியை
ஜோதிடர்கள் இடர்பாடு செய்தால் ஜோதிடர்களின்
6,8,12 பாவங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

எனவே ஜோதிடர்கள் இறைபக்தியும்,கவனம்
பிசகாமலும்,பணம்மட்டுமே குறிக்கோள் இல்லாமலும்
இருக்க வேண்டும்.
அடுத்து ஜோதிடர்களின் 1,5,9,12 பாவங்கள்
வலுத்து இருந்தால் இவர் சொல்லும்
பரிகாரத்தால்,ஜோதிடர் சொல்லும் பரிகாரத்தால்
இடர்பாடு ஏற்படாது.

கவனம் அது கொள்க

மற்றவர்களுக்கும் பிரச்சனை தீர வழிவகுக்கும்

ஆக ஜோதிடர்கள் பரிகாரம் சொல்லும் போது
6,8,12 பாவங்கள் பணி செய்தாலும் 1,5,9,12 பாவங்கள்
வலுத்து பரிகாரம் சொன்னால் தெய்வம் செய்ய
வேண்டிய வேலையை வழிவகுத்து கொடுக்கும்.

அவரே தெய்வ வக்ஞர் ஆகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *