மகாசிவராத்திரி

Spread the love

மகாசிவராத்திரி வரலாறு

?மகாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
சிவராத்திரி என்றால் என்ன?
?சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியே சிவன் ராத்திரி. சிவராத்திரி என்பதில் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.
?இந்த நாளில் சிவன் கோவில்களுக்குச் சென்று வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். மாசி மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகாசிவராத்திரியாகும்.
சிவராத்திரி வரலாறு :
?மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை அதாவது சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
? சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை சிவன் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டுமென்று அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி தோன்றிய விதம் :
?ஒருமுறை பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள், உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள் பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
? சிவனாரை வழிபட்ட பார்வதியாள் இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார், அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகாசிவராத்திரி.

?புராணங்கள் போற்றும் மகாசிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால் துன்ப இருள் அகன்று சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும்.

மீள் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *