ஸ்ரீரமண மகரிஷி

Spread the love

*ஸ்ரீரமண மகரிஷி

*கேள்வி:நான் தியானம் செய்து வருகிறேன். ஆனால் அதில் முன்னேற்றம் இல்லை*.”

*பதில்:”முன்னேற்றம் இல்லை என்பது உனக்கு எப்படி தெரியும்? ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் என்பதை எளிதில் அறிய முடியாது*.”

*கேள்வி:”என் எதிர்காலம் எப்படி இருக்கும்?” பிரண்டன் மிக சாதாரணமான ஒரு கேள்வியைக் கேட்கிறார்*.

*பதில்:”நிகழ்காலத்தைப் பற்றியே தெரிந்து கொள்ள முடியாதபோது, எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதில் என்ன பயன்? இப்போதுள்ள உன்னைக் கவனி*.”

*கேள்வி:”உலகத்தை சுற்றி பல பிரச்சினைகள் உள்ளன. எதிர்காலத்தில் மக்கள் நட்போடு பழகுவார்களா அல்லது யுத்தத்தில் இந்த உலகம் முழுவதும் மூழ்கிப் போகுமா*?”

*பதில்:”இந்த உலகை படிப்பவனுக்கு இந்த உலகத்தைக் காப்பதற்கும் தெரியும் உலகத்தைப் படைப்பவனே காப்பான்; நீ அல்ல! எனவே, இதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை*.

*கேள்வி:”மகரிஷி, நான் சுற்றிப் பார்க்கிறேன் கடவுளுடைய கருணையைக் காண்பது அரிதாக இருக்கிறது*.

*பதில்:”நீ யாரென்று அறியாமல்”, உலகத்தைப் பற்றி அறிந்து என்ன புண்ணியம்? அதுவும் இல்லாமல், உன் சக்தியை உலக விவகாரங்களில் செலுத்தி ஏன் வீண் செய்கிறாய்? உன்னை நீ அறி. அப்போது, உலகம் பற்றிய தெளிவும் உனக்கு நிச்சயம் ஏற்படும்*.

*பதில்:”ஒருவன் உண்மையை அறிய வேண்டுமென்றால் அல்லது தன்னை அறிய வேண்டுமென்றால், காட்டுக்குப் போய் தனியே அமர்ந்து தவம் செய்ய வேண்டுமென்று யோகிகள் சொல்கிறார்களே இது உண்மைதானா*?”

*பதில்:”அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ கண்மூடி அமர்ந்து தியானம் செய்தால் போதும். அந்தத் தியானம் உன் மற்ற வேலைகளை மிகத் தெளிவாக்க உதவும். அதாவது, செய்கின்ற வேலைகளையெல்லாம் கூட தியான நிலையில் இருந்து செய்யமுடியும். தியானம் என்பது, ஒரு நாள் முழுவதும் வாழும் வாழ்க்கையாகிவிடும் தியானத்தின்போது இருந்த உணர்வை மற்ற வேலைகள் செய்யும்போது ஏற்படும்*.”

*கேள்வி:”இதனால் ஏற்படும் விளைவு என்ன*?”

*பதில்:”அப்போது உலகத்தின் மீதும், மற்றவர் மீதும் உன் மீதும் நீ கொண்டிருந்த கருத்துக்கள் மாறும்*.”

*கேள்வி:” ஒருவன் தன்னுடைய வேலைகளைச் செய்துகொண்டே ஞானம் அடையலாம் என்று சொல்கிறீர்களா*?”

*பதில்:ஏன் முடியாது? அப்போது, ஒருவன் எந்த வேலையையும் தான் செய்வதாக நினைக்க மாட்டான்*. *அதில் உள்ள லாப- நஷ்டங்களுக்கு அப்பால், எது சத்தோ அதில் மனம் லியித்திருக்கும். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்பது ஆரம்ப சாதகர்களுக்கு ஒதுக்கப்பட்டது. எல்லா நேரமும் தியானத்தில் இருப்பது என்பது இதனால் ஏற்பட்ட பிறகு, வாழ்க்கை வேறு விதமாக இருக்கும்*.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *