​ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான ஸ்தலங்கள்

Spread the love

ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான ஸ்தலங்கள்:

மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது;அப்படிப்பட்ட சாபத்தை அவர் தனது தவற்றினால் பெற்றுவிட்டார். மஹாவிஷ்ணு நம்மை காக்கும் கடவுள். நம்மை அவர் காப்பதற்கு உதவி புரிவது அவரது துணைவி மஹாலட்சுமி! அழிப்பவர் ருத்ரன்(சிவன் அல்ல) இங்கே அழிப்பது என்பது நம்மை அழிப்பது அல்ல. நமது கர்மவினைகளை அழிப்பது ருத்ரன். இந்த மும்மூர்த்திகளையும் நேரடியாக நிர்வகித்துவருபவரே ஸ்ரீகால பைரவர்!

காலம் என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருப்பதால் இவருக்கு கால பைரவர் என்று பெயர் வந்தது. எட்டுவிதமான பைரவர்களில் நம்மால் வழிபடக்கூடியவர் இரண்டே இரண்டு பேர்கள் மட்டுமே! ஒருவர் ஸ்ரீகால பைரவர், மற்றவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்!! இந்த இருவரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் எட்டு பைரவர்களையும் விடவும் உயர்ந்தவர்;

முருகக்கடவுளின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்களே அறுபடைவீடுகளாக இருக்கின்றன.திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையிலும் தமிழ்நாடெங்கும் முருகக்கடவுளின் அறுபடைவீடுகள் பரவிக்கிடக்கின்றன.

அதே போல, அட்டவீரட்டானங்கள் என்பது ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் ஆகும்.மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்தைச் சுற்றிலும் நான்கு வீரட்டானங்களும்,திருவாரூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,பண்ருட்டிக்கு அருகே ஒரு வீரட்டானமும்,தஞ்சாவூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,திருஅண்ணாமலைக்கு அருகே ஒரு வீரட்டானமும் அமைந்திருக்கிறது. சுமாராக நானூறு சதுர கி.மீ.தூரத்துக்குள் அட்டவீரட்டானங்களும் அமைந்திருக்கின்றன. இந்த அட்ட வீரட்டானங்களிலும் ஒன்றிரண்டு மட்டுமே பிரபலமான சிவாலயமாக அமைந்திருக்கிறது. அங்கே தினமும் சில ஆயிரம் பேர்கள் வந்து செல்லும் ஆலயங்களாக இருக்கின்றன.

இந்த அட்டவீரட்டானங்களிலும் ஸ்ரீகாலபைரவப்பெருமான் மூலஸ்தானத்தில் சிவபெருமானாகவே காட்சியளிக்கிறார்.இந்த அட்டவீரட்டானங்களின் வரலாறு பல நூற்றாண்டுகளாக பிரபலமடையவில்லை.

இந்த அட்டவீரட்டானங்களை முழுமையாக தரிசிக்க நான்கு நாட்கள் தேவைப்படும். 

ஒரு நாளுக்கு காலை ஒரு வீரட்டானம். மாலை ஒரு வீரட்டானம் வீதம் நான்கு நாட்களில் எட்டு வீரட்டானங்களுக்குச் செல்ல முடியும்.இவைகளில் பெரும்பாலானவை பிரதான சாலையிலிருந்து விலகியே இருக்கின்றன.ஸ்ரீகாலபைரவரை சிவனாக தரிசித்தே ஆகவேண்டும் என்ற வேட்கை/தாகம் யாருக்கு வருகிறதோ அவர்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.

முதன் முதலில் அப்படி தரிசிக்கும்போது நாம் என்ன வேண்டுகிறோமோ அந்த வேண்டுதல் உடனே நிறைவேறிவிடும் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உண்மை ஆகும்.நம்ப முடியவில்லையா? டெஸ்ட் செய்து பாருங்கள்.

அட்டவீரட்டானங்களும் அவைகளுக்கான வழித்தடங்களும்:

முதல் வீரட்டானம்=திருக்கண்டியூர்

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.

திருமூலப் பெருமானும்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு

நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்

தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)

மூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை.

இரண்டாவது வீரட்டானம்:திருக்கோவிலூர்

கோவல்நகர் வீரட்டம்,தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. திரு அண்ணாமலைக்கு அருகில் திருக்கோவிலூர் அமைந்திருக்கிறது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்

வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்

வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே(திருமந்திரம் 339)

மூலவரின் பெயர்:அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,மூலவளின் பெயர்:சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி!

மூன்றாவது வீரட்டானம்:திருவதிகை

பண்ருட்டிக்கும் சீர்காழிக்கும் இடையே அமைந்திருக்கிறது. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புரமாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமந்திரம் 343)

மூலவர்:வீரட்டானேஸ்வரர்

நான்காவது வீரட்டானம்:திருப்பறியலூர்

மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும்.அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும்.திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும்.

மூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்;

மூலவளின்பெயர்:இளங்கொம்பனையாள்

ஐந்தாவது வீரட்டானம்: திருவிற்குடி என்ற விற்குடி

திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.

எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்

தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற

அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமந்திரம் 341)

மூலவர்:ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி

ஆறாவது வீரட்டானம்:வழுவூர்

மிக எளிதாகச் செல்லக்கூடிய ஆனால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீரட்டானம் இது.ஏன் இப்படி நமக்கு மெய்சிலிர்க்கிறது என்பதற்கான காரணத்தை அறிய நமக்கு தகுந்த குரு இந்த பிறவியில் அமைந்தால் தெரியும்.இல்லாவிட்டால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான்.இவரை பார்த்த உடனே நமக்குள்ளே இருக்கும் அத்தனை அகங்காரமும் கரைந்து காணாமல் போய்விடும்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது.இந்த நிறுத்தத்தில் இறங்கி,சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம்.இவ்வ்வளவு பெரிய்ய்ய்ய கோவிலாக இருந்தும் கூட ஒரு நாளுக்கு பத்து பக்தர்கள் வருவதே அதிகம் போலும்!அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமிநாட்களில் உள்ளூர் பக்தர்கள் ஓரளவு கணிசமாக வருவதாகக் கேள்வி!!

ஏழாவது வீரட்டானம்:திருக்குறுக்கை

இருந்த மனத்தை இசைய இருத்திப்

பொருந்தி இலிங்க வழியதுபோக்கி

திருந்திய காமன் செயலழித்தங்கண்

அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம் 346)

மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்திலிருந்து சுமார் எட்டுகி.மீ.தூரம் பயணித்து,அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ.தூரம் சென்றால் உள்ளடங்கிய கிராமமான கொறுக்கைக்குள் அமைந்திருக்கிறது.

மூலவர்:வீரட்டேஸ்வரர் மூலவள்:ஞானாம்பிகை

காமம் சார்ந்த பிரச்னைகளால் கடந்த சிலபல வருடங்களாக படாத பாடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் இங்கே வந்து தொடர்ந்து வழிபட,வழிபட மனதில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் காணாமல் போகும்;முதல் தடவை வந்து சென்றதுமே நமது மனது பரிசுத்தமாகிவிடும் என்பதை உணரலாம்.

எட்டாவது வீரட்டானம்:திருக்கடவூர்

மூலத்துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று

காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமந்திரம் 345)

எப்போதும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து செல்லும் வீரட்டானம் இது;காரணம் இங்கே 60 ஆம் கல்யாணம் மிகச் சிறப்பாகவும்,காலம் காலமாகவும் நடைபெற்றுவருகிறது.இந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம்.

மூலவர்: அமிர்தகடேஸ்வரர் மூலவள்:அபிராமி

கொன்றாய் காலனை;உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு, மான் கன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள்

என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே(தேவாரம்)

“ ? *ஓம் நமசிவாய* ? “courtesyramachandralu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *