2ல் ராகு 8ல் கேது கவனமாக திருமணம் செய்யவேண்டும்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஜோதிடம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையில் பங்கு வகிப்பது எப்படி என்றால், காலையில் நாம் எழுந்தவுடன் இன்றைய ராசி பலன், நம்முடைய ராசிக்கு அன்றைய நாளில் தினபலன் பார்க்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும் தினபலன் பார்க்கிறோம் அதை என்றைக்காவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைபட்டு இருந்தால் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை மாறும். உங்கள் வாழ்க்கை வளமாக போகிறது. வாழ்க்கை புரிதலுக்கான காலம் வரப்போகிறது. உங்கள் வாழ்க்கையில் நீங்களே விளக்கேற்ற கூடிய அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கு என்பதை நீங்களே உணரனும். நம் வீட்டில் ஜோதிட புத்தகம் இருக்கும் பெயர், ராசி, திருமண பொருத்தம் புத்தகம் இருக்கும் இந்தப் புத்தகங்களை ஒரு 15 நிமிடம் படித்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு ஏதாவது நடந்திருக்கா என்பதை பாருங்கள். தினப்பலன் எப்படி சொல்கிறோம், கோச்சார கிரகங்கள் எப்படி எல்லாம் நகர்கிறது, சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, செவ்வாய், ராகு கேது இந்த கிரகங்கள் எப்படி நகர்கிறது, வான் வெளி மண்டலத்தில் இருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகள் மனிதனுடைய வாழ்க்கையை எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதை அழகாக புரிந்துகொள்ளுங்கள் நாளடைவில் உங்களை அறியாமல் இந்த கிரகங்கள் உடைய தன்மையை உணரும் பொழுது, ஆமாம் சார் இந்த காலகட்டம் எதிர்பார்த்த மாதிரி அமைப்பு இல்லை அதை உணரணும், நீங்கள் புரிந்து கொள்ளனும், ஜோதிட புத்தகத்தை வாங்கிப் படிங்கள். புரியவில்லை என்றாலும் படிங்கள், எப்பொழுதும் விளக்கு ஏற்றுங்கள், சாமி கும்பிடுங்கள், வாசலில் இந்த பொருளை கட்டுங்கள் இது எல்லாம் அந்த காலத்தில் தாத்தா பாட்டி சொல்லிக்கொடுத்த ஒரு விஷயம். வீட்டில் ஏதாவது ஒரு இயந்திரம் வைத்திருப்போம், ஏதாவது சாமி பூஜை செய்வோம், எந்த சாமி போட்டோவாக இருந்தாலும் உங்களுக்கு விருப்பமாக இருந்தால் வையுங்கள். சாமி கும்பிடுங்கள், சரணாகதி அடையுங்கள். கிரகங்களும் கடவுள்களும் தேவதைகளும் நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கு வழி காட்டுவார்கள். தெய்வங்கள் எல்லாம் உங்களுடைய வாழ்க்கையை வழி காட்டும். அதில் மாற்று கருத்து கிடையாது. இல்லை இந்த தெய்வத்தை வைத்து வணங்க பயம் உள்ளது என்றால் அதைக் கொண்டு கோயிலில் வைத்து விடுங்கள். இந்த இயந்திரம் கொடுத்தார்கள். அதை வைத்து வணங்க பயம் உள்ளது என்றால் அதையும் வைக்காதீர்கள் கோவிலில் கொண்டு வைத்து விடுங்கள். உங்கள் மனம் புரியவில்லை என்றால் உங்கள் மனம் பயப்பட்டால் கண்டிப்பாக அதை பக்கத்தில் உள்ள கோவிலில் வைத்து விடுங்கள். நீங்கள் அந்த ஜோதிடத்தை படித்துக் கொண்டால் உங்கள் வீட்டில் விளக்கேற்றி இருளை அகற்றுவது போல் உங்களுடைய மன இருளை அகற்றுவதற்க்கு ஜோதிடம் என்பது உங்களுடைய வாழ்க்கையை வழிகாட்டும். இதைப் படிக்கும் பொழுது உங்களுடைய தன்மைகளை உணர முடியும் அதான் படிக்க சொல்கிறேன். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு காரணிகள் இருக்கு. அதில் ஜோதிடமும் ஒரு அங்கம்தான். அதைப்பற்றி தெரிந்து கொண்டால் அந்த ஜோதிடத்தின் மூலமாக பல அங்கங்கள் உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும். நன்றி

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_number_9786556156

https://youtu.be/bQI7m3AFOKY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *