ஜோதிடவியல் மாநாடு

அனைத்துலக வானியல் மற்றும் ஜோதிடவியல் மாநாடு.
நாள் : 01.03.2015 (வரும் ஞாயிறு )
இடம் : குரு ஞானக் கல்லூரி, வேளச்சேரி,சென்னை.

 

11016075_715830341871429_2720593967961078118_n


கே‌ள்‌வி ப‌தி‌ல்-2

விடைகள்: 1) முதல் நட்சத்திரம்-அஸ்வினி, கடைசி நட்சத்திரம்- ரேவதி 2) ஆருத்ரா / திருவாதிரை 3) ரோஹிணி 4) முருகப் பெருமான், புத்தர் பெருமான் 5) திரு ஓணம் 6) சதயம் (சதய விழா) 7) தமிழ் பழமொழிகள்: அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானை எல்லாம் தங்கம் 8) ஆண்மூலம் அரசாளும் 9) கார்த்திகை 10) கிருஷ்ணன் 11) புனர் பூசம் 12) மிருகசீர்ஷம் 13) ரேவதி 14) சித்திரா நட்சத்திர பவுர்ணமி 15) சுவாதி நட்சத்திரம் 16) பூசம், புனர்பூசம் 17) அகஸ்திய நட்சத்திரம் 18) அருந்ததி 19) துருவன் 20) சப்த ரிஷி மண்டலம் 21 ) திரு ஓணம் (விஷ்ணு), திரு ஆதிரை (சிவன்)

கே‌ள்‌வி ப‌தி‌ல் -1

kl

1) 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் எது? கடைசி நட்சத்திரம் எது?

2)சிவனுக்குகந்த நட்சத்திரம் எது?

3)நிலவின் முகம் தேய்ந்து பிறையாகக் காரணம் சந்திரன், 27 பெண்களில் ஒருத்திக்கு சாதகமாக நடந்துகொண்டான். அந்த ஒருத்தி பெயர் என்ன?

4) வைகாசி விசாக நட்சத்திரம் வரும் பவுர்ணமியில் எந்த இருவருக்கு பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன?

5) மலையாளிகள் கொண்டாடும் முக்கியப் பண்டிகை எந்த நட்சத்திரத்துடன் தொடர்புடையது?

6) ராஜ ராஜ சோழன் தன் பிறந்த நட்சத்திரத்தன்று பெரியவிழா கொண்டாடினான். அந்த நட்சத்திரம் எது?

7) தவிட்டுப்பானை எல்லாம் தங்கம் தரும் நட்சத்திரம் எது?

8) அரசாளும் நட்சத்திரம் எது?

9) முருகனை வளர்த்த 6 பெண்களின் பெயருடைய நட்சத்திரம் எது?

10) ரோஹினி நட்சத்திரத்தில் பிறந்த இந்துக் கடவுள் யார்?

11) ராமர் பிறந்த நட்சத்திரம் எது?

12) மான் தலை என்று பெயர் உடைய நட்சத்திரம் எது?

13) பலராமனின் மனைவி பெயர் உடைய நட்சத்திரம் எது?

14) எந்த நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் மதுரையில் பெரிய திருவிழா நடைபெறும்?

15) எந்த நட்சத்திர நாளில் பெய்யும் மழை சிப்பியின் வாயில் விழுந்து முத்து ஆகும்?

16) ஜெமினி எனப்படும் நட்சத்திரத் தொகுப்பிலுள்ள இரண்டு நட்சத்திரங்களின் பெயர் என்ன?

17) தென் வானத்தில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு எந்தப் பிரபல முனிவரின் பெயர் சூட்டப்பட்டது?

18) கற்புக்கு அணிகலனாகத் திகழும் நட்சத்திரத்தின் பெயர் என்ன?

19) புகழ்பெற்ற ஒரு சிறுவனின் பெயரையுடைய நட்சத்திரத்தின் பெயர் என்ன?

20. பெருங் கரடிக் கூட்டம் என்று மேலை நாட்டார் அழைக்கும் நட்சத்திரத் தொகுப்புக்கு இந்துக்கள் கொடுத்த பெயர் என்ன?

21. எந்த இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் ‘திரு’ அடைமொழி உடையன?

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

ufiy

அன்னையெனும் சமயபுர அன்புருவே வா வா வா !
ஆனந்த மணிவிளக்கே அழகொளியே வா வா வா !!
இன்னவிருள் அகற்றிடுவோர் இன்னமுதே வா வா வா !!!.
ஈகை மனங்கொண்டோரின் இசை மலரே வா வா வா !!!!.
என்றெழைத்தவுடன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து பேரறிவான பேரொளியாய் ஒர் நாமம், ஒர் உருவம் ஒன்று இன்றி நிற்கும் பராசக்தி சிருஷ்டி முதலிய கிருத்தியங்களில் ஆற்றலும் அவ்வாற்றலையுடைய வளுமாக சேர்ந்து சரஸ்வதி, வைஷ்ணவி, ரௌத்ரீ, மாஹேஸ்வரி மனோன்மணி என்ற பெயர் பூண்டு ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி வடிவம் கொண்டு உயிர்களை உய்விக்க வேண்டும் எனும் பெருங்கருணையிலே தியான பூஜா நிமித்தமாய் அளவற்ற உருவமும் பெயரும் கொண்டு விறகில் தீ போலவும், பாலில் வெண்ணெய் போலவும், நின்று அருளும் இடமாகிய சமயபுரம் எனும் கண்ணனூரிலே, கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யாசோதையின் குழந்தையாக மாயா தேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி – வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களை தரித்துத்தோன்றினாள். அத்தேவியே ’மகா மாரியம்மன்” என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீவினைகளையும், தீராத நோய்களையும், தன்னுடைய வேப்பிலை மகிமையால் தீர்த்து வைக்கும் ஆயிரங்கண்ணுடையவளாய் அருள்பாலிக்கிறாள். மாரியம்மன் உற்சவத் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்று வந்ததென்றும், அந்த ஆட்சிக்கு தளர்ச்சி நேர்ந்த போது பல்லக்கைத்தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை சமயபுரத்தில் கீழே இறக்கி வைத்து உணவு உட்கொள்ள சென்றார்கள் எனவும், பின்னர் வந்து பல்லக்கை தூக்க முயலும் போது, தூக்க இயலவில்லை எனவும், பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் எனவும் செவிவழிச் செய்தி கூறுகிறது. இதனாலேயே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் இருந்துவருகிறது.

 தலச் சிறப்பு
      இத்திருக்கோயிலில் மூலவர் அம்மன் சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களையும் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். அம்பாளின் திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்பாளை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோசம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் அம்பாளை அமாவாசை பௌர்ணமி காலங்களில் வழிப்பட்டால் உச்ச பலன் கிடைக்கும் என்பது தனிச்சிறப்பாகும்.

திருவானைக்காவல்(அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்)

gfn

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்” தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.

        சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
நாவல் மரத்துக்கு “ஜம்பு” என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்” என பெயர் பெற்றார்.

 தலச் சிறப்பு;

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம்.

        கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

ஹோரைகள்

ஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும்.

ஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன.

ஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது.

ஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.

சுப கிரக ஹோரைகள் : சந்திரன், புதன், குரு, சுக்கிரன்

பாப கிரக ஹோரைகள் : சூரியன், செவ்வாய், சனி ஹோரைகள் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு நாளின் ஒரு மணி நேர கால அளவு ஆகும்.

ஒரு வாரத்தில், சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனம் நேரம் தொடங்கி ஏழு நாட்கள் உள்ளன. ஒரு மணிக்கு ஒரு கிரகம் வீதமாக இந்த ஒவ்வொரு நாளையும் (24 மணி நேரம்) ஏழு கிரகங்கள் ஆட்சி செய்கின்றன.

ஆளும் கோள்களின் தன்மையைப் பொறுத்து ஹோரைகள் பல்வேறு பணிகளுக்கு பொருத்தமானதாகவோ அல்லது பகையானதாகவோ உள்ளன. இதன் மூலம் ஒரு காரியம் செய்யப் பொருத்தமான நேரத்தைனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தலாம். பின்வரும் ஹோரைகள் விளக்கப்படம், ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்தெந்த கோள்கள் ஆளுகின்றன எனக் காட்டுகிறது.

ஹோரைகளைக் பார்க்கும் போது, உங்கள் இடத்தின் அன்று சூரிய உதயம் நேரம் அறிந்து அதிலிருந்து முதல் 1 மணி நேரத்தினைக் கணக்கிட்டுக் கொள்ளவும். சூரிய உதய நேரத்தை பஞ்சாங்கம் மூலமாகவோ. பத்திரிகைகள் வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம்.

சுப கிரக ஹோரைகள் : சந்திரன், புதன், குரு, சுக்கிரன்

பாப கிரக ஹோரைகள் : சூரியன், செவ்வாய், சனி

பணம் சேர

 

images (14)

 

1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.
2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.

3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .

4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.

5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.

6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

நவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்

நவ கிரகங்களில் புதனும் பரிகாரமும்

நவகோள்களில் சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கிரகம் புதனாகும். புதன் சந்திரனின் புதல்வராக கூறப்படுகிறார். ஒருவருடைய பேச்சாற்றல், எழுத்தாற்றல், கல்வித் திறன், ஞாபக சக்தி போன்றவை சிறப்பாக அமைய புதன் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்.

கல்வி காரகன், அறிவு காரகனாகிய புதன் மிதுனத்தில் ஆட்சியும், கன்னியில் ஆட்சி உச்சமும் பெறுகிறார். ரிஷபம், கடக ராசிகள் நட்பு ராசிகளாகும். மீனத்தில் நீசம் பெறுகிறார் .. புதனுக்கு சூரியன், சுக்கிரன் இருவரும் நண்பர்கள். செவ்வாய், சனி சமமானவர்கள். சந்திரன் பகையாவார். புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்கு புதன் அதிபதியாவார். புதன் ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு செல்ல 1 மாதம் ஆகிறது. ஒரு நட்சத்திரத்தில் பாதத்தை கடக்க 3 நாள், 20 நாழிகை ஆகிறது. புதன் சரியாக சூரியனுக்கு 11 பாகையில் அஸ்தங்கள் அடைகிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை வக்ரம் அடைகிறார். சூரியனுக்கு 14 டிகிரியில் இருக்கும்போது வக்ரம் பெற்று 20 டிகிரியில் வக்ர நிவர்த்தி அடைவார். பஞ்சமி, அஷ்டமி, சதுர்த்தி போன்ற திதிகளில் புதன் திதி சூன்ய தோஷம் பெறுகிறார்.

புதனின் காரகத்துவங்கள்,

புதன் பகவான் தாய்மாமன், கல்வி, ஞானம், விஷ்ணு, கணக்குத் தொழில், வங்கியில் கணக்காளர், உத்தியோகம், வாக்கு சாதுர்யம், கதை, கட்டுரை, காவியம் புனைதல், ஜோதிடம், பத்திரிகையாளர், சிற்பதொழில், நாட்டியம், இசை ஞானம், சகலகலைகளிலும் திறமை, புத்திர பாக்கியத்தடை, மரகதம், பச்சை இலைகள், பாசிப் பயிறு, வெந்தயம் போன்றவற்றிக்கு காரகம் வகிக்கிறார்.

புதனால் உண்டாகும் நோய்கள்,

வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மனநிலைபாதிப்பு விஷத்தால் கண்டம், வேகமாக பேசும் நிலை, முளை பாதிப்பு, தோல் வியாதி, மஞ்சள் காமாலை, கனவால் மனநிலை பாதிப்பு, வெண்குஷ்டம், ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி, வாதநோய், சீதளம் போன்ற நோய்கள் உண்டாகும்.
புதனின் திசை வடக்கு, பஞ்சபூதங்களில் மண், அறுசுவையில் உவர்ப்பு, தானியம் பச்சை பயிறு, தேவதை மஹா விஷ்ணு, மலர் வெண்காந்தம், நவரத்தினம் மரகத பச்சை, சுவை பல்சுவை, நிறம் பச்சை, குணம் ராஜஸ, திசை வடக்கு, வாகனம் குதிரை.

புதன் ஓரையில் செய்யக்கூடியவை

கல்வி கற்க ஆரம்பித்தல், ஜோதிடம், கணிதம் பத்திரிகை தொழில், கமிஷன் வியாபாரம், தேர்வு எழுத நல்லது.

புதனால் உண்டாகும் யோகங்கள்,

பத்திரயோகம் நிபூனா யோகம், பதாதித்ய யோகம்

பத்திர யோகம்,

புதன் ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திரம் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், மற்றவர்களால் பாதிக்கப்படும் உன்னதமான சிங்கம் போல வாழும் அமைப்பு உண்டாகும்.

புதாதித்ய யோகம்,

புதனும் சூரியனும் சேர்க்கைப் பெற்றிருப்பது புதாதித்ய யோகமாகும். இதனால் கல்வியில் மேன்மை, பெரியவர்களின் ஆசி, வியாபாரத்தில் ஈடுபாடு, அரசு வழியில் அனுகூலம் ஏற்படும்.

நிபூனா யோகம்,

சூரியனும் புதனும் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்திற்கு 1,4,8 ஆகிய இடங்களில் அமையப் பெறுவது, இதனால் உயர் பதவிகள் தேடி வரும். அரசியலில் முன்னேற்றம் கொடுக்கும்.புதன் ஒரு அலிகிரகமாவார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் சுபகிரகத்தோடு சேர்ந்திருந்தால் சுபபலனையும், பாவ கிரகத்தோடு சேர்ந்திருந்தால் பாவப்பலனையும் தருவார். யாரோடு சேராதிருந்தால் சுப பலனையும் தருவார்.

புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சுபகிரகங்களோடு சேர்ந்திருக்கும் போது புதனின் தசா அல்லது புக்தி நடைபெற்றால் ஜாதகருக்கு உன்னதமான உயர்வுகள் உண்டாகும். கல்வி, அறிவு, ஞாபகசக்தி, பெரியோர்களின் நட்பு, சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும் யோகம் ஏற்படும். புதனும் சனியும் சேர்க்கைப் பெற்றாலும் சனியின் சாரத்தில் புதன் அமையப் பெற்றாலும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் கெடுபலன்கள் உண்டாகும். ஒருவர் மந்திர சித்தியில் வல்லவராக திகழ ஜென்மலக்னத்திற்கு 5 ம் வீட்டில் புதன், சுக்கிரன், செவ்வாய் அமைந்து குரு பார்வையும் பெற்றிருந்தால் போதும். அவர்
மந்திர சித்தியில் வல்லவராக திகழ்வார்.

புதனுக்குரிய ஸ்தலங்கள்,

திருவெண்காடு, மதுரை

திருவெண்காடு,
புத்திக்கும் வித்தைக்கும் காரகனாகிய புதன் தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கிறார். இத்தலம் சீர்காழியிலிருந்த 15 கி.மீ. தொலைவில் தென்கிழக்கில் உள்ளது.

புதன் ஈஸ்வரர்களை பூஜித்து வணங்கி துதித்து நவகோள்களில் தானம் இடம் பெற்ற இடங்களில் மற்றொன்று மதுரை. ஆலவாய் என அழைக்கப்படும் அழகான மதுரையில் சோமசுந்தரேஸ்வரக் கடவுள் நிகழ்த்திய அறுபத்தி நான்கு திருவிளையாடல்களும் சிறப்பு பெற்றவை.

புதனை வழிபடும் முறைகள்,

விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவது புதன் வழிபாடாக கருதப்படுகிறது.
விஷ்ணு சகஸ்கர நாமத்தை ஜெபிப்பது.
புதன் துதிகளை சூரிய உதயத்துக்கு 2 மணி நேரம் கழித்து கூறுவும்.
சுதர்சன ஹோமம் செய்வது, சுதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது.
10 முக ருத்ராட்சம் அணியவும்.
பச்சை பயிறு, பூசணிக்காய், பச்சைநிற ஆடை போன்றவற்றை மதிய வேளையில் ஏழை மாணவனுக்கு தானம் செய்யவும்.
வெண் காந்தல் பூவால் அர்ச்சனை செய்வது,
குருவாயூர் சென்று தரிசனம் செய்வது,

மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்வது நல்லது.
பச்சை நிற ஆடை, கைக்குட்டை உபயோகித்தல்,
தந்தத்தினால் ஆன பொருட்கள் ஆடை, அணிகலன்களை பயன்படுத்துவது நல்லது.

விவாஹ பொருத்த விவரங்கள்

YUIY
தினப் பொருத்தம் வதூ நட்சத்திரத்திலிருத்து, வரன் நட்சத்திரம் வரை எண்ணி, 9 ஆல் வகுக்க மீதி 3,5,7 நல்லதல்ல. மற்றவை சுபம் எனக் கொள்க. வதூ வரன் (நௌரொ – நௌரி) நட்சத்திரம் ஏக நட்சத்திரமாக வரும் எனில், ரோகிணி, திருவாதிரை, மகம், ஹஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமம். அசுபதி, காரத்திகை, மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம். மற்றவை கூடாது. (குறிப்பாக ஏக நட்சத்திரம் எனும் போது, கோள்சார கெடுபலன்களான – ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ஏகதிசை காலம், திசா சந்தி ஆகியவை ஒன்றாக வரும் வாய்ப்பு உள்ளதால் மிக கவனம் கொள்ள வேண்டும்)
கணப்பொருத்தம் நட்சத்திரங்களில் தேவகணம். மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று பிரிவுகள் உள்ளன. தேவ கணம் உயர்ந்த குணம், மனுஷ கணம் வளைந்து செல்லும் சராசரி குணம், ராட்சஸ குணம் கோப குணங்களுடன் வளையாத குணமும் கொண்டவர்களாக இருப்பர். வதூ, வரர் ஏக கணத்தில் அமைவது விசேஷம். தேவ, மனுஷ கணம் கொண்ட வதூ எந்த கணம் கொண்ட வரனுடனும் ஒத்துப் போவார். ராட்சஸ கணத்தில் பிறந்த வதூ மனுஷ கணத்தில் பிறந்த வரனுடன் ஒத்துப் போக வழியில்லை. (குறிப்பு எந்தெந்த நட்சத்திரங்கள் எந்தெந்த கணம் என பஞ்சாங்கத்தில் காணலாம்)
மாஹேந்திர பொருத்தம் வதூ நட்சத்திரத்திலிருந்து வண்ணி வரும் வரன் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வந்தால் உத்தமம். மற்றவை உத்தமமல்ல. இது குழந்தைப்பேறு தடையின்றி கிடைக்கவும் – சுகப்பிரசவத்திற்கும் துணை நிற்கிறது.
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் வதூ நட்தசதிரத்திலிருந்து, எண்ணும் போது வரன் நட்சத்திரம் 13 க்கு மேல் வந்தால் உத்தமம். ரக்கு மேல் மத்திமம். 7 க்குள் வந்தால் அதமம்.
யோனிப் பொருத்தம் இல்வாழ்க்கையில், இல்லற – தாம்பத்திய ஒற்றுமைக்குரிய பொருத்தம். வரன் நட்சத்திரம் ஆண் மிருகமாகவும், வதூ நட்சத்திரம் பெண் மிருகமாகவும் வருவது விசேஷம். மாறி இருந்தால் மத்திமம். மிருகங்கள் ஒன்றுக்கொன்று பகையாக இருக்கக் கூடாது. சிங்கம், புலிக்கு – குதிரை, யானை, ஆடு, எருது, பசு, மான் ஆகியன பகையாகும், குதிரைக்கு – எருமையும், குரங்குக்கு – ஆடும், மானுக்கு – நாயும், பாம்பு, பூனைக்கு – எலியும், நாய்க்கு – பூனையும் பகையாகும். (குறிப்பு எந்தெந்த நட்சத்தரம் எந்தெந்த மிருகம் என்பதை பஞ்சாங்கத்தில் காண்க)
ராசிப் பொருத்தம் வதூ ராசியிலிருந்து – வரன் ராசி எண்ணும் போது, 6 க்கு மேல் இருந்தால் உத்தமம். 8 வது ராசி கூடாது. (சஷ்ட அஷ்டகம் என்னும் 6 வது 8 வது ராசிகள் இல்லாமல் இருப்பது விசேஷம்)
ராசி அதிபதி பொருத்தம் வதூ ராசிக்குரிய அதிபதியும், வரன் ராசிக்குரிய அதிபதியும் நட்பாகவோ, அல்லது சமமாகவோ இருத்தல் நன்று. பகையாக இருத்தல் கூடாது. ஒவ்வொரு கிரகத்திற்குமுரிய நட்பு, சம, பகைக்கிரகங்களின் விவரம்
கிரகம்
நட்பு
சமம்
பகை
சூரியன்
சந்திரன், செவ்வாய், குரு
புதன்
சுக்கிரன், பகை
சந்திரன்
சுக்கிரன், புதன்
செவ், குரு, சுக், சனி
சத்ரு இல்லை
செவ்வாய்
சூரியன், சந்திரன், குரு
சுக்கிரன், சனி
புதன்
புதன்
சூரியன், சுக்கிரன், சனி
செவ்வாய், குரு
சந்திரன்
வியாழன்
சூரியன், சந்திரன், செவ்வாய்
சனி
புதன், சுக்கிரன்
சுக்கிரன்
புதன், சனி
செவ்வாய், குரு
சூரியன், சந்திரன்
சனி
புதன், சுக்கிரன்
வியாழன்
சூரியன், சந்திரன், செவ்

குறிப்பு மேஷ, விருச்சிக ராசிகளுக்கு அதிபதி செவ்வாய்,
ரிஷப, துலா ராசிகளுக்கு அதிபதி சுக்கிரன்,
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன்,
கடக ராசிக்கு அதிபதி சந்திரன்
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன்
தனுசு மீனம் ராசிக்கு அதிபதி குரு
மகரம் கும்ப ராசிக்கு அதிபதி சனி என்று அறிக.
8 வசிய பொருத்தம் வதூ ராசியும், வரன் ராசியும் ஒன்றுக்கொன்று வசியமுடையதாக இருத்தல் வேண்டும்.
மேஷம் பெண் ராசி எனில் ஆண் ராசி சிம்மம், விருச்சிகம்
ரிஷபம் பெண் ராசி எனில் ஆண் ராசி கடகம், துலாம்
மிதுனம் பெண் ராசி எனில் ஆண் ராசி கன்னி
கடகம் பெண் ராசி எனில் ஆண் ராசி விருச்சிகம், தனுசு
சிம்மம் பெண் ராசி எனில் ஆண் ராசி துலாம்
கன்னி பெண் ராசி எனில் மிதுனம், மீனம்
துலாம் பெண் ராசி எனில் கன்னி, மகரம்
விருச்சிகம் பெண் ராசி எனில் கடகம்
தனுசு பெண் ராசி எனில் மீனம்
மகரம் பெண் ராசி எனில் மேஷம், கும்பம்
கும்பம் பெண் ராசி எனில் மேஷம்
மீனம் பெண் ராசி எனில் மகரம் வசியம் என்று அறியவும்.
ரஜ்ஜூ பொருத்தம் ரஜ்ஜூ என்னும் மாங்கல் பொருத்தம் வதூ, வரர்க்கு ஓரே ரஜ்ஜூவாக வரக்கூடாது. மாறி வந்தால் நல்லது.
மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் – சிரசு ரஜ்ஜூ
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் மற்றும்
திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய வை – கண்ட ரஜ்ஜூ
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் மற்றும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை – வயிறு ரஜ்ஜூ
பரணி, பூரம், பூராடம் மற்றும்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை – துடை ரஜ்ஜூ
அசுபதி, மகம், மூலம் மற்றும்
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை – பாத ரஜ்ஜூ
குறிப்பு விவாஹ பொருத்தத்தில் மிக முக்கியமான இந்த ரஜ்ஜூப் பொருத்தம் சரியான முறையில் அனுசரிக்கப்பட வேண்டும். இதில் தவறும் பட்சத்தில், வதூ-வரர் நட்சத்திரங்கள் சிரசு ரஜ்ஜூவில் இருந்து இணைந்தால் – கணவர் மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், கண்ட ரஜ்ஜூவில் வந்தால் மனைவி மரணத்திற்குச் சமமான பிரச்சனைகளும், வயிறு ரஜ்ஜூவில் வந்தால் புத்திர தோஷத்திற்கு சமமான பிரச்சனைகளும், துடை ரஜ்ஜூவில் வந்தால் ஒற்றுமைக் குறைவுகளும், பாத ரஜ்ஜூவில் வந்ததால், நோய் நொடிகளும் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது ஜோதிட நூல்களின் அற்புத கருத்தாகும்.
வேதைப் பொருத்தம் வதூ நட்சத்திரமும், வரன் நட்சத்திரமும் ஒன்றுக்கொன்று வேதையாக இருத்தல் கூடாது. வேதையாக இல்லாவிட்டால் பொருத்தம் உத்தமம்.
அசுபதி – கேட்டை, பரணி – அனுஷம், கார்த்திகை – விசாகம்,
ரோகிணி – சுவாதி, திருவாதிரை – திருவோணம் புனர்பூசம் – உத்திராடம்
பூசம் – பூராடம், ஆயில்யம் – மூலம், மகம் – ரேவதி
பூரம் – உத்திரட்டாதி உத்திரம் – பூரட்டாதி, ஹஸ்தம் – சதயம் ஆகிய நட்சத்திரங்கள் ஒன்றுக் கொன்று வேதை என அறியவும்.

மேற்காண் தசவித பொருத்தங்களுடன், பாபசாமீயம் என்னும், அசுபக்கிரகங்களான, சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களின் நின்றவாறு, அரைக்கால், கால், அரை, முக்கால், முழு பாபம் என்ற அளவில் சூட்சம கணக்கின் பிரகாரம் கணக்கெடுத்து பார்ப்பதுடன், செவ்வாய் கிரகமானது, லக்னத்திலிருந்து, சந்திரனிலிருந்து, சுக்கிரனிலிருந்து 2,4,7,8,12 ஆகிய ஸ்தானங்களில் இருந்ததால் ஏற்படும் செவ்வாய் தோஷ பாபசாமீயமும் இணைத்துப் பார்த்து, திசா சந்தி, ஏக திசை காலம் இல்லாமல் பொருத்தும் பொருத்தங்களின் அடிப்படையில் அமையும் திருமணங்கள் வாழையடி வாழையாய் வாழ்வாங்கு இப்புவியில் தம்பதியாய் வாழ்ந்து, அதன் வெளிப்பாடாக நற்புத்திரப்பேறு பெற்று , வரலாற்றுச் சாதனை செம்மல்களாக வாழ்ந்தும், எந்நாளும் புகழ் பெற்று நித்திய ஜீவன் பெறுவார்கள் என்பது திண்ணம். சுபம்.

முருகன் வழிபாடு

 

images (2)

 

முருகன் வழிபாடு என்பது ஒரு பிரசித்திபெற்ற வழிபாடு இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு முருகனின் பெருமைப்பற்றி தெரியும்.பொதுவாக தமிழர்களின் குலதெய்வமாக பெருமையானவர்களுக்கு முருகன் தெய்வமாக இருக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள் கூட முருகனை குலதெய்வமாக எண்ணி வழிபட்டு வருவார்கள். முருகனின் கோவிலுக்கு நான் செல்லுவதே அவரின் அழகை தரிசனம் செய்வதற்க்கு மட்டுமே. அந்தளவுக்கு ஒரு அழகானவர். முருகன் என்றால் அழகு தானே. தொடர்ச்சியாக செவ்வாய்கிழமை தோறும் முருகன் கோவில் சென்று வருபவர்கள் நமது பதிவில் கூட அதிக நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் என்னிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள முருகனின் அருள் மெய் சிலிர்க்க வைக்கும். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் அதிகப்பட்சம் ஒன்பது செவ்வாய்கிழமையில் அதன் பலனை அனுபவித்துவிடுவார்கள். முருகனின் வழிப்பாட்டை இதுவரை கடைபிடிக்காத நண்பர்கள் ஏதாவது ஒரு வழிபாட்டை முருகனுக்கு கடைபிடித்து வாருங்கள்.