01.02.2017இந்த நாள் இனிய நாள்.

 

 

இந்த நாள் இனிய நாள்.
01.02.2017
புதன் கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – குடும்ப உறுப்பினர்களின் விவாதம் வேண்டாம்.
பரணி – பணவரவு, வாகனம், வீடு சார்ந்த பேச்சுவார்த்தை அமையும், மகிழ்ச்சி, கோவில் வழிபாடு, குலதெய்வ வழிபாடு.
கார்த்திகை – வீண் வார்த்தையால் விபரிதம், கணவன் மனைவி இருவரும் பொறுமையாக இருத்தல், விரயம் , கவனம் தேவை.
ரோகிணி – லாபம்.
மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் உண்டு, லாபமும் உண்டு.
திருவாதிரை – கணவன் மனைவி வீண் விவாதம் வேண்டாம்.
புனர்பூசம் – பொறுமை மிகவும் அவசியம், அவசரபட வேண்டாம்.
பூசம் – திடிர் அதிர்ஷ்மான செய்தி உண்டு.
ஆயில்யம் – கடன், உடல்நிலை கவனம், விரயம்.
மகம் – மகிழ்ச்சி.
பூரம் – புதிய வாய்ப்பு பயன்படுத்தி திறமையை வெளிப்படுத்துதல்.
உத்திரம் – மறக்க முடியாத நாள், கவனம் .
அஸ்தம் – சொந்த தொழில் மேன்மை உண்டு, கடன் வாங்குதல், விரயமான காலம் கவனம் .
சித்திரை – மகிழ்ச்சி, லாபம்.
சுவாதி – பதவி, புகழ், வெற்றி மகிழ்ச்சி.
விசாகம் – ஆன்மிக பயணம், மக்கள் தொடர்பு விஷயங்களிள் பங்களிப்பு.
அனுசம் – தன வரவு .
கேட்டை – வாகனத்தில் கவனம் .
மூலம் – பயணம், முன்னோர்கள் வழிபாடு, அரசு தொடர்பான நபரை சந்தித்தல், லாபம்.
பூராடம் – மன உளைச்சல்.
உத்திராடம் – பணம் சார்ந்த பிரச்சினை தலையிட வேண்டாம், அருகில் உள்ள ஐயனார் கோவில் வழிபடவும்.
திருவோணம் – எதோ பயம் வாட்டி வதைக்கும்.
அவிட்டம் – வாகனத்தில் கவனம், அலைச்சல், குழம்ப்பமான மனநிலை ஒரு முடிவும் எடுக்க முடியாது.
சதயம் – வெற்றி.
பூராட்டாதி – அரசு வகையில் லாபம், மன உளைச்சல்
உத்திரட்டாதி – தொழில் மேம்படும்.
ரேவதி – குலத்தொழில், சொந்த தொழில் மேம்பாடு ,பயணம், புதிய நபரை சந்தித்தல் .
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

நல்லனவற்றை பகிர்வோம்

​ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் ஒருவர். 
அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார். 
பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
“இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு” என்றார். 
மனைவி நிரப்பி எடுத்து வந்தாள். 
“இதற்கு மேல் நிரப்ப முடியாது” என்றாள்.
கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார். 
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை. 
“இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா?” கேட்டாள் மனைவி.
கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார். 
பையை மேலும் குலுக்கினார்.
கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது. 
“இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால், பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா?

என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.
“வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய அன்பு, கருணை, உடல்நலம், மனநலம் போன்ற உன்னதமான விஷயங்கள் பெரிய கற்கள் போன்றவை.
வேலை, வீடு, கார் போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
கேளிக்கை, வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள். 
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும். 
ஆனால், உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால், முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
நல்லதே நினைப்போம்…நல்லதே நடக்கும்…
நல்லதையே செய்வோம்… நல்லோராய் வாழ்வோம்…!!!
நல்லனவற்றை பகிர்வோம்

யார் அறிவாளியோ 

​உலகத்திலுள்ளஅத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர்.
ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார்.
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அந்த பெருமைக்குரியவர்,

அவரது மனைவி வாசுகி தான். 
அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள்

முழுவதும் விமர்சித்ததே இல்லை.
அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர்.
தன் கணவர் சாப்பிடும் போது,

ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும்,

ஒரு ஊசியும் வைத்துக் கொண்டுதான் சாப்பிடுவாராம்.
அது ஏன் என்று அம்மையாருக்கு விளங்கவே இல்லியாம்.
ஆனாலும் கணவரிடம்

காரணத்தை எப்படி கேட்பதுன்னு அமைதியா இருப்பார்.
இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டார்.
சோற்றுப்பருக்கை கீழே சிந்தினால் ஊசியில் குத்தி கொட்டாங்குச்சியில் உள்ள நீரில் கழுவி மீண்டும் சோற்றில் கலந்து உண்ணவே 

அவை இரண்டும் என்றாராம்.
நீ பரிமாறுகையில் சோற்று பருக்கை சிந்தவே இல்லை.
அதனால் அதன் பயன்பாடு உனக்கு தெரியவில்லை என்றுநெகிழ்ச்சி

யாக சொன்னாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார் அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர்.
அப்போது வள்ளுவர் வாசுகியிடம் சோறு சூடாக இருக்கிறது விசிறு என்றார். 
பழைய சோறு எப்படி சுடும்? 

அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை.
விசிற ஆரம்பித்து விட்டார். 
இப்படி,கணவருடன் 

வாதம் செய்யாமல்

விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம்

கொண்டிருந்தார்.
அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார்.
வள்ளுவர் அவரை அழைக்கவே,

கயிறை அப்படியே 

விட்டு விட்டு வந்தார். 

குடத்துடன் கூடிய அந்தக்கயிறு அப்படியே நின்றதாம்.
இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!
அந்த அன்பு மனைவி ஒருநாள்

இறந்து போனார்.
“நெருநல் உளனொருவன்

இன்றில்லை எனும்

பெருமை படைத்து இவ்வுலகு”

என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே 

மனைவியின் பிரிவைத்

தாங்காமல் கலங்கி விட்டார்.
நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக்குறளின் பொருள்.
ஆக தனது கருத்துப்படி அந்த அம்மையாரின் மறைவுக்காக

பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர் மனைவியின் பிரிவைத் தாளாமல் 

“அடியிற்கினியாளே அன்புடையாளே

படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி

பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-

இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு” என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.
அடியவனுக்கு இனியவளே!
அன்புடையவளே! 
என் சொல்படி நடக்கத் 

தவறாத பெண்ணே! 
என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே!
பின் தூங்கி முன் எழுபவளே!

 

பேதையே! 
என் கண்கள் இனி எப்படித்தான் இரவில்

தூங்கப் போகிறதோ! 
என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்கு கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர் இந்தசம்பவத்தை 

மனதிற்குள்

அசைபோடுவார்களா..!!
ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.  
அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். 
அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். 
யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார்.
அதற்கு வேதாத்திரி மகிரிஷி பதிலளிக்கையில், யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ 

அவர்கள்தான் முதலில் விட்டுக்கொடுப்பார்கள்.
அவர்கள்தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.
உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
இருவரும்  அறிவாளியாக  இருந்தால்  அதுவே கோவில்.

படித்ததில் பிடித்தது.

பணிவுடன் நடந்து கொள்வோம்

​அசோகா சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.
அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.
மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.
ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையையாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.
இப்போது அசோக மன்னர் சொன்னார்,”தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது. இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது?இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும்போதே தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.
அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?”தளபதிக்கு இப்போது புரிந்தது. நாமும் புாிந்து கொள்வோம் பணிவுடன் நடந்து கொள்வோம்

​இந்த நாள் இனிய நாள்.31.01.2017

​இந்த நாள் இனிய நாள்.

31.01.2017

செவ்வாய் கிழமை

நட்சத்திர பலன்கள் :

அஸ்வினி நட்சத்திரம் – மகிழ்ச்சி.

பரணி – புதிய நண்பர்கள்தொடர்பு முலம் புதிய வாய்ப்பு .

கார்த்திகை – பயணம், ஆன்மிக நபரை சந்தித்தல் .

ரோகிணி – பயம், விஷ பூச்சி, இரும்பு, நெருப்பு ஆகியவற்றில் கவனம் .

மிருகசீரிடம் – தொழில் முன்னேற்றம் .

திருவாதிரை – சுப செய்தி.

புனர்பூசம் – மன உளைச்சல்.

பூசம் – லாபம்.

ஆயில்யம் – பயணம், தொழில் முன்னேற்றம் .

 மகம்- நிம்மதி.

பூரம் – குழந்தைகளால் மகிழ்ச்சி.

உத்திரம் – கஷ்டம்.

அஸ்தம் – புதிய தொழில் வாய்ப்பு .

சித்திரை – தனசேர்க்கை .

சுவாதி – வெளி நாடு பயண வாய்ப்பு, சுபசெய்தி .

விசாகம் – ராஜயோகம், மகிழ்ச்சி.

அனுசம் – அதிர்ஷ்டம்.

கேட்டை – வீண் வார்த்தை தவிர்த்தல், கோபத்தை தவிர்த்தல்.

மூலம் -கடன், பயணம்.

பூராடம் – மகிழ்ச்சியான நாள்.

உத்திராடம் – புகழ்.

திருவோணம் – வாகனம், வீடு அமையும், சுபசெய்தி உண்டு.

அவிட்டம் – எதையும் நம்பிவிட வேண்டாம்.

சதயம் – பிரச்சினையை பெரிதுபடுத்த ே பண்டாம், பொறுமை அவசியம்.

பூராட்டாதி – தனவரவு, பதவி, புகழ்.

 உத்திரட்டாதி – உடல் நிலை கவனம், பூர்விக சொத்து பிரச்சினை.

ரேவதி – லாபம், புதிய வாய்ப்பு .

நன்றி, அன்புடன்உங்கள் #astrologer  #moorthy #vedaranyam

www.jothidam.tv

​இந்த நாள் இனிய நாள்.30.01.2017

​இந்த நாள் இனிய நாள்.

30.01.2017

திங்கள் கிழமை

நட்சத்திர பலன்கள் :

அஸ்வினி நட்சத்திரம் – பதவி உயர்வு , மகிழ்ச்சி.

பரணி – கோபம் தவிர்த்தல் விடா முயற்சி வெற்றி உண்டு.

கார்த்திகை – எதிர்களால் துன்பம்.

ரோகிணி – எடுத்த காரியம் வெற்றியை தரும்.

மிருகசீரிடம் – அதிமான குறுக்கீடு.

திருவாதிரை – கவனம் தேவை.

புனர்பூசம் – உடல் நிலை கவனம் .தந்தைக்கு மிகவும் உடல் நிலை கவனம் .

பூசம் – வெகுமதி உண்டு.

ஆயில்யம் – புதையல் போன்ற நற்செய்தி.

 மகம் – பூமி சேரும், முன்னோர்கள் வழிபாடு.

பூரம் – உடம்பு வலி எற்படும்.

உத்திரம்-தொழில் முன்னேற்றம் .

அஸ்தம் – தன வரவு .

சித்திரை -சபலம், மனம் அலையும் , கவனம் தேவை.

சுவாதி – லாபம் உண்டு.

விசாகம் – நண்பர்கள் உதவி உண்டு.

அனுசம் – மன உளைச்சல்.

கேட்டை – சுப செய்தி.

மூலம் – இலாபம் .

பூராடம் – இன்பம், விடாமுயற்சி .

உத்திராடம் – செல்வாக்கு உயரும் .

திருவோணம் – நல்ல செய்தி வரும்.

அவிட்டம் – வீண் வார்த்தை தவிர்த்தல்.

சதயம் – கவனம் .

பூராட்டாதி – அலைச்சல் ..

 உத்திரட்டாதி –  தொழில் முன்னேற்றம் .

ரேவதி – உறவினர் பகை, கோபம் தவிர்த்தல்.

நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

​ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி

​ஜோதிடம் கற்றுக்கொள்வது எப்படி

புதிதாக ஜோதிடம் கற்றுக்கொள்பவர்கள் கீழ் கண்டவாறு ஒரு படிவம் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். 
பிறகு உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கீழ் கண்ட விவரங்களை தெரிந்துகொண்டு அவைகளை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். 
குறைந்தது 100 பேர்களைப்பற்றிய தகவல்களை சேர்த்து வைத்துக்கொண்டால் அது ஜாதக ஆய்வுக்கு பெரிதும் உதவும்.

ஜாதக விவரம்

ஜாதகரின் பெயர்:

ஜாதகரின் பிறந்த தேதி:

ஜாதகரின் பிறந்த நேரம்:

ஜாதகரின் பிறந்த ஊர்:

ஜாதகரின் முக்கிய அங்க அடையாளங்கள் என்ன?

ஜாதகரின் குணம் எப்படி?

ஜாதகர் அவர் வீட்டில் எத்தனையாவது குழந்தை?

ஜாதகரின் ஆரம்பகல்வியில் பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு பணவருவாய் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு நல்ல பணவருவை வந்த காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு பணத்தகராரு உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு உடன்பிறப்புகள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் உடன் பிறந்தோர் எண்ணிக்கை எத்தனை?ஆண்,பெண் விவரம்.

ஜாதகருக்கு உடன் பிறந்தவர்களுடன் உறவு எப்படி?

ஜாதகருக்கு இடமாற்றம் ஏதாவது ஏற்பட்டதா?

ஜாதகர் பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா?

ஜாதகரின் தாய் எப்படி?அங்க அடையாளம் மற்றும் குணம்.

ஜாதகருக்கு தாயுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?

ஜாதகரின் தாய்க்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தாய்க்கு நோய்கள் ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தாய்க்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தாய்க்கு கல்வித்தகுதி என்ன?

ஜாதகருக்கு அசையா சொத்து (நில புலங்கள்,வீடு) உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகர் சொத்து வாங்கிய காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு அசையும் சொத்து (வண்டி,வாகனம்) உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு சொத்து தகராரு உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் பள்ளிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் கல்லூரிக்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் கல்வித்தகுதி என்ன?

ஜாதகருக்கு காதல் அனுபவம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு தெய்வ நம்பிக்கை உண்டா?(உண்டு/இல்லை)

ஜாதகருக்கு அரசியல் ஆர்வம் உண்டா?(உண்டு/இல்லை)

ஜாதகருக்கு கலை ஆர்வம் உண்டா?(உண்டு/இல்லை)

ஜாதகருக்கு குழந்தைபாக்கியம் உண்டா?(உண்டு/இல்லை)

ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள்? ஆண்,பெண் விவரம்.

ஜாதகருக்கு குழந்தை பிறந்த காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு குழந்தைகளால் நன்மை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் குழந்தைகளுக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு குழந்தைகளுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?

ஜாதகருக்கு கடன் தொல்லை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு எதிரிகளால் தொல்லை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு யாரால் என்ன தொல்லை?

ஜாதகருக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு திருமணம் ஆகிவிட்டதா? (ஆம்/இல்லை)

ஜாதகருக்கு திருமணம் நடந்த காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு நடந்த திருமணம் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டதா? அல்லது காதல் திருமணமா?

ஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி? மகிழ்ச்சியானதா?

ஜாதகரின் திருமண வாழ்க்கையில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமா?

ஜாதகரின் மனைவி அல்லது கணவன் எப்படி? அங்க அடையாளம் மற்றும் குணம்.

ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு நோய்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் மனைவி அல்லது கணவனுக்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு அவமானம் ஏதாவது ஏற்பட்டதா?

ஜாதகருக்கு விபத்து ஏதாவது ஏற்பட்டதா?

ஜாதகருக்கு பயண சுகம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் உயர்கல்வியில் ஏதாவது பிரச்சினை உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தந்தையார் எப்படி?அங்க அடையாளம் மற்றும் குணம்.

ஜாதகருக்கு தந்தையுடனான உறவு நிலை எப்படி?சுமூகமா? விரிசலா?

ஜாதகரின் தந்தைக்கு வருமானம் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தந்தைக்கு நோய்கள் ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தந்தைக்கு சொத்துக்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகரின் தந்தைக்கு என்ன தொழில்?

ஜாதகரின் தந்தைக்கு கல்வித்தகுதி என்ன?

ஜாதகரின் தந்தை பிறந்த இடம் விட்டு வேறு இடத்தில் குடியேறியவரா?

ஜாதகருக்கு சொந்த தொழிலா? அடிமைத்தொழிலா?

ஜாதகர் என்ன தொழில் செய்கிறார்?

ஜாதகர் வேலைக்கு சேர்ந்த காலம் எப்பொழுது?

ஜாதகருக்கு உத்யோக உயர்வு கிடைத்த காலங்கள் எப்பொழுது?

ஜாதகருக்கு தொழில் முன்னேற்றம் ஏற்பட்ட காலங்கள் எப்பொழுது?

ஜாதகருக்கு தொழில் பிரச்சினை ஏதாவது உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு நண்பர்கள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு நண்பர்களால் உதவிகள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகருக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கிறதா?

ஜாதகரின் விருப்பங்கள் நிறைவேறுகிறதா?

ஜாதகருக்கு அதிருப்திகள் உண்டா? (உண்டு/இல்லை)

ஜாதகர் வெளி நாடு பயணம் செய்துள்ளாரா?

ஜாதகருக்கு நன்றாக தூக்கம் வருகிறதா?

ஜாதகருக்கு எதிர்பாராத விரையங்கள் ஏற்பட்டுள்ளதா?

ஜாதகரின் வீட்டில் உள்ளவர்கள் யாராவது வெளி நாட்டில் வசிக்கிறார்களா?

ஜாதகரின் வீட்டில் யாருக்காவது விபத்து ஏற்பட்டுள்ளதா?

ஜாதகரின் வீட்டில் யாருக்காவது திருமணம் நடக்காமல் தடைபட்டுள்ளதா?

ஜாதகரின் வீட்டில் யாருக்காவது உடல் ஊனம் உள்ளதா?

படித்ததில் பிடித்தது.

நட்சத்திர காயத்ரி மந்திரம்

​எந்த பிரச்சினைனையும் தீர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம். உங்கள் ஜாதகப்படி நீங்கள் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்குரிய நட்சத்திர காயத்ரி மந்திரம் சொல்லுங்கள். 1 மண்டலம் தினமும் (அதிகாலை) தொடர்ந்து சொல்லிவர கைமேல் பலன் கிடைக்கும்… தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து  சொல்லுங்கள். நீங்கள் இன்பங்கள் நிறைய பெற்று, வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

 

1) அஸ்வினி
 ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
2) பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
3) கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
4) ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
5) மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
6) திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
7) புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
8) பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
9) ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
10)  மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
11) பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
12) உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
13) அஸ்தம்
 ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ
ஹஸ்தா ப்ரசோதயாத்
14) சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
15)  சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
16) விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
17) அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
18) கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
19) மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
20) பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
21) உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
22) திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
23) அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
24)  சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
25) பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
26) உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
27)  ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

இந்த நாள் இனிய நாள்.29.01.2017

​இந்த நாள் இனிய நாள்.

29.01.2017

ஞாயிற்று கிழமை

நட்சத்திர பலன்கள் :

அஸ்வினி நட்சத்திரம் – பொறுமை அவசியம், கோபம் தவிர்த்தல், அசைவம் வேண்டாம்.

பரணி – விரயம், தொழில் செய்யும் இடத்தில் கவனம் .

கார்த்திகை – புதிய முடிவு எடுக்க வேண்டாம்.

ரோகிணி – நற்செய்தி.

மிருகசீரிடம் – வாகனத்தில் கவனம் .

திருவாதிரை – வயிற்று வலி, உடல் நிலை கவனம் , புதிய தொழில் வாய்ப்பு .

புனர்பூசம் – மகிழ்ச்சி.

பூசம் – வாகனத்தில் கவனம் .

ஆயில்யம் – லாபம்.

 மகம் – மகிழ்ச்சி, லாபம்.

பூரம் -எதிர்பாராத வரவு, நடப்பவை எல்லாம் நன்மைக்கே.

உத்திரம் – கடன், பொறுமையாக இருத்தல் அவசியம்.

அஸ்தம் – கோபம் வேண்டாம்.

சித்திரை – வீண் விவாதம் வேண்டாம்.

சுவாதி – மகிழ்ச்சி.

விசாகம் – பயணம் .

அனுசம் – எதிர்பாராத சிக்கல்.

கேட்டை – லாபம்.

மூலம் – குழந்தையால் மகிழ்ச்சி.

பூராடம் – மகான் தரிசனம்.

உத்திராடம் – சர்ச்சை.

திருவோணம் – மன உளைச்சல் .

அவிட்டம் – தன வரவு.

சதயம் – உதவி உண்டு.

பூராட்டாதி – உடன் பிறப்பு உடல்நிலை கவனம் .

 உத்திரட்டாதி – தொழில் வாய்ப்பு பற்றி பேசலாம்.

ரேவதி – பயணம் ,பதவி உயர்வு / புதிய தொடர்பு நண்பர்களால் உதவி.

நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.