ALP ஆய்வு

#ALP ஆய்வு பற்றிய பதிவு:
=====================

இன்று காலையில் எப்போதும் போல புதிய நபர்கள் ஜாதகம் பார்க்க வந்திருந்தனர்.

ஜாதகம் பெறப்பட்டது.

ஜாதகம் ஆய்வு செய்யப்பட்டது.

தரப்பட்ட ஜாதகத்தில் 1 5 9 குரு + செவ்வாய் + சனி தொடர்பு சம்பந்தப்பட்டது.

யான்:
உங்கள் ஜாதகத்தோடு செல்வமணி, செல்வராஜ், ராஜகுமாரி, ராஜாமணி, போன்ற பெயர்கள் சம்பந்தப்படுகிறது. இவர்கள் யாரையாவது சமீபமாக சந்தித்தீர்களா? அல்லது உங்கள் வீட்டு நபரா? அல்லது உங்கள் நண்பரா? என்று வினவப்பட்டது.

ஜாதகர்:
மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியோடு, ஆம் ஐயா செல்வமணி எங்கள் வீட்டு அருகில் உள்ள நபர் வரும் வழியில் அவரை சந்தித்து விட்டு வந்தோம். ராஜகுமாரி எங்கள் உறவுக்காரப் பெண்.
அதிர்ச்சியில் இருந்து மீளாமல் எப்படி சொல்கிறீர்கள் என்று வினவினார்கள்.

யான்:
தொடர்ந்து அவர்கள் கேள்விகளுக்கு அவர்கள் வந்த நோக்கத்திற்கு ஜாதகத்தில் என்ன உள்ளதோ அதை மறக்காமல் அப்படியே சொல்லிவிட்டு அதற்குரிய எளிய சூட்சும பரிகாரங்கள் சொல்லப்பட்டது.

அவர்களும் திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் சென்றனர்.

இதுபோன்று ஒருவர் ஜாதகத்தை வைத்து மிகத் துல்லியமாக அவர்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய அனைத்து விஷயங்களையும் நம்மால் சரியாக கணிக்க முடியும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக பெயரியல் தொடர்பான விஷயங்களை கூறுவதில் முதன்மை ஜோதிடராக நெல்லை வசந்தன் ஐயா ஆரம்பித்து வைத்தார்.

தற்போது #ALP முறையில் இது எளிய முறையில் சாத்தியம்.

இதுதாங்க ஜோதிடம். ஜோதிடத்தில் சரியான முறையில் அணுகினால் அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்வுகள் அனைத்தையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும்.

ஜோதிடம் எந்த அளவு உண்மை என்று மக்களுக்குப் புரிய வைக்கவே இந்த பதிவு. உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது ஜோதிட ஆய்வுகள் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன்.

அனைத்து குருமார்களுக்கும் நன்றிகள்!

பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல!

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

₹#சந்திரமௌலி
ALP ஜோதிட ஆராய்ச்சியாளர்.

A..L..P…. ஜோதிடம்

ஓம் நமசிவாய… குரு வாழ்க… குருவே துணை…

..A..L..P…. ஜோதிடம்…

… அட்சய லக்ன பத்ததி… ஜோதிடம்..

… ஜாதகர் பிறந்தபோது எந்த லக்னத்தில்
பிறந்திருந்தாலும்,…

…. ஜாதகம் பார்க்க படுகின்ற நாளில் என்ன
வயது நடந்து கொண்டிருக்கிறது எனக்
கண்டறிந்து..

… அதற்கு வயது இலக்கணம்
கண்டுபிடித்து..

… பலன் கூறும் முறையே அட்சய லக்கன
. பத்ததி முறை…

….A .L .P … ஜோதிட முறையில் துல்லியமாக
பலனை எடுக்கலாம்…

…. நம்முடைய கர்மா லக்கனம் என்ன.???

… போன ஜென்ம பிறவி லக்கனம்
என்ன..???

…. நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த
பாவம் ..சாபம் ..தோஷம் .என்ன..???

… இதற்கு பரிகாரம் உண்டா இல்லையா..???

… நல்ல தசாபுத்தி காலமாக இருந்தாலும் முன்னேற்றம் இல்லையே ஏன்..???

… பொதுவாக நாம் இலக்கணப்படி பார்த்தால் தசாபுத்தி நல்லதாக இருக்கும்..!!!

… அட்சய இலக்கண பத்ததி முறையில் பார்த்தால் லக்னம் மாறி இருக்கும்..!!!.

… அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதே..

…””A.L.P “”.. ஜோதிட முறை….

… பூர்வஜென்ம வாசனையை குறிக்கும்
கிரகங்கள்..

… இராகு கேது…

…. ராகு கேதுக்கள் சூரிய சந்திரனுடன் சேர்ந்திருந்தால் பூர்வீக ஜென்ம வாசனை உண்டு…

… பகலில் ஒளி வீசும் கிரகம் சூரியன்..

… இரவில் ஒளி வீசும் கிரகம் சந்திரன்..

… சூரியன் ராகு இணைவு பெற்ற
.. ஜாதகர்கள்…

… பகலில் உடலில் சூரிய ஒளி பட்டு விழுகின்ற நிழலை வணங்கி வந்தால் பூர்வீக ஜென்ம சாபம் தீரும்..

… சந்திரன் ராகு இணைவு பெற்ற
… ஜாதகர்கள்…

.. இரவில் உடலில் சந்திர ஒளி பட்டு விழுகின்ற நிழலை வணங்கி வந்தால்
… பூர்வீக ஜென்ம சாபம் தீரும்…

… ஏனென்றால் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள்…

… இப்படி பல கிரக கூட்டணிகளுக்கு பலனை கண்டுபிடித்து பல பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் முறையே…

..A.L.P..( அட்சய இலக்கண பத்ததி.). முறை.

… ஜாதகத்தை பார்த்தவுடன்…

… அவர்கள் குடும்பத்தில் எந்த லக்னத்தில் எந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து இருப்பார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்…

… எந்த தசா புத்தியில் அவர்களுக்கு திருமணம் நடக்கும் என்பதையும் அறியும் முறை..( A.L.P.)..

…A.L.P.. ஜோதிடத்தில் உலகியல் நிகழ்வுகளையும் கணிக்கலாம்…

…. எந்த நாட்டில் எப்பொழுது இயற்கை சீற்றங்கள்…

… நாட்டில் அரசியல் மாற்றங்கள்..

… தங்கம் விலை எப்போது ஏறும் குறையும்..

… பங்கு மார்க்கெட்டில் தரம் எப்பொழுது உயரும் குறையும்…

… மாணவர்கள் எத்தனை மார்க் எடுத்து தேர்ச்சி பெறுவார்கள்..

… போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டும் முறைதான்…

….A.L.P..( அட்சய லக்கன பத்ததி முறை.)..

…A.L.P. ( All _ Level _Prediction.).. method.

.. இந்த ஜோதிடக் கலையை ஜோதிட
உலகுக்கு வழங்கியவர்..

.. ஆழ்மன பயிற்சியாளர்…..
.. திரு பொதுவுடமை மூர்த்தி அவர்கள்…

… இனி வரும் காலங்களில் பலனை
துல்லியமாக எடுக்க…

…A.L.P.. ஜோதிட முறை சிறந்த உதாரணமாக விளங்கும்…

… இந்த கலையை கற்றுத்தந்த பொதுவுடைமை மூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்…

… தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

.. ஜோதிடம் அடிப்படை கல்வி..
உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…

M.S. செல்வராஜ்..D.A.B.A..Astro..
.. நல்லூர் ..திருப்பூர்…
..9965742366…
…9360354122..

மிருகசீரிஷம் நட்சத்திரம்

ஓம் நமசிவாய …குரு வாழ்க…. குருவே துணை…

***** மிருகசீரிஷம் நட்சத்திரம்*****

…. நிரந்தர நடையன் ஆகும்…
… தேச மெய்ப்பொருளும் வல்லான்,..
… அருந்தவத்தோர்க்கு நல்லான்…
…. ஆயுதம் பிடிக்க வல்லோன்…
… நிரம்பிய கல்விகற்கும் ….
.,….நினைத்தது முடிக்க வல்லான்…
…. வருந்தியே கருமஞ் செய்யும் மான் தலை
நாளினானே….!!!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்….!!!

…. நன்கு நிமிர்ந்து அழகாக நடப்பார்கள்…!!!

… ஞானம் சார்ந்த கருத்துக்களை நன்கு அறிந்தவர்கள்…!!!!

…. தவம் செய்யும் முனிவர்களுக்கு நல்லவர்…!!!

… நல்ல ஆயுதப் பயிற்சி பெற்றவர்களாக திகழ்வார்கள்…!!!

…. நிறைந்த கல்வி கற்றவர்கள்…!!!

… தான் எண்ணியதை முடிக்க வல்லவர்..!!!

…. கஷ்டப்பட்டு எந்த கடினமான செயலையும் செய்ய வல்லவர்கள்….!!!!

.. நன்கு நடனம் பயின்றவர்கள்…

… மேல் கண்ட ,குணங்கள் நிறைந்தவரே மிருகசீரிஷத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்..!!!!

… இதுதான் அந்தப் பாடலின் பொருள்…

.. மிருகசீரிஷம் நட்சத்திரம் வான மண்டலத்தில் “”மான் தலை “” போன்ற அமைப்பை கொண்டது..!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரம் அத்திரி கோத்திரத்தை சார்ந்தது…!!!!

… விருட்சங்களில் கருங்காலி மரமாகவும்..!!

.. மிருகங்களில் பெண் சாரையாகவும்..!!!

… திசைகளில் மேற்காகவும்…!!!!

…. உடல் உறுப்புகளில் புருவங்களாகவும்..!!!!

… பஞ்ச பூதங்களில் நிலமாகவும்….!!!

…. தேவகணமாகவும்….!!!

…. குணங்களில் தாமச குணமும் கொண்டது இந்த மிருகசீரிஷ நட்சத்திரம்…!!!

…. இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷப ராசியிலும்…

… பின் இரண்டு பாதங்கள் மிதுன ராசியிலும் உள்ளன..!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் பகவான்…!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரம்…
.. ஒரு உன்னதமான நட்சத்திரம்..
.

… இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகுந்த பாக்கியசாலிகள்…

…. மிருகசீரிஷ நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய தெய்வம்…

… தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் உள்ள “””வன துர்க்கை அம்மன்..””கோவில்.

… திருமணமாகாதவர்கள் எலுமிச்சை பழ
விளக்கு ஏற்றி….

இத்தலத்திலுள்ள துர்க்கையை
வணங்கினால் ….

…மிக விரைவில் திருமண பாக்கியம்
கைகூடும்..!!!!.

…. இங்குள்ள வனதுர்க்கை வணங்கினால்..

.. சகல தெய்வங்களையும் , வணங்கிய
பலன் பெறுவார்கள்…!!!

… எத்தகைய துன்பத்தையும் மிக எளிதில் போக்கிவிடும் ஆற்றலைப் பெற்றதால்…

இங்குள்ள அம்பிகைக்கு”” துர்க்கை “””
என்ற பெயர் வந்தது…!!!

… வன துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பு…!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்கு அதிதேவதை “”வனதுர்க்கை..””

.. வன துர்க்கை அம்மனுக்கு பூஜையின்போது கோதுமை அல்வா கோதுமை சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்கிறார்கள்…!!!

.. அதை பிரசாதமாக உண்டு அனைவருக்கும் விநியோகம் செய்தால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்..!!!

… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த கடவுள்”””பரசுராமர்.”””

… மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்..
… கண்ணப்ப நாயனார்…

… மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த ஆழ்வார்கள்…
.. கோவலூர் எம்பெருமானார்..
… திருக்கச்சி நம்பிகள்…

… மிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய விருட்சம் கருவேல மரம்..!!!

… கருவேல மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோவில்கள்…

… திருவள்ளூர் ..திருவேற்காடு …
..தேவி கருமாரியம்மன் கோவில்..!!!

… திருவாரூர்.. அம்பர் மாகாளம்…
.. மகாகளேஸ்வரர் கோயில்…!!!

… திருவாரூர்.. .எண்கண்…..
… ஆதிநாராயண பெருமாள் கோவில்…!!!

… கிருஷ்ணகிரி… ஓசூர்…
… சந்திரசூடேஸ்வரர் கோவில்…

… திருச்சி ….முசிறி…
… சந்திரமவுலீஸ்வரர் கோவில்…

வருடத்திற்கு ஒருமுறையாவது…

… மேற்கண்ட ஸ்தலங்களில் ஏதாவது ஒரு ஸ்தலங்களுக்குச் சென்று…

.. மிருகசீரிஷம் நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமான கருவேல மரத்திற்கு…

… ஒரு குடம் தண்ணீர் ஊற்றி வணங்கி வர
.. நாம் ஊற்றிய நீர் மரத்தின் வேருக்கு பட்டதும் நம் வாழ்க்கைத் தரம் செழிக்க ஆரம்பிக்கும்…!!!

.., இதில் மாற்றுக் கருத்து இல்லை…!!!

.. ஓம் சசிசேகராய வித்மஹே..
… மஹாராஜாய தீமஹி..
.. தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்..!!!

… தென்னாடுடைய சிவனே போற்றி.. என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

… சொற்றுணை வேதியன் சோதிவானவன்.
. பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்.
.. கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்..
.. நற்றுணையாவது நமச்சிவாயவே..
..( திருநாவுக்கரசர் தேவாரம்.).
.. திருச்சிற்றம்பலம்…

.. ஜோதிட வகுப்புகள் விரைவில் ஆரம்பம்..

.. அடிப்படைக் கல்வி …
…உயர்நிலைக் கல்வி..
.. கற்றுத்தரப்படும்…
… இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்…

..M.S. செல்வராஜ்..D.A.B.A..Astro..
.. நல்லூர் …திருப்பூர்…
… தொடர்பு எண்கள்..
..9965742366..
..9360354122..

ரோகிணி நட்சத்திரம்

ஓம் நமசிவாய…. குரு வாழ்க …குருவே துணை…

…. ரோகிணி நட்சத்திரம்…..

…. செய்வன திருந்தச் செய்வான்….
…. சேயிழை யார்க்கு நல்லான்…
,…. மெய்யுற மணியும் பொன்னும்
,…. மகிழ்ச்சியாய் அணிய வல்லான்…
….. நெய்யுடன் பாலும் கூட்டி நிரம்பவே
.,….. உண்பன் கற்றோன்..
…. உய்யவே வகுத்திட்டு உண்ணும்
…. ரோஹிணி நாளினானோ ….

… ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்..
,. செய்யும் காரியங்கள் அனைத்தும்,,

… செம்மையாகவும் திருத்தமாகவும் செய்வார்கள்….

… பெண்கள் நட்பும் ,அவர்கள் மேல் நேசமும்,
.. அவர்களுக்கு நல்லவனாகவும்
இருப்பார்கள்..

… பொன்னும் ரத்தினமும் சேர்ந்த
அணிகலன்களை தன் அழகு
.. .. வெளிப்படும்படி அணிந்து
கொள்வார்கள்…

… நெய்யும் பாலும் கலந்த உணவை அதிகமாக உண்பார்கள்…

…. கிடைப்பவற்றை எல்லோருக்கும்
பகிர்ந்து கொடுப்பவர்கள்….

… மேலே உள்ள பாடலுக்கு , இதுதான்
பொருள்….

…27… நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி..****

… சுக்கிரனுடைய வீடான ரிஷப ராசியில் முழு நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் விளங்குவதால்….

… பெண்களை மிகவும் கவர்பவர்கள்…

…. ரோகிணி நட்சத்திரம் மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம்…

…. இது வான மண்டலத்தில்”” தேர் “” போன்ற உருவமுடைய நட்சத்திரம்….

… விருட்சங்களில் நாவல் மரமாகும்..

… மிருகங்களில் ஆண் நாகமாகவும்…

…. திசைகளில் கிழக்காகவும்….

….. பஞ்ச பூதங்களில் நிலமாகவும்…

…. உடலுறுப்புகளில் நெற்றியாகவும்…

…. கணங்களில் மனுச கணமாகவும்..

…ரோகிணி நட்சத்திரம் விளங்குகிறது…

…. ராஜஸ குணம் கொண்ட நட்சத்திரம் ரோகிணி நட்சத்திரம்….

…. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திர
பகவான்….

.,. வணங்க வேண்டிய தெய்வங்கள்…

… சரஸ்வதி…
……..பிரம்மா …
….மஹாலட்சுமி…
… கிருஷ்ணர்…

… ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்….

…. திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்…

… இது ராகு பகவான் சிவபெருமானை
பூஜித்த திருத்தலம்…

… ராகு பகவான் பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது…

.,.. நவகிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ ஸ்தலம் என்ற பெருமையைப் பெற்றது…

…. இந்தக் கோவிலின் மூலவர் நாகநாதர்..

… சிறந்த சிவபக்தரான ராகு பகவான் எல்லா இடங்களிலும் மேன்மை பெற்று விளங்கிய போதும்….

…. இந்த ஸ்தலத்தின் இரண்டாவது பிரகாரம் தென் மேற்கு மூலையில்…

…”” நாகவல்லி “” “” நாககன்னி “”
ஆகிய இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருப்பது இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது…!!!!

… பொதுவாக ராகு மனித தலை ,,
நாக உடலுடன்தான் காட்சி அளிப்பது வழக்கம்…!!!!

… ஆனால் இந்த ஸ்தலத்தில் மனித வடிவில் ராகு காட்சி அளிக்கிறார்….

… இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால்…

… அணிகின்ற ஆடை மட்டுமல்ல மட்டுமல்ல !!! ….

….இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது …

.தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது…

,..பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் இந்த கோவிலில்பார்க்கலாம்….!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதையாக திருநாகேஸ்வரம் நாகநாதர் உள்ளார்…!!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி சந்திரபகவான்…!!!!!

… சந்திரன் பிரகாசத்தை கொடுக்கக்கூடியவர்….!!!!!

…. ஜோதிடரீதியாக ராகுவும் கேதுவும் சந்திரனுக்கும் சூரியனுக்கும் பகை கிரகங்கள்….!!!!

.. ஆனால் சூரியனும் சந்திரனும் திருநாகேஸ்வரம் வந்து சாபவிமோசனம் தீர நாகநாதரை வழிபட்டுள்ளனர்…!!!!

… இதனால் இங்கு வந்து வழிபடுபவர்களின் வாழ்க்கை பிரகாசமாக ஒளி நிறைந்ததாக இருக்கும்….!!!!

…. எதிரிகளின் தொல்லை விலகும்…!!!

… ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்திர தரிசனம் செய்தால்….

கண் கோளாறுகள் நீங்கும்…. முகம் பொலிவு பெறும்…!!!!

… ரோகிணியில் பிறந்தவர் கிருஷ்ண பகவான் என்பதால் …..

பெண்களிடம் காதல் வெளிப்படுத்த உகந்த நட்சத்திரம்…

…. பெண்கள் ,, ஆண்களை வசியம் செய்ய ஏற்ற நட்சத்திரம் ஆகும்….

…. ரோகிணியில் பிறந்த நாயன்மார்கள்…

…… திருநாவுக்கரசர்….
……. திருநாளைப் போவார்…
… நேசர்….
…… மங்கையர்க்கரசியார்..

…. ரோஹிணியில் பிறந்த ஆழ்வார்கள்…

…. கோட்டியூர் நம்பி…..
….. திருப்பாணாழ்வார்…
…. நம்பெருமாள்…
….. நைநாராச்சரம் பிள்ளை…
…. பெரியவாச்சான் பிள்ளை…

.. ரோகிணி நட்சத்திரத்தின் விருட்சம்
நாவல் மரம்….!!!!

… நாவல் மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருத்தலங்கள்….!!!!

… திருச்சி …. திருவானைக்காவல்….
…. ஜம்புகேஸ்வரர் கோவில்…..

…. தஞ்சாவூர்…. திருநாகேஸ்வரம்…
….. உப்பிலியப்பன் கோவில்…….

…,. மதுரை ….பழமுதிர்சோலை…
… சுப்பிரமணியர் கோவில்…..

…. நாமக்கல் ….மோகனூர் …
……கருப்பசாமி கோவில்….

…. தூத்துக்குடி ….கழுகுமலை…
…. சம்புநாத ஈஸ்வரர் கோவில்….

…. மேற்கண்ட ஸ்தலங்களில் ….

..ஏதாவது ஒரு கோவிலுக்கு…

… வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று.

… அங்குள்ள நாவல் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வர, நம்முடைய வாழ்க்கை தரம் உயரும்….

…. ஓம் ப்ராஜா விருத்தியை ச வித்மஹே…
.. விச்வரூபாயை தீமஹி…
… தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்…

… தென்னாடுடைய சிவனே போற்றி..

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி..

…. கடையவ னேனைக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட…
.. விடையவ னேவிட் டிடுதிகண் டாய் விறல் வேங்கையின் தோல்..
.. உடையவனே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே….
… சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக்கொள்ளே…
.( மாணிக்கவாசகர் திருவாசகம் )..
… திருச்சிற்றம்பலம்..

… ஜோதிடத்தில் அடிப்படை கல்வி… உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…!!!

.. அடுத்த மாதம் வகுப்புகள் ஆரம்பம்…!!!

… விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்…!!!

M.S. செல்வராஜ்.D.A.B.A. Astro..
.. நல்லூர் … திருப்பூர்…
… தொடர்பு எண்…
..9965742366..
…9360354122…

கிருத்திகை நட்சத்திரம்

ஓம் நமசிவாய …குரு வாழ்க… குருவே துணை..

….. கிருத்திகை நட்சத்திரம்….

…. வார்த்தைகள் உடையன ஆகும்…
… வழக்கு அறிந்து உரைக்க வல்லான்….
… கூத்து மனத்தன் ஆகும்…
… குணமுடைகிளையனாகும்…
… போர்த்தொழில் வல்லதாகும்.. புகழுடன்
பொருளும் தேடும்…
… கார்த்திகை நாளில் தோன்றும் கருத்துடை காளை தானே….

…..27.. நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் கிருத்திகை…

… இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல வாக்கு வன்மை உடையவர்கள்…

…. வழக்குகளை மிகவும் தெளிவாக பேசி தீர்த்து வைக்கும் ஆற்றல் படைத்தவர்கள்…

… நடனம் போன்ற கலைகளில் நாட்டம் உள்ளவர்கள்…

…. நல்ல குணம் உள்ளவர்கள்…

… உறவினரிடம் சுமூகமாக நடந்து கொள்ளக் கூடியவர்கள்…

… போர்த் தொழில் புரிவதில் வல்லவர்கள்…

… ராணுவம் …போலீஸ் …பணியில் இவர்கள் தொழில் அமைந்து இருக்கலாம்…

…. பொன் பொருள் இவற்றுடன் புகழையும் தேடி உயர்ந்து வாழ்வார்கள்…

…. தெளிந்த கருத்து சொல்லும் பண்புடையவர்கள்….

…. மேலே உள்ள செய்யுளுக்கு இதுதான் பொருள்….

… மரிச கோத்திரத்தைச் சேர்ந்த பெண் நட்சத்திரம் கிருத்திகை…

… ஆகாயத்தில் கத்தி அல்லது வாள் போன்ற உருவம் உடையது…

… விருட்சங்களில் இது அத்திமரம் ஆகவும்..

… மிருகங்களில் பெண் ஆடாகவும்…

…. திசைகளில் தெற்காகவும்… விளங்குகிறது…

.. மேஷ ராசி யையும் ரிஷப ராசியை யும் இணைக்கும் பாதையாக கிருத்திகை நட்சத்திரம் விளங்குகின்றது….

… மேஷ ராசியில் முதல் பாதமும்…

… ரிஷப ராசியில் மீதி 3 பாதங்களும் பரவி உள்ளது….

…. நட்சத்திர அதிபதி சூரிய பகவான்…

…. கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை அக்னி பகவான்…

…. வழிபட வேண்டிய தெய்வம் சுப்பிரமணிய பெருமான்….

… கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் ….

.,.நாகப்பட்டினம் நாகநாதர் கோவில்..

… கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்கள்…
…. இடங்கழியார்…
… கணம்புல்லார்…
…. புகழ்ச்சோழர் மூர்த்தியார்….

… கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த ஆழ்வார்கள்….
… உய்யக்கொண்டார் நம்பிள்ளை…
…. திருமங்கையாழ்வார்…

…. கடன் தொல்லைகளில் இருந்து விடுபட நினைப்பவர்கள்…

…. தொடர்ந்து 6 மாத காலம் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்களில் விரதமிருந்து…

… முருகப் பெருமானின் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் ..

…. கடன் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்…

… ஆண்கள் வெள்ளிக்கிழமையும்,, கிருத்திகை நட்சத்திரமும் _ இணைந்து வரும் நாட்களில் விரதம் இருந்தால்…!!!

… கணவன் மனைவி உறவு பலப்படும்…

…. கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சம் அத்திமரம்…

… அத்தி மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட திருக்கோவில்கள்….

… கடலூர் …காட்டுமன்னார்குடி..
… பதஞ்சலி ஈஸ்வரர்…

… தஞ்சாவூர் ..சேங்கனூர்…
…. சத்தியகிரீஸ்வரர்….

….. திண்டுக்கல்… கீரனூர்…
…… சிவலோகநாதர்….

….. தூத்துக்குடி… திருச்செந்தூர்…
….. முருகப்பெருமான்…

…காஞ்சிபுரம்… வரதராஜ பெருமாள் கோவில்…

…. சென்னை…. திருவொற்றியூர் …
….வன்மீக நாதர்…

…. நாகப்பட்டினம் …திருச்செங்காட்டாங்குடி..
……. ஆத்தி வனநாதர்..

… திருவாரூர் ….திருமீயச்சூர்…
…. சகலபுவனேஸ்வரர்…

…. வருடத்திற்கு ஒருமுறையாவது …

…இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு
… ஸ்தலத்திற்கு சென்று…

… கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய விருட்சமான அத்தி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வந்தால்…

…. நாம் ஊற்றும் தண்ணீர் வேருக்கு பட்டதும்….

….. நம்முடைய வாழ்க்கை தரம் துளிர்க்க ஆரம்பிக்கும்…..

….. தென்னாடுடைய சிவனே போற்றி…
.., என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி…

…( கீழே உள்ள படத்தில் அடியேன் உடன் இருப்பவர் என் வாழ்க்கை துணைவி..

.. 35 ஆண்டு திருமண வாழ்வில் ஒரு சிறு கீறல் கூட விழாமல் வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் சென்று என்னை ஒரு குழந்தை போல பாதுகாத்து வரும் என் மனைவியாகிய தாய்…)

… ( தாய்க்குப்பின் தாரம் என்ற பழமொழிக்கு உதாரணமாக விளங்கியவர்..)..

…. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது..

… இந்தப் பிறவியில் எனக்கு வாழ்க்கை துணைவியாக அவரை அமைத்துக் கொடுத்த..

… எம்பெருமான் சிவபெருமான் அவர்களின் கருணையே கருணை…

… சிவனை நம்பியவர்கள் தோற்றதில்லை…

… திருவாசகத்தை படித்தவர்கள் கெட்டதில்லை…

.. குறைவிலா நிறைவே, கோதிலா அமுதே..
.. ஈறிலா கொழுஞ்சுடர் குன்றே…
.. மறையுமாய் மறையின் பொருளுமாய்
வந்தென்..
,.. மனத்திடை மன்னிய மன்னே…
.. சிறை பெறா நீர்போல் சிந்தை வாய்ப்
பாயுந் திருப்பெருந்துறை சிவனே..
.. இறைவனே நீயென் உடலிடங்
.. கொண்டாய்
. இனி உன்னை என்னிரக்கேனே..
..( திருவாசகம்..).. திருச்சிற்றம்பலம்..

.. ஜோதிடம் அடிப்படை …உயர்நிலைக் கல்வி கற்றுத்தரப்படும்…

..M.S. செல்வராஜ்…D A.B.A..Astro..
… நல்லூர்… திருப்பூர்….
… மொபைல் எண்…
..9965742366..
…9360354122…

#ALP astrology class

#அட்சய லக்ன பத்ததி ஜோதிட வகுப்பு பள்ளிபாளையத்தில் . நாள் :16.04.2019 இடம்: பள்ளிபாளையம்.

#ALP astrology class