பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம்:

பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் பூராடம் நட்சத்திரம் நான்காம் பாதம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்த நேரம் அதிர்ஷ்டமான நேரம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதுநாள் வரையில் வெளிநாடு செல்ல முடியவில்லை.
இடம் விட்டு இடம் நகர வேண்டும் என்ற கேள்வி வரும்.

எதிர்பார்த்த விஷயங்கள் எப்படி இருக்கும்,
பொருள் விரயம் செய்யலாமா,
இடம் வாங்கலாமா என்ற கேள்வி இருக்கும்.

கடன் வாங்கி இடம் வாங்கலாம் என்ற விஷயத்தை இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன்.

ஜாதகருக்கு கடன் சார்ந்த விஷயங்கள் இருக்குமா? இருக்கும்.
ஏன்னா?
தனுசு லக்னத்தில் பூராடம் நட்சத்திரம் போகும்பொழுது 6,11 க்கு உடைய ஆதிபத்தியம் வாங்கும்பொழுது
ஜாதகர் கடன், வம்பு, வழக்கு, நோய்நொடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஜாதகர் பயணிப்பார்.
அது சார்ந்த விஷயங்கள் அவரை அதிகமாக ஈர்க்கும்.

6ம் வீடு என்றால் கடன்.
அது சார்ந்த விஷயங்களில் ஜாதகர் பாதிக்கப்படுவார்.

மருத்துவமனை சம்பந்தப்பட்ட செலவுகள் அசுபவிரயச் செலவுகளாக மாறும்
சுபசெலவுகள் என்றால் வீடு, வண்டி, வாகனம், சொத்து, திருமணம் சார்ந்த விஷயங்கள், சுப விரயச் செலவுகள் செய்து கொள்ளலாம்.

அதுவே மருத்துவமனை சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அசுபவிரயச் செலவுகளாக மாறும்.
நிறைய விரயங்கள் ஏற்படும்.

இந்த காலகட்டம் பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம் விரய செலவுகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.
கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டிய காலம்.

ஒவ்வொரு மனிதருக்கும் 1 வருடம்,
1 மாதம், 10 நாள் வாழ்க்கையில் நல்ல காலங்களையும் கொடுக்கும்,
அசுப காலங்களையும் கொடுக்கும்.
அதை நாம் கவனமாக பார்த்துக் கொண்டாலே நம்முடைய வாழ்க்கை மாறும்.

வெளிநாடு செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். உங்களுடைய பெயரில் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.
தேவை இல்லாமல் வீண் விரயங்கள், செலவுகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.
கவனமாக இருக்க வேண்டும்.
பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம் போராட வைக்கும்.
கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி வணக்கம்.

பூராடம் நட்சத்திரம் 3ம்பாதம்:

பூராடம் நட்சத்திரம் 3ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் பூராடம் நட்சத்திரம் 3ம் பாதம்.
தனுசு லக்னம்.

எதிர்பார்த்த யோகங்கள், சந்தோஷங்கள்,
உங்களுடைய எல்லா கேள்விகளும் இந்த காலகட்டம் நடக்கும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட கேள்விகள், வெளியூர் சம்பந்தப்பட்ட கேள்விகள், திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், குழந்தைகள் சம்பந்தபட்ட விஷயங்களுக்காகதான் ஜாதகர் வருவார்.

என்னுடைய வெற்றி எப்படி இருக்கும்,
என்னுடைய பதவி உயர்வுகள் எப்படி இருக்கும்.

தனுசு லக்னம் அட்சய லக்னமாக செல்லும்பொழுது சுக்கிரன் பலமாக இருந்தால் அதாவது 6,8, 10, 12ல் இல்லாமல் இருந்தால், சிறப்பாக இருக்கும்.

6, 8, 10, 12ல் இருந்தால் தேவையில்லாத பிரச்சனைகளை கொடுக்கும்.

காதல் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வந்தால் 6, 8, 10 ,12 ல் இருந்தால் கண்டிப்பாக காதல் திருமணம் நடக்காது.
காதல் திருமணங்கள் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது.

ஒரு ஜாதகர் எதை அனுபவிக்க வேண்டும் என்பதை லக்ன புள்ளி முடிவு செய்யும்.

பூராடம்,பரணி யோகத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.
ஆனால்,யோகத்தை கொடுத்து
அவ யோகத்தைக் கொடுக்கும் என்பது போல இந்த பூராடம் நட்சத்திரம் தனுசு லக்னத்தில் ஒரு வருடம், ஒரு மாதம், 10 நாள் திடீர் யோகத்தை கொடுக்கும்.

இது நாள் வரையில் வெளிநாட்டு யோகம் இல்லை என்றால் இந்த ஒரு வருடம், ஒரு மாதம், 10 நாள் உண்டு.

ஒரு விஷயத்தின் தொடக்கம் நன்றாக அமைந்தால் கண்டிப்பாக நன்றாகவே அது முடியும்.

பூராடம் நட்சத்திரம் 3ம் பாதம் தொழில் தொடங்கினால் அடுத்தடுத்த கிரக அமைப்புகள் யோகத்தை கொடுக்க வேண்டும்.
பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் தொழில் தொடங்கினால் கண்டிப்பாக அடுத்த 20 வருடங்களுக்கு யோகத்தை கொடுக்கும்.

நன்றி, வணக்கம்.

பூராடம் நட்சத்திரம் 2ம்பாதம்:

பூராடம் நட்சத்திரம் 2ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் பூராடம் நட்சத்திரம் 2ம் பாதம்.
தனுசு லக்னம்.

இந்தப் பூராடம் நட்சத்திரம் 6ஆம் அதிபத்தியம், 11ஆம் அதிபத்தியம் வாங்கி தொழில் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் ஜாதகர் வந்திருப்பார்.

முதலீடு போட்டு லாபம் அமைக்க சுக்கிரன் பலமாக இருந்தால் ஆறாம் அதிபதி இரண்டில் இருந்தால் உதாரணமாக சுக்கிரன் மகரத்தில் இருந்தால் தனுசு லக்னம் அட்சய லக்னமாக இருந்தால் கண்டிப்பாக அவர் கடன் மூலமாக வருமானம் உண்டு.

அதே சுக்கிரன் தனுசு லக்னத்திற்கு 12ல் இருந்தால் விரயத்தை கொடுக்கும்.
சுக்கிரன் 9ம் வீட்டில் இருந்தால்,தொழில் என்றால் 10ம் வீடு,
பத்தாம் வீட்டிற்கு 12ல் விரயமாக உள்ளது.
9ல் சுக்கிரன், பாக்கியத்தில் சுக்கிரன் இருந்தால் யோகத்தைக் கொடுக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் கண்டிப்பாக கொடுக்காது.

சூரியன் வீட்டில் சுக்ரன்,
சுக்ரன் வீட்டில் சூரியனும் இருந்தால்
எதிர்பார்த்த யோகங்களை ஜாதகருக்கு கொடுக்காது.

பூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் போராட வைக்கும்.
யோகத்தை கொடுக்குமா?
தடைபட்ட ஒரு விஷயத்தை
அதிகப்படியான ஒரு போராட்டம் தான் கொடுக்கும்.

கடன் வழக்கு சார்ந்த பிரச்சனைகள், போராட்டங்கள்,
எதிர்பாராத உடல் உபாதைகள்,
ஜாதகரை அதிகமாக வதைப்படுத்தும். அதனால் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

உங்களுடைய வாழ்க்கையில் சுக்கிரன் பலமாக இருந்தால் கண்டிப்பாக யோகத்தை கொடுக்கும்.

சுக்கிரன் நீசமாக இருந்து தொழில் போராட்டத்தை கொடுத்தாலும் ஜெயிக்க வைக்கும்.

ஜாதகருக்கு கண்டிப்பாக ஒரு மாற்றத்தை கொடுக்கும் பூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்.

அந்தந்த பாவகங்கள் அதனுடைய தன்மைகளை கூட்டி குறைத்துக் கொடுக்கும்.

நன்றி வணக்கம்.

பூராடம் நட்சத்திரம் 1 ம் பாதம் :

பூராடம் நட்சத்திரம் 1 ம் பாதம் :

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளமும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம் :

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரப் பாதம் பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.
தனுசு லக்னம்.

ஒரு நட்சத்திர பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

உடலுடைய அமைப்புக்கு நம்முடைய நிலை என்ன என்பதை வைத்து தான் பண்ண முடியும்.

பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம் ஜாதகருக்கு எதிர்பாராத சந்தோஷத்தையும்,
எதிர்பாராத மகிழ்ச்சியையும்,
நோய் நொடிகளையும் கொடுக்கக்கூடியது.

அதாவது 6ம் ஆதிபத்தியம் சுக்கிரன் 11ம் ஆதிபத்தியம் பெறுவதால் நோய் நொடிகளை கொடுக்கும்.
9ல் சுக்கிரன் இருந்தால் அப்பாவை பாதிக்கும்.
4ல் சுக்கிரன் இருந்தால் அம்மாவை பாதிக்கும்.
7ல் சுக்கிரன் இருந்தால் மனைவியை பாதிக்கும்.

நோய்நொடி சம்பந்தப்பட்ட
காரகத் தன்மைகளை ஜாதகர் அனுபவிப்பார்.
குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கடன், வம்பு, வழக்கு, நோய்நொடி,
அதிகப்படியான லாபங்கள்,
ஜாதகருக்கு பெரிய வருமானம் கிடைத்தால் அவருக்கு நோய் நொடி கொடுத்து விடும்.
பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

ஜாதகருக்கு யோகம் உண்டு.
ஆனால்,இதுநாள் வரையில் நடக்காத விஷயங்கள் எல்லாம் நடக்கும்.
தொலைதொடர்பு மூலம் வருமானம்,
வெளிநாட்டு தொடர்புகள்,
தொழிலில் முதலீடு செய்து ஜாதகருடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ளக் கூடிய அமைப்பு பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

தாயாருடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் இந்த காலகட்டம்.

குழந்தையுடைய படிப்பிற்காக கடன் வாங்கி வெளிநாடு அனுப்பக் கூடிய வாய்ப்பு உண்டு.

வெளிநாடு செல்லும் பொழுது தொற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும்.
தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி வர வாய்ப்பு உள்ளது.

உங்களுடைய ஜாதகம் முறையில் சுக்கிரன் பலமாக இருந்து லக்னாதிபதி பலமாக இருந்தால் இந்த ஜாதகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும்.
60 லட்சம் கடன் வருவதற்கு 10 லட்சம் கடனாக வரும்.

கடன், நோய்நொடி, வம்பு, வழக்கு எல்லா விஷயங்களும் இந்த கால கட்டத்தில் இருக்கும்.
ஜாதகர் கவனமாக இருக்கவேண்டும்.
நிறைய விஷயங்களுக்கு கோர்ட் செல்ல வேண்டி இருக்கும். தேவையில்லாத அலைச்சல்களை உருவாக்கும்.
பூராடம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.
மிக மிக கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். ஆனால்,மகிழ்ச்சியையும் கொடுத்து உடல் உபாதைகள் கொடுக்கக்கூடிய நட்சத்திர பாதம்.

நன்றி வணக்கம்.

மூலம் நட்சத்திரம் 4ம் பாதம்:

மூலம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் மூலம் நட்சத்திரம் 4ம் பாதம்.

மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் இதுநாள்வரையில் நல்லாபோயிட்டு இருந்த வாழ்க்கையில் சிறியதாக ஒரு தடங்கல் ஏற்படும்.

அது கடனாக இருக்கலாம்,
நோயாக இருக்கலாம்,
அவருடைய ஆப்ரேஷன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் இந்த மாதிரி கேள்விகளுக்காகதான் ஜாதகர் வருவார்.

மிக மிக கவனமாக இருக்கவேண்டும். மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கக்கூடிய காலகட்டம்.
பணம் சம்பந்தப்பட்டது,
ஜாமின் கையெழுத்து போட கூடிய இடங்கள்,
மிக கவனமாக இருக்க வேண்டும்.

பத்திரப் பதிவுகள்,
குழந்தைகள் சம்பந்தப்பட்டது,
கனவு சம்பந்தப்பட்டது,
மாந்திரீகம் சம்பந்தப்பட்டது இந்த காலகட்டங்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

நிறைய பொருள் விரயத்திற்கான வாய்ப்பு உள்ளது.
ஜாதகர் மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நட்சத்திர பாதமும் நம்முடைய நிலைகளுக்கு ஏற்ப தான் இயங்கும்.

மூலம் நட்சத்திரம் 4ம் பாதம் ஜாதகருக்கு கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

நன்றி, வணக்கம்.

மூலம் நட்சத்திரம் 3ம் பாதம் :

மூலம் நட்சத்திரம் 3ம் பாதம் :

 

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் இனிய நாள்,

வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”

ஜோதிட ஆராய்ச்சியாளர்.

 

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்.

 

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் மூலம் நட்சத்திரம் 3ம் பாதம்.

 

திடீர் அதிர்ஷ்டத்திற்கான நட்சத்திரம் மூலம் நட்சத்திரம் 3ம் பாதம்.

 

எதிர்பாராத சந்தோஷங்கள், திருமணங்கள்,

குழந்தைபேறு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,

அவருடைய முயற்சிகள்,

அரசியல் வாழ்க்கை,

இந்த காலகட்டம் அரசியலில் நின்றால் பலமாக போட்டியிடலாம்.

 

நல்ல தசாபுத்தி, நல்ல கிரக அமைப்பு இருந்தால் பலமாக போராடக்கூடிய நட்சத்திர பாதம் மூலம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்.

 

மூலம் நட்சத்திரம் 3ஆம் பாதம் திருமணங்கள்,

குழந்தைபேறு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,

வெளிநாட்டு கல்வி,

வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள்,

எதிர்பாராத லாபங்கள்,

புதையல் கிடைக்க கூடிய திடீர் யோகம் உடைய காலகட்டம்.

 

உடல் உபாதைகள்

வயிறு சம்பந்தப்பட்டது,

கண் சம்பந்தப்பட்டது,

இதயம் சம்பந்தப்பட்டது,

நெருடலான வாய்ப்பைக் கொடுக்கும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

 

மூலம் நட்சத்திரம் 3ஆம் பாதம் போனால் கண்டிப்பாக அவருடைய வீட்டில் அறுவை சிகிச்சை நடக்கும்.

அதாவது ஜாதகருக்கு அது நடக்கும்.

 

உடல் ரீதியாக பாதிப்பு,

உடல் ரீதியான தொந்தரவு இருக்கும் போராடி ஜெயிப்பார்.

 

போராடி ஜெயிக்க கூடிய,

யோகமான நட்சத்திர பாதம் மூலம் நட்சத்திரம் 3ம் பாதம்.

ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

 

நன்றி, வணக்கம்.