இனிய பிறந்த நள்!

அப்படியே ஒவ்வொரு விஷயமும் உன் பின் அதற்கான காரணத்தைத் தேடி இருக்கீங்க

tamilastrology

நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான சனி பகவான்    ஈஸ்வரப் பட்டம் பெற்று சனீஸ்வரன்    என்று அழைக்கப்படுகிறார். இந்த சனி பகவான் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது சனிப்பெயர்ச்சி விழாவாக கோவில்களில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு வருகிற 16–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.44 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஒருவருடைய ஜென்மராசியில் இருந்து 3,6,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது சனி பகவான் நற்பலன்களை வழங்குவார் என்பது பொது விதி. அதன்படி இந்த சனிப்பெயர்ச்சியில் 3–ம் இடத்திற்கு வருவதால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கும், 6–ம் இடத்திற்கு வருவதால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கும், 11–ம் இடத்திற்கு வருவதால் மகர ராசியினருக்கும் ராஜயோகம் என்னும் படியான நற்பலன்கள் விளையும்.

சனி பகவான் 9–ம் இடத்திற்கு வருவதால் மீன ராசியில் பிறந்தவர்களுக்கும் நற்பலன்கள் விளையும். அது போல 5–ம் இடத்திற்கு வருவதால் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு கெடு பலன்கள் குறைந்து அனுகூலமான பலன்கள் அதிகரிக்கும் .

1–ம் இடத்திற்கு வருவதால் விருச்சிக ராசியினருக்கு ஏழரைச் சனியில் 2–ம் கட்டமான ஜென்மச் சனி காலம். முயற்சிகளில் தடை, தாமதம், கவுரவப் போராட்டம் ஆகியவை நடைபெறும்.

2–ம் இடத்திற்கு வருவதால் துலாம் ராசியினருக்கு ஏழரைச் சனியில் பாதச்சனி காலம். குடும்பத்தில் குழப்பம், வீண் அலைச்சல் ஆகியவை உண்டாகும். 4–ம் இடத்திற்கு வருவதால் சிம்ம ராசியினருக்கு அர்த்தாஷ்டமச் சனி. எனவே உடல் நலக்குறைவு, கல்வியில் தடை ஆகியவை ஏற்படும்.

7–ம் இடத்திற்கு வருவதால் ரிஷப ராசியினருக்கு கண்டச் சனி காலம். குடும்ப பிரச்சினை, ஒற்றுமை குறைவு, திருமண தடை ஆகியவை நிகழும். 8–ம் இடத்திற்கு வருவதால் மேஷ ராசியினருக்கு அஷ்டமச் சனி. எனவே பரிகாரம் செய்வது அவசியம்.

10–ம் இடத்திற்கு வருவதால் கும்ப ராசியினருக்கு பாதிப்பான காலம். தொழில் தடை, தாமதங்கள் ஏற்படும். 12–ம் இடத்திற்கு வருவதால் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனியின் முதற் கட்டம் ஆரம்பம். விரய செலவினங்கள் இடமாற்றம் ஆகியவை ஏற்படும்.

எனவே மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய 7 ராசியில் பிறந்தவர்களும் அவசியம் பரிகாரம் செய்து சனிபகவானை ப்ரீதி செய்து கொள்வது நல்லது.

 

nine planets

நவக்கிரக நன்மைகள்

நவக்கிரகங்களில் ஒவ்வொன்றையும் வணங்குவதால் ஏற்படும் சிறப்பு நன்மைகள் வருமாறு

சூரியன்- உடல் நலம் பெருகும்,

சந்திரன்- புகழ் பெருகும்,

செவ்வாய்- செல்வம் பெருகும்,

புதன்- ஞானம், கல்வி சிறக்கும்,

குரு – சிறப்பான வாழ்க்கை அமையும்,

சுக்கிரன்- வாக்கு வன்மை, சுக போக வாழ்க்கை அடையலாம்,

சனி- வீட்டில் உள்ள பீடை ஒழிந்து மகிழ்ச்சி உண்டாகும்,

ராகு -வலிமைகள் பெருகி எதிரிகள் அழிவர்,

கேது- புலமை, குலப் பெருமை