கடன் தீர்க்கும்

கடன் தீர்க்கும் முறைகள் :-

1. ஒவ்வொரு மாதமும் வரும் மைத்ர முகூர்த்ததில் வாங்கிய கடனின் ஒரு சிறு பகுதியாவது செலுத்தி விடுங்கள்.

2. பணப்பெட்டியில் சிறிது உலர் திராட்சை வைத்திருங்கள்.

3. வீட்டில் ஊறுகாய் இருக்க வேண்டும். குபேரனுக்கு மிகவும் பிடித்தது ஊறுகாய் ஆகும்.

4. வீட்டின் ஈசான்ய பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

5. பணப்பெட்டியில் 9 காரட் கார்னெட் வைத்துக்கொள்ளலாம்.

6. பணப்பெட்டியில் வில்வ இலைகள், லவங்கம் வைத்துக்கொள்ளலாம்.

7. பித்ரு தர்ப்பணங்களை நிறுத்தக்கூடாது.

8. குல தெய்வ நேர்த்திக்கடன் பாக்கி வைக்கக்கூடாது.

9. காவல் தெய்வங்களுக்கும் நேர்த்திக்கடன் பாக்கி வைக்க கூடாது.

10. சப்போட்டா வளர்ப்பது நல்லது.

11. ஸ்வஸ்திக் படம் வீட்டில் வைத்திருப்பது நல்லது.

12. தினமும் கனகதாரா ஸ்தோத்ரம் படிப்பது நல்லது.

13. கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து பிரார்த்திக்கவும்.

ருண விமோசன அங்காரக மந்திரம்
———————————————————–

மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய.

மண மேடை-யும் வாஸ்து -வும்….

மண மேடை-யும்
வாஸ்து -வும்….

முகூர்த்தக்கால் நட்டு, பின் பந்தல் போட
வாஸ்து அளவு உண்டு. 32×32 அடி ..பிற
64×64 என்ற அளவிலும் பந்தல் அமைக்க
சிறப்பான அளவாகும். மற்ற அளவுகள் உண்டு. அடுத்துப் பதிவிடுகிறேன்.

பந்தல் அளவை நிலத்தில் குறிக்கிற போது ஈசானம் பாகத்தின் அளவை அரைக்கால் கூட்டி அளவிட வேண்டும்.
பந்தல் போட்டாயிற்று…!

மணமேடை எங்கு அமைக்க வேண்டும்?
பந்தலின் பிரம பாகத்தில். அதன் நீள×அகலம் அறிவோம். 96× 96-அங்குல
அளவில் அமைக்க வேண்டும். ஏன் நாம் 96 அங்குலம் அமைக்க வேண்டும்?

96-தத்துவம் குறியீடாகும். 96-அங்குலம் என்பது 8-அடியாகும். ஒரு அடிக்கு ஒரு இலட்சுமி என்று இங்கே 8-இலட்சுமி களும் மண மக்களை ஆசிவதிக்கவும்.

அ–என்ற எழுத்து தமிழ் மொழியில் 8-குறிக்கிறது. தமிழின் முதல் எழுத்து போல், மண மக்கள் எதிலும், எங்கும் முதன்மை யாகத் திகழ வேண்டும்– என்பதைக் குறிப்பால் உணர்த்தினர்.

பந்தல் உயரம் 16-அடிக்கு மேல் போகாத
படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமான வரை, பிய்ந்து போகாத கீற்று மேய வேண்டும். மணமேடை மேற் பகுதி
பட்டுத் துணி இணைத்து கீற்றுடன் இருக்க வேண்டும்.

8×8=64. இது ஆய கலைகள் 64-ஐக் குறிகிறது. மண மேடை உயரம் 5-அங்குலம் சிறப்பு. அமரும் பலகை உயரம் 3-அங்குலம். மா,பலா அல்லது தேக்குப் பலகை(புது) யில் அமர வேண்டும்.

பலகையில் அமர்ந்த (கோவிலே சன்னதி ஆனாலும்)படிதான் திருமாங்கல்யம் சூட்ட வேண்டும். நின்றபடித் தாலி கட்டக் கூடாதுங்க..யார் சார் கேட்கிறாங்க……

பலகை இல்லை எனில் புது ஜமுக்காளம் நான்காக மடித்து, அதில் அமர்ந்து திருப் பூட்டலாம். ஜமுக்காளம் நுனியில் மஞ்சள் சற்றுத் தடவி இருக்க வேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=450381678725113&id=100012598533744

வாஸ்து விதிகள்

நவீன காலகட்டத்தில் கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் குழந்தைகளுக்கென படிக்க ஒரு தனி அறை அமைத்து கொடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, இந்த அறையை அமைக்கும் முன் கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிகள்.

ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும்.

இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும்.

குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும்.