லால் கிதாப்

12 இராசிகளுக்கும் அதிஷ்டம் அளிக்க கூடிய பண்டைய கால லால் கிதாப் மந்திர புத்தகத்தில் உள்ள ரகசியங்கள்

12 இராசிகளுக்கும் லால் கிதாப் பரிகாரங்கள்:
இந்த நூல் வடஇந்தியாவில் பலருக்கும் மிகப் பிரசித்தம்.இந்திய ஜோதிட மற்றும் கைரேகை சாஸ்திரத்தைப் பற்றிய பண்டைய நூலான இதில் சில எளிய மற்றும் சிறந்த பலன்களைத் தரும் பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன.
இந்திய மட்டுமின்றி பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹிந்துக்கள் இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி மக்களும் பின்பற்றிப் பலன் பெறுகின்றனர்.ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள் :-

1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கதிர்கள்.ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள் .
2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.
3.பின்னமில்லாத டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள வாழ்வில் நன்மைகள் பெருகும்.பெண்கள் வெள்ளியில் செய்த வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.
4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக்கூடாது .இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.
5. வீட்டில் எலுமிச்சை செடி வளர்க்கக் கூடாது.
6.தாய்,குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள்,ஞானிகளுக்குமுடிந்த உதவி , சேவை செய்தல் வேண்டும்.
7.உறங்கும் பொழுது தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.அந்த நீரைக் காலையில் எழுந்ததும் ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்

ரிஷப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.ஆடையில் நல்ல வாசனைத் திரவியம் ( சென்ட் ) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தைப் பேருக்கும்.
2.சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சனைகள் ஏற்படலாம் அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.
3.மனைவியைத் தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக் குறைவு, மன உளைச்சல் ,பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம்.கவனம் தேவை.
4.மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிறப் பூக்களைப் போடச் சொல்லலாம்.இது தம்பதிகளுக்குத் தோஷ நிவாரணமாகவும் அன்யோன்யத்தைப் பெருக்குவதாகவும் அமையும்.
5.பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்குப் பசுமாடு தானம் தரலாம்.
6.பட்டு,நைலான் ,பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் அதிர்ஷ்டமானவை.
7.ஜனவரி ,பிப்ரவரி மாதங்களில் புதிதாகச் செருப்பு,ஷூ வாங்க வேண்டாம். இது துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
8.நீடித்த நல்வாழ்விற்கு :-
உங்கள் பொருளாதார நிலைக்கேற்ப மனைவியைத் தினமும் ஏதாவது ஏழைகளுக்குப் பணம்,உணவு என்று முடிந்ததைத் தானமாக வழங்கலாம். யாரும் பிச்சை கேட்டால் இல்லை என்று சொல்லாமல் ஒரு ரூபாயாவது போடுங்கள்.இது நிறைந்த செழிப்பான வாழ்வைத் தரும்.

மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.படிகாரத்தூள் கொண்டு அல்லது படிகாரத்தூள் சேர்த்த பற்பொடி பற்பசை கொண்டு பல்துலக்குவது அதிர்ஷ்டம் தரும்.
2.முடிந்த போது மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது நன்மை பயக்கும்.
3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு பால், அரிசி தானமாக வழங்கலாம்.
4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.
5.12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் திட்டக்கூடாது.அவர்களை புதன்கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது நன்மை தரும்.
6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது.துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.
7.வீட்டில் மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.
8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும்.ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்

கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.செம்பு நட்டு,போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது.
2.வெள்ளி டம்ளரில் பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.
3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால் கஷ்டப்படும் மக்களுக்கு கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது நன்மை தரும்.
4.எப்பொழுதும் வெறும் காலுடன் கோயிலுக்கு செல்லவேண்டும்.
5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில் முடிந்த தொண்டாற்ற வேண்டும்.
6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.
7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும்.இதுவும் வறுமை கடன் ஏற்படாது தடுக்கும்

சிம்ம ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.முக்கியமான நிகழ்ச்சிகள்,இண்டர்வியூக்கள்,பிசினஸ் மீட்டிங்குகளில் கலந்து கொள்ளும் முன் கொஞ்சமாவது உணவு அருந்தி விட்டுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.
2.மனைவியின் சகோதரர்கள்,மருமகன்கள் ,தங்கை மற்றும் அக்காள் மகன்கள் இவர்களுடன் நல்லுறவவைப் பேணுங்கள்.
3.ஒரு செம்பு நாணயம் அல்லது டாலரைக் கழுத்தில் ஒரு நூலில் கோர்த்து அணிந்து கொள்வது செல்வ நிலையில் ,தொழில் மற்றும் வேளையில் உயர்வு தரும்.
4.கண்பார்வையற்ற 10 பேருக்கு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இனிப்பு பண்டம் வாங்கிக் கொடுத்தால் வாழ்வில் வளம் சேரும்.
5. உங்கள் ப[பொருளாதார நிலைக்கேற்ப ஏதேனும் ஒரு சேவை நிலையம் ,அன்னதான மன்றத்திற்கு அரிசி,பால் வழங்கலாம்.
6.யாரேனும் அன்பளிப்பாக ஏதாவது தந்தால் பதிலுக்கு சிறு பொருள் அல்லது ஏதேனும் ஒரு பதில் மரியாதை செய்வது சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும்.
7.மது மாமிசம் உண்பதை அறவே தவிர்ப்பது நல்லது.
8. 7 வகைத் தானியங்களை வாங்கி ஒரு சிகப்புத் துணியில் முடிந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் காலையில்,அதை எறும்புகளுக்கு உண்ணக் கொடுத்தால் பித்ரு தோஷம் தீரும்.சுப காரியத் தடைகள் நீங்கும்.இதை சனிக்கிழமை தோறும் செய்து வருவது நல்லது.
9.உண்மையே பேச முயற்சியுங்கள்.நன்கு யோசித்த பின் வாக்குறுதி கொடுங்கள் அப்படிக் கொடுத்த பின் அதை நிறைவேற்றுங்கள்

கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.
2.மழை பெய்யும் பொழுது மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை அடிக்கடி மாற்றக் கூடாது.
4.புத்தாடை அணியும் முன் அவற்றில் கொஞ்சம் கங்கா ஜலம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர என்றும் ஆடை ,அணிகலன்களுக்குக் குறை இருக்காது.
5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.
6.மது,புகையிலை,புகை போன்ற போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.
7.புதன்கிழமை அன்று ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.
8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.
9.பச்சை நிற கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்

துலாம் ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.இறை நம்பிக்கை கொண்டவராக இருங்கள்.
2.கோயில் அல்லது தானங்களுக்கு வெண்ணை,தயிர்,உருளைக்கிழங்கு தானமாக அளிக்கலாம்.
3.வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கோமியம் ( பசுமூத்திரம் ) தெளித்து வர செல்வம் பெருகும்.
4.மாமியார் வீட்டில் இருந்து வெள்ளி நாணயம் அல்லது வெள்ளிப் பாத்திரம் வாங்கி வைத்திருப்பது வளமான வாழ்வு தரும்.
5.நீங்கள் ஆண் என்றால் மாமியார் வீட்டு சீதனம் வரும் பொழுது ஏதேனும் ஒரு பித்தளைப் பாத்திரம் சேர்த்துப் பெற்றுக்கொள்ள அதிர்ஷ்டம் தரும்.
6.வீட்டுப்பெண்கள் வீட்டின் வெளிப்புறம் நடக்கும் போது செருப்பு அணிந்து நடக்கச் சொல்ல வேண்டும்.
7.நீங்கள் ஆண் என்றால் பெண்களை மதிப்பாகவே பேசுங்கள்.அது உங்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படுத்தும்.
8.பெற்றோர் தேர்ந்தெடுத்தவரையே திருமணம் செய்து கொள்வது நல்லது.
9. வெள்ளித் தட்டில் கொஞ்சம் தேன் விட்டு வீட்டின் தலை வாசலில் எரிக்கவும்.
10.தானமாக எதையும் பெறாதீர்கள்.அது வறுமையை ஏற்படுத்தும்

விருச்சிக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.வீட்டில் மண்ணால் செய்யப்பட பாத்திரத்தில் தேன் அல்லது குங்குமம் வைத்திருப்பது அதிர்ஷ்டம் உண்டாக்கும்.
2.தினமும் காலையில் கொஞ்சம் தேன் சாப்பிடுவது நலம் தரும்.
3.அரச மரம் மற்றும் முட்செடிகளை வெட்டக் கூடாது.
4.செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
5.சிகப்பு நிற கர்ச்சீப் ,டை அதிர்ஷ்டம் தரும்.
6.பால் காய்ச்சும் பொழுது பொங்கி வடியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
7.இனிப்பு ரொட்டி செய்து சாதுக்கள்,மகான்களுக்கு வழங்கலாம்.
8.யாரிடம் இருந்தும் எந்தப் பொருளும் இலவசமாகப் பெறாதீர்கள்.அப்படிப் பெற்றால் அதற்குப் பதில் ஒரு பொருளேனும் கொடுத்து விடவும்.
9.செவ்வாய்க்கிழமை அன்று தேன், குங்குமம் சிகப்பு ரோஜா இவற்றை ஓடும் நீர் அல்லது கடலில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
10.செவ்வாய்க் கிழமைகளில் இஷ்ட தெய்வத்திற்குச் சிகப்பு பூந்தி படைத்து வழிபட்டு வருவது வாழ்வில் வளம் சேர்க்கும்.
11.சகோதர்களின் மனைவியுடன் சண்டை இல்லமால் பார்த்துக் கொள்ளுங்கள்.
12.மூத்த சகோதரரிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் .
13.செவ்வாய்க் கிழமைகளில் ஹனுமனுக்கு செந்தூரம் மற்றும் ஆடை சாற்றி வழிபட வறுமை,கடன்,நோய்கள் நீங்கிய நல்வாழ்வு கிட்டும்

தனுசு ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.தொடர்ந்து 43 நாட்களுக்கு செம்பு நாணயங்களை ஓடும் நீரில் விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.
2.தந்தையின் படுக்கை,ஆடைகள்,உடைமைகள் அதிர்ஷ்டம் தருபவை.
3.பிச்சை கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்லாமல் இயன்றதைத் தர்மம் செய்யவும்.
4.திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஆலயத்திற்கு நெய்,தயிர்,அல்லது கற்பூரம் வாங்கிக் கொடுத்து வருவது நல்வாழ்வு தரும்.
5.வீட்டின் முன்பகுதியில் மஞ்சள் நிற பூ பூக்கும் செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
6.வியாழக் கிழமைகளில் ஹரிவம்ச புராணம் படிப்பது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம்,வழிபாடு நன்மை தரும்.
8.யாரையும் ஏமாற்றவோ ,பொய் சாட்சி கூறவோ கூடாது.
9. வாழ்வில் ஒரு முறையாவது ஹரித்துவார் சென்று கங்கையில் குளித்து தானும் தனது சந்ததிகளும் நல்வாழ்வு வாழ வேண்டிக்கொள்ள அப்படியே நடக்கும்

மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள்,யாசகர்களுக்கு வாழைப்பழம், பருப்பு,ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள்,எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.
2.ஆண் / பெண் யாராக இருந்தாலும் கணவன் /மனைவி தவிர்த்த பிறருடன் தவறான தொடர்பு கொள்ளவோ ,அதற்காக முயற்சிக்கவோ கூடாது.இது பிற்கால வாழ்வில் கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.
3.பாலும் சீனியும் கலந்து ஆல மர வேரில் விடவும்.அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள செல்வவளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.
4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.
5.48 வயதுக்கு பின் வீடு கட்டுவது நாளது.அதற்கு முன் வீடு கட்டுவது அதிர்ஷ்டமல்ல.
6.கருப்பு,நீலம் ,ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.
7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை கொஞ்சம் பால்,மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை கிணற்றில் போடவும்.இது துரதிர்ஷ்டத்தை நீக்கி வாழ்வில் வளம் சேர்க்கும்.
8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது

கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்
1.கையிலோ கழுத்திலோ தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.
2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து நெற்றியில் திலகம் இட்டு வர நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.
3.மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில் கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால் பீடைகள் நீங்கும்.
4.சதுரவடிவமான வெள்ளி டாலரை நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால் வேலை அல்லது தொழில் உயர்ந்த நிலை கிட்டும்.
5.வெள்ளியை உருக்கி 4 சிறு உருண்டைகளாகச் செய்து அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப்பையில் வைத்திருந்தாள் செல்வம் பெருகும்.
6.ஏழைகள் அலல்து கோவில்களுக்கு எண்ணெய் தானம் செய்யலாம்.
7.ஞாயிற்றுக்கிழமை அன்று பைரவருக்கு மது படைக்கலாம்.ஆனால் அதை அருந்தக்கூடாது.
8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டைமாடியில் பெட்ரோல்,டீசல் போன்ற எரிபொருட்கள் வைக்கக் கூடாது.
9.விரதம் இருப்பதாக இருந்தால் சனிக்கிழமை இருக்கவும்.
10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்

மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான லால் கிதாப் பரிகாரங்கள்

1.சட்டையின் உள்பாக்கெட்டில் சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.
2.பிறர் முன்னையில் குளிக்கக் கூடாது.
3.மொட்டை போட்டால் முழுக்க மொட்டையடிக்காமல் கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.
4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.
5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.
6.வீட்டின் வழிபாட்டு அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும் கலந்து கொள்வது நல்லது.
7.அரசமரப் பிரதட்சிணம் மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.
8. யாரிடம் இருந்தும் தானமாக எதையும் பெறக்கூடாது.
9.வீட்டின் முன்புறம் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
10.தொழில் சார்ந்த முடிவுகளில் மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.
11.பணப்பெட்டி அல்லது பீரோவில் தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க செல்வம் பெருகும்.
12.கோழிக்குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.
13.குருமார்களுடன் தொடர்ந்த தொடர்பில் இருத்தல் நன்று.

(அனைவரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்)

60 தமிழ் வருடங்கள்

சிவமயம் சிவாயநம

60 தமிழ் வருடங்கள் பெயர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

01. பிரபவ – நற்றோன்றல்
Prabhava1987-1988

02. விபவ – உயர்தோன்றல்
Vibhava 1988–1989

03. சுக்ல – வெள்ளொளி
Sukla 1989–1990

04. பிரமோதூத – பேருவகை
Pramodoota 1990–1991

05. பிரசோற்பத்தி – மக்கட்செல்வம்
Prachorpaththi 1991–1992

06. ஆங்கீரச – அயல்முனி
Aangirasa 1992–1993

07. ஸ்ரீமுக – திருமுகம்
Srimukha 1993–1994

08. பவ – தோற்றம்
Bhava 1994–1995

09. யுவ – இளமை
Yuva 1995–1996

10. தாது – மாழை
Dhaatu 1996–1997

11. ஈஸ்வர – ஈச்சுரம்
Eesvara 1997–1998

12. வெகுதானிய – கூலவளம்
Bahudhanya 1998–1999

13. பிரமாதி – முன்மை
Pramathi 1999–2000

14. விக்கிரம – நேர்நிரல்
Vikrama 2000–2001

15. விஷு – விளைபயன்
Vishu 2001–2002

16. சித்திரபானு – ஓவியக்கதிர்
Chitrabaanu 2002–2003

17. சுபானு – நற்கதிர்
Subhaanu 2003–2004

18. தாரண – தாங்கெழில்
Dhaarana 2004–2005

19. பார்த்திப – நிலவரையன்
Paarthiba 2005–2006

20. விய – விரிமாண்பு
Viya 2006–2007

21. சர்வசித்து – முற்றறிவு முழுவெற்றி
Sarvajith 2007–2008

22. சர்வதாரி – முழுநிறைவு
Sarvadhari 2008–2009

23. விரோதி – தீர்பகை
Virodhi 2009–2010

24. விக்ருதி – வளமாற்றம்
Vikruthi 2010–2011

25. கர – செய்நேர்த்தி
Kara 2011–2012

26. நந்தன – நற்குழவி
Nandhana 2012–2013

27. விஜய – உயர்வாகை
Vijaya 2013–2014

28. ஜய – வாகை
Jaya 2014–2015

29. மன்மத – காதன்மை
Manmatha 2015–2016

30. துன்முகி – வெம்முகம்
Dhunmuki 2016–2017

*31. ஹேவிளம்பி – “பொற்றடை”*
*Hevilambi 2017–2018*

32. விளம்பி – அட்டி
Vilambi 2018–2019

33. விகாரி – எழில்மாறல்
Vikari 2019–2020

34. சார்வரி – வீறியெழல்
Sarvari 2020–2021

35. பிலவ – கீழறை
Plava 2021–2022

36. சுபகிருது – நற்செய்கை
Subakrith 2022–2023

37. சோபகிருது – மங்கலம்
Sobakrith 2023–2024

38. குரோதி – பகைக்கேடு
Krodhi 2024–2025

39. விசுவாசுவ – உலகநிறைவு
Visuvaasuva 2025–2026

40. பரபாவ – அருட்டோற்றம்
Parabhaava 2026–2027

41. பிலவங்க – நச்சுப்புழை
Plavanga 2027–2028

42. கீலக – பிணைவிரகு
Keelaka 2028–2029

43. சௌமிய – அழகு
Saumya 2029–2030

44. சாதாரண – பொதுநிலை
Sadharana 2030–2031

45. விரோதகிருது – இகல்வீறு
Virodhikrithu 2031–2032

46. பரிதாபி கழிவிரக்கம்
Paridhaabi 2032–2033

47. பிரமாதீச – நற்றலைமை
Pramaadhisa 2033–2034

48. ஆனந்த – பெருமகிழ்ச்சி
Aanandha 2034–2035

49. ராட்சச – பெருமறம்
Rakshasa 2035–2036

50. நள – தாமரை
Nala 2036–2037

51. பிங்கள – பொன்மை
Pingala 2037–2038

52. காளயுக்தி – கருமைவீச்சு
Kalayukthi 2038–2039

53. சித்தார்த்தி – முன்னியமுடிதல்
Siddharthi 2039–2040

54. ரௌத்திரி – அழலி
Raudhri 2040–2041

55. துன்மதி – கொடுமதி
Dunmathi 2041–2042

56. துந்துபி – பேரிகை
Dhundubhi 2042–2043

57. ருத்ரோத்காரி – ஒடுங்கி
Rudhrodhgaari 2043–2044

58. ரக்தாட்சி – செம்மை
Raktakshi 2044–2045

59. குரோதன – எதிரேற்றம்
Krodhana 2045–2046

60. அட்சய – வளங்கலன்
Akshaya 2046–2047

60 ஆண்டின் தமிழ்ப் பெயர்களை இங்கு வழங்கியுள்ளோம்.

இனி எந்த தங்குத்தடையும் இன்றி, 60 தமிழ் வருடங்களை தமிழ்ப்பெயரோடு தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம்

இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ.சுப்பிரமணி சைவ சித்தாந்த சபை ஒசூர்.

உள்ளம் அமைதி பெற

உள்ளம் அமைதி பெற 10 கொள்கைகள்:

1. உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ

அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.

இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது.

ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது.

எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார்.

உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம்.

நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது.

இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது.

இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர்.

அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால்.

ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள்.

இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்?

அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல!

நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல் (பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்

! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.

பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம்.

இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!

நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது.

நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது.

நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை.

பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்

. அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம்.

நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும்

. அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம்.

இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள்

. இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும்.

தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம்.

அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம்.

ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன

. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்.

உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.

ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

“இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம்.

உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது.

உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம்.

சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர.

உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள்.

எதற்கும் வருத்தமடையாதீர்கள்.

எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?

உறுதி கொள்..

வருவது எதுவானாலும்..

துணிந்து எதிர் கொள்..

வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர்

*வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர்*
******************************************

நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.

அவர் எழுதிவைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.

சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு. ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர். மண வாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தவர். “காலக் ஞானம்’ என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது தான் ஆச்சரியம்.

விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள், தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல, அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீர போஜர், வீர பாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள்.

வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது தான் அந்த சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார்.

பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது, இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம், தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி, பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை.

ஒருநாள் இரவு… நடந்து நடந்து கால்கள் வலிலித்தன. வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து ஆனந்தமாக உறங்கினார்

காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது.

அவன் எழுந்ததும் “யாரப்பா நீ’ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும், ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். “எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. கண்ட இடங்களில் சுற்றுவானேன்?

இனி இங்கேயே இரு!’ என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் காலக் ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர்.

இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மம் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது.

இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.

அன்று வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும், அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போதுதான் அறிந்ததாகவும், அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள்.

“ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழவேண்டியதுதான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல!’ என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர்.

அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். “எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா’ என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மம் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:

“புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியா இரண்டாகவும் பின்னர் மூன்றாகவும் பிரியும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்ததுபோக, சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல், ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’

இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள்.

வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள்.

அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.

போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆந்திரத்தில் உண்டு. அந்தக் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா தொடர்பான புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுபவரா பிரம்மேந்திரர்? அவர் நகைத்துக் கொண்டார். “இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன்’ என்றார்.

பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். “போலேரம்மா, என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு’ என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது! அவரது சுருட்டைக் கொளுத்தியது! “சரி சரி நெருப்பு போதும்’ என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல்!

இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள்.

அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.

காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம், துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார்.

தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். “யாக்கை நிலையற்றது; இதன் மேல் பற்று வைக்காதீர்கள்’ என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். “எனக்கு இறப்பில்லை என்பதால், என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை’ என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.

பத்து மாதங்கள் சுழன்றோடின. “இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம்?’ என்று சிலர் விமர்சித்தனர். இத்தகைய விமர்சனங்கள் அந்தக் காலத்தில் எழுவது சகஜம்தானே?

மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். “மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன்’ என்றார் தாயார்.

மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை

அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்துவந்து சமாதியை இடித்துத்திறந்துபார்த்தான். என்ன ஆச்சரியம்! அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன.

அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர், சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லிலி, மீண்டும் சமாதியை மூடச் சொன்னார்.

இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீர பிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத்தொடங்கினார்கள்.

ஆந்திராவில் கடப்பை ரயில் நிலையத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி. இன்றும் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அவர் சூட்சும உருவில் அருள்புரிந்து வருகிறார். நாள்தோறும் அந்த இடத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை பெருகிவருகிறது.

https://m.facebook.com/story.php?story_fbid=1979538755595700&id=1615171208699125

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் தேவாரப் பாடல்கள்….

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
தினமும் பாராயணம் செய்யவேண்டிய தேவார பதிகம் !

சர்வம்சிவார்ப்பணம்

#அசுவினி :

தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.!

#பரணி :

கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே..!

#கிருத்திகை :

செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே..!

#ரோகிணி :

எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே..!

#மிருக சீரிடம் :

பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..!

#திருவாதிரை

கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே..!

#புனர்பூசம் :

மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே..!

#பூசம் :

பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே..!

#ஆயில்யம் :

கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே..!

#மகம் :

பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே..!

#பூரம் :

நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே..!

#உத்திரம் :

போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே..!

#அஸ்தம் :

வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே..!

#சித்திரை :

நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே..!

#சுவாதி :

காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்..!

#விசாகம் :

விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே..!

#அனுஷம் :

மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே..!

#கேட்டை :

முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே..!

#மூலம் :
கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே..!

#பூராடம் :

நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே..!

#உத்திராடம் :

குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே..!

#திருவோணம் :

வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே..!

#அவிட்டம் :

எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே..!

#சதயம் :

கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

#பூரட்டாதி :

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே..!

#உத்திரட்டாதி :

நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே..!

#ரேவதி :

நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே..!

உன்னதமான வாழ்வுக்கும்
உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும்..

அன்பு உள்ளம் கொண்ட முகநூல்
நண்பர்களே
பகிருங்கள் அப்பொழுதுதான்
பலரும் பயன் பெறுவார்கள்.

கொடுங்கள்… பெறுவீர்கள்!….

கொடுங்கள்.. பெறுவீர்கள்!….
=====================
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன.

1) ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

2) அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

​ஒரு மகாபாரத பதிவு

ஒரு மகாபாரத பதிவு
கலியின் ஆரம்பம்.
பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, “குதிரை என்ன விலை? என்று கேட்டான்.
குதிரையின் உரிமையாளரோ,
 “ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்” என்றார். சகாதேவன் உடனே, “சரி கேள்வியைச் சொல்லுங்கள்” என்றான்.
குதிரையின் உரிமையாளர், “நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!
ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.
இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்” என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்து விட்டான்.
சற்று நேரத்தில்…. சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.
குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். “ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.
துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?” என்றார்.
நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.
அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.
“ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்? 
பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்” என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, “தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!” என்றார்.
பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், “அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?” எனக் கேட்டார்.
அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான். 
அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள்  எல்லாரும் திகைத்தார்கள். 
“அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?” எனக் கேட்டார்கள்.
தர்மர் பதில் சொல்லத் தொடங்கினார்…..
“தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன. அதை நினைத்துத்தான் நடுங்கினேன். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்…..” என்று விரிவாகக் கூறினார்.
“உங்களிடம் கேள்வி கேட்டவன் கலி புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில் பெரிய கிணறு என்பது பெற்றோர்கள். ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்றது குறிக்கிறது. ஆனால் அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.
அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும். ஆனால் நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைக்த்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
அடுத்து மூன்றாவது கேள்வியில் பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும். அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள். மக்கள்தான் வறுமையில் வாடுவார்களே தவிர, அதிகாரிகள் செழிப்பாகத்தான் இருப்பார்கள். இதைத்தான், வேலி அப்படியே இருக்க,  பயிர்கள் எப்படி அழிந்தன என்ற கேள்வி குறிப்பிடுகிறது என்று சொல்லி முடித்தார் தர்மர்.
படித்ததில் பிடித்தது

பரிகார முறைகள்

20 பரிகார முறைகள்
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்

போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

18.வில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:

வீட்

டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

மீள் பதிவு. நன்றி.

​பாவக தொடர்பான கேள்விகள் 

​பாவக தொடர்பான கேள்விகள் 
1ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. தெய்வசிந்தனையுடனும் நல்லொழுக்கங்களுடனும் வாழ்வேனா?

2. சமூகத்தில் மதிப்பும் மரியாதையுடன் நடந்து கொள்வேனா?

3. நல்ல ஒழுக்கத்துடன் சமூகத்தில் விளங்குவேனா?

4. நல்ல சிந்தனையுடன் விரைந்து செயல்படுவேனா?

5. எப்பொழுதும் சந்தோஷத்துடன் வாழ்க்கை நடத்துவேனா?

6. என்றும் இளமையுடனும் அழகுடனும் விளங்குவேனா?

7. நான் நினைத்து எல்லாம் நிறைவேறுமா?

8. என்னுடைய சுயமுயற்சியால் நான் வெற்றியடைவேனா?

9. என் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி எப்படி இருக்கும்?

10. என்னுடைய கௌரவம், அந்தஸ்து எப்படி அமையும்?

11. என்னுடைய வாழ்க்கைப்பாதை எவ்வழியில் செல்லும்?

12. என்னுடைய ஆயுள் எப்படியிருக்கும்?

13. சட்டத்திற்கும், பிறருக்கும் கட்டுபட்டு வாழ்வேனா?

14. பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு உடன் சிறந்து விளங்குவேனா?

15. வெற்றி தோல்விகள் மாறிமாறி அமையுமா?

16. எனது பிறந்த நேரம் சரியானது தானா?

17. எனது பெயரை பெயர் மாற்றம் செய்யலாமா?

18. எனக்கு நல்ல நேரம் வரும் என்பதை எப்படி அறியலாம்?

19. உடலில் மருமச்சம் ஏதேனும் ஏற்படுமா?

20. நான் சன்னியாசியாக மாறுவேனா?

21. கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவேனா?

22. ஒருவர் உயிருடன் இருப்பதை அறிய முடியுமா?

23. காணாமல் போனவர்கள் எப்பொழுது திரும்ப வருவார்கள் என்று அறிய முடியுமா?
2ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. என்னுடைய வாக்கு வன்மை எப்படி இருக்கும்?

2. எல்லோரிடத்திலும் இனிமையாக பேசிப் பழகுவேனா?

3. அந்நிய பாஷை அல்லது அந்நிய மொழி நன்கு பேச வாய்ப்பு அமையுமா விதியுண்டா?

4. கஷ்டப்பட்டு பொருள் சேர்ப்பேனா?

5. சுய வருவாய் மூலம் பொருள் சேர்ப்பேனா?

6. நேர்வழியில் சம்பாதிப்பேனா அல்லது குறுக்கு வழியில் சம்பதிப்பேனா?

7. பொய் பேசுவேனா? உண்மையே பேசுவேனா அல்லது சமயத்திற்கேற்ப பேசுவேனா?

8. பல குரலில் பேசுவேனா? அதன் மூலம் பொருள் ஈட்டுவேனா?

9. அந்நிய நாட்டிலிருந்து பணம் வருமா?

10. கொடுத்த பணம் திரும்ப கிடைக்குமா?

11. நல்ல வாசனைத் திரவியங்களை உபயோகிப்பேனா?

12. நல்ல நவரத்ன கற்கள் எனக்கு கிடைக்குமா?

13. நல்ல அறுசுவை உணவு எனக்கு தொடர்ந்து கிடைக்குமா?

14. எனது பத்திரங்கள் என்னிடம் பத்திரமாக இருக்குமா?

15. சரியாக வாய் பேச வருமா? பேச வரதா?

16. கடைசி வரை ஊமையாகவே இருப்பேனா?

17. எனது முகத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமா?

18. வலது கண்ணில் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா?

19. மாலைக்கண் நோய் ஏதேனும் வருமா?

20. பூனைக் கண்ணாகவே வாழ வாய்ப்பு ஏற்படுமா?

21. பிறவிக் குருடனாகவே வாழ்க்கை முழுவதும் அமைந்து விடுமா?

22. எதிர்பாராத அதிர்ஷ்ட தனவரவுகள் உண்டா?

23. கையில் எப்பொழுதும் ரொக்கமா பணம் இருக்குமா?

24. எப்பொழுதும் வங்கியில் மட்டுமே நகை பணம் இருப்பு இருக்குமா?

25. மாற்றத்தக்க பங்கு பத்திரங்கள் எப்பொழுதும் கைவசம் வைத்திருப்பேனா?

26. மற்றவர்களுக்கு அடிக்கடி பணம் கடன் கொடுப்பேனா?

27. பிறவியிலேயே ஏழையாய் பிறந்து ஏழையாகவே வாழ்ந்து விடுவேனா?

28. எனக்கு இரண்டாவது திருமணம் நடைபெறுமா?
3ம் பாவகத் தொடர்பான கேள்விகள் 

1. எனக்கு இளைய சகோதர சகோதரிகள் உண்டா?

2. இளைய சகோதர சகோதரிகள் என்னிடம் பிரியமுடன் நடந்து கொள்வார்களா?

3. இளைய சகோதர் சகோதரிகளால் எனக்கு நன்மையா? தீமையா?

4. நான் எழுத்துத் துறையில் பிரகாசிப்பேனா?

5. நான் பத்திரிக்கை ஆசிரியராக வர வாய்ப்பு உண்டா?

6. நான் சிறுபத்திரிக்கை நடத்தலாமா?

7. அறிவிப்பாளராக வர வாய்ப்பு உண்டா?

8. தூதரக அதிகாரியாக வர வாய்ப்பு உண்டா?

9. தொலைத் தொடர்புத் துறையில் சேவை செய்ய வாய்ப்புக் கிட்டுமா?

10. என் கையெழுத்து அழகாக அமையுமா?

11. எனது இல்லத்திலேயே நூலகம் அமைக்க வாய்ப்பு ஏற்படுமா?

12. அடிக்கடி வீடு மாறுவேனா? வாடகை வீட்டில் வசிப்பேனா?

13. அடிக்கடி குறுகிய தூரப் பயணம் மேற்கொள்வேனா?

14. அடிக்கடி விமானப்பயணம் மேற்கொள்வேனா?

15. எல்லாவகை வாகனங்களையும் ஓட்டிப் பழகுவேனா?

16. பத்திர எழுத்தராக வர வாய்ப்பு உண்டா?

17. என்னைப் பற்றி வதந்திகள் அல்லது கிசுகிசுக்கள் ஏதேனும் பரப்பப்படுமா?

18. கல்வி, இலக்கியம், கதை, கட்டுரை, ஆன்மீகம், காதல், சினிமா, நோய், துப்பறிதல், இவற்றில் எதை அதிகமாக எழுதுவேன்?

19. நான் எதிர்பார்த்த ஒப்பந்தம் நிறைவேறுமா?

20. குத்தகை எடுக்க வாய்ப்பு அமையுமா?

21. புரோக்கர் தொழில் நன்கு அமையுமா?

22. நல்ல மொழி பெயர்ப்பாளராக வர வாய்ப்பு உண்டா?

23. புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவேனா?

24. நல்ல இயற்கையான அறிவு, ஞாபக சக்தியோடு வாழ வழி ஏற்படுமா?

25. கணிதத்தில் புலமை பெற்று விளங்குவேனா?

26. நல்ல இரத்த ஓட்டத்துடன் நடைப்பயணம் வாழ்க்கை முழுவதும் அமைய வாய்ப்பு உண்டா?

27. தகவல் தொடர்பு சாதனங்களை அதிக அளவில் கையாளுவேனா?

28. வேலைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதால் பிரச்சினை ஏற்படுமா?

29. எப்பொழுதும் தைரியம் உள்ளவனாக/உள்ளவளாக இருப்பேனா?

30. படிக்கும் ஆர்வம் எப்பொழுதும் அதிகரிக்குமா?

31. அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வேனா?

32. எனக்கு வரும் தகவல்கள் எப்பொழுதும் உண்மையாக இருக்குமா? அல்லது பொய்யாகவே அமையுமா?

33. வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாமா?

34. அரசு வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா? அல்லது தனியார் வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?

35. உள்நாட்டில் உள்ள வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?

36. வெளிநாட்டில் அந்த நாட்டு வங்கியில் கணக்கு ஆரம்பிக்கலாமா?

37. செக்புக் வாங்கலாமா? ஏ.டி.எம். கார்டு வாங்கலாமா?

38. செக்கில் அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாமா?

39. அடிக்கடி எனது தகவல் தொடர்பு சாதனங்களை மாற்றிக் கொண்டேயிருப்பேனா?

40. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வேனா?

41. போக்குவரத்து துறையில் ஈடுபடலாமா?

42. வாகனம் ஓட்டிப் பழகலாமா?

43. எனது நகைகளை அடிக்கடி அடகு வைப்பேனா?

44. அண்டை அயலாருடன் நட்புடன் பழகுவேனா?

45. உறவினர்களுடன் அன்புடன் நடந்து கொள்வேனா?

46. எனது சொத்து பிரிவினை ஆகுமா?

47. கெடாத புது உணவை எப்பொழுதும் சாப்பிட முடியுமா?

48. எனது சிறுவியாபாரம் எப்படி இருக்கும்?

49. நல்ல பெண் வேலையாட்கள் கிடைப்பார்களா?

50. எனது நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்தேறுமா?
4ம் பாவகத் தொடர்பான கேள்விகள் 

1. எனக்கு நன்கு கல்வி வருமா?

2. எப்படிப்பட்ட கல்வி அமையும்?

3. ஆரம்பக் கல்வியா? தொடக்க கல்வியா? இளங்கலையா?

4. எந்தத் துறையில் படிப்பு அமையும்?

5. இளங்கலைப் படிப்பா? முதுகலைப் படிப்பா? ஆராய்ச்சிப் படிப்பா?

6. கலைத்துறையா, மருத்துவத்துறையா, பொறியியல் துறையா?

7. கலைத்துறை என்றால் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்க எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

8. மருத்துவத் துறை என்றால் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்க எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

9. பொறியியல் துறை என்றால் எந்தப் பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்க எதிர்காலம் சிறப்பாக இருக்கும்?

10. கடன் வாங்கி கல்வி பயில வாய்ப்பு ஏற்படுமா?

11. உள்நாட்டில் படிக்க வாய்ப்பு ஏற்படுமா? அல்லது அந்நிய நாட்டில் படிக்க வாய்ப்பு ஏற்படுமா?

12. தபால் மூலம் கல்வி ஏற்படுமா? அல்லது ஆன்லைன் மூலம் கல்வி கற்க வாய்ப்பு அமையுமா?

13. சரியான கல்வி பயில சரியான குரு கிடைக்கப் பெறுவேனா?

14. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவேனா?

15. நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெற முடியாது போவதற்கு என்ன காரணம்?

16. படிப்புக்கு முன்னே திருமணம் நடக்குமா?

17. படித்து முடித்த உடன் வேலைக்குச் செல்ல சந்தர்ப்பம் அமையுமா?
4ம் பாவகத் தொடர்பான கேள்விகள் ( வீடு, சொத்து, நிலம் ) 

1. எனக்கு சொந்த வீடு வாங்க அமைப்பு உண்டா?

2. உண்டு என்றால் எந்தக் காலகட்டத்தில் வாங்குவேன்?

3. எப்படிப்பட்ட வீடு வாங்க வாய்ப்பு அமையும்?

4. எப்படிப்பட்ட ஊரில் வாங்க வாய்ப்பு அமையும்?

5. அல்லது பணிபுரியும் ஊரில் வாங்க வாய்ப்பு அமையுமா?

6. நிலம் வாங்கி அதில் வீடு கட்டுவேனா?

7. அல்லது கட்டிய வீடு வாங்குவேனா? அல்லது ஒத்தி வீடு வாங்குவேனா?

8. கடன் வாங்கி வீடு வாங்குவேனா?

9. சேமிப்பில் அல்லது உழைப்பில் அல்லது கணவன் அல்லது மனைவி மூலம் வீடு வாங்குவேனா?

10. சொந்த நாட்டில் வாங்குவேனா? அலல்து அடுக்குமாடி குடியிருப்பில் வாங்குவேனா?

11. தனி வீடு வாங்குவேனா? அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வாங்குவேனா?

12. ஆடம்பரமான வீடு அமையுமா? அல்லது நடுத்தரமான வீடு அமையுமா? 

13. பழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்குவேனா?

14. பரிசு மூலம் வீடு கிடைக்க வாய்ப்பு அமையுமா?

15. அரசாங்கம் கட்டிய வீடு அமையுமா? அல்லது தனியார் கட்டிய வீடு அமையுமா?

16. முன்னோர்கள் சொத்துகள் மூலம் வீடு வாங்க வாய்ப்பு அமையுமா?

17. எந்த திசையில் வீடு கட்ட வீடு வாங்க யோகம் கூடும்?

18. என் சொத்து என் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் போய்ச் சேருமா?

19. அல்லது வேறு எவரேனும் என் சொத்தை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுமா?

20. எப்படிப்பட்ட ஊரில் வீடு அமையும்? கிராமத்திலா நகரத்திலா?

21. எப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு அமையும்? எதிர்பாராத சொத்து கிடைக்குமா?

22. எப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடு அமையும்? எதிர்பாராத சொத்து கிடைக்குமா?

23. எப்படிப்பட்ட வீடு கட்டுவேன் மணலா? செங்கல்லிலா? சிமெண்ட்டிலா? கான்கீரிட்டலா? கீற்றுக் கொட்டகையாலா? மூங்கிலிலா அல்லது பேப்பரில்லா?

24. எனது வீடு, நிலம் இவற்றில் நிலத்தடி நீர் நன்கு கிடைக்குமா?

25. என் வீடு நினைவுச் சின்னமாக அமையுமா?

26. தோட்டம் அல்லது எஸ்டேட் வாங்க வாய்ப்பு அமையுமா?

27. பண்ணைகள் அல்லது பழத்தோட்டங்கள் எனக்கு அமையுமா?

28. பள்ளி அல்லது கல்லூரி இவைகள் கட்ட வாய்ப்பு ஏற்படுமா?

29. தியேட்டர் மற்றும் ஸ்டுடியோ கட்ட வாய்ப்பு கிட்டுமா?

30. லாட்ஜ் அல்லது உல்லாச விடுதி, மால் அல்லது திருமண மஹால் கட்டுவேனா?

31. சமுதாயக் கூடம், தொழிற்சாலை, கிட்டங்கி, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போன்றவைகளைக் கட்ட வாய்ப்பு கிட்டுமா?

32. எனக்கு புதையல் கிடைக்குமா?

33. எனது புது வீட்டிற்கு ஆட்கள் வாடகைக்கு வருவார்களா?

34. கல்லறை மற்றும் குகைகளில் வசிக்க வாய்ப்புண்டா?

35. எனது தாய் என்னுடனே இருப்பார்களா?

36. எனது தாய் பாசமுடன் என்னிடம் இருப்பார்களா?

37. நான் என் தாயிடம் பிரியமுடன் இருப்பேனா?

38. கடைசி வரை அம்மாவின் அன்பும் அரவணைப்பும் கிட்டுமா?

39. மனைவி பேச்சைக் கேட்டு தாயை உதாசீனப்படுத்துவேனா?

40. ரகசிய சாஸ்த்திர ஆராய்ச்சிகளில் ஈடுபடுவேனா?

41. எனது அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்கும்?

42. எனது உற்பத்தித் தொழில் சிறப்பாக இருக்குமா?
4ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (வண்டி, வாகனம்) 

1. எனக்கு சொந்த வாகன யோகம் உண்டா?

2. உண்டு என்றால் எந்தக் காலக் கட்டத்தில் வாங்க சந்தர்ப்பம் அமையும்?

3. புதிய வாகனம் வாங்குவேனா ? பழைய வாகனம் வாங்குவேனா?

4. ரொக்கத்திற்கு வாங்குவேனா? அலல்து கடன் மூலம் வாங்குவேனா?

5. சொகுசான வாகனம் வாங்குவேனா? அல்லது சுமாரான வாகனம் வாங்குவேனா?

6. எனது சுயசம்பாத்தியம் மூலம் வண்டி, வாகனம் வாங்குவேனா?

7. கணவன், மனைவி, உறவினர்கள், நண்பர்கள் உதவியால் வாங்குவேனா?

8. என்ன மாதிரியான வண்டி, வாகனம் அமையும்?

9. இரு சக்கரமா? நான்கு சக்கரமா அல்லது பலகால் சக்கரம் உள்ள வாகனம் அமையுமா?

10. அரசு வாகனம் உபயோகிக்க வாய்ப்பு அமையுமா? அல்லது தனியார் கம்பெனி வாகனம் உபயோகிக்க வாய்ப்பு அமையுமா?

11. உள் நாட்டில் கார் வாங்குவேனா? அலல்து வெளிநாட்டில் கார் வாங்குவேனா?

12. என்ன கலரில் எந்த எண்ணில் வாங்குவேன்?

13. விபத்துக்குள்ளான கார் வாங்குவேனா? அல்லது அடிக்கடி ரிப்பேர் ஆன கார் வாங்குவேனா?

14. என் வாகனம் விபத்துக்குள்ளாகுமா?

15. நானே கார் ஓட்டுவேனா? அல்லது உதவியாளர் வைத்து கார் ஓட்டுவேனா?

16. விபத்துக்குள்ளாகுமென்றால் எதன்மூலம் விபத்து ஏற்படும்? எப்படிப்பட்ட விபத்து ஏற்படும் ? எந்தக் காலங்களில் ஏற்படும்.

17. சைக்கிள், ஸ்கூட்டர், பைக், டிராக்டர், டிரக், ஜீப், கார், லாரி, பஸ், டேங்கர், ஹெலிகாப்டர், கப்பல், விமானம் இவற்றில் எது வாங்குவேன்?
5ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. எனக்கு வாழ்க்கையில் குழந்தைப் பாக்கியம் உண்டா?

2. உண்டு என்றால் எந்தக் காலக்கட்டத்தில் குழந்தைப் பாக்கியம் கிட்டும்?

3. ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா?

4. நல்ல அறிவும் ஆற்றலுமிக்க குழந்தை பிறக்குமா?

5. குழந்தைகளால் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிம்மதியும் உண்டா?

6. அல்லது அவர்களால் வாழ்க்கை முழுவதும் போராட்டமாக அமையுமா?

7. குழந்தை நன்கு படிக்குமா அல்லது சரியாகப் படிக்காதா? எந்த மாதிரியானத் துறையில் குழந்தையை படிக்க வைக்கலாம்?

8. குழந்தைக்கு வேலை கிடைக்குமா? அரசுத் துறையிலா? தனியார் துறையிலா?

9. குழந்தைக்கு நல்ல வரன் அமையுமா? எப்பொழுது திருமணம் நடக்கும்?

10. குழந்தை வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையுமா? குழந்தை தாய், தந்தையாரை நன்கு கவனித்துக் கொள்ளுமா?

11. குழந்தைகளால் முதியோர் இல்லம் செல்ல வாய்ப்பு அமையுமா?

12. குழந்தை நன்கு விளையாடுமா ? கலைத்துறையில் பிரகாசிக்குமா?

13. குழந்தை ஏதேனும் அங்கஹீனத்துடன் பிறக்குமா? 

14. தத்துப்பிள்ளை எடுக்க வேண்டி வருமா? வரும் என்றால் எந்த குழந்தையை தத்தெடுக்க? ஆண் அல்லது பெண் குழந்தையா?

15. கலைத்துறையில் ஈடுபட வாய்ப்பு அமையுமா? சிற்பம், ஜோதிடம், ஆன்மீகம், சினிமா, சங்கீதம், நடனம், நாட்டியம், இசை, யோகாசனம் இவற்றில் எதில் சிறப்படைவேன்?

16. லாட்டரி சீட்டு மூலம் பணம் வருமா?

17. பங்குச் சந்தை லாபகரமாக அமையுமா?

18. உழைக்காமலே எனக்கு வருமானமும், புகழும் வருமா?

19. குதிரைப்பந்தயம், சூதாட்டம், இவற்றால், எனக்கு லாபம் உண்டா?

20. அரசியலில் ஈடுபட்டு பெயர், புகழ் பெறுவேனா?

21. விளையாட்டுத் துறையில் பெயர், புகழ், பெறுவேனா?

22. மந்திர உச்சாடனம் எனக்கு சித்தி வருமா?

23. இரண்டுமே ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறக்குமா?

24. அல்லது ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை பிறக்குமா?

25. எதிர்காலத்தை அறியும் சக்தி உண்டாகுமா?

26. பாவ புண்ணியம் வாழ்க்கையில் பார்த்து நடப்பேனா?

27. சமயத்தைப் பற்றிய நல்அபிப்ராயமும் சிந்தனையும் ஏற்படுமா?

28. அன்னதானம் போன்ற அறப்பணிகளில் ஈடுபடுவேனா?

29. நல்ல அறிவுடனும் ஆற்றலுடனும் விளங்குவேனா?

30. நல்ல கற்பனை வளத்துடன் விளங்குவேனா?

31. பழமையான வைதீகப் பழக்கங்களில் நம்பிக்கையுடன் இருப்பேனா?

32. மந்திர ஜெபம் எடுக்கலாமா?

33. மந்திர உபதேசம் பெறலாமா?

34. சூதாட்ட கிளப் வைத்து நடத்துவேனா?

35. அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் ஈடுபடுவேனா?

36. குறுக்கெழுத்துப் போட்டியில் பங்கு பெறுவேனா?

37. போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவேனா?

38. கற்பழிக்கப்படுவேனா அல்லது கற்பை இழக்க வேண்டி வருமா?

39. விபசாரத்தில் ஈடுபட்டு அவமானப்பட நேரிடுமா?
6ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (நோய்)

1. எனது உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?

2. எனக்கு ஏதேனும் நோய் ஏற்படுமா?

3. ஏற்படும் எனில் எந்தக் காலகட்டத்தில் நோய் வரும்? உடலின் எந்தப் பாகத்தில் நோய் ஏற்படும்?

4. என்ன மாதிரியான நோய் ஏற்படும்?

5. அந்த நோய் தீர்க்கக்கூடியதா? அல்லது தீர்க்க முடியாததா?

6. எந்த விதமான மருத்துவ முறையைப் பின்பற்ற வேண்டும்?

7. ஆங்கில மருத்துவமா? சித்தாவா? ஹோமியோபதியா?

8. தன்வந்தரியா? யுனானியா? அக்குபஞ்சரா? 

9. உடனடியாக நோய் தீருமா, சற்று காலம் தாழ்ந்து தீருமா?

10. தீரும் என்றால் எந்த காலகட்டத்தில்?

11. அறுவை சிகிச்சை செய்ய சந்தர்ப்பம் அமையுமா? அல்லது மருந்து மாத்திரைகளின் மூலம் சரியாகுமா?

12. உள்நாட்டில் மருத்துவம் பார்க்க முடியுமா? அல்லது வெளிநாட்டில் மருத்துவம் பார்க்க வேண்டி வருமா?

13. மருத்துவ விடுப்பு அடிக்கடி எடுக்க வேண்டி வருமா?

14. அரசு மருத்துவமனைகயில் சிகிச்சை எடுக்கலாமா?

15. அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கலாமா?

16. மருத்துவ காப்பீட்டின் மூலம் பயன் அடைய முடியுமா?

17. உள்நாட்டு மருத்துவ காப்பீடு அவசியமா? அல்லது வெளிநாட்டு மருத்துவ காப்பீடு அவசியமா?

18. வெளியே கூற முடியாத கடினமான மனநோய் ஏற்படுமா?
6ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (கடன்)

1. நான் கடன் வாங்குவேனா?

2. கடன் வாங்குவேன் என்றால் எதற்காக கடன் வாங்குவேன்?

3. கல்விக்காக அல்லது மேற்படிப்புக்காக கடன் வாங்குவேனா?

4. வேலைக்காக கடன் வாங்குவேனா?

5. திருமணத்திற்காக கடன் வாங்குவேனா?

6. வீடு நிலம், கார் வாங்க கடன் வாங்குவேனா?

7. தொழில் செய்வதற்காக கடன் வாங்குவேனா?

8. சுபகாரியங்கள் செய்வதற்காக கடன் வாங்குவேனா?

9. நோய் மற்றும் இதரக் காரியங்களுக்காக கடன் வாங்குவேனா?

10. எதன் மூலமாக கடன் வாங்குவேன்?

11. வங்கியின் மூலமா? தனி நபர் மூலமா? உறவினர் மூலமா? நண்பர்கள் மூலமா?

12. கடனை உரிய காலத்தில் அடைத்து விடுவேனா?

13. கடனால் அவமானப்பட்டு நிம்மதியிழப்பேனா?

14. உள்நாட்டில் கடன் வாங்குவேனா? வெளிநாட்டில் கடன் வாங்குவேனா?

15. கொடுத்த கடன் திரும்ப வந்து சேருமா?

16. கடனை அடைக்க முடியாமல் சொத்து ஏலத்திற்கு வருமா?
6ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (பொதுவானவை) 

1. எனது தாய் மாமனால் ஆதாயம் உண்டா?

2. தாய் மாமன் அன்புடனும் ஆதரவுடனும் இருப்பார்களா?

3. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவேனா?

4. எனது வழக்கு வெற்றி பெறுமா?

5. உதவிச் சம்பளம் பெறமுடியுமா?

6. நன்கொடை மூலம் பணம் வசூலாகுமா?

7. நல்ல ஆண் வேலையாட்கள் கிடைக்கப் பெறுவேனா?

8. நல்ல வீட்டு வளர்ப்புப் பிராணிகள் வளர்க்க வாய்ப்பு உண்டா?

9. நல்ல புதிய ஆடைகள் அணிய வாய்ப்பு உண்டா?

10. உணவுப் பழக்கங்கள் எப்படி அமையும்? 

11. அடிக்கடி அறுசுவை உணவு உண்பேனா?
7ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (திருமணம்)

1. எனக்கு வாழ்க்கையில் திருமணம் உண்டா?

2. உண்டு என்றால் எப்பொழுது திருமணம் நடைபெறும்?

3. இளவயதில் திருமணம் நடக்குமா? அல்லது சற்று காலந்தாழ்ந்த திருமணம் நடைபெறுமா?

4. எப்படி அத்திருமணம் நடக்கும்?

5. உறவில் திருமணமா? அல்லது அந்நியத்தில் திருமணம் அமையுமா?

6. உறவில் என்றால் அத்தை மகளா, மகனா அல்லது மாமன் மகனா, மகளா ?

7. அல்லது நெருங்கிய அல்லது தூரத்து உறவு முறையில் திருமணமா?

8. அந்நியத்தில் என்றால் ஊர், பெயர், தெரிந்தவரா?

9. காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா? அல்லது கலப்புத் திருமணமா?

10. காதல் திருமணம் என்றால் உறவில் காதலா, அல்லது அந்நியத்தில் காதலா?

11. காதல் திருமணம் எனில் பெற்றோர் சம்மதத்துடனா? அல்லது பதிவுத் துறையிலா? அல்லது கோயிலிலா?, அல்லது நண்பர்கள் முன்னிலையிலா?

12. நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் உறவிலா? அல்லது அந்நியத்திலா?

13. கலப்புத் திருமணம் எனில் வேறு மதமா? அல்லது வேற்று ஜாதியா?

14. வரும் கணவர்/மனைவி உள்ளூரில் அமைவார்களா?

15. வேலை பார்க்கும் கணவன்/மனைவி அமைவார்களா?

16. சுயதொழில் புரியும் கணவன்/மனைவி அமைவார்களா?

17. நன்கு படித்த சொத்து உள்ள கணவன்/மனைவி அமைவார்களா?

18. கணவன்/மனைவி உள்ளூரில் அமைவார்களா?

19. அல்லது வெளியூரில் அமைவார்களா?

20. அல்லது வெளிநாட்டில் அமைவார்களா?

21. உள்ளூரில் என்றால் நாம் வசிக்கும் ஊரிலா? அல்லது பஸ் ஏறிப்போகும் தூரத்திலா?

22. வெளியூர் என்றால் நீண்டதூரம் பஸ் அல்லது ரயில் அல்லது விமானப் பயணமாக அமையுமா?

23. வெளிநாடு என்றால் உத்தேசமாக எந்த நாடாக அமையும்?

24. நல்ல வரதட்சனையுடன் மனைவி அமைய வாய்ப்புண்டா?

25. அன்பும், பாசமும் உள்ள கணவன்/மனைவி அமைய வாய்ப்பு உண்டா?

26. தாய், தந்தை, உடன்பிறப்புகளை மற்றும் உறவினர்களை அனுசரித்து போகும் கணவன்/மனைவி அமைவார்களா?

27. பேராசை பிடித்த கணவன்/மனைவி அமைவார்களா?

28. உண்மையும், ஒழுக்கமும், தெய்வபக்தியும் உடைய கணவன்/மனைவி அமைய வாய்ப்புண்டா?

29. நல்ல ஆயுள் உள்ள கணவன்/மனைவி அமைவார்களா?

30. அல்லது வாழ்க்கை முழுவதும் நோயுடன் கூடிய கணவன்/மனைவி அமைவார்களா?

31. மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம் நடைபெறுமா?

32. விதவைத் திருமணம் அமையுமா?

33. பலதார விவாகம் உண்டா?

34. இரண்டாம் தாரமாக வாழ வாழ்க்கை அமையுமா?

35. விவகாரத்து ஆனவர்களுடன் திருமணம் நடக்குமா?

36. நல்ல கணவனாக இருக்க வாய்ப்புண்டா? அல்லது துணைவனாக இருக்க வாய்ப்புண்டா?

37. நல்ல மனைவியாக இருப்பேனா? அல்லது நல்ல துணைவியாக இருப்பேனா?

38. விவாகரத்துக்குப் பின் அதே கணவர்/மனைவியோடு சேர்ந்து வாழ வாய்ப்பு ஏற்படுமா?

39. அல்லது வேறோரு ஆட்களுடன் சேர்ந்து வாழ சந்தர்ப்பம் அமையுமா?

40. திருமணம் திடீரென்று நின்று விடுமா?

41. நின்று விடும் என்றால் எதனால் நிற்கும்?

42. ரகசியத் தொடர்புகளால் வேறோரு ஆண் அல்லது பெண்ணுடன் வாழ வாய்ப்பு ஏற்படுமா?
7ம் பாவகத் தொடர்பான கேள்விகள் (சுயதொழில்)

1. சுயதொழில் செய்வேனா? அல்லது வியாபாரம் செய்வேனா?

2. சுயதொழில் என்றால் உற்பத்தி செய்து தொழில் செய்வேனா அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருளை விற்று சுயதொழில் செய்வேனா?

3. சொந்தமாக தொழில் செய்வேனா ? அல்லது கூட்டாளியுடன் சுய தொழில் செய்வேனா?

4. சுயதொழில் உண்டு என்றால் என்ன மாதிரியான சுய தொழில் அமையும்?

5. சுயதொழில் உள்ளூரிலா? உள்நாட்டிலா? வெளிநாட்டிலா?

6. ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வாய்ப்பு ஏற்படுமா?

7. என்ன மாதிரியான தொழில் அல்லது வியாபாரம் செய்ய லாபம் ஏற்படும்.

8. கொடுக்கல் வாங்கல் தொழில் செய்யலாமா?

9. கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக், பேன்சி ஸ்டோர், பெண்கள் அணியும் அழகு சாதனப் பொருட்கள் விற்கலாமா?

10. அழகு நிலையம் வைத்து நடத்தலாமா?

11. கமிஷன், ஏஜென்ஸி, புரோக்கர் தொழில் ஒத்து வருமா?
7ம் பாவகத் தொடர்பான கேள்விகள் ( பொதுவானவை)

1. எனது பொருள் திருடு போகுமா?

2. திருடன் ஆணா? அல்லது பெண்ணா?

3. வீடு அல்லது அலுவலகத்தில் திருடு போகுமா?

4. வீட்டு வேலைக்காரர்களால் திருடு போகுமா?

5. விலைமதிப்புள்ள பொருள்கள் திருடு போகுமா?

6. திருடன் உள்ளூரா? அல்லது வெளியூரா?

7. திருடு போன பொருள் திரும்ப கிடைக்குமா?

8. எனது பொருள் உள்நாட்டில் திருடு போகுமா? அல்லது வெளிநாட்டில் திருடு போகுமா?

9. எனக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுமா?

10. நான் வளர்ப்பு பிள்ளை எடுத்து வளர்க்கலாமா?

11. எனது பயணம் தடையில்லாமல் நடைபெறுமா?

12. நல்ல வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பேனா?

13. வெற்றிலை, பாக்கு போடுவேனா?

14. பொதுக்கூட்டங்களில் அடிக்கடி கலந்து கொள்வேனா?

15. வெளிநாட்டில் கௌரவம், அந்தஸ்து, புகழ் கிட்டுமா?
8ம் பாகவத் தொடர்பான கேள்விகள்

1. உயில் மூலம் சொத்துக்கள் கிடைக்குமா?

2. எதிர்பாராத வெகுமதிகள், அன்பளிப்புகள், நன்கொடைகள் கிடைக்குமா?

3. உதவிப் பணம் கிடைக்குமா?

4. இன்சூரன்ஸ் பணம் எப்பொழுது கிடைக்கும்?

5. ஞாபக சக்தி குறைபாடு கிடைக்குமா?

6. உடலில் இரத்த ஓட்டம் எப்படி இருக்கும்?

7. பெண்களால் அவமானங்கள் ஏற்படுமா?

8. தீராத பழியும் கெட்ட பெயரும் வந்து சேருமா?

9. ஆபரேசன் ஏதேனும் செய்ய வேண்டியது இருக்குமா?

10. நான் தற்கொலை செய்து கொள்வேனா?

11. விபத்துகள் ஏதேனும் ஏற்படுமா? எப்பொழுது?

12. திருடர்களால் தொல்லைகள் ஏற்படுமா?

13. அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவேனா?

14. எனது இறப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்?

15. நெருப்பு, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் இவற்றால் எனக்கு பாதிப்பு வருமா?

16. வருமான வரித்துறையினால் பிரச்சினை ஏற்படுமா?

17. எப்பொழுதும் ஏதேனும் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டேயிருப்பேனா?

18. எனது ஆயுள் எவ்வளவு காலம் இருக்கும்?

19. எனது மரணம் இயற்கை மரணமா? செயற்கை மரணமா?

20. செயற்கையானது என்றால் நோயா? விபத்தா?

21. உடல் உறுப்புகள் ஏதேனும் தேசமடையுமா?

22. தொற்று நோய் ஏதேனும் ஏற்படுமா?

23. தீராத வியாதிகள் வந்து சேருமா?

24. பகைவரால் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?

25. உள்நாட்டில் எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா? அல்லது வெளிநாட்டில் ஏற்படுமா?

26. திருடு, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவேனா?

27. எப்பொழுதும் கவலையுடனும் துன்பத்துடனும் இருப்பேனா?

28. வீணாகப் பொழுது போக்கி காலத்தைக் கழிப்பேனா?

29. எப்பொழுதும் சோம்பேறியாகவே இருப்பேனா?

30. பற்றாக்குறை வாழ்க்கை வாழ்வேனா?

31. பட்ஜெட்போட்டு வாழ்க்கை வாழ்வேனா?

32. எனது சொத்துக்கு அதிக வரி விதிக்கப்படுமா?

33. அரசு எனது சொத்துக்களை ஜப்தி செய்யுமா?

34. வளர்ப்புப் பிராணிகளை வெட்டும் தொழில் செய்வேனா?

35. வேலைக்குச் செல்லும் பெண் அமைவாளா?

36. மனைவியால் தனவரவு, பொருள் வரவு கிட்டுமா?

37. நல்ல வரதட்சனையுடன் மனைவி அமைவாளா?

38. திருடு போன பொருள் திரும்ப கிடைக்க வாய்ப்பு அமையுமா?

39. போரில் கலந்து கொள்ள வாய்ப்பு அமையுமா?

40. பென்சன் கிராஜ்வேட் தொகை கிடைக்குமா?
9ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. எனக்கு குலதெய்வ அனுகூலம் உண்டா?

2. கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வேனா?

3. கோவில் குருக்களாகும் யோகம் உண்டா?

4. குருவாக அதாவது ஆசிரியராகும் யோகம் உண்டா?

5. மதத்தின் மேல் நம்பிக்கை உள்ளவனாக விளங்குவேனா?

6. மடாதிபதியாக வர வாய்ப்பு உண்டா?

7. மதப்போதகராக வரும் வாய்ப்பு உண்டா?

8. அடிக்கடி நீண்டதூர ஆலய தரிசனம் செய்ய முடியுமா?

9. எனக்கு ஜோதிடம் நன்கு வருமா?

10. நல்ல கனவுகள் வாழ்க்கையில் வந்து போகுமா?

11. அருள்வாக்கு மற்றும் குறி சொல்ல வாய்ப்பு உண்டா?

12. நாடி ஜோதிடம் பார்க்கும் காலம் வருமா?

13. ஏட்டுச் ஜோதிடம் படிக்கும் காலம் எப்பொழுது வரும்?

14. நான் தந்தையாகும் வாய்ப்பு உண்டா?

15. என் தந்தை என்னிடம் பிரியமுடன் நடப்பாரா?

16. நான் என் தந்தையிடம் பற்றுடன் இருப்பேனா?

17. எனது குலதெய்வம் எதுவாக இருக்கும்?

18. பெரிய பதிப்பகம் வைத்து நடத்த வாய்ப்பு அமையுமா?

19. பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி படிக்க வாய்ப்பு கிட்டுமா?

20. எதிர் பார்க்கும் கௌரவப் பதவி கிடைக்குமா?

21. வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படுமா?

22. பருத்த எனது உடல் எப்பொழுது குறையும்?

23. எனக்கு தெய்வ அனுகூலம் எப்படி இருக்கும்?

24. நல்ல ஞானம் ஏற்படுமா?

25. சமய சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுவேனா?

26. நல்ல தியான வாழ்க்கை அமையுமா?

27. பக்தி சிரத்தையுடன் ஆன்மீக வாழ்க்கை வாழ்வேனா?

28. அடிக்கடி கோவில், சர்ச், மசூதி, குருத்துவார் செல்ல வாய்ப்பு அமையுமா?

29. சித்தர்கள், மகான்கள், ஞானிகள், யோகிகளின் தரிசனம் கிடைக்குமா?

30. ஆவிகளுடன் தொடர்பு கொள்வேனா?

31. ஆராய்ச்சி அல்லது விஞ்ஞானி ஆக முடியுமா?

32. அதிர்ஷ்டம் எப்பவும் என்பக்கம் இருக்குமா?

33. விசுவாசமுள்ளவர்கள் எனக்கு அமைவார்களா?

34. முன்யோசனையுடன் எப்பொழுதும் செயல்படுவேனா?

35. நிதிநிறுவனம் கிளைகள் வைத்து நடத்துவேனா?

36. பணப்புழக்கம் உள்ள இடத்தில் எப்பொழுதும் இருப்பேனா?

37. சட்டத்திற்கு உட்பட்டு நடப்பேனா?

38. உள்நாட்டு, வெளிநாட்டு போக்குவரத்து அமையுமா?

39. தூரதேச பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையுமா?

40. கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையுமா?

41. ஆன்மீக நூல்கள், ஜோதிட நூல்கள் வெளியிடுவேனா?

42. தவம், தியானம், யோகா இவற்றில் ஈடுபடுவேனா?
10ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. எனக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா?

2. கிடைக்கும் என்றால் எந்தக் காலக்கட்டத்தில் கிடைக்கும்?

3. அரசுத் துறையிலா? அல்லது தனியார் துறையிலா?

4. அரசுத்துறை என்றால் மத்திய அரசா? அல்லது மாநில அரசா? அல்லது பொதுத்துறையா?

5. தனியார் துறை என்றால் பெயர் போன பெரிய கம்பெனியா? அல்லது சிறிய அளவிலான கம்பெனியா?

6. வேலை சொந்த மாநிலத்திலா அல்லது வேறு மாநிலத்திலா அல்லது வேறு நாட்டிலா?

7. அந்நிய நாடு என்றால் அந்த நாட்டு அரசுத்துறையிலா அல்லது தனியார் துறையிலா?

8. வேலை எப்பொழுது நிரந்தரம் ஆகும்?

9. நிர்ணயித்த காலம் வரை வேலை பார்ப்பேனா? அல்து விருப்ப ஓய்வில் வருவேனா? அல்லது பணி நீக்கம் செய்யப்படுவேனா?

10. விருப்ப ஓய்வு என்றாலும் பணி நீக்கம் என்றாலும் எந்த காலக்கட்டத்தில் அது நடக்கும்?

11. வேலையில் பிரச்சினை ஏற்படுமா? அதனால் அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவேனா?

12. பார்க்கும் வேலையினால் அரசாங்கத்தால் ஆதாயமும், வெகுமதியும், பரிசும் கிடைக்குமா?

13. வேலை அடிக்கடி மாறிக் கொண்டேயிருப்பேனா?

14. வேலையில் ஊக்கத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவேனா அல்லது மகிழ்ச்சியில்லாமல் வேலையைப் பார்ப்பேனா?

15. பார்க்கும் வேலையில் எதிர்பார்த்த பொருளாதார நிலை சீரடையுமா? வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுமா?

16. நான் அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவேனா?

17. ஏதேனும் விருதுகள் கிடைக்க வாய்ப்புண்டா?

18. விருது மத்திய அரசு மூலம் கிடைக்குமா? அல்லது மாநில அரசு மூலம் கிடைக்குமா?

19. பொது வாழ்க்கையில் மதிப்பும், பெயரும், புகழும் கிட்டுமா?

20. அதிகாரம் கௌரவத்துடன் சிறந்து விளங்குவேனா?

21. நான் மந்திரி ஆவேனா?

22. மந்திரி ஆவேன் என்றால் மத்திய அரசிலா? அல்லது மாநில அரசிலா?

23. சேவை மற்றும் தியாக மனப்பான்மையுடன் வாழ்வேனா?

24. எப்பொழுதும் எஜமானாகவே இருப்பேனா?

25. நீதித்துறையில் படிக்க வாய்ப்பு அமையுமா?

26. நல்ல நீதிபதியாக வாழ்க்கையில் இருப்பேனா?

27. திருடரால் எனது எந்தப் பொருட்கள் திருடப்படும்?

28. நான் தத்துப்புத்திரனாக வருவேனா?

29. ஏதாவது வளர்ப்பு மகளை எடுத்து வளர்க்கலாமா?

30. எனது மந்திர உச்சாடனம் சித்தி பெறுமா?

31. தாயத்து மந்திரித்து உடம்பில் அணியலாமா?
11ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. உண்மையான நண்பர்கள் அமைவார்களா?

2. அவர்களால் வாழ்க்கையில் நன்மை அல்லது தீமைகள் ஏற்படுமா?

3. அரசாங்கத்தால்; எதிர்பார்த்த நன்மை கிடைக்குமா?

4. அரசு அதிகாரிகள் நண்பர்களாவார்களா?

5. என்னுடைய விருப்பம், ஆசை அபிலாஷை பூர்த்தி ஆகுமா?

6. வாழ்க்கையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமா?

7. வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சிகரமாக அமையுமா?

8. எனது செல்வம், செல்வாக்கு, அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்?

9. ஆன்மீக வாழ்வில் திருப்தி ஏற்படுமா?

10. நல்ல ஆலோசகர்கள் கிடைப்பார்களா?

11. நல்ல ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் அமைவார்களா?

12. நெருங்கிய உறவினர்களால் நன்மையேற்படுமா?

13. எனது மூத்த சகோதர, சகோதரிகளால் நன்மையேற்படுமா?

14. எனது இடதுகை, காது, கால் இவைகள் நன்கு வேலை செய்யுமா?

15. எனது நோயிலிருந்து விடுபடுவேனா?

16. எனது தொழில் எதிர்பார்த்த லாபத்துடன் இயங்கி வருமா?

17. எனது கம்பெனி நல்ல அபிவிருத்தியுடன் லாபகரமாக அமையுமா?

18. நான் கொடுத்த பணம் வட்டியோடு சேர்த்து வருமா?

19. வீட்டிற்கு நல்ல மருமகன், மருமகள் வருவார்களா?

20. பஞ்சாயத்து, நகரசபை தேர்தலில் வெற்றி பெறுவேனா?

21. மாகாண சட்டசபை தேர்தலில் ஜெயிப்பேனா?

22. பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெறுவேனா?

23. அமைச்சர் பதவி கிடைக்குமா?

24. சங்கச் செயல்பாடுகளில் ஈடுபடலாமா?
12ம் பாவகத் தொடர்பான கேள்விகள்

1. ஆராய்ச்சிப் படிப்பு படிக்க வாய்ப்புண்டா?

2. அரசாங்கத்தால் ஏதேனும் தொல்லைகள் ஏற்படுமா?

3. அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவேனா?

4. அரசு கடன் பாக்கி ஏதேனும் செலுத்த வேண்டி வருமா?

5. ரகசிய சட்ட ஆலோசனையில் ஈடுபடுவேனா?

6. தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியது வருமா?

7. சதிவேலையில் ஈடுபட்டு சிறைவாசம் செல்வேனா?

8. சிறையிலிருந்து எப்பொழுது விடுதலையாவேன்?

9. முன் ஜாமின் கிடைக்க வாய்ப்பு அமையுமா?

10. பினையத் தொகையில் விடுதலையாவேனா?

11. சட்டரீதியாக முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படுமா?

12. சட்டத்திற்குட்பட்டு செலவு செய்ய வேண்டியது வருமா?

13. ஊரை விட்டு ஓட வேன்டிய சூழ்நிலை வருமா?

14. மிருகங்களால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா?

15. தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்படுமா?

16. உடம்பில் ஏதேனும் அவயவங்கள் வெட்டுப்படுமா? அல்லது வெட்டப்படுமா?

17. வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிட்டுமா?

18. வெளிநாட்டில் முதலீடு செய்வேனா?

19. எனக்கு இறப்பிற்குப்பின் மோட்சம் கிட்டுமா?

20. புதிய பொருட்கள் ஏதேனும் கண்டுபிடிப்பேனா?

21. வெளிநாட்டில் செய்யும் ஆராய்ச்சி வெற்றி பெறுமா?

22. வெளிநாட்டில் வாழ்க்கை எப்படி அமையும்?

23. வெளிநாட்டில் ஏதேனும் விபத்து ஏற்படுமா?

24. மற்றவர்களை மோசம் செய்வேனா?

25. பிறர் பொருள்களை கொள்ளையடிப்பேனா?

26. கள்ளக்கடத்தலில் ஈடுபடுவேனா?

27. ராஜத்துரோகம், தேசத்துரோக செயலில் ஈடுபடுவேனா?

28. ஒற்றர் வேலை அல்லது உளவு வேலை பார்ப்பேனா?

29. அடிக்கடி கோபப்பட்டு மற்றவர்களுடன் தகராறு செய்வேனா?

30. அடிக்கடி பணக்கஷ்டம் ஏற்படுமா?

31. கூட்டுக்குடும்பத்தை விட்டு பிரிந்து விடுவேனா?

32. வரவுக்கு மேல் செலவு செய்ய வேண்டியது வருமா?

33. நிம்மதியான படுக்கை வசதி கிட்டுமா?

34. எப்பொழுதும் ஆழ்ந்த தூக்கம் வருமா?

35. வீடு, அலுவலகத்தை திடீர் சோதனை நடத்துவார்களா?

36. எனது இறப்பிற்குப் பின்னும் புகழ் பெறுவேனா?

WhatsApp

மீள்பதிவு.

வாழ்வியல் நீதி

​எமதர்மராஜன் ஒரு குருவியை 

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். 
அடடா… இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த 

கருடபகவான், 
உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு 

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.
அந்த பொந்தில் வசித்து வந்த 

ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் 

அந்த குருவியை விழுங்கிவிட்டது. 
குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த 

குருவிக்கே எமனாகி விட்டோமே என்று நினைத்து

கருடபகவான், 
குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.
“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்”
நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், 
“அந்த குருவி சில நொடிகளில் 

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் 

வசித்த ஒரு பாம்பின் வாயால் 

இறக்க நேரிடும்” என எழுதப்பட்டிருந்தது; 
அது எப்படி நிகழப் போகிறது? 

என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன். 
அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.
*_”வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே வாழ்வியல் நீதி!”_*

படித்ததில் பிடித்தது.