அரசு வேலை உண்டு

அனைவருக்கும் வணக்கம் இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும் நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். பரிகாரம் செய்தால் நம்முடைய வாழ்க்கை மாறும். பரிகாரம் எல்லாம் செய்யலாம் ஆனால் உழைப்பும் முயற்ச்சியும் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். பத்தாயிரம் வாங்காமல் பத்தாயிரம் சம்பாதிக்க வழி சொல்லிக் கொடுங்கள். மீன் பிடிப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். காலத்தை அறிந்து உணர்வதுதான் ஜோதிடம். யாருக்கு என்ன நேரத்தில் பரிகாரம் செய்யவேண்டும் என்பதை உணர்ந்து செய்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். காலம் அறிந்து செயல்பட வேண்டும். உடனே எதுவும் நடக்காது இது எல்லாவற்றிற்கும் நம்முடைய உழைப்பும் முயற்சியும் தேவை. முயற்சி பயிற்சி நம்முடைய முன்னேற்றத்திற்கான வழி. இன்றைக்கு வெற்றியாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கஷ்டப்பட்டவர்கள் தான். அவர்களுடைய முயற்சியும் பட்ட கஷ்டமும் பார்த்தால் மிக மிக அதிகமாக இருக்கும். ஜாதகத்தில் பரிகாரம் என்பது எந்த நேரத்தில் செய்தால் நல்லா இருக்குமோ அந்த நேரத்தில் செய்தால் தான் பலிக்கும். அவருக்கு அந்த வெற்றி கிடைக்குமா? அல்லது வெற்றி கிடைக்கக் கூடிய அமைப்பு உள்ளதா? இரண்டு வருடம் அமைதியாக தான் இருக்க வேண்டும் என்றால் இருந்துதான் ஆகவேண்டும். ஜாதகத்துடைய அமைப்பு தான் இது. நன்றி.

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/o6VnVKGctWo

திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு நிறையும் இருக்கும் ஒரு குறையும் இருக்கும். 120 வருடம் ஒருவருக்கு சந்தோஷமாகவும் அமையாது. கெட்டதாகவும் அமையாது. அதே போல் நம்முடைய அட்சய லக்னம் ஒவ்வொரு 10 வருடத்திற்கும் லக்னம் மாறும் லக்னம் நகரும். வயதுடைய லக்னத்திற்கு நம்முடைய தசா புக்தியை இணைத்து பலன் பார்க்க வேண்டும். வயதுடைய லக்னம் எப்படி கணக்கீடு செய்வது என்பது நிறைய வீடியோக்கள் யூடியூபில் உள்ளது பாருங்கள். அட்சய லக்ன பத்ததி, ALP Astrology என்று பார்த்தால் தெரியும். உங்களுடைய லக்னம் தனுசு லக்னம் என்றால் 40 வயதில் Alp லக்னம் 4 கட்டம் நகர்த்தி ஒரு கட்டத்திற்கு 10 வருடம், 40 வயதில் ALP லக்னம் : மீன லக்னம் மீன லக்னத்திற்கு தசாபுத்தி பார்த்தால் கண்டிப்பாக யோகமாக அமையும். உதாரணமாக புதன் தசை நடந்தால் வீடு வாங்குவார். புதன் தசை நடந்தால் எதிர்பாராத தீடீர் திருமணம் அமையும். 30 – 40 வயதில் புதன் தசை நடந்தால் 30 வயதில் தான் யோகம். அதுவே ஜென்ம ராசி மிதுன ராசியாக இருந்தால் பஞ்சமஸ்தானதிபதி ஆயில்யம் நட்சத்திரத்திலிருந்து புதன் தசை நடத்தினால் கண்டிப்பாக காதல் திருமணம். கல்வி என்றால் இரண்டாவது பாவகம் 40, 60 வயதாக இருந்தாலும் படிப்பு என்றால் 2வது பாவகம். ஏன்னா? லக்னம் நகரும் பொழுது அதனுடைய குடும்ப சூழ்நிலைகள் அதனுடைய படிப்பு சூழ்நிலைகள் எல்லாம் 2ம் பாவகம் தான் குறிக்கும். கண்டிப்பாக 2ம் பாவகத்தில் உள்ள கிரகங்கள் உடைய தன்மைகள் 11ம் வீட்டைப் பார்த்தால் கண்டிப்பாக யோகம் உண்டு. மேல்நிலைக்கல்வி படிப்பார்கள். சூரியன் செவ்வாய் பார்த்தால் Phd படிப்பாங்க. குரு பார்த்தால் CA ல் மேல்நிலை கல்வி படிப்பாங்க. எந்த இரண்டாம் பாவக நட்சத்திர அதிபதியோ ,இரண்டாம் பாவக லக்ன புள்ளியோ எந்த 11ம் வீட்டை பார்த்தால் கண்டிப்பாக யோகம் உண்டு. 2ம் அதிபதி 6 ல் இருந்தால் ரண ருண சத்ரு கல்வி மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்டது, டாக்டர் சம்பந்தப்பட்டது, இன்சூரன்ஸ் சம்பந்தப்பட்டது, இரண்டாம் பாவகம் அதிபதி 6ல் சம்பந்தப்படும் பொழுது கண்டிப்பாக ரண ருண சத்ரு கல்வி படிப்பார்கள். 2ம் அதிபதி 8 ல் இருந்தால் கண்டிப்பாக டிப்ளமோ சம்பந்தப்பட்ட படிப்பு நல்லா இருக்கும். 2ம் அதிபதி 10 ல் இருந்தால் தொழில் கல்வி நல்லா இருக்கும். இரண்டாம் வீட்டு அதிபதி 9ல் இருந்தால் அப்பா கல்வியை பெறுவார்கள். ALP க்கு இரண்டாம் வீட்டு அதிபதி 4ல் இருந்தால் அம்மா கல்வியை பெறுவார்கள். ஒவ்வொரு படிப்பும் கிரகத்துடைய கூட்டு தன்மைகள் வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்றால்? அட்சய லக்னத்திற்கு இரண்டாம் பாவக அதிபதி லக்னம், ALP க்கு 6ல் நின்றால் கண்டிப்பாக ஜாதகர் டாக்டர் படிப்பாங்க. மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்ட படிப்பு படிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் கிரகங்கள் உடைய ராசி தன்மைகள் தெரிந்திருக்க வேண்டும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/6R0XDMWQ790

குரு தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும் ?

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். பண்டைய காலத்தில் ஜோதிடம் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு பொருளை தானமாகக் கொடுத்துதான் ஜாதகம் பார்ப்பார்கள். அந்தக் காலத்தில் வெற்றிலை பாக்கு வாங்கி வந்துதான் ஜாதகம் பார்ப்பார்கள். அதன் பிறகு அரிசி, நெல், மிளகாய் இப்படி ஏதாவது ஒரு பொருளை தானமாக கொடுப்பார்கள். நமது வாழ்க்கையில் வழிகாட்டக்கூடிய ஜோதிடர்களுக்கு ஏதாவது ஒரு பொருளை தானமாகக் கொடுக்க வேண்டும். உணவு வாங்கி கொடுக்கலாம். துணி வாங்கி கொடுக்கலாம். அல்லது யாராவது ஒரு குருமார்களையோ, அந்தணர்களையோ,அல்லது வாழ்க்கையில் வழிகாட்டக்கூடிய நமது ஆசிரியர்களையோ, இல்லை நமக்கு ஜாதகம் பார்க்கும் நமது வாழ்க்கையை வழிகாட்டக்கூடிய ஜோதிடர்களுக்கும், கரும்பு சாருடைய தானம்,இனிப்பு தானம் கொடுக்கலாம். ஒரு ஜோதிடருக்கு நீங்கள் கரும்புசாறு தானம் கொடுத்தீர்கள் என்றால் உங்களுடைய வாழ்க்கையில் அந்த குரு தோஷம் நீங்கும். குரு தோஷம் என்று சொல்லக்கூடிய வீட்டில் குழந்தை இல்லை, குழந்தை நன்றாக படிக்கவில்லை, குழந்தை பிரச்சனை இருக்கு, எதிர்பார்த்த யோகம் கிடையாது இப்படியெல்லாம் இருக்கக்கூடிய வீட்டில் ஏதாவது ஒரு வகையில் குரு உடைய சாபம் அதாவது சொல்வதை கேட்காதவர்கள். அதாவது உதாரணமாக நான் ஜோதிடம் சொல்லி கொடுக்கிறேன் அது புரியாதவர்கள்,அதாவது குருவை பலிப்பவர்கள், ஜோதிடர்களை பலிப்பவர்கள், மறைமுகமாக திட்டுபவர்கள், அல்லது குருமார்கள் சொல்லிக் கொடுப்பதை இன்னொருவருக்கு மறைமுகமாக சொல்லி கொடுத்து ஒரு பொருளைத் தானமாகப் பெறுவார்கள். சொல்லிக் கொடுப்பது ஒரு குருவிடம் கற்ற வித்தையை, கல்வியை அவருடைய அனுமதியுடன் கற்றுக் கொடுக்க வேண்டும். அதுதான் முறையான கல்வி. இன்னாரிடமிருந்து இந்த கல்வி வந்தது, இன்னாரிடமிருந்து இந்த கல்வியை கற்றுக்கொண்டேன். இந்த கல்வியை அவரிடம் அனுமதி பெற்று நான் கற்றுக் கொடுக்கிறேன். அப்படி சொல்லிக் கொடுக்கும் பொழுது அந்த குரு உடைய தோஷம் வராது. அது இல்லாமல் மறைமுகமாக சொல்லிக் கொடுத்து ஒரு ஜோதிடர் இன்னொரு ஜோதிடருக்கு சொல்லிக் கொடுக்கும் பொழுது குரு உடைய தோஷம் கண்டிப்பாக உண்டாகும். கண்டிப்பாக அவருடைய வாழ்க்கையில் குடும்பம் என்று சொல்லக்கூடிய, அட்சய லக்னத்திற்கு 6, 8 ,10 ,12 ல் குரு பகவான் இருக்கக்கூடிய காலகட்டங்களில் குருமாருடைய சாபத்தை பெறக்கூடிய ஜாதகராக மாறுவார். குருவிடம் கற்ற கல்வியை யாருக்காவது மறைமுகமாக சொல்லி கொடுப்பார். மறைமுகமாக சொல்லி கொடுத்து பணத்தை பெறுவார். பேர் புகழ் வாங்குவார்கள். இது ஏதோ ஒரு விதத்தில் சாபத்தை ஏற்படுத்தும். உண்மையில் குரு சரியாக சொல்லிக் கொடுப்பார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் குருவை பலிப்பது, மறைமுகமாக திட்டுவது, ஏதாவது ஒரு பழிச்சொல்லுக்கு ஆளாவது, இதெல்லாம் எப்படி தெரிந்து கொள்வது என்றால்? அந்த குடும்பத்தில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குறைபாடு இருக்கும், குரு என்றால் குழந்தைகள். கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஒருவர் செல்ல முடியவில்லை என்றால் அவருக்கு குரு உடைய தோஷம் இருக்கு. தோஷம் என்று சொல்லுவது ஜாதகத்தில் குரு 6, 8, 10, 12ல் இருந்தால் வீட்டிற்கு பக்கத்தில் குடமுழுக்கு நடக்கும் அதற்கு செல்ல முடியாது. மறைமுகமாகச் சாடினாலும் கண்டிப்பாக குரு தோஷம் ஏற்படும். அப்பாவுக்கும் மகனுக்கும் ஏற்படக் கூடிய பாக்கியம் எதிர்பார்த்த யோகம் கிடையாது. அதனால் கண்டிப்பாக கரும்புசாறு வாங்கி தானம் கொடுங்கள். ஏதாவது ஒரு குருவை சாந்த படுத்துங்கள். உங்களுக்கு யாரெல்லாம் வழிகாட்டுகிறார்கள் அவர்களுக்கு கரும்புசாறு வாங்கி கொடுத்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுடைய வாழ்க்கை மாறும். இல்லையென்றால் சிவன் கோவிலுக்கு கரும்புசாறு வாங்கி அபிஷேகம் செய்யுங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். அபிஷேகம் செய்த கரும்புசாறு வாங்க அருந்தும் போது இன்னும் சந்தோஷம். உங்களுடைய வாழ்க்கை நிவர்த்தியாகும். அதன் பிறகு பணம், தனம், மகிழ்ச்சி, குடும்ப உறவுகள், குழந்தைகளுடைய படிப்பு, குழந்தைகளுடைய ஆரோக்கியம், குழந்தைகளுடைய செல்வம், மகிழ்ச்சி, ஆனந்தம், எல்லாம் அந்த வீட்டில் கண்டிப்பாக வாழ்க்கை வளமாகும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/Wwy0QOjwXPM

தொழில் அல்லது வேலை எது சிறந்தது

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒரு முடிவெடுக்க முடியாத அமைப்பு எப்படி இருக்கும் என்றால் ஒரு ஜோதிடரிடம் வரும்பொழுது நான் தொழில் செய்யலாமா? நான் வேலைக்கு போகலாமா? என்று வரும்பொழுது இவர்கள் ஒரு முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியும். நான் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? இப்படி வேலை விஷயங்களில் 1000 கேள்வி கேட்டால் சரி. ஆனால் எங்க அப்பா செய்த தொழில் இருக்கு , அதை நானும் செய்யலாமா? என்று கேட்பது ஒருவகை. தொழில் செய்யலாமா? வேலை பார்க்கலாமா ? என்று கேட்டால் அங்கேயே முதல் குழப்பம் உண்டாகும். ஒருவருடைய கேள்வி ஒரு தெளிவில்லாத, முடிவில்லாத மனநிலையை காமிக்கும். நீங்கள் ஜோதிடரிடம் செல்லும் பொழுது படித்த படிப்பிற்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? எப்பொழுது வேலை கிடைக்கும்? இதை மட்டும் சரியாக கேட்டால் உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய அத்தனை விஷயங்களுக்கும் அந்த ஜோதிடர் வழிகாட்டியாக வருவார். கண்டிப்பாக வழி காட்டுவார். எதை நோக்கி நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்று முன்கூட்டியே முடிவு செய்தால் இந்த பயணம் வெற்றி பெறும். வாழ்க்கை என்பது நெடுந்தூர பயணம். அதை தொலைநோக்குடன் பார்த்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். உடனே உடனே ஒரு முடிவை மாற்றிக் கொண்டிருந்தால் அதில் நிறைய பிரச்சனைகள், குழப்பங்கள், இடையூறுகள், அலைக்கழிப்புகள் இப்படி நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய காலமாக அமையும். திட்டமிட்டு வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். 20 – 30 வயது வரை இனம் புரியாத பருவமாக மாணவர்கள் செல்வார்கள் ஏன்னா? படித்து முடித்து வேலைக்கு செல்லும் பொழுது குறைந்தது 6 வருடமாவது வேலை பார்த்து அந்த வேலையைக் கற்றுக் கொண்டால் மட்டுமே அவருடைய வாழ்க்கை வளமாகும். ஒரு தொழிலில் நேராக வந்து உட்கார்ந்தால் அதில் என்ன நுணுக்கங்கள், எதில் லாபம், எதில் நஷ்டம் என்பது தெரியாது இப்படி நிறைய விஷயங்களில் கஷ்டப்பட்டு அந்த முதல் கடனாக மாறும். 20 to 30 வயது வரை உள்ள ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இது புரியணும் சொல்லிக் கொடுங்கள். ஒரு இடத்தில் வேலை பார்த்தால்தான் காசு உடைய அருமை தெரியும். எந்த தொழிலாக இருந்தாலும் குறைந்தது 6 வருடமாவது தொழிலில் இருந்து கற்றுக் கொண்டால்தான் வாழ்க்கை வளமாகும். இதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_Alp_astrology_method

#alp_astrology_software_free_download

#download_ALP_Astrology

#alp_Astrologer

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/gm3FnDhKz28

திருமணம் எப்போது

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. ” அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஜாதகம் திருமணம் என்று பார்க்கும் பொழுது திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தான் ஜாதகம் அதிகம் பார்க்கப்படுகிறது. திருமணம் பார்க்கும் பொழுது பெண், ஆண், இருவருடைய அப்பா அம்மா நட்சத்திரப் பொருத்தம் பார்த்துக்கொண்டு இது பொருந்துகிறது பொருந்தவில்லை என்று நீங்களே முடிவு செய்யாதீர்கள். லக்னம் மாறும் பொழுது கண்டிப்பாக செவ்வாய், ராகு – கேது என்பது லக்னம் மாறும் பொழுது அதனுடைய தன்மைகளும் மாறுகிறது. தயவுசெய்து நீங்களே முடிவு செய்யாதீர்கள். அதற்காக தான் திருமணப் பொருத்தத்திற்கு ஒரு சாப்ட்வேர் உருவாக்கியுள்ளேன். google Play Store ல் Alp Astrology சாப்ட்வேர் உள்ளது. அதில் ஒரு பகுதியை திருமண பொருத்தத்திற்காக உருவாக்கியுள்ளேன். ஏன்னா? இந்தக் காலகட்டம் ஜாதகரால் பிரச்சனை. இந்த காலகட்டம் வரக்கூடிய பெண்ணால் (மனைவி) பிரச்சனை, அதுவே கணக்கீடு செய்யும். ஆரம்பிக்கக் கூடிய காரணகருத்தாக யார் இருந்தார் என்றால் அந்த ஜாதகத்தில் Software ல் காண்பிக்கும். நிறைய திருமண உறவுகள் முறிவதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை மிக மிக இலகுவாக அமைத்துவிட்டது. அதீதமான அறிவுப் பெருக்கம் நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்கிறது. என்னுடைய வாழ்க்கையை நானேமுடிவு செய்வேன் , எனக்கு எல்லாம் தெரியும், இப்படி நிறைய காரணிகள் ஒரு பெண்ணுடைய வாழ்க்கையிலும், ஒரு ஆணுடைய வாழ்க்கையிலும் புரிதல் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்துகிறது. இது திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்கள் உடைய அமைப்புகளை நீங்கள் பார்த்தால் உணர முடியும். திருமண பொருத்தம் என்பது நுண்ணியமாக ஆய்வு செய்து கொடுக்கக் கூடிய அமைப்பு திருமண பொருத்தம். திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது ஆணுடைய ஜாதகத்தையும் பெண்ணுடைய ஜாதகத்தையும் இணைத்து பார்க்கப்பட வேண்டும். நட்சத்திரத்தை மட்டும் வைத்து பொருத்தம் பார்க்க வேண்டாம். நட்சத்திரம் மட்டும் வைத்து பொருத்தம் பார்க்கக்கூடாது. நீங்களே செவ்வாய் தோஷம் இருக்கு என்று எழுதக்கூடாது. ஜோதிடரிடம் கொடுத்தால் அதில் என்ன குறை, என்ன நிறை என்று பார்த்துச் சொல்வார்கள். புரிதல் உண்டாகும் சந்தோஷம் உண்டாகும். இதனால் 1 வருடம் , 1 மாதம், 10 நாள் ஜாதகருடைய நிலை என்ன கணவருடைய நிலை என்ன மனைவியுடைய நிலை என்ன என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இப்படி ஆய்வு செய்து தான் சாப்ட்வேர் வெளியிட்டுள்ளேன். இது ஜோதிடர்களுக்கு தான் பயன்படும். ALP Astrology செயலியில் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். உங்களுடைய அட்சய லக்னம், அட்சய ராசி, நவாம்சம், பாத சாரம், ALP புள்ளி தெரிந்துகொள்ளலாம். நன்றி

#அட்சய_லக்ன_பத்ததி_book pdf

#ALP_Astrology_English_class

#ALP_Astrology_Basic_Training_Classes

#ALP_Astrology_apps_on_google_play

#ALP_astrology_contact_Alpofficenumber_9786556156

https://youtu.be/0YWWM9a2JuE

வீட்டுக்கு ஒரு ஜோதிடர்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். அட்சய லக்ன பத்ததி முறையில் எளிமையான கணக்குகள்,ஒரே மாதிரியான கணக்கு முறைகள், அட்சய லக்னத்தில் அட்சய லக்னம் குறிக்கிறோம், அட்சய பாவகம் குறிக்கிறோம், எல்லாவற்றிலும் கணக்கு முறைகள் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ஜோதிடர் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஏன்னா? எந்த அளவிற்கு இந்த கிரகங்களைப் புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கை முறையில் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதை புரிந்து கொண்டால் வாழ்க்கை வளமாகும். ஒரு செயல் நடைபெறுவதற்கு முன் எங்கேயாவது வெளியில் சென்றால் இன்றைக்கு நம்முடைய நேரம் எப்படி இருக்கு என்பதை பார்த்து அந்த நேரத்தில் போனால் கண்டிப்பாக அந்த விஷயம், அந்த செயல் நடக்கும், நடக்காது, என்று தெரிந்து கொண்டால் அந்த செயலை முற்படுத்தலாம் அல்லது அல்லது அந்த செயலை செயல்படுத்தலாம். நடக்காது என்றால் அதை தள்ளி போட்டு அதற்கு முதல் நாளே செயல்படுத்தலாம். இந்த கிரகங்கள் நம்முடைய வாழ்க்கையில் எந்த அளவு பயன்படுகிறது, ஜோதிடம் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு காலத்துடைய ஒரு கண்ணாடி. உங்களுடைய இலக்கு உங்களுடைய பாதை தீர்மானிக்கப்பட்டு விட்டால் கண்டிப்பாக நீங்கள் சென்றடையக்கூடிய சந்தோஷம், முன்னேற்றம், மகிழ்ச்சி உங்களுடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டும். இது தான் ஜோதிடம். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வேண்டும். செய்யக்கூடிய எல்லா செயல்களுக்கும் அடிப்படை காரணம் ஜோதிடம்தான். இதை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் வாழ்க்கை மாறும். நீங்கள் படித்தால் உங்களை சார்ந்த சமூகம், உங்கள் நண்பர்கள், உங்களை சார்ந்தவர்களை வெற்றி பெற வைக்க முடியும். ஜோதிடம் பிரபஞ்சத்தின் உடைய கட்டளை. எல்லோரும் கற்றுக் கொள்ளுங்கள். வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வேண்டும் கண்டிப்பாக 9 to 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஜோதிடம்தெரிந்தாலே கிரகங்கள் உடைய தன்மைகள் தெரிந்தாலே,நட்சத்திரத் உடைய தன்மைகள் தெரிந்தால் அவர்களுடைய வாழ்க்கையை சரியாக திட்டமிட்டு,அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி பெற வைக்கும். மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். ஜோதிடத்தின் மூலமாக மாணவர்கள் அவர்களுடைய நிலைகளை அறிந்து கொள்ளக்கூடிய வழி உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் நமது வெற்றியை தீர்மானிக்க கூடிய ஜோதிட கல்வி எல்லோருக்கும் தேவை. ஜோதிடம் படிங்கள் உங்கள் வாழ்க்கை வளமாகும். நன்றி.

#ALP_Astrology_newmethod

#alp_astrology_method_book

#ALP_astrology_classes

#alp_astrology_classes_moorthy

#ALP_astrology_contact_Alpnumber_9786556156

https://youtu.be/A1xaEMI5OU4

உணவு சம்மந்தபட்ட விசயங்களில் மிக மிக கவனம் தேவை

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். குழந்தையின்மை என்ற கேள்வி இன்று மக்கள் பெரும்பாலும் ஜாதகம் பார்க்கிறார்கள். இதற்கு அடிப்படையான காரணம் உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வில்லை என்பதுதான். உடலையும் மனதையும் கெடுத்து நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோஷம் ஆரோக்கியம் மறந்து ஏதோ ஒரு இயந்திர வாழ்க்கையில் பயணிக்கிறோம். பெண்கள் கோலம் ஏன் போடுகிறார்கள் என்றால் குனிந்து கோலம் போடுவதால் கர்ப்பப்பை அதனுடைய தன்மையை பாதுகாக்கும். குழந்தை இல்லை என்றால் கண்டிப்பாக பெண்கள் கோலம் போட வேண்டும். காலையில் எழுந்து கோலம் போடும் பொழுது உடல் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும். குழந்தை இல்லை என்ற விஷயத்திற்கு குரு பகவான் பலமாக இருக்க வேண்டும். 5ம் வீடு குழந்தை. 5ம் வீடு முக்கியமாக இருக்க வேண்டும். குருபகவான் முக்கியமாக இருக்க வேண்டும். கண்டிப்பாக அந்த வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான நிலை உண்டு. ஆனால் அட்சய லக்னத்தில் 5ம் பாவக நட்சத்திர புள்ளியும், 5ம் பாவக அதிபதியும் எங்கு இருக்கு என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக குரு பகவான் நீசம் ஆனால் குழந்தைகள் மூலமாக தொந்தரவு வரும். குழந்தைகள் மூலமாக ஒரு யோகத்தைக் கொடுக்க முடியாது. கண்டிப்பாக குரு பகவான் பலமாக அமைந்தால்தான் வாழ்க்கையில் வழிகாட்டுதல் யோகமாக அமையும். குரு நீசமானால், குரு 6 ,8 , 10, 12 ல் இருந்தால் கண்டிப்பாக யோகத்தை கொடுக்காது. குருபகவான் நீசமானால் சொல்வதை கேட்க மாட்டார்கள். நன்றி.

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/SFRcGG0GTTQ

அய்யனார் கோவிலுக்கு போங்க உங்கள் வாழ்க்கை வளமாகும்

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். இன்றைக்கு மனநலம் பாதிப்பு என்ற விஷயம் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கு. மனிதனாக பிறந்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் நல்லது, கெட்டது, சந்தோஷம், இன்பம் , துன்பம் இருக்கும். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லார்கிட்டயும் இல்லாத ஒரு விஷயம் உங்களிடம் யோகமாக இருக்கும். பணம் இருக்கும் பொழுது ஆனந்தம், ஆரோக்கியம் இருக்காது. ஆரோக்கியம் இருக்கும் பொழுது பணம் இருக்காது. இப்படி இறைவனுடைய திருவிளையாடலில் தான் வாழ்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். ஆயிரம் கோடி இருந்தாலும் அந்த ஆரோக்கியமான உடல் இல்லை என்றால் அதை அனுபவிக்க முடியாது. அதனால்தான் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம். ஆரோக்கியம் என்பது உங்களுடைய உடலை எவ்வளவு பாதுகாத்து நகர்த்துகிறீர்களோ அந்த அளவு யோகமாகும். உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மன ஆரோக்கியமும் முக்கியம். திட்டமிடல் இல்லாத வாழ்க்கை எதிர்பார்த்த அமைப்பில் இருக்காது. பொறுமையாக இருங்கள். திட்டமிடலால் உங்கள் வாழ்க்கை வளமாகும். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/tLYAInVSPHo

திருமணம் எப்போது

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடை மூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். திருமணம் சார்ந்த நிகழ்வுகள் ஒரு ஜாதகத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 22 வயதிற்கு பிறகு திருமணப் பொருத்தத்திற்குதான் ஜாதகம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது இரண்டு வகையான குடும்ப சூழ்நிலைகளை கவனிக்க வேண்டும். ஒருவருக்கு வேலை கிடைக்க வேண்டுமென்றால் ஒரு பாவகம் மட்டும்தான் ஆய்வு செய்ய வேண்டும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் 1,7 இரண்டு பாவகங்களை ஆய்வு செய்ய வேண்டும். லக்னாதிபதி 6, 8, 10, 12 ல் இருந்தால் கண்டிப்பாக ஜாதகரிடம் திருமணம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். அதேபோல் 7ம் வீட்டிற்கு 6, 8, 10, 12 ல் இருந்தால் ஜாதகருக்கு வரக்கூடிய பெண் ஜாதகரை பிடிக்கவில்லை, எதிர்பார்த்த வகையில் குணநலன்கள் இல்லை என்று தட்டி விடுவார்கள். இதற்குத்தான் அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருளில் 12 ராசி கட்டங்கள் 24 ஆக பிரித்துள்ளேன். முதல் 12 ஜாதகருடையது, அடுத்த 12 என்னுடைய எதிர் உள்ள நண்பர்கள் ஒவ்வொரு பாவகத்திற்கும் எதிர் பாவகம் பற்றிய ஆய்வுகள். 1,7 பாவகம் நன்றாக இருந்தால் தான் சந்தோஷமாக இருக்க முடியும். முதலாளி ஒரு பக்கமும் தொழிலாளி ஒரு பக்கமும் இருந்தால் நாம் அடைய வேண்டிய இலக்கை எட்ட முடியாது. அதற்குத்தான் 24 ராசி கட்டங்கள் உருவாக்கி அதை ஒரு பகுதியாக பிரித்து எந்த பகுதி பாதிப்படைகிறது ,எந்தப் பகுதி அதித அழுத்தமாக இருக்கிறது,அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருளில் பதிவு செய்துள்ளேன். எல்லாரும் இந்த உயர்நிலை மென்பொருளை பயன்படுத்தி பார்க்கனும். அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென் பொருளை பயன்படுத்தி யோக நிலையை அடைய முடியும். சந்திராஷ்டமம் அட்சய லக்னத்திற்கு அட்டமத்தில் கிரகங்கள் செல்லும்பொழுது லக்னாதிபதியோ, நட்சத்திர அதிபதியோ 8ல் செல்லும்பொழுது கண்டிப்பாக உடல் சார்ந்த வருத்தங்களை உடல் சார்ந்த இறுக்கங்களை பெற வேண்டும். அட்சய ராசிக்கு 8ல் சந்திரன் செல்லக்கூடிய காலகட்டங்களில் கண்டிப்பாக தேவையில்லாத பிரச்சனைகளை சந்திப்பர். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_Alp_astrology_method

#alp_astrology_software_free_download

#download_ALP_Astrology

#alp_Astrologer

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/KjdfYcU5O34

2022 ஜுன் பிறகு அதிஷ்டம் உண்டு

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ” ஜோதிட ஆராய்ச்சியாளர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஜாதகத்தில் எந்த காலம் யோகமான காலம் என்பதைப் பார்க்கிறோம். அட்சய லக்ன பத்ததி உயர்நிலை மென்பொருளில் 12 பாவகங்களில் நான்கு பாவகங்கள் மாற்ற முடியாது என்று அதிலேயே குறிக்கப்பட்டிருக்கும். 11ம் பாவகம் 8ம் பாவகத்துடன் தொடர்பு படும் பொழுது எதிர்பாராத திடீர் யோகத்தை கொடுக்கக் கூடிய அமைப்பு உண்டு. எல்லாருடைய வாழ்க்கையிலும் பாக்கியம் என்பது 9ம் பாவகம். ஒன்பதாம் பாவகம் பல பட்டால் எல்லாம் கிடைக்கும். 11ம் பாவகத்திற்கு 11ம் பாவகம் என்பது எதிர்பாராத திடீர் யோகம். 9, 11 ம் பாவகம், ALP யில் சேர்ந்து இருந்தால் உதாரணமாக ALP தனுசு லக்னம் என்றால் 11ம் அதிபதி சுக்ரன் 9ம் அதிபதி சூரியன், சூரியனும் சுக்கிரனும் உதாரணமாக, 7ம் இடத்தில் இருந்தால் மனைவி மூலமாக, நண்பர்கள் மூலமாக, கூட்டுத் தொழில் மூலமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பயணிக்க கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கும். எதிர்பாராத நட்புகள் மூலமாக யோகத்தை கொடுக்கும். இது எல்லாருடைய வாழ்க்கையிலும் கிடைக்காது. 9, 11 மிக யோகமான அமைப்பு. 8ம் வீடு என்பதே எப்பொழுதாவது தான் அதிர்ஷ்டம். இவருக்கும் எதிர்பாராத யோகம் உண்டு. தொடர்ச்சியாக வரும் 9, 11 பாவகம் யோகத்தைக் கொடுக்கும். இரண்டு ஆதிபத்தியங்கள் வாங்கக் கூடிய கிரகங்கள் இருந்தால் மிக கவனமாக பலன் சொல்ல வேண்டும். கொடுக்காது என்றால் கொடுக்காது நான் இந்த பரிகாரம் செய்து விட்டேன் என்று சொன்னாலும், உதாரணமாக 6 .10 மணிக்குதான் பஸ் வரும் என்றால் 5:30 மணிக்கு போய் நின்று கொண்டு பஸ் வரணும் என்று வேண்டினாலும் இயற்கைக்கு மாறாக எதுவும் நடக்காது. 6.10 மணிக்கு தான் பஸ் வர வேண்டும் என்பது எழுதப்பட்டது. அதை தெரிந்து கொண்டோம். இதை பலமாக புரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஜோதிடக்கலை கிடைக்காது. ஜோதிடத்தை பலமாகப் பிடியுங்கள், உங்கள் வாழ்க்கை வளமாக இருக்கும். எந்தத் துறையில் இருந்தாலும் ஜோதிடம் தான் உங்கள் வாழ்க்கையை வளமாக்கும். ஜோதிடம் கடவுளுடைய அனுக்கிரகம். நன்றி, வணக்கம்

#அட்சய_லக்ன_பத்ததி_book pdf

#ALP_Astrology_English_class

#ALP_Astrology_Basic_Training_Classes

#ALP_Astrology_apps_on_google_play

#ALP_astrology_contact_Alpofficenumber_9786556156

https://youtu.be/ozM2DT6rero