ALP Astrology

Mrs. Padmavathi Mahalingam
"அக்ஷய லக்ன பத்தாதி" [ஆல்ப்] பற்றிய எனது தனிப்பட்ட அனுபவம்

அட்சய லக்ன பத்ததி ஓம் குல தெய்வம் துணை.
தாய் தந்தைக்கு வணக்கம்.

நான் உடுமலை பேட்டையில் உள்ள ஊரிலிருந்து அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறைமூலம் பல அனுபவங்களையும், ஒரு சில பல ஜோதிட நூல்களையும் உங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறேன்.

மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று பழமொழி போல் யானை கட்டி போர் அடிக்கும் மைந்தன் என்ற பழமொழி போல் ஜோதிட துறையில் யானைக்கு சமமான பலமும், வீர பராக்கிரமமும் ஞானமும் பொருந்திய குருநாதரே உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் ஸ்ரீ மகான் குருஜிக்கு வணக்கம்.

இந்த ஜோதிட முறையில் நான் அரிதாக கருதுவது இந்த அட்சய லக்ன பத்ததி என்ற முறையில் நான் அறிந்தது என்னவென்றால்,

  • 1) முதலில் கடந்த காலத்தை கணிக்க முடிந்தது
  • 2) நிகழ்காலத்தை உணர முடியும்
  • <
  • 3) எதிர்காலத்தை யுகிக்க முடியும்
இந்த ஜோதிட முறை,
அட்சய லக்ன பத்ததி முறை அமானுஷம் சக்தி வாய்ந்த
ஜோதிட முறை.
இந்த அட்சய லக்ன பத்ததி மூலம், தெளிவான தெளிவாம் ஜோதிட முறை மூலம் பிறருக்கு வழிகாட்டியாக முடியும் என்ற நம்பிக்கை ஆழமாக தெரிகிறது.
நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும், அதாவது நம் குடும்ப உறுப்பினர்களையும், உற்றார், உறவினர்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பாதுகாக்க முடியும்.
(இந்த அட்சய லக்ன பத்ததி என்பது மிகப் பெரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்தேன். இனிவரும் காலங்களில் உங்களுடன் பயணிக்க உதவவும்)
(ஒரு) வழி தெரியாத ஒருவர் இருண்ட பாதை வழி சென்று கொண்டிருக்கிறார். அத்தருணம் அவருக்கு வழிகாட்டியாக அதாவது அட்சய லக்ன பத்ததி என்ற ஒளி தீபம் அவருக்கு வெளிச்சம் போல் வழிகாட்ட உதவி செய்கிறது. இது பரிகாரம் சொல்லும் ஜோதிட முறையாக நான் கருதவில்லை.
சார் நான் முன்பு எல்லாம் ஜாதகம் கையில் வாங்கி 2 (or) 3 மணி நேரமாவது கணித்த பிறகு அவர்களுக்கு பலன் சொல்வேன். என் தாத்தா, என் அப்பா, என் மாமா , என் அண்ணன் ஜோதிடர்கள். அவர்கள் எனக்கு முதலில் உச்சம் நீசம் சொல்லிக் கொடுத்தார்கள், பார்வைகள் சொல்லி எனக்கு அப்போது புரியவில்லை. ஆனாலும் இணைவுகள் வைத்து பலன் சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்துதான் வைத்திருந்தேன்.
அதற்கு மாறாக விளக்கம் உங்கள் அட்சய லக்ன பத்ததி முறையில் நான் ஏராளமான விஷயம் கற்றுக்கொண்டேன். எனக்கு தூக்கத்திலும் கிளாஸ் நடப்பது போலவே இருக்கும். அட்சய லக்ன பத்ததி மூலம் நான் ஏராளம் தெரிந்து கொண்டேன்.
நான் இப்பொழுது 15 நிமிடத்தில் எந்த கேள்விக்கு வந்தார்கள் என்று சொல்ல முடிகிறது. 30 நிமிடத்தில் பலன் சொல்ல முடிகிறது எனக்கே ஆச்சரியம். என் மாமா எப்படி என்று அதாவது, எப்படி இப்படி இவ்வளவு சீக்கிரம் பலன் சொல்ற என்று ஆச்சரியமாக கேட்பார்.
அவர் ஆபீஸ் வந்த ஜாதகத்தை என்னிடம் கொடுத்தார். அப்போ நான் கையால்தான் கணக்கு வயது * 3° போடுவேன். ஜென்ம லக்னத்தில் இருந்து 5-வது ALP போனது.நான் அதற்கு 5ம் பாவபலன் தகுந்த பலன் சொன்ன ஆச்சரியம் அவருக்கு வாங்கிய 3 நிமிடத்தில் சொன்னேன்.
மாமா உட்கார்ந்திருக்கும் சீட்டுல இருந்து எழுந்து எனக்கு கை கொடுத்தார்.எனக்கு அவர் நமக்கு இவ்வளவு மரியாதை தந்தார் என்றால் அந்த மரியாதை நான் படித்த அட்சய லக்ன பத்ததித்கு என்று உணர்ந்தேன்.
இதே போல் இன்னொரு சம்பவம். ஒரு பையன் கல்யாணத்திற்கு வந்தான். என்னிடம் வீடியோ கால் போட்டார் மாமா (அவருக்கு வயது 77) அந்தப் பையன் ஜாதகத்தில் முயற்சி மட்டும் தான் நடக்கும். அதாவது முடியிற மாறி நடக்கும், முடியாது சாமி என்று சொன்னேன். ஒரு 2 மாதம் கழித்து அந்த ஜாதகர் அந்தப் பெண் முடியல நான் வேற பெண் பார்க்கிறேன் என்று சொன்னான்.
எப்படி மேடம் முடியாது என்று சொன்னீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள். நான் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை அந்த ஜாதகரிடம் எடுத்துச் சொன்னேன். இது மாதிரி நிறைய நிகழ்வுகள் இந்த குறைந்த நாளில் நடந்தது இவையெல்லாம் இந்த அட்சய லக்ன பத்ததி என்ற ஜோதிட முறைதான் காரணம்.
இந்த அட்சய லக்ன பத்ததி என்ற ஜோதிட முறையை சுருக்கமாக சொன்னால் பள்ளம் மேடு எப்படி கடந்து செல்வது என்று ஜோதிட முறையாகும் என நான் கருதுகிறேன்.
அட்சய பாத்திரம் அல்ல அல்ல கொடுக்கிறதோ அதே போல் செய்ய லக்ன ஜோதிட முறை படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. 30 வருட ஜோதிடர் என் மாமா என்னை பார்த்து ஆச்சரியப் படுகிறார்.
மாமா என்னை பார்த்து வியப்புடன் கேட்பார். அப்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு இந்த அட்சய லக்ன பத்ததி இந்த அட்சய லக்ன பத்ததி தான் முழு கவனம்.
சார் ஸ்ரீ மகான் அவர்களே நீங்கள் சொல்லிக் கொடுக்கும் விதம் எங்கள் ஆழ்மனதில் ஆழமாக அச்சிட்டது போல் பதிகிறது. நான் இன்று கூட உங்களிடம் ஆன்மீக டிப்ஸ் சொல்லுங்கள் என்று பணிவுடன் கேட்டது அதற்குதான் ஸ்ரீ மகான் அவர்களே! எல்லோருக்கும் ஆன்மீக டிப்ஸ் கிடைக்கும் என்பதால்தான் சார்.
இந்த ஜோதிடப் பயிற்சி அதாவது அட்சய லக்ன பத்ததி என்ற முறை எங்களிடம் ஜோதிடம் பார்க்கும், வரும் நபர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருப்போம். அந்த பேரும் புகழும் தங்களுக்கே உரியது.
இந்த அட்சய லக்ன பத்ததி பிற்காலத்தில் சூரியன் போல் பிரகாசமாகவும் , சந்திரன் போல் வெண்மையாகவும் அனைவருக்கும் பயன்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவிக்கின்றேன்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார்.
என்பதைப் போல்

ஒரு கடல் கடக்க படகு தேவை
ஒரு ஊருக்குச் செல்ல ஊர்தி தேவை கடல் கடந்து செல்ல விமானம் தேவை

தன்னை உணரவும் தன் வாழ்க்கை உணரவும் கடல் கடந்து செல்ல விமானம் தேவை என்பதை போல தங்களுடன் பயணிக்கும் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நீம் கரோலி பாபா வின் ஆசீர்வாதம் தங்களுக்கும், தங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் அனைத்து மக்களுக்கும் ஆசீர்வாதம் தருவார்கள். நீங்களும் எங்கள் அனைவரையும் வாழ்த்து சொல்ல வேண்டும்.

என்றும் இறைபணியில்
பத்மாவதி மகாலிங்கம் உடுமலைப்பேட்டை
9790341468
பணிவான வணக்கம் சார்.