பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம்:

Spread the love

பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திர பாதம் பூராடம் நட்சத்திரம் நான்காம் பாதம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் எந்த நேரம் அதிர்ஷ்டமான நேரம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதுநாள் வரையில் வெளிநாடு செல்ல முடியவில்லை.
இடம் விட்டு இடம் நகர வேண்டும் என்ற கேள்வி வரும்.

எதிர்பார்த்த விஷயங்கள் எப்படி இருக்கும்,
பொருள் விரயம் செய்யலாமா,
இடம் வாங்கலாமா என்ற கேள்வி இருக்கும்.

கடன் வாங்கி இடம் வாங்கலாம் என்ற விஷயத்தை இந்த நேரத்தில் பதிவு செய்கிறேன்.

ஜாதகருக்கு கடன் சார்ந்த விஷயங்கள் இருக்குமா? இருக்கும்.
ஏன்னா?
தனுசு லக்னத்தில் பூராடம் நட்சத்திரம் போகும்பொழுது 6,11 க்கு உடைய ஆதிபத்தியம் வாங்கும்பொழுது
ஜாதகர் கடன், வம்பு, வழக்கு, நோய்நொடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஜாதகர் பயணிப்பார்.
அது சார்ந்த விஷயங்கள் அவரை அதிகமாக ஈர்க்கும்.

6ம் வீடு என்றால் கடன்.
அது சார்ந்த விஷயங்களில் ஜாதகர் பாதிக்கப்படுவார்.

மருத்துவமனை சம்பந்தப்பட்ட செலவுகள் அசுபவிரயச் செலவுகளாக மாறும்
சுபசெலவுகள் என்றால் வீடு, வண்டி, வாகனம், சொத்து, திருமணம் சார்ந்த விஷயங்கள், சுப விரயச் செலவுகள் செய்து கொள்ளலாம்.

அதுவே மருத்துவமனை சம்பந்தப்பட்ட விஷயங்கள்,
வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அசுபவிரயச் செலவுகளாக மாறும்.
நிறைய விரயங்கள் ஏற்படும்.

இந்த காலகட்டம் பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம் விரய செலவுகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.
கண்டிப்பாக கவனமாக இருக்க வேண்டிய காலம்.

ஒவ்வொரு மனிதருக்கும் 1 வருடம்,
1 மாதம், 10 நாள் வாழ்க்கையில் நல்ல காலங்களையும் கொடுக்கும்,
அசுப காலங்களையும் கொடுக்கும்.
அதை நாம் கவனமாக பார்த்துக் கொண்டாலே நம்முடைய வாழ்க்கை மாறும்.

வெளிநாடு செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். உங்களுடைய பெயரில் பாஸ்போர்ட் இருக்க வேண்டும்.
தேவை இல்லாமல் வீண் விரயங்கள், செலவுகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது.
கவனமாக இருக்க வேண்டும்.
பூராடம் நட்சத்திரம் 4ம் பாதம் போராட வைக்கும்.
கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *