மண மேடை-யும் வாஸ்து -வும்….

Spread the love

மண மேடை-யும்
வாஸ்து -வும்….

முகூர்த்தக்கால் நட்டு, பின் பந்தல் போட
வாஸ்து அளவு உண்டு. 32×32 அடி ..பிற
64×64 என்ற அளவிலும் பந்தல் அமைக்க
சிறப்பான அளவாகும். மற்ற அளவுகள் உண்டு. அடுத்துப் பதிவிடுகிறேன்.

பந்தல் அளவை நிலத்தில் குறிக்கிற போது ஈசானம் பாகத்தின் அளவை அரைக்கால் கூட்டி அளவிட வேண்டும்.
பந்தல் போட்டாயிற்று…!

மணமேடை எங்கு அமைக்க வேண்டும்?
பந்தலின் பிரம பாகத்தில். அதன் நீள×அகலம் அறிவோம். 96× 96-அங்குல
அளவில் அமைக்க வேண்டும். ஏன் நாம் 96 அங்குலம் அமைக்க வேண்டும்?

96-தத்துவம் குறியீடாகும். 96-அங்குலம் என்பது 8-அடியாகும். ஒரு அடிக்கு ஒரு இலட்சுமி என்று இங்கே 8-இலட்சுமி களும் மண மக்களை ஆசிவதிக்கவும்.

அ–என்ற எழுத்து தமிழ் மொழியில் 8-குறிக்கிறது. தமிழின் முதல் எழுத்து போல், மண மக்கள் எதிலும், எங்கும் முதன்மை யாகத் திகழ வேண்டும்– என்பதைக் குறிப்பால் உணர்த்தினர்.

பந்தல் உயரம் 16-அடிக்கு மேல் போகாத
படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். கூடுமான வரை, பிய்ந்து போகாத கீற்று மேய வேண்டும். மணமேடை மேற் பகுதி
பட்டுத் துணி இணைத்து கீற்றுடன் இருக்க வேண்டும்.

8×8=64. இது ஆய கலைகள் 64-ஐக் குறிகிறது. மண மேடை உயரம் 5-அங்குலம் சிறப்பு. அமரும் பலகை உயரம் 3-அங்குலம். மா,பலா அல்லது தேக்குப் பலகை(புது) யில் அமர வேண்டும்.

பலகையில் அமர்ந்த (கோவிலே சன்னதி ஆனாலும்)படிதான் திருமாங்கல்யம் சூட்ட வேண்டும். நின்றபடித் தாலி கட்டக் கூடாதுங்க..யார் சார் கேட்கிறாங்க……

பலகை இல்லை எனில் புது ஜமுக்காளம் நான்காக மடித்து, அதில் அமர்ந்து திருப் பூட்டலாம். ஜமுக்காளம் நுனியில் மஞ்சள் சற்றுத் தடவி இருக்க வேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=450381678725113&id=100012598533744

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *