வசந்தன் நாற்பது தொகுதிகள் நாற்பது

Spread the love

இன்னா நாற்பது
இனியவை நாற்பது
வசந்தன் நாற்பது
தொகுதிகள் நாற்பது

1.ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ள கிரக நிலைகள் தொலைநோக்கி கண்டுபிடிப்பதற்கு முன்னரே உள்ளதா

2.நாடி ஜோதிடம் எழுதப்பட்ட காலம் எது

3.ஓலைச்சுவடியில் புதுப்பிக்கப்பட்ட காலம் என்ன

4.சித்தர்களால் கூறப்பட்ட ஜோதிடம் அனுபவத்தால் எழுதப்பட்டதா அல்லது ஞான திருஷ்டியால் எழுதப்பட்டதா

5.ஜோதிடத்தில் பலன் கூறுவதற்கு புத்தகத்தில் உள்ளதே அனுபவத்தால் எழுதப்பட்டதா அல்லது ஆய்வினால் எழுதப்பட்டதா

6.ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் யோகம் கரணம் திதி இவைகளுக்கு பலம் எழுதப்பட்டுள்ளது அது ஆய்வினால் எழுதப்பட்டதா

7.ஜோதிடம் என்பது விஞ்ஞானம் என்றால் ஜோதிட பலன்கள் ஒரே மாதிரி ஜோதிடர்களால் பலன் சொல்ல இயலுமா

8.பூமி கிரக தூரங்களை( வானியல் அலகு) இவைகளை வைத்து தசாபுத்தி கணக்கிடப்படுகிறது என்றால் அது பிந்தைய காலகட்டத்தில் தான் வந்திருக்க வேண்டும்

9.ஞானத்தினால் அல்லது அனுபவத்தில் கண்டதை காரணகாரியம்தேடி அதன் பின் விதிமுறைகள் எழுதப்பட்டதா ஜோதிடத்தில்

10.கிரக காரகத்துவங்கள் இடத்திற்கு ஏற்றவாறு மாறுதல் கொடுக்குமா

11.காலமானம் வர்த்தமானம் இடம் பொருள் ஏவல் இவற்றிற்கு ஏற்றவாறு பலன்கள் மாறுமா

12.அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு திசா புத்தி பலன் மாறுபடுமா

13.ஒருவர் ஏதோ ஒரு கிரக நிலை உள்ள காலத்தில் சிறைச்சாலைக்கு செல்கிறார் 14 ஆண்டுகள் சிறைவாசம் அந்த 14 ஆண்டுகளில் ஏற்படும் தசாபுத்திகள் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டில் தான் வேலை செய்யுமா அப்படியானால் அந்த தசா புத்தியின் தன்மை என்ன

14.ஒருவர் ஒரு ஜாதகத்தில் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம் அவர் மறுநாள் வெளிநாடு சென்று பணி செய்தால் சம்பளம் பல மடங்கு உயர்வு அதன் காரணம் என்ன

15.ஒரு கடைவீதி என வைத்துக் கொள்வோம் அதில் ஒரு கடைக்காரருக்கு சுக்கிரதசை மற்றொருவருக்கு குருதசை இன்னொருவருக்கு சனிதசை பிறிதொருவற்கு ராகு தசை என வைத்துக்கொண்டால் அன்று ஒரு நாள் பந்து அறிவித்துவிட்டால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு விடுகிறது அப்படி என்றால் எல்லா தசாபுத்தி களுக்கும் ஒரே பலன்தானா

16.ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொரு காரகத்துவங்கள் உள்ளன அதாவது இரண்டாம் இடம் கல்வி வாழ்க்கை தனம் ஐந்தாமிடம் புத்தி என்று உள்ளது 7-ஆம் இடம் என்பது கணவன் மனைவி என்று சொல்லப்படுகிறது அந்தப் பாவம் வெளிநாட்டிற்கும் ஒரே மாதிரிதானா

17.கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு பாவ பலன் மாறுபடுமா

18.கிரகங்களுக்கும் பாவ அமைப்பிற்கும் ஏற்றவாறு இருப்பிடம் அமைகிறதே இதேபோன்று வெளிநாட்டிலும் அமையுமா

19.கிரகங்களின் சேர்க்கை சேர்க்கையும் இறைவனை நாமத்துடன் தொடர்புடையதாக உள்ளது இதை எவ்வாறு

20.கிரகங்கள் இறைவன் பரிகாரம் திட்டுகிறார்கள் பண்ண வாய்ப்பு உள்ளதா

21.மனிதனின் ஆயுட் காலம் மாறிக்கொண்டே வருகிறது ஆனால் கர்ப்ப காலம் மட்டும் மாறுவதில்லை அதன் காரணம் யாது

22.நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்த்தயாத்திரை செல்ல வேண்டுமெனில் உதாரணமாக காசி என்று எடுத்துக்கொண்டால் அங்கு சேர்ந்து வர 15 ஆண்டுகள் பிடித்தன தசா புத்தி பலன் சொல்லும்போது தீர்த்தயாத்திரை செல்வார் என்று குறிப்பிட்டால் ஆனால் தற்சமயம் இரண்டு நாட்களில் சென்று வந்து விடலாம் இந்த வேகத்திற்கு ஏற்றவாறு தசாபுத்தி மாற்றப்பட்டுள்ளதா

கிரக சுழற்சி வேகம் மாறவில்லை ஆனால் காலம் மாறுகிறது கர்ப்பகால மாறவில்லை இதில் மாறுபாடு செய்யப்பட்டுள்ளதா பழைய கதை தானா

23.நடப்பது நடந்தே தீரும் என்றால் ஜோதிடம் ஏன் பார்க்க வேண்டும்

24,சில ஜாதகங்களில் வாக்கிய பஞ்சாங்கப்படி பலன் சரியாக வருகிறது சில ஜாதகங்களில் திருக்கணிதப்படி பலன் சரியாக வருகிறது எதை எடுத்துக் கொள்வது

25.வாஸ்து என்பது குறிப்பிட்ட காலகட்டம் தான் வேலை செய்யுமா உதாரணம் அரண்மனை பல வாஸ்து நிபுணர்களால் அமைக்கப்பட்டது இப்பொழுது மன்னர்களும் இல்லை மன்னர்களுக்கு மானியமும் இல்லை

26.வாஸ்து என்பது தனிநபருக்கு உரியதா அல்லது பொதுவானதா

27.ஒரு ஜாதகத்தில் 4 ஆம் பாவத்திற்கு ஏற்றவாறுதான் வீடு அமையும் ஒன்றுக்கு மேற்பட்டோர் இருக்கும்போது வாழ்க்கை எப்படி அமையும்

28.பத்து பொருத்தம் பார்த்தால் மட்டும் போதுமா ஜாதக பொருத்தம் இருந்து திருமண நாள் சரியாக அமைய வேண்டுமா

29.ஒருவருடைய ஜாதகம் என்பது அன்றைய பிறந்த நேர கோச்சாரம் தானே

30.பழைய ஜோதிடத்தில் பழமொழிகள் பயன்படுமா

31.பூராடம் நூலாடாது
32.மகம் ஜெகம் ஆளும்
33.ஆனி மூலம் அரசாளும்
34.சித்திரை அப்பன் தெருவிலே
35ஆடோடு மோதாதே
36.இடபத்தை நட்பு கொள்
37.அவிட்டத்தில் குழந்தை பிறந்தால் தவிட்டு பானை பொன்
38.உத்திரத்தில் குழந்தை பிறந்தால் ஊருக்கு வெளியில் பத்திரம் முடியும்

39.ஜோதிடத்தில் உள்ள பழைய பாடல்கள் எல்லாம் இன்னாளில் பலன் கிடைக்குமா
40.புதிய கண்டுபிடிப்புகளுக்கு பழைய பாடல்கள் விளக்கம் உள்ளதா

உதாரணம்
Pen drive ,hard disk, cloud computing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *