மகரம்

Spread the love
 jothidam tv1
பொது பலன்;
நிதானத்தோடு செயல்பட்டால் நினைத்ததை முடிக்கலாம் என்று சொல்லும் மகர ராசி அன்பர்களே!

இந்த ஆண்டில் உங்கள் ராசியாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். ஆண்டுக் கோளான குரு பகவானும் 7-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாளக்கூடிய வாய்ப்பும், அதனால் லாபமும் அபிவிருத்தியும் பெருகக்கூடிய அமைப்பும் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களும் கௌரவமான பதவிகளையும், ஊதிய உயர்வுகளையும் பெறுவார்கள். சிலருக்கு நினைத்த இடத்திற்கு மாற்றமும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் அதாவது ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் குரு பகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படுமென்றாலும் சனி 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கமுடியும். சர்ப்ப கிரகங்களான கேது 3-ஆம் வீட்டிலும், ராகு 9-லும் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பிரிந்துசென்ற உறவினர்களும் ஒற்றுமை பாராட்டுவார்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். சனியின் பலமான சஞ்சாரத்தால் இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாகவே இருக்கும்.

உங்கள் ஜென்ம ராசியாதிபதியான சனி பகவான் லாபஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உத்தியோக நிலையில் உயர்வான பலன்களை அடைவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் உத்தியோகத்தில் ராஜ மரியாதை கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறனும், செயலாக்கமும், அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடிவரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையுமென்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் ஆதாயம் கிட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *