
இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் ராசியாதிபதி குரு பகவானும் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராசிக்கு 10-ல் ராகுவும், 4-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். இது அவ்வளவு சாதகமான அமைப்பில்லை. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மேற்கூறிய பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தாலும் உங்களின் உழைப்பாலும் எதையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி நடைபோடுவீர்கள். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் ராசியாதிபதி குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் சனியால் ஏற்படும் பிரச்சினைகள் யாவும் ஓரளவுக்கு குறையும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகளும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலன்களை அடைய முடியும். புத்திரர்களால் ஒருசில மனசஞ்சலங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் சிறுசிறு பிரச்சினைகளையும் சங்கடங்களையும் ஏற்படுத்தும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் வீண் அலைச்சல், புதிய இடத்தில் உணவு முறைகளோடும், உடன்பணிபுரிபவர்களிடமும் ஒத்துப்போகமுடியாத நிலை உண்டாகும். என்றாலும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் குரு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவு உங்களை மேலும் உற்சாகக் கடலில் ஆழ்த்தும் என்றாலும் வேலைப் பளு குறையாது. நிறைய உழைக்க வேண்டி வரும்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளும் தொழிலாளர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாகச் செயல்படமாட்டார்கள். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் விரயத்தை ஏற்படுத்தும். சனி இந்த வருடம் சாதகமின்றி சஞ்சரித்தாலும் வரும் ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் உங்களது பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். ஓரளவுக்கு லாபமும் கிட்டும். போட்டிகளையும் சமாளித்து விடுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் கிட்டும்.