துலாம்

Spread the love
பொது பலன்
நல்ல தகவல்களையே நாளும் கேட்க வேண்டுமென்று விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

உங்களுக்கு விட்ட குறை தொட்ட குறையாக இந்த வருடம் ஏழரைச் சனியில் பாதச்சனி (குடும்பச் சனி) தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி ஆண்டுக்கோளான குரு பகவானும் முற்பாதியில் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஆண்டின் முற்பாதியில் நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்படுவதே நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது, ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போன்றவை நன்மையளிக்கும். ஏழரைச் சனி தொடர்ந்தாலும் சனி உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதியாகி யோககாரகன் என்பதால், பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவானும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையத்தொடங்கும். எடுக்கும் முயற்சிகளில் ஏற்றங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். அசையும்- அசையாச் சொத்துகள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டி பொறாமைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல்போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதமாக அமைந்தாலும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண் பிரச்சினைகளில் சிக்காமல் விலகிக்கொள்ளலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் ஆண்டின் முற்பாதி வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடன் பணிபுரிபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய காலமென்பதால் வேலைப் பளுவும் சற்று அதிகரிக்கும் என்றாலும் வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் லாப ஸ்தானத்திற்குச் செல்ல உள்ளார். இக்காலங்கள் ஓரளவுக்கு முன்னேற்றத்தை உண்டாக்கும். உங்களின் திறமைகளைப் பாராட்டும் வகையில் உயரதிகாரிகள் நடந்து கொள்வார்கள். ஊதிய உயர்வுகளும் தாராளமாக இருக்கும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஏற்ற இறக்கமான பலன்களையே அடையமுடியும். உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும் ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பென்பதால் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் மட்டுமே போட்டிகளை சமாளித்து அபிவிருத்தி யைப் பெருக்கிக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு லாப ஸ்தானத்திற்கு மாறுதலாக விருப்பதால் ஓரளவுக்கு உங்களது பிரச்சினைகள் குறைந்து வெற்றிப் படியை எட்டிவிடுவீர்கள். புதிய வாய்ப்புகளும் தேடிவரும்.images (11)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *