அட்சய லக்ன பத்ததி மருத்துவ ஜோதிடம்(முக பாவனை)

Spread the love

முக பாவனை ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியத்துவம், அதனுடைய உட்கூறுகள் என்ன, என்பதை அமெரிக்காவை சார்ந்த பால் ஹெல்ப் மேன் என்ற மன இயல் அறிஞர், உளவியல் அறிஞர் என்ன பண்றாருனா இதைப்பற்றிய உடல் கூறுகள், நம்முடைய புன்னகைக்கும், நம்முடைய உடல் அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் எவ்வளவு ஒத்துப் போகிறது. அதாவது உடல் அசைவுகளுக்கும் புன்னகைக்கும் உள்ள வேறுபாடு என்ன? எவ்வளவு தூரம் ஒத்துப்போகிறது? பொய்யா சிரிக்கிறார்களா, இல்லை ஆழ்மனதிலிருந்து ஆழ்ந்து சிரிக்கிறார்களா, இல்லை முகத்திற்கும் அந்த சிரிப்பிற்கும் ஒத்துப் போகிறதா, என்று சொல்லி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முக பாவனைகளை ஆய்வு செய்கிறார். உணர்ச்சியே அட்லஸ் என்ற வார்த்தையை அவர் குறிக்கிறார். அது சம்பந்தப்பட்ட ஆய்வுகளை முன்னோடியாகத் திகழ கூடிய பால் ஹெல்ப் மேன் என்பவர் புன்னகை உடைய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அது எதார்த்தமான தோற்றத்தைக் குறிக்கணும் ,எதார்த்தமாக உருவாகணும், பொய்யாக சிரிக்கும் பொழுது உடல் மொழி எப்படி இருக்கு என்பதை ஆய்வு செய்திருக்கிறார். அதை பற்றிதான் இன்று பேசப் போகிறோம். நம் வாழ்க்கையில் எல்லோருக்கும் நோய் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கட்டும், கடன் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும், எல்லாம் பிரச்சனைகளாக பேசும் பொழுது அது எந்த அளவிற்கு யோகம் கொடுக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இதற்கெல்லாம் ஒரு மருந்து நம்முடைய ஆழ்ந்த சிரிப்பு. அதுதான் புன்னகை. அதாவது நம்முடைய ஆழ்மனதில் இருந்து எதார்த்தமாக சிரிப்பது. ஒருவர் நகைச்சுவை சொல்லும்பொழுது அதில் சிரிப்பு இருக்காது ஆனால் அவருக்காக நாம் சிரிக்கணும், அதாவது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கும்னா வெளியில் வாய் சிரிப்பு தோற்றத்தை காமிக்குமே தவிர மனதில் சிரிப்பு இருக்காது. ஆழ்ந்த சிரிப்பு இருக்கும்பொழுது கண்டிப்பாக நோய்களுக்கு மருந்தாகும். நம்முடைய வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு நகைச்சுவை பார்க்கும் பொழுது தன்னை அறியாமல் சிரிப்போம். ஏதாவது ஒரு நகைச்சுவை பார்த்திருப்போம், ஏதாவது ஒரு மொழியை கேட்டிருப்போம், சின்ன குழந்தை ஏதாவது ஒரு விஷயம் பேசி இருக்கும், இல்லை சிரித்திருக்கும் குழந்தைகளின் சிரிப்பு பார்க்கும்பொழுது ஆனந்தம் வரும் பாருங்கள் அதுதான் புன்னகை. அந்தப் புன்னகை தான் நம்முடைய வாழ்க்கையில் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும். உதாரணமாக நம் கண்ணாடி முன் நின்று சிரித்து பாருங்கள், அது பொய்யான சிரிப்பாக இருக்கும். இதுவே ஒரு நகைச்சுவை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது எதார்த்தமாக சிரிப்போம், நாலு பேர் இருக்கும்போது சிரிக்க மாட்டோம், இதுவே எங்காவது தனியாக இருக்கும் பொழுது நகைச்சுவை பார்த்தால் நம்மை அறியாமல் சிரிப்போம். நம்மை அறியாமல் இந்தப் புற சூழ்நிலைகள், அதுதான் இந்த மனிதர்களுடைய சிரிப்பு அலைகளை கட்டுப்படுத்தும். உங்கள் வாழ்க்கையில் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஏதாவது ஒரு நாள், அந்த நாளில் இன்றைக்கு யாரைப் பார்த்தாலும் சந்தோஷமாக சிரிக்கணும், வணங்கனும், நன்றி சொல்லனும், வாழ்த்துக்கள் சொல்லணும், என்று காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் பார்க்கும் பொழுதெல்லாம் சிரியுங்கள். உங்களை கேள்வி கேட்டு இருப்பாங்க, உங்களை கோபப்படுத்தி இருப்பாங்க, உங்களைப் புகழ்ந்து இருப்பாங்க, எல்லாவற்றிற்கும் உங்களுடைய மருந்து, உங்களுடைய விடை சிரிப்பாக இருக்கட்டும். அந்த ஒரு நாள் உங்கள் வாழ்க்கையை மாற்றும். அப்படி ஒரு நாள் இருந்து பாருங்கள். அன்றைய இரவில் உங்கள் மனம் ஒரு 100 சதவீதம் ஒரு ஆழ்ந்த உறக்கமும், ஒரு ஆழ்ந்த சந்தோஷமும், என்றைக்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும். தொல்காப்பியர் 8 வகைப்பாடுகள் வகைபடுத்தி உள்ளார். தொல்காப்பியர் என்ன சொல்கிறார் என்றால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான நகைச்சுவை,சந்தோஷம், இன்பம் இப்படி நிறைய வகைபடுத்தக் கூடியதில், முதலில் சொல்லக்கூடிய உணர்வாக நகைச்சுவையை தான் சொல்கிறார். சிரிப்பை தான் சொல்கிறார். அதனால் நம்முடைய வாழ்க்கையில் சிரிப்புதான் அடுத்தகட்ட இலக்கை நோக்கி பயணிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக மாறும் என்பதை நமக்கு புரியவைக்கிறார். நம்முடைய மூளை ஒரு எதார்த்தமான சிரிப்பிற்க்கும், பொய்யான சிரிப்பிற்க்கும் இந்த இரண்டு வகையான சிரிப்புகளை, மூளை எளிமையாக புரிந்துகொள்ளும். நாம் எதார்த்தமாக சொல்வோம். இது உண்மையாக சிரிக்கிறோம், இது போலியாக சிரிக்கிறோம் என்று ஆனால், இந்த மூளைக்கு போலியான சிரிப்புகளையும் உணர கூடிய தன்மை உள்ளது. நம் உடலில் இருக்கக்கூடிய தசைநார்கள் ஒரு இறுக்கமாக இருக்கு, இல்லை இருக்க மற்று இருக்கு, உதாரணமாக கை, கால், இல்லை நம் மூளையின் பின்பகுதியில் தசைநார்கள் இருக்கமாக இருந்தால் எதார்த்தமான சிரிப்பு வராது. அதேபோல் தசைநார்கள் இறுக்கமற்று இருக்கும்பொழுது அந்த உணர்வுகள் சந்தோஷமான சிரிப்பு, ஆழ்ந்த சிரிப்பு எதார்த்தமாக வரும் அந்த சிரிப்பு. இந்த மாதிரி இருக்கும் பொழுது யாருக்கு அந்த அமைப்பு வரும் என்றால் நாம் கிரக ரீதியாக பார்க்கணும், சந்திரன் என்ற கிரகமும், சுக்கிரன் என்ற கிரகமும், இது பலமாக இருக்கணும். இந்த இரண்டு கிரகங்களும் குருவோட தன்மைகளாக எப்படி இருக்கும் என்பதை பொறுத்தி பார்க்கும் பொழுது தான் நம் மூளையினுடைய செயல்பாடுகளுக்கும், நம் தசைநார் உடைய செயல்பாடுகளுக்கும், நாம் விளக்கத்தை காணமுடியும். இல்லை சார் , சந்திரன் சுக்கிரனுக்கு 6,8 ஆக இருக்கு, சந்திரனுக்கும், குருவுக்கும் சஷ்டாஷ்டகமாக இருக்கு என்றால் அதனுடைய தசைநார்கள் எப்போதும் ஒரு இறுக்கத்தை கொடுக்கும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த உணர்வுகள் மாறும் பொழுது கோட்சார கிரகங்கள் வைத்தும் நாம் பலன் சொல்லலாம். கண்டிப்பாக சந்திரன் சுக்கிரன் இருக்கும்பொழுது அந்த தசை நார்கள் ஒரு யோகமான ஒரு ஆனந்தமான சிரிப்பு வரும்.

#அட்சய_லக்ன_பத்ததி_Alp_astrology_method

#alp_astrology_software_free_download

#download_ALP_Astrology

#alp_Astrologer

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/MG-2oVRig5E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *