2022 ஆம் ஆண்டு யோகமான காலமாக அமையும்

Spread the love

அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாள், வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒவ்வொரு நாளும் ஒரு ஜாதகத்தில் யோகமான, அவ யோகமான விஷயங்களைப் பற்றி பேசுகிறோம். அந்தக் காலத்தில் பெண்களுடைய படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் திருமணம் என்பது கடந்த காலத்தில் அதிகமாக செய்தார்கள். அவர்களுடைய சூழ்நிலை அப்படி அமைந்து இருந்தது, அந்த திருமணம் நடந்தது. ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்கள் காதலித்து திருமணம் செய்துடுவாங்க, இல்லை பையன் காதலித்து திருமணம் செய்து கொள்வான், இல்லை பையனுக்கு படிப்பு இல்லை, இப்படி ஒரு சில காரணங்களுக்காக இளம் வயதிலேயே திருமணம் நடத்துகிறார்கள். 18 to 21 வயதிற்குள்ளேயே திருமணம் நடக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு யோகமான காலம் உண்டு. எல்லாரும் நல்லவர்களாகவும் இருக்க மாட்டாங்க, கெட்டவர்களாகவும் இருக்க மாட்டாங்க அவர்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலை கால கிரக நிலைகள் இந்த உடலும் மனமும் பேசும். நிறைய நிகழ்வுகள் நீங்கள் பார்க்க முடியும். ஒரு 10 வருடத்திற்கு பிறகு கெட்டவராக இருப்பவர் இப்பொழுது நல்லவராக இருப்பார். இப்பொழுது நல்லவராக இருப்பவர் 10 வருடத்திற்கு பிறகு கெட்டவராக இருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகள் இப்படி மாற்றத்தை ஏற்படுத்தும். எண்ணம் போல் வாழ்கை என்று சொல்வோம். இந்த எண்ணம் உதிப்பதும் கிரகங்களிடம்தான். இதை வெளியில் இருந்து யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இந்த பாதையில் போனால் நல்லது, இந்த பாதையில் போனால் கெட்டது. நம்மிடம் இரண்டு மனங்கள் உள்ளது ஒன்று சந்திரன், மற்றொன்று குரு, சந்திரன் என்பது நான் ஆசை படுவது, ஆனால் அதன் பின்னர் ஆசைகள் நிறைவேறினால் என்ன பிரச்சனை? ஆசைகள் நிறைவேறாவிட்டால் என்ன பிரச்சனை? ஒரு பையன் படத்திற்கு போகணும் என்று ஆசைப்படுகிறான் இது சந்திரன். ஆனால், படத்திற்கு சென்றால் அப்பா அடிப்பாங்க இது குரு. ஒரு ஜாதகத்தில் குரு எப்பவும் பலப்படனும். குரு பலப்பட்டால் தான் அந்த ஜாதகம் யோகமாக மாறும். ஏன்னா வழிகாட்டக் கூடிய நபர் அப்பாவாக, அம்மாவாக, உறவினர்களாக, ஒரு அந்தணராக இல்லை, கோவிலில் இருக்கக்கூடிய ஒரு நபராக இல்லை வயது முதிர்ந்த தாத்தா பாட்டிகள் ,இல்லை ஜோதிடர்கள் இல்லை ஆசிரியர்கள் இப்படி ஏதோ ஒரு ரூபத்தில் குருபகவான் வழிகாட்டுவார். இப்படி நம்முடைய வாழ்க்கையில் யாரோ ஒருவர் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள். அவர்கள் எல்லாரும் நம்முடைய குரு, நம்முடைய வாழ்க்கையில் வழிகாட்ட வந்த இயற்கை படைத்த ,இயற்கை நமக்கு கொடுத்த மிகப்பெரிய வரம் அவர்கள்தான். அவர் என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது அப்படின்னு சொல்வோம். அவர் சொல்வதை நான் கேட்பேன் என்று இப்படியும் சொல்லுவோம். கண்டிப்பாக ஒருவர் சொல்லிவிட்டார் நான் கேட்பேன் என்று சொல்வோம், இதில் தான் நம்முடைய குருபகவான் எங்கு இருக்கு என்பதை உணர வேண்டும். கண்டிப்பாக குரு பல படவில்லை என்றால் அந்த ஜாதகத்தில் எதை சொன்னாலும் கேட்கமாட்டார்கள் கேட்கிற மாதிரி நடிப்பார்கள் ஆனால், அதை கேட்க மாட்டார்கள். உங்கள் ஜாதகத்தில் அட்சய லக்னத்திற்கு 6, 8, 10, 12 ல் குரு இருந்தால் கண்டிப்பாக நீங்கள் இயற்கையை பலமாக வழிபாடு செய்யுங்கள். ரமண மகரிஷியை வழிபாடு செய்யுங்கள். ஆத்மார்த்தமாக நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு எண்ணங்களுக்கும், செய்யக்கூடிய செயல்களுக்கும், நான் பிரதிபலனாக ஏதோ ஒன்றை கொடுத்தோ அல்லது இழந்தோ ஆக வேண்டும். அது நல்லதாக இருந்தால் சந்தோஷமாக எனக்கு வரும், அதுவே கெட்டதாக இருந்தால், இல்லை ஒரு செயலாக செய்தால் அது ஏதோ ஒரு ரூபத்தில் கண்டிப்பாக வரும். யாருக்குத் தெரியப்போகிறது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று நீங்கள் இப்படி நிறைய நினைக்கலாம் கண்டிப்பாக இந்த குருபகவான் ஏதோ ஒரு ரூபத்தில் உங்களை சிக்க வைப்பார். நன்றி.

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_1pdf

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_3

#அட்சய_லக்ன_பத்ததி_பாகம்_2

#ALP_astrology_contact_alpastrologynumber_9786556156

https://youtu.be/xx9XUg32D4Y

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *