திருப்பதி சென்று வந்தால் திருப்பம்

Spread the love

12 ராசிக்காரர்களும் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் உண்டாகுமா?

அப்படிதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் சில பேருக்கு மனதில் அழுத்தம் இருக்கும்.
கோயிலுக்கு போயிட்டு வந்து தான் பிரச்சனை,
கோயிலுக்கு போய் தான் நடந்தது,இதெல்லாம் உண்மைதான்.
நடக்கிறது.
ஆனால், சில கரும பயன்கள், சில விஷயங்கள் அனுபவித்து கரைத்து பிரச்சினைகளை முடித்து என்னுடைய மனதில் உள்ள அழுக்குகள், என்னுடைய உடலில் உள்ள அழுக்குகள், வெளி வந்தால்தான் அது முழுமை அடையும்.

என்னுடைய வெளி மனம் நான் அந்த கோவிலுக்கு போனேன் ,அந்த கோவிலுக்கு போனதால்தான் பிரச்சனை, விரயம் என்று சொல்வார்கள் ஆனால் ஏதோ ஒரு காரணம் உள்ளுக்குள் இருக்கும்.

ஆனால் சில ராசிகள் அங்கு போனால் உண்மையிலேயே பாதிப்பு உண்டு.
12 ராசிகளும் போய் அந்த கோவில் நடந்தால் அந்த நிகழ்வு எப்படி இருக்கும் என்றால் சில தவறுகள் செய்து இருப்பார்கள் இதற்கான தண்டனை இன்னும் உனக்கு ஆறு மாதம் இருக்கு அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.
என்பதுதான் கடவுள் சொல்ல கூடிய விதி.அப்பொழுதுதான் ஆரோக்கியமான நிகழ்வாக அமையும்.

தப்பு செய்துவிட்டு கோவிலுக்கு போகிறேன் ,அதை கடவுள் மன்னித்து விட்டால் நான் அடுத்த தப்புக்கு ரெடியாகி விடுவேன்.
ஏதோ ஒரு காரண காரியங்களோடு தொடர்புடையது தான் இந்த நிகழ்வு. கடவுளுக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை, ஆனால் நாம் கேட்க கூடிய முறை தவறாக இருக்கும். அதனால்,
சில நட்சத்திரங்கள் ,சில கிரகணங்கள், சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு.

உதாரணமாக ALP மிதுன லக்னத்தில் ஒருவர் இருக்கார்.
கண்டிப்பாக அவர் திருப்பதி போகலாமா? போகலாம்.
சிம்ம ராசி சிம்ம லக்னத்தில் ஒருவர் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்று நேராக அங்க போயிடுவாங்க.

அதேபோல் துலாம் ராசியில் ஒரு நடிகையோ, நடிகரோ இருந்தால் நீங்கள் திருப்பதி போயிட்டு வந்தால் ஒரு மாற்றம் கிடைக்கும்.
அதுவே ரிஷப ராசியில் போனால் கொஞ்சம் அழுத்தமாக இருக்கும்.
இது இரண்டுமே சுக்கிரன் ராசிகள்.
ஆனால் துலாம் ராசிக்கு இருக்கக்கூடிய யோகம் ரிஷப ராசிக்கு இருக்காது.

விருச்சிக ராசியில் போனால் அப்பொழுதுதான் வீடு வாங்கணும், சொத்து வாங்கணும்,என்னுடைய தொழில் பெரிதாக அமையனும் என்று வேண்டி கொண்டு போனாங்கனா அவங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கொடுத்து விடவும்.

நான் சந்தோஷமாக இருக்கணும் ஆனந்தமாக இருக்கணும் என்று வேண்டிக் கொண்டு போவார்கள். ALP தனுசு லக்னம் தனுசு ராசி,
அட்சய லக்னம் தனுசு லக்னம் போகும்போது திருப்பதி போய் கும்பிடுங்கள்,நினைத்தது எல்லாம் நடக்க ஆரம்பிக்கும்.

அதேபோல் மேஷ ராசி மேஷ லக்னம் ALP லக்னமாக வரும்போது
எதிர்பாராத சந்தோஷம் ,திருமணம் நடக்கவில்லை, குழந்தை,புகழ், அதிகாரம், யோகம், வேலை எல்லாம் கிடைத்துவிடும்.

மத்த ராசிகள்எல்லாம் தேவையில்லாத அழுத்தங்களையும், பிரச்சனைகளையும்,கழிக்கக்கூடிய காலமாக தான் அமையும்.
சில பேர் சொல்லுவாங்க அங்கு போகும் பொழுது கார், பஸ் பஞ்சர் ,
பஸ் கிடைக்கவில்லை , ரயில் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் எல்லாம் நான் சொல்லாத இந்த ராசிகள் உள்ளவர்களுக்கு இது இருக்கும்.

மிருகசீரிஷம் 3, 4 பாதம், திருவாதிரை 1, 2, 3, புனர்பூசம் 1, 2, 3, இந்த நட்சத்திரக்காரர்கள் திருப்பதி ஏழுமலையானை பலமாக பிடித்துக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

கண்ணாடி முன் நின்று பேசி பாருங்கள், உங்கள் மனசாட்சி உங்களுடன் பேச ஆரம்பிக்கும்.அதுபோல் ஒரு நிகழ்வு, 6 மாதத்திற்கு முன் செய்த தவறை,
6மாதத்திற்கு பின்பு நான் புரிந்து கொள்வேன்.
அப்பொழுது என்னுடைய இந்த கர்ம கழிந்து விடும்.

இப்பொழுது ALP லக்னம் மிதுன லக்னம் வரும்பொழுது நேராக திருப்பதி ஏழுமலையான் பெருமாள் கோவிலை சரணாகதி அடைந்தால் உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ பேர், புகழ், பணம், அதிகாரம் எல்லாமே கொடுத்து விடுவார்.
கண்டிப்பாக யோகம் உண்டாகும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *