அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு லக்னம் 10

Spread the love

வணக்கம்

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு லக்னம் 10 வருடத்திற்கு
மேஷ லக்னத்திற்கு பார்த்தால் 6ம் பாவக அதிபதி அதாவது நோயினுடைய தன்மை, ஒரு டாக்டர் கிட்ட போனா Blood test எடுத்து பார்ப்போம் அதாவது இந்த நோயின் உடைய தன்மை இவ்வளவு இருக்கு என்று பகுத்து பார்த்தல்.அதாவது ஒரு மருந்து கொடுக்கும் முன்னாடி பகுத்துப் பார்ப்பாங்க.

அதுபோல் ஒரு ஜாதகர் ஒரு ஜோதிடரிடம் வரும் பொழுது இந்த காலகட்டத்தில் புதன் 6ம் அதிபதியாக லக்னத்தோடு தொடர்பில் இருந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, ரத்தம் சம்பந்தப்பட்டதில் அழுத்தம் இருக்கு என்பதை முடிவு பண்ணனும்.
என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடித்தால்தான் 10 வருடத்திற்கு பிரச்சனை இருக்கா, இல்லை 4 வருடம், 5 மாதம் ,10 நாள் பிரச்சனை இருக்கா என்பதை மேலோட்டமாக பார்க்கும் பொழுது,
மேஷ லக்னத்தில் புதன் இருக்கக்கூடாது ,அப்படி மேஷ லக்னத்தில் புதன் இருந்தால் இந்த 10 வருடத்திற்கு ஜாதகருக்கு நோய்.
ஏதாவது ஒரு பிரச்சனை இவருக்கு வரும்.
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை,தலைவலி, மூக்கு, சைனஸ் சம்பந்தப்பட்டது, மூளை அழுத்தம் சம்பந்தப்பட்டது,சில பேருக்கு மூளை heat னால் நிறைய பேருக்கு ரொம்ப உருக்கி எடுக்கும்.நரம்பு சம்பந்தப்பட்டது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்,கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும்.
10 வருடத்திற்கும் இருக்கும் சில பேருக்கு தெரியும் சில பேருக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ரொம்ப அமைதியாக இருக்கனும்,ரொம்ப யோசிக்க கூடாது.
நடக்காத நிகழ்வுகளை நடக்கனும், நடக்கனும்னு இவர்களை அறியாமலே நிறைய நிகழ்வு போராட்டத்தை குறிக்கும்.

ரிஷப லக்னத்திற்கு சுக்ரன் , லக்னாதிபதி லக்னத்தில் இருக்கக்கூடாது.
நீங்கள் என்ன பண்ணாலும் சரி ,10 வருடத்திற்கு நோய் இருக்குமானா? வெவ்வேறு வகையில் வரும்.
6 மாதத்திற்கு உடம்பு வலிக்கும், 6 மாதத்திற்கு அலர்ஜியாக இருக்கும்,
6 மாதத்திற்கு மருத்துவ செலவு கை வலி, கால் வலி, மேல் வலி,தலையில் முடி கொட்டுவது, இப்படியே இந்த 10 வருட காலத்திற்கும் ஏதாவது ஒரு நோயை கொடுத்து விடும்.
அதனால் மேஷ லக்னத்திற்கு புதன் எப்படி இருக்க கூடாதோ அதேபோல் ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் இருக்கக் கூடாது.

மிதுன லக்னத்திற்கு செவ்வாய் லக்னத்தில் இருக்கக் கூடாது.

அதேபோல் கடக லக்னத்திற்கு குரு உச்சமாக கூடாது. கடக லக்னத்திற்கு உச்சமானால் கை கால் மேல் எல்லா இடத்திலும் கொழுப்பு கட்டிகள் வரும்.
எப்பொழுதும் கொழுப்பு சம்பந்தப்பட்டது கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

அதேபோல் சிம்ம லக்னத்திற்கு சனி பகவான் லக்னத்தில் இருக்கக் கூடாது.

கன்னி லக்னத்திற்கும் சனிபகவான் லக்னத்தில் இருக்கக் கூடாது.

துலாம் லக்னத்திற்கு குரு பகவான் இருக்க கூடாது.

விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் இருக்க கூடாது .

தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் இருக்கக் கூடாது.

மகர லக்னத்திற்கு புதன் இருக்கக் கூடாது.

கும்ப லக்னத்திற்கு சந்திரன் இருக்கக்கூடாது

மீன லக்னத்தில் சூரிய பகவான் இருந்தால் 10 வருடத்திற்கு நீங்கள் ஒன்று கடன் ஆகணும்,இல்லை வழக்கு வரணும், இல்லை நோய் வரணும் இதில் ஏதாவது ஒன்று வரணும்.
இதில் முதன்மையாக நோய் அதிகமாக பாதிக்கும்.
இந்த 12 லக்னத்தில், உங்கள் லக்னத்தை ஆய்வு செய்து பாருங்கள்.

இப்படி வந்தால் அதை தடுக்க முடியுமா என்று கேள்வி வரும்.

ஒரு மருத்துவமனை போனால் அங்கு மருந்து மாத்திரைகள் இல்லாமல் ஏன் மருத்துவமனை போறோம்.
மருந்து மாத்திரை என்பது பரிகாரம் தான்.
நோய் வந்தால் அதை தடுப்பதற்கான வழி என்ன,இதை ஏதாவது ஒரு ஜோதிடரிடம் போகும் போது கண்டிப்பாக ஏதாவது ஒரு பரிகாரம் இருக்கும்,அவங்க சொல்ற பரிகாரத்தை அதை சரியாக செய்ய வேண்டும்.
ஆனால் பரிகாரத்தை யாரும் செய்வதில்லை,

இனிப்பு, புளிப்பு சாப்பிட்டால் உடம்பு வலிக்கும்.
நிறைய காரம், புளிப்பு சேர்ந்தால் மேல் வலிக்க ஆரம்பிக்கும்.
இனிப்பு சம்பந்தப்பட்டால் நிறைய மேல் வலிக்கும்.
அதே போல் நிறைய யோசிக்க வைக்கும்,
அப்போ இந்த உணவுகள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டிப்பாக 10 வருடத்திற்கு நோய் வரும் அதனால் கவனமாக இருங்கள்.

பரிகாரம்:

உதாரணமாக லக்னத்தில் உங்களுக்கு மேல் வலிக்குதுனா இனிப்பு சம்பந்தப்பட்ட பொருளை முழுமையாக குறைத்து விடனும்.

இதுவே சிம்மம் லக்னத்தில் சனி இருந்தால் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை தொடவே கூடாது.
கடக லக்கின காரர்களும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை தொடக்கூடாது சிம்மம் கடகம் லக்னக்காரர்கள் தன்னை அறியாமலேயே எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை சாப்பிடுவார்கள்.
காரம், உப்பு, புளிப்பு, இனிப்பு இந்த 4 விஷயங்களில் நீங்கள் கட்டுப்பாடாக இருந்தால் நோய் சம்பந்தப்பட்டது வரவே வராது.
இப்படி இருந்தால் சந்தோஷமாக வாழலாம்.
நோய்க்கு காரணம் யாருமில்லை,ஜாதகர் தான்.
ஆனால் நீங்கள் மாறலாம்.இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் இது எல்லாத்தையும் குறைத்துக் கொள்ளலாம்.

இருக்கக்கூடிய காலத்தில் சம்பாதிப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷம் சம்பாதித்ததை சேமிப்பது அவசியம். சேமிப்பு என்பது நீங்கள் விரயம் பண்ணாமல் இருந்தாலே அதுவே சேமிப்பு.விரயம் என்பது மருத்துவ செலவு.

இவர்கள் சாப்பிடாமல் தானம் கொடுக்கலாமா?

ரிஷப லக்னத்திற்கு Sweet தானம் கொடுக்கனும்.

மிதுனலக்னத்திற்கு Mixer சம்பந்தப்பட்டது தானம் கொடுக்கனும்.

சிம்ம லக்னத்திற்கு தயிர் சாதம் தானம் கொடுக்கணும். தானம் கொடுப்பது நல்லது. அதைவிட நமக்கு நாமே உணவில் குறைத்துக் கொண்டால் தானம் கொடுக்க வேண்டியது இல்லை.

உங்கள் லக்னத்தை பதிவு செய்து பாருங்கள் google Play Store ல்
ALP Astrology என்ற மென் பொருள் உள்ளது.
அதில் பதிவு செய்து பாருங்கள்.

நன்றி.

 

|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *