உங்கள் ராசிக்கு பணவரவு எப்படி இருக்கும்

Spread the love

 

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

இன்றைக்கு நிறைய பேர் கேட்கக்கூடிய கேள்வி எனக்கு எப்பொழுது எல்லாம் வருமானம் வரும்.

 

பொதுவாக அட்சய லக்னத்தில் 2ம் வீடு வருமானத்தை தரக்கூடிய வீடு.

உதாரணமாக கன்னி லக்னம் ஒருவருக்கு அட்சய லக்னமாக போனால்,

வருமானத்தை தரக்கூடிய கிரகம் சுக்கிர பகவான்.

சுக்கிரன் இருக்கக்கூடிய நிலையை பொருத்துதான் வருமானம் அந்த 10 வருடத்திற்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இப்ப சுக்கிரன் கன்னி லக்னம் வரக்கூடிய காலகட்டத்தில் சுக்ரன் நல்லா இருந்தால் வருமானம் நிறைய தருவார். அதனால் இந்த 10 வருடம் இவர்களுக்கு சிறப்பான பலனை தரும்.

அந்த கிரகத்தின் உடைய தன்மையை பொருத்தும் அந்த வருமானத்தை எடுத்துக்க முடியும்.

சுக்ரன் என்றால் இனிமையான கிரகம்,அதனால் எல்லா சுபபோகங்களையும் அந்த குடும்பம் மூலமாக வருமானத்தை கொடுக்கும்,

வருமானத்தை ஏற்படுத்திவிடும்.

 

2ம் வீடு என்பது வருமானம் மட்டும் இல்லை நம்முடைய பேச்சினால்தான் எந்த ஒரு நன்மைகளும் நம்மை தேடி வரும்.

2ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் ரொம்ப இனிமையாக பேசுவாங்க.அவங்களுடைய பேச்சிலேயே அவர்களுக்கு தேவையானது எல்லாரும் பண்ணி கொடுத்துடுவாங்க.

அதில் வருமானம் மட்டும் இல்லை அவங்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லா செயல்களும் வாக்குவன்மையால் கிடைத்து விடும்.

 

சுக்ரன் 3ம் வீட்டில் இருந்தால் வருமானத்திற்கான முயற்சிகள் மட்டும் இந்த காலகட்டத்தில் எடுக்க முடியும்.ஏன்னா? இந்த வீட்டிற்கு வருமானம் என்பது 12-ம் வீடாக போகும்.இந்த 10 வருட காலமும் வருமானத்திற்கான முயற்சிகளில் மட்டும் தான் ஈடுபட முடியும்.

முயற்சி செய்து அந்த வருமானம் அவருக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்றால் இந்த லக்னாதிபதி புதன் எங்கு இருக்கிறார் என்பதை பொறுத்துதான் இந்த முயற்சி அவருக்கு பலனாக மாறுமா?என்பதை

எடுத்துக்கொள்ள முடியும்.

எந்த லக்னமும் அதனுடைய லக்னாதிபதியும் 2ம் அதிபதியும் தொடர்பு பெறும் பொழுது நிச்சயமாக அவர்களுக்கு வருமானத்திற்கான காலம் உண்டு.

அதுபோல் வருமானம் எப்பொழுதெல்லாம் வரும் என்று சாப்ட்வேர் பொதுவடை மூர்த்தி சார் கொடுத்திருக்காங்க.

லக்னாதிபதி வருமானத்திற்கு அதிபதியான 2ம் அதிபதியுடன் இணைந்து எப்பொழுது எல்லாம் செயல்படுகிறதோ

அதாவது 1 வருடம், 1 மாதம், 10 நாள் என்பது ஒரு நட்சத்திர பாதத்தினுடைய அளவுகளாக குறிக்கப்படும்.

இந்த பத்து வருடத்தில் ஒன்பது நட்சத்திர பாதங்களாக பிரிக்கிறாங்க

இந்த 1 வருடம் ,1 மாதம், 10 நாள் அதிபதியோடு எப்பொழுதெல்லாம் இரண்டாம் அதிபதி சம்பந்தப்படுகிறது அப்பொழுது எல்லாம் அவர்களுக்கு வருமானத்திற்கான காலம்.

 

இந்த 1 வருடம், 1 மாதம் ,10 நாள் என்பது 405 நாட்களாகவும், அடுத்துஒரு உட்பிரிவு 45 நாட்களாகவும், அடுத்து ஒரு உட்பிரிவு 5 நாட்களாகவும் அடுத்து 13 மணி நேரம் 20 நிமிடமாகவும்,அடுத்து 1 மணி நேரம் 30 நிமிடமாகவும் அடுத்து 10 நிமிடமாகவும் எடுத்து இருக்காங்க. இதில் ALP சாப்ட்வேரில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

லக்னத்தின் அதிபதியோடு 2ம் இடத்தின் அதிபதி சம்பந்தப்படும்போது உங்களுக்கு வருமானத்திற்கான காலம் இருக்கா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

புதனும், சுக்ரனும் 405 நாள் காலகட்டங்களில் சம்பந்தப்படுகிறதா, இல்லை 45 காலகட்டங்களில் சம்பந்தப்படுகிறதா என்பதை பார்த்தாலே எந்த காலகட்டங்களில் வருமானம் வரும் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

வருமானம் என்பது தொழிலில் மட்டும் இல்லை,அவர்களுடைய குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கலாம். இல்லை சகோதரர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.இல்லை அவர்களுடைய வீடு , வண்டி ,வாகனம், வாடகை இதிலிருந்து வருமானம் எதிர்பார்க்கலாம்.குழந்தைகளிடமிருந்து வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த 13 மணிநேரம் 20 நிமிடத்தில் சுக்ரனும் புதனும் தொடர்பு பெறும் பொழுது அவர்களுக்கு வருமானத்திற்கான வாய்ப்பு உண்டு.

வங்கி கடனுக்கு இந்த 45 நாள் இந்த 2ம் இடத்தோடு சம்பந்தப்பட்டால் அந்த 45 நாளில் வங்கிகடன் கிடைக்கும்.

வருமானம் என்று எடுக்கும் பொழுது ஒவ்வொரு அட்சய லக்னத்திற்கும் இரண்டாம் பாவக அதிபதி லக்னாதிபதியோடு தொடர்பு பெறும்பொழுது மட்டுமே அவர்களுக்கு வருமானம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும்.

 

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *