சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி

Spread the love

https://youtu.be/oyl0b5bJ6a4

அனைவருக்கும் வணக்கம்.
அட்சய லக்ன பத்ததியில் இன்றைக்கு 7ம் பாவகம் பற்றி பார்கலாம்.
திருமணம் எப்போது நடக்கும்.திருமணம் சார்ந்த நிகழ்வுகள் எப்படி இருக்கும்.
நம்முடைய விருப்பத்திற்கு வரன் பார்க்கிறோம் என்பதைவிட நம்ம ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்கு அதற்கு தகுந்த மாதிரி வரன் பார்த்தால் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும். இதை எல்லாரும் புரிந்து கொள்ளனும்.

அந்த ஜாதகர் என்ன வரன் வாங்கி வந்திருக்கார்,
அவருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும்,எப்படி அவருடைய வாழ்க்கை முறை இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு பின் பொருத்தம் பார்ப்பது நல்லா இருக்கும்.
வரன் பார்க்கக் கூடிய விஷயங்களில் கவனமாக இருங்கள்.
பொதுவாக ஜாதகத்தில் நல்ல வாழ்க்கை துணை அமையனும்னா அட்சய லக்னமும்,
அட்சய லக்னத்திற்கு 7ம் பாவகமும் நல்ல அமைப்பில் இருக்கனும்.

உதாரணமாக தனுசு லக்னம் அட்சய லக்னமாக இருக்கும்பொழுது , இந்த 10 வருட அதிபதி குருவாக இருப்பார்.இது ஒரு ஆண் ஜாதகமாக இருந்தால் பெண் ஜாதகம் எப்படி அமையும் என்று பார்க்கப் போகிறோம்.
பெண், இந்த 7ம் வீட்டினுடைய அதிபதி புதன்,
இந்த குருவும் புதனும் எப்படி இருக்காங்க என்பதை பொறுத்து தான் அவர்களுக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட வரன் அமையும்,?நல்லா இருக்குமா? இல்லை பிரச்சனையாக இருக்குமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
குருவும் புதனும் இந்த இடத்திலேயே இருந்தால் நல்ல தம்பதிகளாக 100% அந்த 10 வருட காலங்கள் ஒத்துப் போகும்.
அட்சய லக்ன அதிபதி குரு மீன லக்னத்தில் இருந்தால், புதன் 7வது வீட்டுக்கு 2வது இடத்தில் இருந்தால் அதாவது குரு ALP லக்னத்திற்கு 4ம் வீட்டில், 7ம் அதிபதி 7 க்கு 2ம் இடத்தில், ALP லக்னத்திற்கு 8ம் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்.
ஜாதகர் நல்லாதான் இருக்கார், ஆனால் வரக்கூடிய பெண் வீட்டில் இருந்து பிரச்சனைக இருக்கும். ஏன்னா ? லக்னத்திற்கு இது 8ம் வீடு. சஷ்டாஷ்டகம் சம்பந்தப்படுவதால் எதிர்பார்க்கும் அளவு வரன் அமையாது.திருமணம் ஆவதில் பிரச்சனை இருக்கும்.

இதுவே ஜாதகருக்கு குரு 12ம் வீட்டில் இருந்தால், புதன் ALP லக்னத்திலேயே இருப்பதாக வச்சிக்கலாம்.இவருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் ஆனால் ஜாதகருடைய குடும்பம் ஏத்துக்க மாட்டாங்க.

அட்சய லக்னத்தில் ஒவ்வொரு காலகட்டங்களையும் தனுசுலக்னம் ALPலக்னமாக போகும்பொழுது குரு புதன் 10 வருட காலத்தில் சஷ்டாஷ்டகத்தில் இருப்பதால் திருமணம் ஆவதிலேயே பிரச்சனை இருக்கும்.
எதிர்பார்க்கும் வரன் அமையாது.

அட்சய லக்னம் மகர லக்னமாக போகும் பொழுது மகர லக்ன அதிபதி
சனி பகவான், இங்கு 7ம் வீடு அதிபதியாக சந்திரன் போவார்.
சனியும் சந்திரனும் எப்படி இருக்கு என்பதை பொறுத்து தான் அடுத்த 10 வருடம் அவர்களுடைய திருமண வாழ்க்கை அமையும்.
சனியும் சந்திரனும் நல்ல அமைப்பில் இருந்தால் பிரச்சனை இருக்காது.
அதுவே லக்னத்திற்கு 2ம் வீட்டில் சனி பலமாகவும், 7ம் வீட்டிற்கு 2ம் இடத்தில் சந்திரனும் இருந்தால் பிரச்சனை இல்லை.
ஆனால் இந்த லக்னத்திற்கு 7ம் அதிபதி 8ம் வீடாகவும், இந்த வீட்டுக்கு 7ம் அதிபதி 8ம் வீடாகவும் இருப்பதால் அதனால் இது இரண்டுமே பிரச்சனைக்குரிய காலகட்டங்கள்.
இரண்டு பேருடைய பக்கத்திலும் பிரச்சனை இருக்கும்.
எப்படி வரன் பார்த்தாலும், 7ம் அதிபதியும், லக்னாதிபதியும் சனி சந்திரனாக வருவாங்க, ஜாதகத்தில் அவர்கள் சம சப்தமமாக இருந்தாலும்
பாவகத்திற்கு 8ல்
சஷ்டாஷ்டமாக வருவதால் அது பிரச்சனைக்குரிய திருமணமாக தான் இருக்கும்.
என்ன பொருத்தங்கள் நீங்கள் பார்த்து பண்ணினாலும் திருமண வாழ்க்கை இங்கு கேள்விக்குறியாக இருக்கும்.
அடுத்தவங்க பஞ்சாயத்து வைக்கக்கூடிய சூழ்நிலையை தான் தரும்.

இதற்கு APT Life Partner என்ற செயலி திரு.பொதுவுடைமூர்த்தி சார் கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த செயலியில் பெண்ணுடைய ஜாதகத்தையும், ஆணுடைய ஜாதகத்தையும் கொடுத்தால் அவர்களுக்கு எத்தனை வருடம் ஓத்துப் போகும் எத்தனை வருடம் ஒத்து போகாது ,எப்போதெல்லாம் அவங்க கவனமாக இருக்கணும், எப்போதெல்லாம் நல்லா இருக்கலாம் என்பது அதில் காட்டும்.அதில் உங்கள் ஜாதகத்தை போட்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *