செவ்வாயும் காரமும்/சுக்கிரனும் இனிப்பும்

Spread the love

அனைவருக்கும் வணக்கம்,
அட்சய லக்னபத்ததி ஜோதிட முறையில் ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார், ஜோதிடம் என்பது உணவே மருந்து அந்த மருந்தே வாழ்க்கையுடைய அடிப்படையாக இருக்கு,
உணவு சார்ந்த விஷயங்களையும்,ஜோதிடம் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒப்பீடு செய்யுங்கள் என்று கேட்டாங்க.

கண்டிப்பாக எல்லாத்துடைய அடிப்படை மூலாதாரம் உணவு தான்.
இது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நடக்கும், எவ்வளவு தூரம் புரியும் என்று தெரியவில்லை. இதை புரிந்து கொண்டால் கண்டிப்பாக நம்முடைய வாழ்க்கையில் நிறைய நிகழ்வுகளை மாற்ற முடியும்.

உதாரணமாக எப்பவும் இனிப்பு என்று சொல்லுவோம்.
இனிப்பு என்ற நிகழ்வைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் இனிப்பான விஷயங்கள் ,ரொம்ப இனிப்பா பேசுறாங்க என்று சொல்லுவோம்.அவங்களுக்கு சுக்கிரன் பலமாக இருக்கோ என்று சொல்வோம் இனிப்பு சம்பந்தப்பட்டது உணவு சம்பந்தப்பட்டது நிறைய கிடைத்தால் ,சாப்பாடு யோகமாக கிடைத்தால் சுக்கிரன் பலமாக இருக்கோ என்று சொல்லுவார்கள் பார்த்து பேசும் பொழுது அது உண்மைதான்.

சூரியனும் சுக்கிரனும் சம்பந்தப்படும்பொழுது, அதில் சுக்கிரன் பலப்படும் பொழுது இந்த இனிப்பு சம்பந்தப்பட்ட உணவு வகைகளை அதிகமாக பயன்படுத்துவார்கள்.
இனிப்பு என்பது கரும்பு ஸ்வீட் கிடையாது. நாம் சாப்பிடக்கூடிய அரிசி தான் இனிப்பு.
கிழங்குகள் கூட இனிப்புதான்.அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய மாவு பொருட்கள் எல்லாமே இனிப்போடு சம்பந்தப்பட்டது தான்.
உதாரணமாக இதனுடைய தாக்கம் குறையும்பொழுது,
இப்போ சுக்கிரன் பலமாக இருந்தால், அவருக்கு உணவு நல்லபடியாக அமைந்து இனிப்பு சம்பந்தப்பட்டது சமநிலை ஆகும்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் நல்லா இருக்கா? நல்லா இல்லையா? என்பதை ஒரு ஜாதகரை பார்த்தால் கண்டுபிடிக்கலாமா?
என்று கேள்வி இருந்தால் கண்டுபிடிக்கலாம்.
ஒருவர் உடம்பை பொருத்தவரையில் அவருடைய அமைப்பு பலமாக இருக்கும். அதுவே சுக்கிரன் பலப்படவில்லை என்றால் எப்பொழுதுமே சோர்வு, இனிப்பு பொருத்தவரையில் எளிதாக சோர்வுதன்மை கொடுக்கக்கூடியது.
அதேபோல் இனிப்பு அதிகமானாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை.
கேரட் இனிப்பு சார்ந்த விஷயம், அதேபோல் அரிசி சாப்பிட்டுவிட்டு கடைசியாக கார்போஹைட்ரேட் அந்த எச்சில் முழுங்கும் பொழுது நாக்கை கவனித்து பார்த்தால் நல்லா இனிக்கும்.
சுக்கிரன் பலமாக பலமாக அதிகமாகும் பொழுது உடல் சோர்வு ஏற்படும்,
அதேபோல் குறையும் பொழுது உடல் சோர்வு ஏற்படும்.
சுக்கிரன் பலமாக இருந்தால் நம்முடைய உடம்பில் நிறைய விஷயங்களை பார்க்க முடியும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அமைப்பு இருக்கு.
செவ்வாய் என்றால் காரம், சுக்கிரன் என்றால் இனிப்பு
இதில் இனிப்பு என்றால் சுக்ரன் மட்டும் கிடையாது, புதன், சந்திரன், சூரியன் இது எல்லாமே இதனுடைய தொடர்புடைய நிகழ்வாக அமையும்.
பூமிக்கு கீழ் உள்ள கிழங்கு வகைகள் சாப்பிடும் பொழுது அதில் இனிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமாக இருக்கும்.
சுக்ரன் பலமாகவோ பலவீனமாகவோ இருந்தால் கண்டிப்பாக இனிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் வரும். அதனால் கவனமாக இருக்கனும்.

உதாரணமாக ALP லக்னத்திற்கு 6,8,10,12ல் சுக்கிரன் இருந்தால் ,அப்பொழுது மாவு பொருட்கள், இல்லை அரிசி சம்பந்தப்பட்டது,
கிழங்கு வகைகளில் கேரட், உருளைக்கிழங்கு ,கரும்பு ,
அன்றாட நிகழ்வுகளில் இருக்கக்கூடிய பேக்கரியில் சாப்பிடக்கூடிய இனிப்பு பொருட்கள், வெள்ளை சீனி இது எல்லாமே எளிதாக உடம்பில் நேரடியாக ஒரு பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.
6, 8, 10, 12ல் சாப்பிட வைக்கும் அதுவே மற்ற இடத்தில் இருந்தால் குறைவாக லோ சுகர் அதனால் உடல் சோர்வு 1 நிமிடமோ, 5 நிமிடத்திலோ , இல்லை பதற்றமாகும் பொழுது,பயப்படும்பொழுது அந்த நிகழ்வை சுக்ரன் கொடுக்கும்.

உதாரணமாக ALP தனுசு லக்னம் போகும் பொழுது 6ம் அதிபதி சுக்ரனாக வரும் பொழுது கிழங்கு வகைகளை சாப்பிடும் பொழுது தன்னை அறியாமல் சாப்பிட வைக்கும்.உடல் பருமனாவது,
உடல் பருமனுக்கும் அதே கிழங்கு வகைகள் சுக்ரன் தான்,
உடல் இளைப்பதற்கும் அதே கிழங்கு வகைகள் சுக்ரன் தான்.
உங்கள் ஜாதகத்தில் ALP லக்னத்திற்கு சுக்கிர பகவான் எங்க இருக்கு?
எதற்கு தகுந்த மாதிரி 6, 8, 10, 12ல் இருந்தால் நீங்கள் உணவை கட்டுபடுத்தனும். சுக்ரன் பலகீனப்பட்டால் மன அழுத்தம் கொடுக்கும்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தோஷமாக இருக்கணும் என்றால் சுக்கிரன் பலப்பட்டு இருந்தால் கண்டிப்பாக சந்தோஷமாக இருக்கும்.
அதனால் உணவு வகைகளை பொறுத்தவரையில் அளவான சாப்பாடு சாப்பிடனும். சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் நல்லா இருந்தால் சந்தோஷமாக இருக்கும்.அதுவே 6, 8, 10, 12ல் இருந்தால் உணவுகளை கவனமாக பார்த்து சாப்பிடணும்.
கண்டிப்பாக உங்கள் வாழ்க்கை யோகமாக மாறும்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *