இந்த ALP ஜாதகருக்கு வேலை, தொழில் எது சிறந்தது

Spread the love

 

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு உதாரண ஜாதகம் பார்ப்போம்.

ஜாதகருக்கு வேலை சிறப்பாக இருக்குமா? தொழில் சிறப்பாக இருக்குமோ?

அவருக்கு எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டது என்று பார்க்கலாம்.

இந்த ஜாதகருக்கு வயது 52, அவருடைய பிறப்பு லக்னம் துலாம், 2 வருடம் துலாம் லக்னத்தில் இருந்திருக்கு, 12 வயது வரையும் விருச்சிக லக்னம் ,பொதுவாக அட்சய லக்னத்தில் பிறப்பு லக்னம் என்பது குழந்தை பருவம் ஜாதகம் பார்க்க முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த குழந்தைகள் தாய் தந்தையரை சார்ந்துதான் இயக்கும். 10 வருடம் காலம் வரையும் எடுத்துக்கலாம்.12 வயது வரை உள்ள பருவமும் அதற்குப்பின் உள்ள பருவமும் பெற்றோரை சார்ந்தது தான் இருக்கும்.

தனிப்பட்ட முறையில் அவர்களுடைய கல்வி தகுதிகள் 20, 22 வயதிலிருந்து பார்க்கலாம்.

அவர்களுடைய தனிப்பட்ட திறன் வேலை நல்லா இருக்குமா,

தொழில் நல்லா இருக்குமா,அவர்களுடைய 22 வயதிற்க்கு பிறகு இந்த ஜாதகத்தில் பார்க்கலாம்.

அடுத்து 22 வயதிலிருந்து 32 வயது வரை மகர லக்னம்,

லக்னாதிபதி சனி,பத்து வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி சனி, 4ம் வீட்டில் நல்ல அமைப்பில் தான் இருக்கார்.

சனீஸ்வரன் தன்மை நீச்சமாக இருந்தாலும் , லக்னாதிபதி 10ம் வீட்டை பார்ப்பதால் தொழில் சார்ந்த நோக்கத்தோடு தான் இருப்பார்.

வேலைக்கு போகக் கூடிய எண்ணம் இருக்காது.

அதில் 10ம் வீட்டு அதிபதி சுக்கிரன், 10ம் வீட்டில் பலமாக இருக்கு.

இவருக்கு வேலையை விட தொழில் நல்ல அமைப்பில் இருக்கு,

 ஏன்னா? 10ம் அதிபதி பலமாக இருக்கு.

குரு சந்திரன் 10ம் வீட்டில் இருக்கு, இருக்கலாமா?

7ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் இருக்கலாம் ஏன்னா? கூட்டி தொழில் சார்ந்த நிகழ்வுகள் உண்டு, இது நல்லா இருக்குமா?

ALP லக்னத்திற்கு 12ஆம் அதிபதி குரு , 3ம் அதிபதி குரு 10ம் வீட்டில் இருக்கிறார். ஜாதகருடைய எண்ணங்கள், செயல்கள் எல்லாமே தொழிலை நோக்கி தான் போகும். இவருக்கு தொழில் செய்யக்கூடிய யோகமும் இருக்கு. ஆனால் இவருக்கு விரயாதிபதி தொழிற் ஸ்தானத்திலிருந்து குருவாக இருக்கிறார், அதனால் குரு சார்ந்த தொழிலை அவர் கையில் எடுக்கக் கூடாது எடுத்தால், அவருக்கு நஷ்டம் உண்டு.

ஆனால் இவர் குரு சார்ந்த தொழிலை செய்திருக்கிறார்.

பைனான்ஸ் சம்பந்தப்பட்ட தொழில், அதேபோல் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி இருக்காங்க.

10ம் இடத்தில் குரு இருக்கு அது சார்ந்து தொழில் எண்ணத்தை கொடுத்து இருக்கு,ஆனால் அவர் விரயாதிபதியாக இருந்ததால் அந்த தொழில் சார்ந்த நிகழ்வுகள் அவருக்கு சிறப்பை கொடுத்து இருக்காது.

1993 ல் ஆரம்பித்து 2015 வரையும் நஷ்டத்தோடே இந்த தொழிலை செய்ததாக சொன்னாங்க.

ALP லக்னம் கும்ப லக்னம் வரும்பொழுது லக்னாதிபதி சனி 3ம் இடத்தில்,

தொழிற் ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 7ம் வீட்டில்,

அதனால் இங்கு தொழில் சார்ந்த நிகழ்வுகள் 7ல் இருந்து நடத்தி இருப்பதால் ஒர் அளவு தொழில் செய்து இருக்காங்க.

ஒருவருடைய சப்போர்ட் மூலமாக தான் இவர் தொழில் செய்து இருக்கிறார் காரணம் என்னவென்றால் ஜாதகர் தொழிலுக்கு 8ம் வீட்டில் இருந்து விட்டார்.

அதனால் ஜாதகர் தனிப்பட்ட முறையில் தொழில் சார்ந்த நிகழ்வுகளில் இருக்க முடியவில்லை.பார்ட்னர்ஷிப் மூலம் அந்த தொழில் ஓரளவு போனது.

  ALP லக்னம் மீன லக்னம் வரும்பொழுது ,2015 ல் தான் அந்த பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட, பினான்ஸ் சம்பந்தப்பட்ட நஷ்டம் அதிகமாக ஏற்பட்டு அந்த பள்ளிக்கூடம் மூடுறாங்க.

இது எதனால் இங்கு வரும் பொழுது நடந்தது,

லக்னாதிபதி குரு லக்னத்திற்கு 8ம் வீட்டில் , 8ம் வீட்டில் குரு தொடர்பு பெறும் பொழுது பிரச்சனைக்குரிய காலம் இங்கு ஆரம்பித்தது.

5ம் அதிபதியும் 8ம் இடத்தில் இருப்பதால் மனசு ஒரு நிலையில் இருக்காது.

தொழில் சார்ந்த நிகழ்வுகள் இவருக்கு யோகத்தை தராது.

லக்னாதிபதியும் 8ம் வீட்டில், 10ம் வீட்டு அதிபதியும் 8ம் வீட்டில் இருப்பதால்,

இந்த இடத்தில் தொழில் சார்ந்த விஷயங்களை சமாளிக்க முடியவில்லை.

இந்த ஜாதகத்தில் இன்றுவரையும் இந்த கஷ்டம் தொடர்ந்துட்டு தான் இருக்கு, கடன் அதிகமாக இருக்கு, ஏன்னா?

இந்த லக்னத்திற்கு 6ம் அதிபதி சூரியன் 7ம் வீட்டில் இருக்கு ,

7ம் வீட்டில் இருந்து 7ம் அதிபதியோடு சேர்ந்து லக்னத்தை பார்க்கிறார்,

அதனால் இங்கு பார்ட்னர்ஷிப் மூலம் முயற்சி செய்து பார்த்து இருக்காங்க, ஆனால் முடியவில்லை.இவருக்கு நஷ்டம் என்பது 7ம் வீட்டிற்கு லாபமாக முடிந்தது.அதனால் அந்த பள்ளிக்கூடம் நிறுத்திட்டாங்க.

இவருக்கு எப்பொழுது மாற்றம் வரும்?

ALP லக்னம் மேஷ லக்னமாக வரும் பொழுது 10ம் வீட்டு அதிபதி சனி லக்னத்தில் இருக்கு, லக்னாதிபதி செவ்வாய் 5ம் வீட்டில் இருக்கு,

இப்பவும் இவருக்கு தொழில் செய்யக்கூடிய எண்ணங்கள் தான் அதிகமாக இருக்கும்.இப்பவும் தொழில் நல்லா நடத்த முடியாது,

ஏன்னா? இந்த லக்னத்தின் அதிபதி 5ம் வீட்டில் இருந்து தொழிலுக்கு 8ம் வீடாக இருப்பதால் ஜாதகருடைய எண்ணமும் ,செயலும் அவருக்கு எதிராக போய்டும்.

அதனால் தொழிலை சிறப்பாக செய்ய முடியாது.

மகர லக்னம் வரும்பொழுது குரு சம்பந்தப்பட்ட தொழில் எடுக்காமல், மற்ற கிரகங்களுடைய தொடர்பு மகர லக்னமாக வரும் பொழுது 2 வது வீடு சனீஸ்வரனாக இருந்து, அவர் 4 ல் இருந்து 10ம் வீட்டை பார்க்கும் பொழுது,

உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில் செய்திருந்தால் அவருக்கு அந்த வருமானம் வந்திருக்கும்.

அடுத்து கும்ப லக்னம் வரும்பொழுது வருமானம் குரு, தொழிலுக்கு இது விரயமாக போனதால் தொழில் சார்ந்த இவர் நீடித்திருக்க கூடாது.வெளியில் இருந்து ஏதாவது கமிஷன் பேசிக் பண்ணிருந்தால் யோகத்தை கொடுக்கும். காரணம்? இங்கு வரும்பொழுது 2ம் வீட்டை சூரியனும் புதனும் பார்ப்பதால் கம்யூனிகேஷன் கமிஷன் பேசிக்கில் அவர் வருமானத்தை பார்த்திருக்கலாம்.

மேஷ லக்னம் வரும்போது தொழில் முதலீடு போடக்கூடாது.மேஷ லக்னத்திற்கு வருமானத்தின் அதிபதி சுக்கிரன் 7ம் வீட்டோடு தொடர்பில் இருப்பதால்,மனைவி சார்ந்த நிகழ்வுகள் மூலம் ஏதாவது வருமானத்தை தேடி கொள்ளலாம்.

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *