கிரக தோஷங்களுக்கு உணவு பரிகாரம்

Spread the love

 

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் ஒரு நண்பருடைய கேள்வி

34 வயது ஆகிறது, திருமணம் நடக்கவில்லை என்று கேள்வி

கேட்டுருக்காங்க.

ஜாதகருக்கு மேஷ லக்னம் 2ல் செவ்வாய்,செவ்வாய் தோஷத்தினால் திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார்.

இந்த நிகழ்வு எந்த வகையில் பொருத்தமாக இருக்கு என்று பார்ப்போம்.

திருமணம் நடக்காததற்கு செவ்வாய் தான் காரணமா என்று பார்ப்போம்.

லக்னம் நகரும்பொழுது செவ்வாய் தோஷம் யோகமாக கூட வாய்ப்பு இருக்கு என்று நண்பர் கேட்டார்.

ஜென்ம லக்னம் மேஷம், இன்றைய லக்னம் கடகம் ,

கடக லக்னத்திற்கு 11ல் செவ்வாய், அப்ப ஏன் திருமணம் நடக்கவில்லை?

உதாரணமாக கடக லக்னாதிபதி சந்திரன், 7ம் வீட்டு அதிபதி சனிபகவான் கும்பத்தில் இருக்கும் பொழுது,திருமண வாய்ப்பு எதிர்பார்த்த மாதிரி இருக்காது.

ஜாதகருடைய லக்னாதிபதியோ, 7ம் வீட்டு அதிபதியோ, 8 ல் இருந்தால் திருமணம் சார்ந்த உறவுகள், திருமணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த யோகத்தை கொடுக்காது.

எல்லாரும் மேஷ லக்னத்திற்கு 2ல் செவ்வாய் இருக்கு என்று சொல்லி பரிகாரம் செய்து, உண்மையில் கடக லக்னமாக இருந்து, கடக லக்னத்திற்கு 7ம் அதிபதியும், லக்னாதிபதியும் கும்ப லக்னத்தில் அட்டமத்தில் சனியும் சந்திரனும் இருப்பது ஒரு அவயோகத்தை கொடுக்கும்.

அந்த வாழ்க்கை ஒரு பொருத்தம் இல்லாத இணையாகதான் இருக்கும்.

 

அதனால் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் இன்றைக்கு என்னுடைய வாழ்க்கையில் எது பொருத்தமான நிகழ்வுகள்,இன்றைக்கு என்னுடைய வாழ்க்கை முறையில் எப்படி இருக்கு,

சனிபகவானுக்கும் சந்திர பகவானுக்கும் என்ன நிகழ்வு நடந்திருக்கு,

ஜாதகர் 8ல் இருக்கும் பொழுது எதிர்பார்ப்புகள் மூலமாகவே தடையை ஏற்படுத்தும்.இரண்டு குடும்பத்தின் மூலமாக பெரிய அளவில் போராட்டத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு லக்னத்திற்கும் பார்த்தால் இன்றைய வயது எப்படி இருக்கு, இன்றைக்கு என்னுடைய நிகழ்வு எப்படி இருக்கு, இன்றைக்கு நான் எப்படி இருக்கேன் என்னுடைய வருமானம் எப்படி இருக்கு,என்னுடைய குடும்பம் எப்படி இருக்கு,என்னுடைய பேர் புகழ் எப்படி இருக்கு,

 

உதாரணமாக கடக லக்னத்திற்கு 5ம் அதிபதி செவ்வாய், 7ல் உச்சமாக இருப்பார் காதல் திருமணம் நடக்கும், பெரிய யோகத்தை கொடுக்கக் கூடிய அமைப்பாக இருக்கும்.

அதுபோல் ஒவ்வொரு ஜாதகத்திலும் இன்றைய லக்னம் என்னவென்று பார்த்தால்,

உதாரணமாக கடகலக்னத்திற்கு 5ம் அதிபதி 11 ல் இருந்தால் எதிர்பாராத திடீர் திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும்.

செவ்வாய் என்பது நிறைய பேரு பார்ப்பாங்க,

செவ்வாய் எத்தனை பேருடைய திருமண வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்துது, எத்தனை பேருடைய குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துது,

என்று நிறையபேர் சொல்லுவாங்க.

எப்பொழுதும், செவ்வாய் உங்களை நேரடியாக துன்பப்படுத்துவது கிடையாது.வாழ்க்கையில் ஒரு புரிதல் வரணும்.

30 வயதிற்கு பிறகு ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று சொல்லுவாங்க, அப்படி கிடையாது

20 – 30 வயசு அதனுடைய வேகம் 100 மடங்கு இருக்கும்.

30 – 40 வயது அதனுடைய வேகம் 60 மடங்கு இருக்கும்.

40-50 வயது அதனுடைய வேகம் 40 மடங்கு இருக்கும்.

அதனுடைய தன்மை பொருத்து எவ்வளவு தூரம் ஓடுகிறோம் என்பது தான் வாழ்க்கை.

 

முதலில் நம்முடைய வேகம், சக்தி எவ்வளவு அதிகமாக இருக்கும்னா ?

1 மில்லி செகண்ட் -ல் அந்த தூரத்தை கடக்க முயற்சி செய்வோம்.

அந்த வேகம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு 20 to 30 வயது, நம்முடைய வேகம் அதிகமாக இருக்கும்.

அந்த நேரத்தில் எதிர்பாராத வகையில் முடிவெடுக்க வைக்கும்.

 

செவ்வாய் பகவானுடைய தன்மைகளாக உணவு பொருட்களை எடுத்துக் கொண்டால் காரம் அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் அதிகரிக்கும்.

உஷ்ணம் அதிகரிக்கும் பொழுது அவர்களுடைய நிலை கோபம் வந்து உடனே அந்த விஷயத்தை வெளிப்படுத்துவது.

அதுதான் செவ்வாய் தோஷம் என்று சொன்னாங்க.

காரம் சம்பந்தப்பட்டது மிளகாய், இஞ்சி,பூண்டு, வெங்காயம், மிளகு இதில் எல்லாமே காரம் அதிகம்.

காரம் சம்பந்தப்பட்ட உணவுகளை, உணவில் சேர்க்கும் பொழுது, உதாரணமாக பூண்டு சேர்க்கும் பொழுது அதனுடைய வேகம் 3 to 5 மடங்கு அதிகரிக்கும்.

உதாரணமாக கடக லக்னம் 2ல் செவ்வாய் இருக்கு, இல்லை 1, 4, 7, 8, 12ல் செவ்வாய் இந்தால் செவ்வாய் தோஷம். அது ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும்.

உதாரணமாக 2ல் செவ்வாய் இருந்தால் வார்த்தைகள் மூலமாகபாதிப்பு ஏற்படுத்தும். 4ல் செவ்வாய் இருந்தால் மிளகாயை அவ்வளவு சந்தோஷமாக ருசித்து சாப்பிடக்கூடிய ஒரு அமைப்பை ஏற்படுத்தும்.

உணவு வகைகளை தான் முக்கியமாக பார்க்கணும்.

உணவு வகைகளை எவ்வளவு தூரம் கவனமாக எடுக்கிறீர்களோ அவ்வளவு தூரம் அந்த கிரகங்கள் வழி வகுக்கும்.

 

ஒரு ஜாதகத்தில் திருமணம் பண்ணும் பொழுது 20 to 30 வயது, செவ்வாய் பலமாக பார்க்கணும்.

செவ்வாய் தோஷம் இருந்தால் பரிகாரம்:.

காரம் சம்பந்தப்பட்ட உணவுகளை எவ்வளவு தூரம் குறைக்க முடியுமோ குறைச்சிக்கங்க. காரம் மட்டும் இல்லை இதோடு எந்த கிரகம் சேர்ந்திருக்கு,

உதாரணமாக சனி பகவான் சேர்ந்திருக்கு, சூரியன் சேர்ந்திருக்குனா கண்டிப்பாக புளிப்பு, உப்பு, காரம் இது மூன்றையும் கட்டுப்பாடாக வைத்திருக்கனும்.

உணவுகளுக்கு எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதனுடைய வெளியீடு நம்முடைய உணர்வுகள்.

உணவுகள் = உணர்வுகள்

திறன்களாக இருக்கலாம், பேச்சாக இருக்கலாம் ,உழைப்பாக இருக்கலாம் எல்லாவற்றிலும் இந்த உணர்வுடைய வெளிப்பாடு இருக்கும்.

செவ்வாய் உடைய காரகத்தன்மைகளை புரிந்து கொண்டால் கண்டிப்பாக வாழ்க்கை உடைய நெறிமுறைகளை கையில் வைத்துக் கொண்டால்,

செவ்வாய் உடைய தன்மைகளை புரிந்து கொண்டு, உணர்ந்தால்

அதற்கு தகுந்தார் போல் கண்டிப்பாக 100 இல்லை 1000 மடங்கு கிரகங்கள் வழி கொடுக்கும்.

கிரகங்கள், நட்சத்திரங்கள் வழி கொடுக்கும்.

வாழ்க்கையில் ஒரு யோகத்தை பெற முடியும்.

 

ஆனால் 1, 4, 7, 8, 12ல் செவ்வாய் இருந்தால் இதை சொன்னால் கேட்க மாட்டாங்க. அப்பதான் நிறைய காரமான உணவுகள், உப்பு இதெல்லாம் நிறைய சேர்த்துபாங்க.

சொல்வதை காது கொடுத்து கேட்க மாட்டார்கள்.

இந்த மாதிரி காரமான உணவுகள் சாப்பிடும் பொழுது அந்த கோபத்தினுடைய தன்மைகள் 100 இல்லை 500 இல்லை 1000 மடங்கு கோபத்தினுடைய தன்மை , வேகம் அதிகமாக இருக்கும். அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் செவ்வாய் தோஷம் பார்த்து பயப்பட வேண்டாம். அதை யோகமாக மாற்றிக்கலாம்.

 

நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *