இன்றைக்கு பங்குச்சந்தை நிகழ்வுகள் எப்படி இருக்கும்?

Spread the love

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி முறையில் இன்றைக்கு பங்குச்சந்தை நிகழ்வுகள் எப்படி இருக்கும்? அதை எப்படி கணக்கிடுறீங்க?

 

பங்குச்சந்தை மிக பிரம்மாண்டமான நிகழ்வு.

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு லக்னமோ,ஒரு ராசியோ, ஒரு கிரகமோ, கணக்கீடு செய்வது ஒருவகை.

 

பங்குச் சந்தை என்பது 1.அன்றாட நிகழ்வுகள் (Intraday).

Intraday அன்றைக்கு காலையில் வாங்கி மாலையில் விற்கக்கூடிய நிகழ்வுகள்.

இல்லை,

இந்தவாரத்தில்வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்த வாரத்தில் வியாழக்கிழமை வரை வரக்கூடிய நிகழ்வுகள். அந்த வாரத்திற்குள் வாங்கி வைக்கக்கூடிய நிகழ்வுகள் ஒன்று.

 

இல்லை 1 மாதம், 2 மாதம், இல்லை 6 மாதம் , இல்லை 1 வருடமோ, ஒரு பங்கு வாங்கி அதை விற்கக்கூடிய அமைப்பு ஒன்று.

இது ஒவ்வொன்றிற்கும் கிரகங்கள் வெவ்வேறு.

பங்குச்சந்தை என்றால் சனிநல்லா

இருக்கக்கூடாது. ராகு நல்லா இருக்ககூடாது. இது பொதுவான பலனாக சொல்கிறோம்.

 

ஆனால் கண்டிப்பாக ராகு ஒரு மிகப்பெரிய போதையை, ஒரு மிகப்பெரிய மாயையை உருவாக்கும். இந்த மாயை பங்குச்சந்தையில் முதலில் 5000, 10000 போடாமல்,

50000, 1, 2, 5 லட்சம் போட்டு இருப்பாங்க.அந்த 5 லட்சத்தை இழந்து,

3 வருடம்,5 வருடம், 10, வருடம் கஷ்டப்பட்டு இழந்த பிறகு ஒரு அனுபவம் கிடைக்கும்.

அந்த அனுபவம் யார் கொடுப்பாங்கன்னா

ராகு -கேதுக்கள் தான்.

 

சனி ,ராகு -கேதுக்கள் தான் பங்குச்சந்தையில் ஒரு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்து,

கையில் இருக்கக்கூடிய பொருள் எல்லாம் இழந்திடுவாங்க.

 

இல்லை Sir மூன்று தடவை விழுந்து எழுந்த பின் தான் தொழில் அமையும். இதுதான் நடைமுறை தொழில் அமைப்பு. இப்படி கேட்கலாம்.

ஆனால், 3 தடவை விழுந்து எழலாம். ஆனால் 4வது எழும்போது பணம் வேணும். அனுபவம் வைத்து எதுவும் செய்ய முடியாது.

 

அட்சய லக்ன பத்ததியில் Intraday விற்கு சந்திரன் நல்லா இருக்கனும்.

long time 1, 2, 5 வருடம் முதலீடு

பண்ணக் கூடியவங்க,

உதாரணமாக ஒரு பெரிய கம்பெனியில் ஒரு பங்கு முதலீடு பன்றோம்னா,

மூதலீடு செய்யும்பொழுது வரக்கூடிய நிகழ்வுகள் எப்படி இருக்கும்னா?

உதாரணமாக அடுத்த 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 10 வருடம் இருக்கும்.

 

அட்சய லக்னம் என்று நிகழ்வு மாறிக்கொண்டே இருக்கும் என்று சொல்கிறோம்.

கண்டிப்பாக சனி பகவான்

நல்லா இருக்கணும்.

இந்த சனி பகவான், ராகு ,கேது இந்த மூன்று கிரகங்களும் பலமாக அமைந்து, இதற்கு சுக்கிரன் பலமாக ஆதரவு செய்தால் இந்த ஜாதகத்தில் ஒரு Step

வாங்க பங்குச்சந்தை பற்றி பேசலாம் என்று முடிவு பண்ணமுடியும்.

 

5ல் ராகு, 5 ல் சந்திரன், 5ல் சனி, 5ல் சுக்ரன்

தயவுசெய்து பங்குச்சந்தை பக்கம் போகக்கூடாது.

உங்க ஜாதகத்தில் ALP லக்னத்திற்கு 5 ல் சனி, 5ல் ராகு இருக்கா பாருங்க.இது ஒரு ஆசையை கொடுக்கும்.

 

எனக்கு எது பொருத்தமோ அந்த வேலையை செய்தால் தான் நான் வெற்றி பெற முடியும்.

இல்லை, பங்குச்சந்தையில் ஜெய்க்கலாம் என்று அவசரப்பட்டு ஆசையில் மாயை உருவாக்கும்.

 

லக்னம் மிதுன லக்னம் , 11 ல் ராகு

ஷேர் மார்க்கெட் பண்ணலாம் என்று சொல்லி பண்ணி இருந்தாங்க. ஆனால், எதிர்பார்த்த மாதிரி இல்லை.

ஏன்னா? கன்னி லக்னம் வரும்பொழுது அட்டமத்தில் ராகு வரும்.

அட்டமத்தில் ராகு வரும்பொழுது எப்படி இருக்கும்? கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்க, அதாவது ஒருவர் 50000 போட்டு இருப்பார் 80,000 வந்திருக்கும்.ஆனால் அந்த லாபமாக வந்திருக்கக் கூடிய 30000 பணத்தை எடுத்து இருக்க மாட்டார்.அது என்ன பண்ணும்னா? மொத்தத்தையும் எடுத்துட்டு போற வழியாக இருக்கும்.

அதேபோல் துலாம் லக்னம் 11 ல் ராகு,

அதே போல் மகர லக்னம் போகும்பொழுது மொத்தமாக மூடும்.

அதே மகரலக்னம் அட்டமத்தில் சுக்கிரன், அங்கு ராகு சேர்க்கை பிரம்மாண்டமாக வந்த மாதிரி வந்து மொத்தமாக Lock.

அதே மீன லக்னம் 11ல் சனி யோகத்தை கொடுக்கும் என்று சொன்னோம்.

ஆனால்,அந்த ஜாதகத்தில் அந்த லக்னம் மிதுன லக்னம், அட்டமத்தில் சனிபகவான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.

 

5,8 தொடர்பு இருந்தால் கண்டிப்பாக பங்குச்சந்தையில் எதுமே தெரியாது.

Call option Food option வாங்கி இருக்கேன். அதனால் லாபம் உண்டு.

Call option Food option யார் வாங்கனும்னா?,

ராகு- கேது பலமாக இருந்தால் Call option , Food option வாங்க முடியும்.இல்லைனா வாங்க முடியாது.

 

அட்சய லக்ன பத்ததியில் பலமாக ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தன்மைகள் இருக்கு.

அட்சய லக்ன பத்ததி முறையில் எப்படி ஆய்வு பண்றோம்னா?

கிரகங்கள் வச்சி ஆய்வு பண்ணனும்.

அடுத்து பாவகங்கள் ரீதியாக ஆய்வு பண்ணனும்.

நட்சத்திரங்கள் ரீதியாக ஆய்வு பண்ணனும் ஏன்னா? இதை பார்க்கக் கூடிய ஜோதிடர்களோ, ஆராய்ச்சியாளர்களோ,

பங்கு சந்தை பன்றவங்ககூட ஜாதகத்தில்

உண்மையிலேயே நான் கடந்த 4 வருடத்தில் ஜாதகத்திற்கும், பங்குச்சந்தைக்கும் உள்ள நிகழ்வுகளை புத்தகமாக எழுதி இருந்தால் 3 புத்தகம் இல்லை 30 புத்தகம் எழுதி இருக்கலாம். இதற்கு மட்டுமே.

நட்சத்திரங்களின் தன்மைகளை எடுத்தும் ஆய்வு செய்யலாம்.

 

இல்லை சார், பூரட்டாதி நட்சத்திரம்

வரும்பொழுது ஏறி இருக்கு?

ஒரு நட்சத்திரத்தை வைத்து இந்த நட்சத்திரம் வரும் பொழுதெல்லாம் ஏறும்,

இல்லை அனுஷம் நட்சத்திரம் வரும் பொழுது ஏறி இருக்கு,அனுஷம் நட்சத்திரம் வரும் பொழுது மதியம் 1 மணி வரைக்கும் ஏறும் அதற்குப்பின் மொத்தமாக இறங்கி விடும்.

இல்லை சார் எனக்கு மகம் நட்சத்திரம் அன்றைக்கு Call option நல்லா இருக்கும்.

சரிதான். ஆனால் அந்த Call option யாருக்கு நல்லா இருக்கும் வாங்குற ஒரு கோடி பேருக்கும் நல்லா இருக்குமா? இருக்காது.அப்போ என்ன பண்ணும் Food oPtion ஒருநாள் நல்லா ஏறிவிடும்.

Shacter வழியாக பார்க்கும் பொழுது இந்த வருடம் Finance Shacter நல்லா இருக்கு.இல்லை இந்த வருடம் மெடிக்கல் அதாவது கொரோனா காலத்தில் எந்த தொழிலும் இயங்காத போது மருந்து மாத்திரைகள் சம்பந்தப்பட்ட தொழில் இயங்குனது.

ஏதோ ஒரு மருந்து மாத்திரைகள், சம்பந்தப்பட்ட கம்பெனி இருக்குனா?

அதனுடைய நிகழ்வுகள்.

 

 

ஒரு நண்பர் கேட்டார்.

ஒரு தசையில் எல்லா புத்தியும் வருது , அதில் 6ம் வீடு 8ம் வீடு தொடர்பு இருக்கு. அதில் நிறைய பேர் கோர்ட் ,கேஸ், வம்பு, வழக்கு போகாமல் இல்லையா?

அதற்கு A|p படித்த ஒரு நண்பர் 6ம் வீடு பெரிய அளவில் உச்சமானால் அவர் டாக்டராக இருப்பார். 8ம் வீடு உச்சமாக இருந்தால் அவர் வக்கீலாக இருப்பார்.

8ம் வீடு உச்சமாக இருந்தால் நீதிபதியாக இருப்பார்.ஒருத்தர் நீதிபதியாக இருப்பார், ஒருவர் கைதியாக இருப்பார் .

ஒருவர் போலீசாக இருப்பார், ஒருவர் திருடனாக இருப்பார்.ஒருத்தர் டாக்டராக இருப்பார், ஒருத்தர் நோயாளியாக இருப்பார், இதில் டாக்டர் யாரு? நோயாளி ? என்று கண்டுபிடிப்பது தான் ஜோதிடர்.

 

6ம் பாவகம் எவ்வளவு கெட்டது என்று சொல்கிறோமோ அதில் நல்லதும் இருக்கு.நல்லதும் இருக்கும்.

கெட்டதும் இருக்கும்.

அட்சய லக்ன பத்ததியில் இந்த பாவகம் நல்லது ,இந்த பாவகம் கெட்டது, இந்த பாவகம் உயர்ந்தது, இந்த பாவகம் தாழ்ந்தது அப்படி எல்லாம் கிடையாது.

 

பங்குசந்தை பொருத்தவரை 2ம் பலப் பெற்றிருந்தால் வருமானம் வரும்.எத்தனை பேரு இன்றைக்கு 2ம் வீடு பலப்பட்டு பணமே இல்லாம இருக்காங்க.

அதனால் இந்த கிரகங்களை பொருத்தவரையில் உங்கள் ஜாதகத்தில் பலமாக இருக்கக் கூடிய சுக்கிரனோ, சனியோ, ராகு – கேதுவோ, குருவோ பலப்பட்டிருந்தால் கண்டிப்பாக இவங்க யாரும் 5ம் பாவகத்தோடு தொடர்பில் இருந்தால், 5ம் பாவகம் வலுத்திருந்தால் பங்குச் சந்தை செய்யக்கூடாது.

 

5ம் பாவகம் அட்டமாதிபதியோடு தொடர்பில் இருந்தால் கண்டிப்பாக பங்குச் சந்தை பண்ணக் கூடாது.

உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு இருக்கு, ராசிக்கு இருக்குனு சொல்லாதிங்க.

ALP லக்னத்திற்கு இருக்கான்னு பாருங்க.

ALP லக்னத்திற்கு இருந்தால் கவனமாக இருக்கனும்.

பங்குச்சந்தையில் பணம் போட்டு இழந்த பிறகு நீங்கள் என்ன பண்ணாலும் போட்ட பணம் திரும்பி வராது. இழந்ததை புடிச்சிடலாம் எனக்கு டெக்னிக்கல் Keyword தெரியும் இதில் நிறைய பேர் தோற்று இருக்காங்க.

Technical தாண்டியதுதான்

இயற்கை பங்குச்சந்தை.

 

உங்கள் ஜாதகத்தில் எவ்வளவு தூரம் அட்சய லக்னம்

உதாரணமாக தனுசு லக்னம் எடுத்துக்கலாம்,

பங்குச்சந்தை Super ah பன்னுவாங்க. எப்படி? Technical ah பன்னி ஜெயிக்க முடியும்.

ஆனால் தனுசு லக்னம் வர வருமானத்தை குறைத்து விடும்.

தனுசு லக்னத்திற்கு Intraday பண்ணக்கூடாது.

அப்படி பண்ணால்,8000 வர வேண்டிய இடத்தில் Sell பண்ண மாட்டாங்க. 10000 எதிர்பார்த்து கடைசியாக 2000 வரும் இது போதும்.

தனுசு லக்னத்திற்கும், கன்னி லக்னத்திற்கும்

Intraday பண்ணக்கூடாது.

6 மாதம் , 1 வருடம் பணத்தை Share ல் போட்டு வைக்கலாம்.

இன்றைக்கு வாங்கி இந்த வார முடிவுக்குள் வரக்கூடிய காலகட்டங்களில் கவனமாக இருக்கனும்.

 

Sector, Intraday , nipty,sensex ,crude oil , Community இதை எல்லாம் தனியா பார்க்கணும்.

இந்தமாதிரி ஒவ்வொன்றுக்கும் ஒரு அமைப்பு இருக்கு.

பங்குச்சந்தை என்று பொதுவாக சொல்கிறோம். அதற்குள் இப்படி நிறைய அமைப்பு இருக்கு.

சில பேர் பங்குச்சந்தை ஏறிட்டே இருக்கும் பணத்தை இழந்துட்டே இருப்பாரு.

சிலபேர் பங்குச்சந்தை இறங்கிட்டே இருக்கும் சம்பாதிச்சுட்டு இருப்பார்.

opposite வரக்கூடிய ராகு கேதுக்கள்.

உங்கள் ஜாதகத்தில் ராகு – கேதுக்கள் எங்க இருக்கு.

குறிப்பாக 2,8ல் இருந்தால் ரொம்ப கவனமாக இருக்கணும்.

 

மிதுன லக்னத்திற்கு Intraday நல்லா இருக்கும்.

ரொம்ப பொறுமையாக 3,6 மாத பயிற்சியில் சின்ன சின்ன நிகழ்வுகளோடு பார்த்து கணக்கீடு செய்து 10,000 முதலீடு போட்டால் சேர்த்து 1000 ரூபாய் கூட முதலீடு செய்யக்கூடாது.

மிதுன லக்னத்திற்கு பங்குச்சந்தை நல்ல ஒத்துப் போகும்.

கண்டிப்பாக Intraday ஒத்துப்போகும்.

 

நீங்கள் பங்குச்சந்தை ஆய்வாளர் ,ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்தால் கண்டிப்பாக இது சம்பந்தப்பட்ட வீடியோ பதிவு செய்வோம்.

 

ALP மிதுன லக்னம் போனால் கண்டிப்பாக பண்ணலாம். அதுவே ALP கன்னி லக்னமாக இருந்தால் கண்டிப்பாக அந்த பக்கம் போக கூடாது.

கும்ப லக்னம் பொறுத்தவரையில் Technical Analyzer. funding சம்பந்தப்பட்டதில் ரொம்ப கவனமாக பன்னாங்கனா Long time ல் பெரிய யோகத்தைக் கொடுக்கும்.

தனுசு லக்னமும், கும்ப லக்னமும் Intraday பண்ணவே கூடாது.

 

மேஷ லக்னத்திற்கு பண்ணால் எதிர்பார்த்த அளவு யோகத்தை கொடுக்குமானோ? 60% கொடுக்கும்.

ரிஷப லக்னத்திற்கு 40% , எவ்வளவுக்கு எவ்வளவு பண்ணாம இருக்காங்களோ அவ்வளவு நல்லது.

மிதுனத்தை பொருத்தவரை நல்லா இருக்கும்.

கடகத்தைப் பொறுத்தவரை 30 to 40% நல்லா இருக்கும்.

கடக லக்னத்தை பொருத்தவரை மனதிற்குள் கற்பனையாக நினைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாம பண்ணி,கடக லக்னம் வரும்போது opposite thinking வரும்.

சிம்ம லக்னத்தை பொருத்தவரை ரொம்ப

கணக்கீடு செய்து விளையாடுவாங்க.

ஆனால் ரொம்ப பெரிய அளவில் இருக்காது. கன்னி லக்னம், துலாம்லக்னமும் வேண்டாம்.

விருச்சிக லக்னத்திற்கு ஒரு Step மேல வரும்.

விருச்சிக லக்னத்திற்கும் பங்கு சந்தைக்கும் ஒரு பெரிய அளவில் யோகத்தை கொடுக்கக் கூடிய அமைப்பு உண்டு.

சரியாக plan பண்ண ஜெயித்துடுவாங்க.

தனுசு லக்னத்திற்கு Intraday பண்ணக்கூடாது. Long time பண்ணலாம்.

மகர லக்னத்திற்கு Intraday பண்ணலாம் ஆனால் அதை கவனமாக பார்த்து பண்ணனும்.

ரொம்ப ரொம்ப கவனமாக பண்ணும் 2000 போதுமானது என்று இருக்கும்.

கும்ப லக்னத்தை பொறுத்தவரை Intraday மட்டும் பண்ணாமல் மற்ற எது வேணும்னாலும் பண்ணலாம்.

மீன லக்னம் கண்டிப்பாக ரொம்ப ரொம்ப கவனமாக பண்ணனும்.

மீன லக்னம் பண்ணவே கூடாது.

 

இதைப்பற்றி சுருக்கமாக சொல்லி இருக்கேன்.

இதைப்பற்றிய விவரம், விளக்கம்

இப்ப மேஷ லக்னத்திற்கு சூரியன் 11 ல் இருந்தால் பண்ணலாமா? பண்ணலாம். ஆனால்,சனிபகவானுடைய பார்வையில் சூரியன் இருந்தால் பங்குச்சந்தை பண்ணக்கூடாது. opposite ah முடிவெடுப்பாங்க முடிந்ததற்கு பின் அந்த செயலை பற்றி சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

 

இந்த மாதிரி கிரக இணைவுகளை வைத்து அடுத்தடுத்து பேசுவோம்.

உங்க லக்னம் எது? உங்கள் லக்னத்தில் இருந்து எந்த கிரகம் எப்படி இருக்கு?ஆய்வு செய்யுங்கள்.

 

அட்சய லக்னத்தில் பங்குச்சந்தைக்கு ஒரு தனி நிகழ்வே உருவாக்கி இருக்கோம்.

மூன்று வருட காலங்கள் அதற்கு உருவாக்கின நிகழ்வு நிறைய இருக்கு.

பாவகங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிகள்,கிரக சேர்க்கைகள், இணைவுகள், ஓரை, உள் ஒரை ,பிரசன்னம் சம்பந்தப்பட்டது, லக்னம், பிரசன்ன லக்னம், பிரசன்ன கிரகம் சம்பந்தப்பட்டது,

கம்பெனி தொடர்பான ஜாதகங்கள் சம்பந்தப்பட்டது,

இப்படி நிறைய ஆய்வுகளை பண்ணி வச்சிருக்கோம்.

ஆனால், அதற்கான முடிவுகள் கூடிய விரைவில் வரும்.

ஏன்னா? துல்லிதம் இல்லாத ஒரு நிகழ்வை நாம் கொடுக்றதுனால எந்த பிரயோஜனம் கிடையாது.

 

பங்குச்சந்தை பண்ண விரும்பினால்

நிறைய பங்குச்சந்தை Class 2, 3 மாதம் Training பாருங்க. அதற்கு பின் ஜோதிடம் சம்பந்தப்பட்ட நிகழ்வையும் கத்துக்கோங்க.

ஜோதிடம் சம்பந்தப்பட்ட நிகழ்வை வைத்து ஒரு Step பாருங்க.

பங்குச்சந்தையில் ஏறுனவரும் சம்பாதிச்டார்,

இறங்னவரும் சம்பாதிச்டார், ALP முறையில்ஜாதகருக்கு வருமானம் இன்றைக்கு இருக்குனா பங்குச்சந்தை பண்ணுங்க. இல்லனா பண்ணாதிங்க. தனிப்பட்ட ஜாதகத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன்.

 

நன்றி.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *