பஞ்சாட்சரம்

Spread the love

11013458_862145247182111_6925839214100243754_n

மூன்று வகை பஞ்சாட்சரம்

நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம்

சிவயநம – சூட்சும பஞ்சாட்சரம்

சிவசிவ – காரணபஞ்சாட்சரம்

நமசிவய – ஸ்தூல பஞ்சாட்சரம்

நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

ந – நிலத்தைக் குறிக்கிறது,

ம – நீரைக் குறிக்கிறது

சி – நெருப்பைக் குறிக்கிறது

வ – காற்றைக் குறிக்கிறது,

ய – ஆகாயத்தைக்குறிக்கிறது

ந – கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது,மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது,கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது,புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது,பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது,சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி

சிவயநம – சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”

“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால் அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே…”

சிவசிவ – காரணபஞ்சாட்சரம்

சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்

சிவ சிவ என்கிலார் தீவினையாளர்

சிவ சிவ என்றிடத் தேவருமாவர்

சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *