பொது பலன்

அரிய பல யோசனைகளை அடுத்தவர்களுக்கு எடுத்து வழங்கும் மிதுன ராசி நேயர்களே!

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உற்றார்- உறவினர்களின் உபசரணை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள்கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிபல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும். சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 4-லும், கேது 10-லும் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது.

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, கௌரவமான உயர்பதவிகள், பலரை வழிநடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். செய்யும் பணி யாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவருவதால் லாபமும் பெருகும்.

முந்தி விநாயகனே…

முந்தி முந்தி விநாயகனே
முக்கண்ணனார்தன் மகனே
வந்தனம் செய்தோமய்யா
வந்து நல்லருள் தாருமய்யா   

(பழம்பாடல்)

சுபகாரியங்கள், விழாக்கள் எதுவாக இருந்தாலும், முழுமுதற் தெய்வமாம் விநாயகப் பெருமான் முந்தி வந்து அருள் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், அவரைத் துதித்து வழிபடுவது நம் முன்னோர் மரபு. அவ்வகையில் தைப்பொங்கல் திருநாளிலும் ஆனைமுகனுக்கே முதல் வழிபாடு.

உத்தராயண புண்ணிய காலத்தின் துவக்கமான தை முதல் நாளை… நம்மை வாழவைக்கும் இயற்கைக்கும், ஆதவனுக்கும் நன்றி சொல்லி வழிபடும் நாளாக்கிவைத்திருக்கி றார்கள் முன்னோர்கள். அவ்வகையில் பொங்கலும், கரும்பும், காய்கனிகளும் படைத்து வழிபடத் துவங்குமுன்… மஞ்சள் பிள்ளையார், சாணப் பிள்ளையார் பிடித்து வைத்து, அவரை முதலில் வணங்கியபிறகே மற்ற வழிபாடுகளைத்  தொடர வேண்டும்.
இந்த முதல் வணக்கம் மட்டுமல்ல, தைத் திங்களில் பிள்ளையாரைப் போற்றும் இன்னும் பல வழிபாடுகள் உண்டு. அவை என்னென்ன என்று தெரிந்துகொள்வோமா?

மார்கழியில் துவங்கி…

மார்கழி மாதம் முழுவதும் ஆண், பெண் அனைவரும் சூரியன் உதிப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக எழுந்து, தினசரி கர்ம அனுஷ்டானங்களை முடித்துக்கொள்வார்கள். வீட்டைச் சுத்தம் செய்து, முற்றத்தின் நடுப் பகுதியை சாணத்தால் மெழுகி, மாக்கோலம் போட்டு, சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, பூக்களைத் தூவி, ‘விக்கினங்களை நீக்கும் விக்னேஸ்வரா! எங்கள் வீடுகளில் அசுர மற்றும் பூத – பிசாசுகளின் தொல்லையால் எந்தவிதமான துயரமும் நேராதபடி காப்பாற்றுவாய்!’ என்று அவரிடம் வேண்டுவர். இப்படி வேண்டிக் கொள்வதால் பிள்ளையார் நம் வீட்டுக்குக் காவலாக இருப்பார்; துர்சக்திகள் நம் வீட்டை அணுகாது. அவை, நாம் வாசலில் போட்டுவைத்திருக்கும் மாக்கோலத்தின் பச்சரிசி மாவைச் சாப்பிட்டுவிட்டு அகன்றுவிடும் என்பது நம்பிக்கை.

இப்படி, மார்கழி மாதம் முழுவதும் வாசலில் வைக்கப்படும் விநாயக (சாணப் பிள்ளையார்) வடிவங்களைச் சேகரித்துவைத்து, தைப் பொங்கலுக்குப்பிறகு ஒரு நல்ல நாளில், மொத்த விநாயக வடிவங்களையும் ஓரிடத்தில் வைத்துப் பூஜை செய்து கொழுக்கட்டை முதலானவற்றை நைவேத்தியம் செய்வார்கள். பின்னர், பிரத்யேகமாக செய்யப்பட்ட சிறிய தேர் ஒன்றில் அவற்றை வைத்து அலங்கரித்து, வாத்திய கோஷத்துடன் எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்த வழிபட்டால், வீட்டில் வறுமை நீங்கும்; வியாதி போகும்; செல்வம் சேரும்; விரும்பும் பேறுகள் கிடைக்கும் என்பது முன்னோர் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.

பிள்ளையார் விரதங்கள்…

பொதுவாக ஆடி மற்றும் தை மாதங்களில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.  இரண்டு மாதங்களுமே அயன காலங்களின் துவக்கம். ஆகவே, இந்த மாதங்களில் வரும் கிருத்திகை, அமாவாசை, பூசம், பூரம் முதலான திருநாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த வரிசையில் பிள்ளையாருக்கான விரத நாட்களும் சேரும்.

வெள்ளி பிள்ளையார் விரதம்: இந்த விரதத்தை ஆடி மற்றும் தை மாத வெள்ளிக்கிழமை களில் பெண்கள் அனுஷ்டிப்பர். அன்று அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, சுத்தமான உடை உடுத்திக்கொண்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்துவைத்து தாழை மடல், நெற்கதிர் ஆகியவற்றைப் பரப்பி கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து பூஜையை முடிப்பர். அதன் பயனாக துன்பம் நீங்கி, நிறைந்த செல்வம் பெற்று சிறப்பான வாழ்க்கையைப் பெறலாம்.

செவ்வாய் பிள்ளையார் விரதம்: இந்த விரதத்தையும் பெண்களே அனுஷ்டிப்பார்கள். ஆடி அல்லது தை மாதம் வரும் ஏதேனும் செவ்வாய்க்கிழமையில் துவங்கி, இத்தனை செவ்வாய்க்கிழமைகள்  என்று கணக்கு வைத்துக்கொண்டு வழிபடுவார்கள்.

இரவில் அக்கம்பக்கத்துப் பெண்கள் யாவரும் ஒன்றுகூடி, நெற்குத்தி அரிசியாக்கி, இடித்து மாவாக்கி, உப்பு சேர்க்காமல், தேங்காய்த் துண்டங்கள் சேர்த்து கொழுக்கட்டை அவித்துப் படையல் செய்வார்கள். பூஜை முடிந்ததும் அவர்களே கொழுக்கட்டைகளை பகிர்ந்து உண்பார்கள். அத்துடன் விடிவதற்குள்ளாக, வழி பாட்டில் வைக்கப்படும் சாணப் பிள்ளையாரை அருகிலுள்ள நீர்நிலையில் கொண்டு சேர்ப்பார்கள். இதனால், சர்வ மங்கலங்களும் உண்டாகும்.

இந்திர விநாயகர்…

பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற்கும் முகமாக, முதல் நாளன்று போகி பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அன்று பழையன கழிதலும் புதியன புகுதலும் நிகழும்.
வடமாநிலங்களில் இந்த நாளில் இந்திரனுக்கு உரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். `போகி’ என்ற சொல், இந்திரனையும் குறிக்கும். மேலும், பயிர் விளைய மழை தேவை. மழைக்கு ஆதாரம் மேகங்கள். இந்திரனே மேகாதிபதி. ஆக, இந்திரனை வழிபடுவதால், மழைவளம் செழிக்கும் என்பது நம்பிக்கை. அவ்வண்ணம் இந்திரனை ஆராதிப்ப துடன், அவர் வழிபட்ட தெய்வங்களையும் பூசிப்பதால், பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.

இந்திர தேவன், பிள்ளையாரை வழிபட்ட ஊர் அச்சிறுபாக்கம். சிவபெருமான் ஆட்சீஸ்வரராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. தேவர்கள் பலரும் வழிபட்ட இந்தத் தலத்துக்கு இந்திரன் வந்து தீர்த்தம் அமைத்து, அதன் கரையில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகப் புராணங்கள் கூறும். இந்த விநாயகருக்கு அச்சுமுறி விநாயகர் என்றும் திருப்பெயர் உண்டு (இந்தப் பெயர் முப்புரம் எரித்த கதையுடன் தொடர்புடையது என்பர்). இவரை வழிபடுவதால், வாழ்வில் இன்னல்கள் நீங்கி இந்திரபோகத்துக்குச் சமமான வாழ்வும் வரமும் கிடைக்கும்.

‘எங்கள் ஊரின் அருகிலோ சுற்றுப்புறத்திலோ இந்திரன் வழிபட்ட தலங்கள் எதுவும் இல்லையே’ என்பவர்கள், ஊரின் கிழக்கு திசையில் அருள் பாலிக்கும் விநாயகரை வழிபடலாம். கிழக்கு, இந்திரனுக்கு உரிய திசை. அங்கு கோயில் கொண்டிருக்கும் விநாயகரை வழிபட்டு,  அருளும் பொருளும் பெறலாம்.

சோதிடம் சார்ந்த நூல்களின் பெயர்கள்:

 

சோதிடம் சார்ந்த நூல்களின் பெயர்கள்:
நவக்கிரக தர்க்க சோதிடம்.
சோதிட ரத்தினக் களஞ்சியமாலை .
சங்கராசாரியர் சோதிடம்.
இரேகை சாத்திரம்.
நவக்கிரக சிந்தாமணி.
தொடு குறி சாத்திரம்.
சகாதேவர் தொடு குறி சாத்திரம்.
ஆருட நூல்.
ஆஸ்தான கோலாகலம்.
சாதக பாரி சாதம்.
சீதா சக்கரம்.
மரண கண்டிகை.
அலகு நூல்.
சூடாமணி உள்ளமுடையான்.
வானியல் (அண்டத்தியற்கை யோசனை)
கிரகண கணிதம்.
பஞ்சாங்கம்.
சர நூல்.
சோதிடம் கணிப்பு.
சோதிடம் பலன் கூறுதல்.
சோதிடம் – நாடி.
சோதிடம் – முகூர்த்தம்.
கனவு – நிமித்தமும்.
வால்மீகர் தீப சூத்திரம்.
சந்தனக் கயறு .
பஞ்சபட்சி சாத்திரம்.
கவுளி காதல் சாத்திரம்.
சகாதேவர் நூல்.
நட்சத்திர ஆருடம்.
பல்லி சாத்திரம்.
சாக சந்திரிகை .
அட்டவர்க்கப் பலன் –
கனவுகளின் பயன் .
மரணக் குறிப்பு.
ஒட்டியம்.
சத்தியாரூடம்.
சோதிட அரிச்சுவடி .
சோதிடக் களஞ்சியம்.
சோதிட க்ரக சிந்தாமணி.
சோதிடச் சுருக்கம்.
சோதிடச் செய்திகள்.
சோதிட சங்கிரக சாராவலி.
சோதிட சங்கிரகம்.
சோதிட சந்திரகாவியம்.
சோதிட சாஸ்திரம்.
சோதிட சிகாமணி.
சோதிட சிந்தாமணி.
சோதிடத் திரட்டு .
சோதிட தசப் பொருத்தம்.
சோதிட நூல்.
சோதிட நூற்குறிப்பு.
சோதிட நூற் றிரட்டு.
சோதிட பாவங்கள்.
சோதிட பிந்து .
சோதிடம் பல சாத்திரம்.
சோதிடம் பல திரட்டு.
சேரிடம் பல மாலை .
சோதிடம் யோக பலன்.
சோதிட மஞ்சரி .
சோதிடரத்தினம் .
சோதிட ரத்தினமாலை .
சோதிட லட்சணம்.
சோதிப்பத்து.

1) அங்கத்துடிப்புகளும் பலன்களும்
2) அதிர்ஷ்ட நியுமரலாஜீ ஜோதிடம்
3) அனுபோக ஜாதக ரகசியம்
4) ஆயுள் பாவங்கள்
5) எண்கணித சோதிடத்தில் கர்ம எண்
6) எளிய ஸ்ரீஜோதி முழுமையான நூல்
7) க்ரந்தாகூர சமஸ்க்ருத பாலபாடம்
8) கர்ம எண்
9) காலக்கண்ணாடி
10) கிரக அவஸ்தைகள்
11) குதிரை பந்தய லாவணி
12) கெளசிக சிந்தாமணி
13) கேரளா சோதிடம்
14) கைரேகை ஜோதிட ஞானம்
15) சந்தான தீபிகை
16) சந்திரகாவியம்
17) சாதக கணிதாமிர்தம்
18) சிற்ப சாத்திர செய்தி அடைவு
19) சுந்தரசேகரம்
20 ) சூடாமணி உள்ள முடையான்
21) சோதிட அகராதி
22) சோதிட ஆனந்த களிப்பு
23) சோதிட கோட்சார சிந்தாமணி
24) சோதிட வாசகம் 2
25) தமிழ் மாத பிறந்தவர்களின் பலன்கள்
26) தஜ க நீலகண்டேயம்
27) நியூமரலாஜீ
28 ) நீயூமரலாஜீ 1
29) பஞ்சாங்க கணனம் – 1
30) பஞ்சாங்க கணனம் – 2
31) பஞ்சாங்க கணனம்
32) பீரங்கி முனிவர் ஜோதிடம் 300
33) பிரஞ் ஞான தீபிகை
33) புத்ரபாவம்
34) புலிப்பாணி சோதிடம் -300
35) பெண்கள் ஜாதகமும் பலனும்
36) பெரிய சோதிட சாதக கணித பாலசிட்சை
37) பெரிய ஜோதிட சில்லறைக்கோர்வை
38 ) மச்சமுனி ஜோதிடம்
39) மனையடி சிற்ப சிந்தாமணி
40) ஜாதக பாஸ்கரன்
41) யோகப் பொருளகராதி
42) ராசி நட்சத்திரங்கள்
43) ராமசேகரம்
44) வானவியல் மூலமும் வரலாறும்
45) விதி விளக்கம்
46) விவாக வியாக்கினம்
47) வீமகவி
48) ஜாதக உண்மை திறவுகோல் – 2 ம் பாகம்
49) ஜாதக தெசாரிஷ்ட நிவாரணி
50) ஜெயமுனி
51) ஜோதிட திறவுகோல்
52) ஜோதிட பால போதினி
53) ஜோதிட வாசகம்
54) ஜோதிட பேரகராதி
55) ஜோதிடராகலாம்

நாடி :
_ _ _
1) கார்க்கேயர் நாடி
2) சகாதேவநாடி
3) சகாதேவர் சோதிட நாடி
4) பதிணென் சித்தர்களின் நாடி சாஸ்திரம்
5) சப்த ரிஷி நாடி கன்யா லக்னம்
6) சப்த ரிஷி நாடிமேஷ லக்னம்
7) சுகர் நாடி
8) நாடி ஜோதிடம்
9) நாடிச் சக்கரம்
10) புஜண்டர் நாடி முதற் பாகம்
11) கந்தர்நாடி

ஆரூடம் :
————
1) அகத்தியர் ஆரூடம்
2) அகத்தியர் பஞ்சபட்சி ஆரூடம்
3) அனுபோக ஆரூட சிந்தாமணி
4) அஷ்டதிக் ஆருடம்
5) ஆஞ்சநேயர் ஆரூடசாஸ்திரம்
6) ஆரூட அலங்காரம்
7) கந்தராரூடம்
8) சாமக்கோள் ஆரூடம்
9) நட்சத்திர ஆரூட சிந்தாமணி
10) பட்சி ஆரூடம்
11) பாய்ச்சிகை ஆருடம்
12) வராகி ஆருடம்
13) வால்மீகர் ஆரூடசாஸ்திரம்
14) வான்மீகர் ஆரூடம் – 40
15) ஜெயமுனிவர் ஆரூட சாஸ்திரம்
16) ஸ்ரீ கணேச ஆரூட தீபிகை
17) ப்ரசன்ன ஆரூடம்

சாஸ்திரங்கள் :
– – – – – – – – – – – – –
1) கூப சாஸ்திரம்
2) வராகர் ஒரா சாத்திரம்
3) அகத்தியர் தற்க சாத்திரம்
4) கப்பல் சாத்திரம்
5) களவு காணும் சாஸ்திரம்
6) குருநாடி சாஸ்திரம்
7) கெ வுளி சாஸ்திரம்
8) சர்வ பிராயண சாஸ்திரம்
9) சாமுத்ரிகா லட்சணம்
10) சாஸ்திரமும் மழையும்
11) அகத்தியர் சாமுத்ரீகா லட்சணம்
12) தும்ம நூல் சாஸ்திரம்
13) நந்தி நூல் ரேகை சாஸ்திரம் – 110
14) பாச்சிகை சாஸ்திரம்
15) பூமிசாஸ்திரம்
16) மச்ச சாஸ்திரம்
17) மனைக் குறி சாஸ்திரம்
18) முக்கால ரேகை சாஸ்திரம்
19) ருது நூல் சாஸ்திரம்
20) வாஸ்து சாஸ்திரம்
21) விவாக சாஸ்திரம்

பஞ்ச பட்சி:
– – – – – – – – –
1) சுக்கும பஞ்ச பட்சி
2) நிமிஷப் பஞ்சபட்சி
3) பஞ்ச பட்சி
4) சுருக்கு பஞ்சபட்சி

விடுபட்ட நூல்கள் :
– – – – – – – – – – – – – – – –
1) ஜ்யோதிஷ ஞான போதினி
2) சிற்றம்பலசேகரம்
3) சோதிடகளஞ்சியம்
4) ஸ்ரீபதி ஜாதக சந்திரிகை விளக்கம்
5) அருட் கொடி சிற்ப சாஸ்திரக் கண்ணாடி
6) காக்கையர் சிற்பம்
7) சாத காலங்காரம்
8) குரு – சிஷ்ய சம்வாத ஹஸ்த இரேகை
9) அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்
10) சினேந்திர மாலை
11) அநு பவ ஹஸ்த ரேகை சாஸ்திரம்
12) பெரிய வருஷாதி நூல்
13) சோதிட அரிச்சுவடி முதல் பாகம்
14) நந்தி தேவர் சோதிடமர்மம்
15) ஜாதக கணிதம் முதல் பாகம்
16) அனுபவ கை ரேகை விஞ்ஞானம்
17) கைரேகை விளக்கம்
18) சோதிட பிரச்சாரம்
19) சோதிட பராக்கிரமம்
20) கைறேகைக் களஞ்சியம்
21) ஜாதக ராஜ மனோரஞ்சிதம்
22) ஜோதிட ஆராய்சி திரட்டு
23) கைரேகைக் கலை
24) சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி