சரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி

https://youtu.be/oyl0b5bJ6a4

அனைவருக்கும் வணக்கம்.
அட்சய லக்ன பத்ததியில் இன்றைக்கு 7ம் பாவகம் பற்றி பார்கலாம்.
திருமணம் எப்போது நடக்கும்.திருமணம் சார்ந்த நிகழ்வுகள் எப்படி இருக்கும்.
நம்முடைய விருப்பத்திற்கு வரன் பார்க்கிறோம் என்பதைவிட நம்ம ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்கு அதற்கு தகுந்த மாதிரி வரன் பார்த்தால் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும். இதை எல்லாரும் புரிந்து கொள்ளனும்.

அந்த ஜாதகர் என்ன வரன் வாங்கி வந்திருக்கார்,
அவருக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமையும்,எப்படி அவருடைய வாழ்க்கை முறை இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு பின் பொருத்தம் பார்ப்பது நல்லா இருக்கும்.
வரன் பார்க்கக் கூடிய விஷயங்களில் கவனமாக இருங்கள்.
பொதுவாக ஜாதகத்தில் நல்ல வாழ்க்கை துணை அமையனும்னா அட்சய லக்னமும்,
அட்சய லக்னத்திற்கு 7ம் பாவகமும் நல்ல அமைப்பில் இருக்கனும்.

உதாரணமாக தனுசு லக்னம் அட்சய லக்னமாக இருக்கும்பொழுது , இந்த 10 வருட அதிபதி குருவாக இருப்பார்.இது ஒரு ஆண் ஜாதகமாக இருந்தால் பெண் ஜாதகம் எப்படி அமையும் என்று பார்க்கப் போகிறோம்.
பெண், இந்த 7ம் வீட்டினுடைய அதிபதி புதன்,
இந்த குருவும் புதனும் எப்படி இருக்காங்க என்பதை பொறுத்து தான் அவர்களுக்கு வாழ்க்கையில் எப்படிப்பட்ட வரன் அமையும்,?நல்லா இருக்குமா? இல்லை பிரச்சனையாக இருக்குமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
குருவும் புதனும் இந்த இடத்திலேயே இருந்தால் நல்ல தம்பதிகளாக 100% அந்த 10 வருட காலங்கள் ஒத்துப் போகும்.
அட்சய லக்ன அதிபதி குரு மீன லக்னத்தில் இருந்தால், புதன் 7வது வீட்டுக்கு 2வது இடத்தில் இருந்தால் அதாவது குரு ALP லக்னத்திற்கு 4ம் வீட்டில், 7ம் அதிபதி 7 க்கு 2ம் இடத்தில், ALP லக்னத்திற்கு 8ம் வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும்.
ஜாதகர் நல்லாதான் இருக்கார், ஆனால் வரக்கூடிய பெண் வீட்டில் இருந்து பிரச்சனைக இருக்கும். ஏன்னா ? லக்னத்திற்கு இது 8ம் வீடு. சஷ்டாஷ்டகம் சம்பந்தப்படுவதால் எதிர்பார்க்கும் அளவு வரன் அமையாது.திருமணம் ஆவதில் பிரச்சனை இருக்கும்.

இதுவே ஜாதகருக்கு குரு 12ம் வீட்டில் இருந்தால், புதன் ALP லக்னத்திலேயே இருப்பதாக வச்சிக்கலாம்.இவருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும் ஆனால் ஜாதகருடைய குடும்பம் ஏத்துக்க மாட்டாங்க.

அட்சய லக்னத்தில் ஒவ்வொரு காலகட்டங்களையும் தனுசுலக்னம் ALPலக்னமாக போகும்பொழுது குரு புதன் 10 வருட காலத்தில் சஷ்டாஷ்டகத்தில் இருப்பதால் திருமணம் ஆவதிலேயே பிரச்சனை இருக்கும்.
எதிர்பார்க்கும் வரன் அமையாது.

அட்சய லக்னம் மகர லக்னமாக போகும் பொழுது மகர லக்ன அதிபதி
சனி பகவான், இங்கு 7ம் வீடு அதிபதியாக சந்திரன் போவார்.
சனியும் சந்திரனும் எப்படி இருக்கு என்பதை பொறுத்து தான் அடுத்த 10 வருடம் அவர்களுடைய திருமண வாழ்க்கை அமையும்.
சனியும் சந்திரனும் நல்ல அமைப்பில் இருந்தால் பிரச்சனை இருக்காது.
அதுவே லக்னத்திற்கு 2ம் வீட்டில் சனி பலமாகவும், 7ம் வீட்டிற்கு 2ம் இடத்தில் சந்திரனும் இருந்தால் பிரச்சனை இல்லை.
ஆனால் இந்த லக்னத்திற்கு 7ம் அதிபதி 8ம் வீடாகவும், இந்த வீட்டுக்கு 7ம் அதிபதி 8ம் வீடாகவும் இருப்பதால் அதனால் இது இரண்டுமே பிரச்சனைக்குரிய காலகட்டங்கள்.
இரண்டு பேருடைய பக்கத்திலும் பிரச்சனை இருக்கும்.
எப்படி வரன் பார்த்தாலும், 7ம் அதிபதியும், லக்னாதிபதியும் சனி சந்திரனாக வருவாங்க, ஜாதகத்தில் அவர்கள் சம சப்தமமாக இருந்தாலும்
பாவகத்திற்கு 8ல்
சஷ்டாஷ்டமாக வருவதால் அது பிரச்சனைக்குரிய திருமணமாக தான் இருக்கும்.
என்ன பொருத்தங்கள் நீங்கள் பார்த்து பண்ணினாலும் திருமண வாழ்க்கை இங்கு கேள்விக்குறியாக இருக்கும்.
அடுத்தவங்க பஞ்சாயத்து வைக்கக்கூடிய சூழ்நிலையை தான் தரும்.

இதற்கு APT Life Partner என்ற செயலி திரு.பொதுவுடைமூர்த்தி சார் கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த செயலியில் பெண்ணுடைய ஜாதகத்தையும், ஆணுடைய ஜாதகத்தையும் கொடுத்தால் அவர்களுக்கு எத்தனை வருடம் ஓத்துப் போகும் எத்தனை வருடம் ஒத்து போகாது ,எப்போதெல்லாம் அவங்க கவனமாக இருக்கணும், எப்போதெல்லாம் நல்லா இருக்கலாம் என்பது அதில் காட்டும்.அதில் உங்கள் ஜாதகத்தை போட்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி.

உங்கள் ராசிக்கு பணவரவு எப்படி இருக்கும்

 

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாள் இனிய நாள் வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.

இன்றைக்கு நிறைய பேர் கேட்கக்கூடிய கேள்வி எனக்கு எப்பொழுது எல்லாம் வருமானம் வரும்.

 

பொதுவாக அட்சய லக்னத்தில் 2ம் வீடு வருமானத்தை தரக்கூடிய வீடு.

உதாரணமாக கன்னி லக்னம் ஒருவருக்கு அட்சய லக்னமாக போனால்,

வருமானத்தை தரக்கூடிய கிரகம் சுக்கிர பகவான்.

சுக்கிரன் இருக்கக்கூடிய நிலையை பொருத்துதான் வருமானம் அந்த 10 வருடத்திற்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இப்ப சுக்கிரன் கன்னி லக்னம் வரக்கூடிய காலகட்டத்தில் சுக்ரன் நல்லா இருந்தால் வருமானம் நிறைய தருவார். அதனால் இந்த 10 வருடம் இவர்களுக்கு சிறப்பான பலனை தரும்.

அந்த கிரகத்தின் உடைய தன்மையை பொருத்தும் அந்த வருமானத்தை எடுத்துக்க முடியும்.

சுக்ரன் என்றால் இனிமையான கிரகம்,அதனால் எல்லா சுபபோகங்களையும் அந்த குடும்பம் மூலமாக வருமானத்தை கொடுக்கும்,

வருமானத்தை ஏற்படுத்திவிடும்.

 

2ம் வீடு என்பது வருமானம் மட்டும் இல்லை நம்முடைய பேச்சினால்தான் எந்த ஒரு நன்மைகளும் நம்மை தேடி வரும்.

2ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் ரொம்ப இனிமையாக பேசுவாங்க.அவங்களுடைய பேச்சிலேயே அவர்களுக்கு தேவையானது எல்லாரும் பண்ணி கொடுத்துடுவாங்க.

அதில் வருமானம் மட்டும் இல்லை அவங்களுக்கு கிடைக்கக்கூடிய எல்லா செயல்களும் வாக்குவன்மையால் கிடைத்து விடும்.

 

சுக்ரன் 3ம் வீட்டில் இருந்தால் வருமானத்திற்கான முயற்சிகள் மட்டும் இந்த காலகட்டத்தில் எடுக்க முடியும்.ஏன்னா? இந்த வீட்டிற்கு வருமானம் என்பது 12-ம் வீடாக போகும்.இந்த 10 வருட காலமும் வருமானத்திற்கான முயற்சிகளில் மட்டும் தான் ஈடுபட முடியும்.

முயற்சி செய்து அந்த வருமானம் அவருக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்றால் இந்த லக்னாதிபதி புதன் எங்கு இருக்கிறார் என்பதை பொறுத்துதான் இந்த முயற்சி அவருக்கு பலனாக மாறுமா?என்பதை

எடுத்துக்கொள்ள முடியும்.

எந்த லக்னமும் அதனுடைய லக்னாதிபதியும் 2ம் அதிபதியும் தொடர்பு பெறும் பொழுது நிச்சயமாக அவர்களுக்கு வருமானத்திற்கான காலம் உண்டு.

அதுபோல் வருமானம் எப்பொழுதெல்லாம் வரும் என்று சாப்ட்வேர் பொதுவடை மூர்த்தி சார் கொடுத்திருக்காங்க.

லக்னாதிபதி வருமானத்திற்கு அதிபதியான 2ம் அதிபதியுடன் இணைந்து எப்பொழுது எல்லாம் செயல்படுகிறதோ

அதாவது 1 வருடம், 1 மாதம், 10 நாள் என்பது ஒரு நட்சத்திர பாதத்தினுடைய அளவுகளாக குறிக்கப்படும்.

இந்த பத்து வருடத்தில் ஒன்பது நட்சத்திர பாதங்களாக பிரிக்கிறாங்க

இந்த 1 வருடம் ,1 மாதம், 10 நாள் அதிபதியோடு எப்பொழுதெல்லாம் இரண்டாம் அதிபதி சம்பந்தப்படுகிறது அப்பொழுது எல்லாம் அவர்களுக்கு வருமானத்திற்கான காலம்.

 

இந்த 1 வருடம், 1 மாதம் ,10 நாள் என்பது 405 நாட்களாகவும், அடுத்துஒரு உட்பிரிவு 45 நாட்களாகவும், அடுத்து ஒரு உட்பிரிவு 5 நாட்களாகவும் அடுத்து 13 மணி நேரம் 20 நிமிடமாகவும்,அடுத்து 1 மணி நேரம் 30 நிமிடமாகவும் அடுத்து 10 நிமிடமாகவும் எடுத்து இருக்காங்க. இதில் ALP சாப்ட்வேரில் நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

லக்னத்தின் அதிபதியோடு 2ம் இடத்தின் அதிபதி சம்பந்தப்படும்போது உங்களுக்கு வருமானத்திற்கான காலம் இருக்கா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

புதனும், சுக்ரனும் 405 நாள் காலகட்டங்களில் சம்பந்தப்படுகிறதா, இல்லை 45 காலகட்டங்களில் சம்பந்தப்படுகிறதா என்பதை பார்த்தாலே எந்த காலகட்டங்களில் வருமானம் வரும் என்பதை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

வருமானம் என்பது தொழிலில் மட்டும் இல்லை,அவர்களுடைய குடும்பத்திலிருந்து எதிர்பார்க்கலாம். இல்லை சகோதரர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம்.இல்லை அவர்களுடைய வீடு , வண்டி ,வாகனம், வாடகை இதிலிருந்து வருமானம் எதிர்பார்க்கலாம்.குழந்தைகளிடமிருந்து வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

இந்த 13 மணிநேரம் 20 நிமிடத்தில் சுக்ரனும் புதனும் தொடர்பு பெறும் பொழுது அவர்களுக்கு வருமானத்திற்கான வாய்ப்பு உண்டு.

வங்கி கடனுக்கு இந்த 45 நாள் இந்த 2ம் இடத்தோடு சம்பந்தப்பட்டால் அந்த 45 நாளில் வங்கிகடன் கிடைக்கும்.

வருமானம் என்று எடுக்கும் பொழுது ஒவ்வொரு அட்சய லக்னத்திற்கும் இரண்டாம் பாவக அதிபதி லக்னாதிபதியோடு தொடர்பு பெறும்பொழுது மட்டுமே அவர்களுக்கு வருமானம் சார்ந்த நிகழ்வுகள் நடக்கும்.

 

நன்றி.

ALP-ஜோதிட முறையில் துல்லிய பலன்களை அறிவது எப்படி

அனைவருக்கும் வணக்கம்.
அட்சய லக்ன பத்ததியில் ஒவ்வொரு நாளும் ஒரு தன்மைகளை பற்றி பார்க்கிறோம்.
இன்றைக்கு நிறைய பேருக்கு பாரம்பரிய ஜோதிடத்திற்கும் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறைக்கும் என்ன வித்தியாசம் இருக்குனு கேக்குறாங்க அது என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.

ஒரே லக்னம் ஒரே ஒரு கிரகத்தை மட்டும் எடுத்து ALP ல் எப்படி மாற்றி பலன் கொடுக்கும் என்பதை பார்க்கலாம்.

உதாரணமாக பிறப்பு லக்னம் தனுசு லக்னம் ,இதில் லக்னாதிபதி குரு 11-ல் துலாமில் இருக்கார்.அதாவது குரு 11 இல் நல்லா இருக்கு என்று
எடுத்திருக்கோம்.

இதில் ஒவ்வொரு ALP லக்னம் மாறும்பொழுதும் அது எந்த மாதிரி அமைப்பில் பலன்களை தரப்போகுது என்று பார்க்கலாம். பிறப்பு லக்னம் முடிந்தபின் ALP லக்னம் மகர லக்னமாக வரும் பொழுது அவங்களுக்கு குரு என்ன ஆதிபத்தியம் வாங்குகிறார் என்பது பொறுத்து பலன் மாறுபடும்.
லக்னத்திற்கு லாபமாக இருக்கிறவர்,அடுத்து மகர லக்னமாக வரும்பொழுது 3ம் இடத்திற்கும், 12ம் இடத்திற்கும்,ஆதிபத்தியம் வாங்கி 10 வது வீட்டில் இருக்கும்.
அப்ப 3ம் வீட்டுஉடைய வேலையும் 12 ஆம் வீட்டு வேலையும் 10 வது வீட்டிலிருந்து அவர் தரப்போகிறார்.
ஏன்னா? அவருடைய 3 முயற்சியும், 12 விரயமும் அவருடைய தொழில் ஸ்தானத்திலிருந்து வேலை செய்கிறது.
அவருக்கு தொழில் ரீதியாக முயற்சிக்கு ஏற்ற பலனும் உண்டு, அங்கு விரயமும் உண்டு.
இந்த 10 வருட காலங்கள் தொழில் ரீதியான அழுத்தங்களை சந்திக்க இந்த ஜாதகர் தயாராக இருக்க வேண்டும்.

அடுத்து ஜாதகருக்கு கும்ப லக்னம் ALP லக்னமாக வரும்பொழுது குரு 2ம் வீட்டிற்கும், 11ம் வீட்டிற்கும் ஆதிபத்தியம் ஆடுவார். இதற்கு முன் வீட்டில் விரயமாக இருந்தவர் இங்கு லாபமாக மாறிடுவார்.
வருமானத்தை தரக்கூடிய 2ம் இடத்திற்கு அதிபதியாகிடுவார்.
2, 11 க்கு அதிபதி பாக்யத்தில் 9ம் இடத்தில் இருப்பார்.
இங்கு அவருக்கு தன லாபங்களை பாக்கியமாக இருந்து கொடுக்கும்.
அப்போ ஒவ்வொரு லக்னம் மாறும்பொழுதும் அதனுடைய ஆதிபத்தியம்
எப்படி மாறுகிறதுனு அட்சய லக்ன பத்ததியில் அழகா தெரிந்து கொள்ளலாம்.
12 லக்னத்திற்கும் ஆதிபத்தியங்கள் ஒவ்வொரு கிரகங்களை வைத்து மாறும்.
அது என்ன ஆதிபத்தியம் வாங்குதோ அதற்கு தகுந்த பலன்களை தான் நமக்குத் தரும்.
கும்ப லக்னத்திற்கு நமக்கு பொருளாதார மேன்மைகளை தரக்கூடியவர் குருவாக மாறுகிறார்.
இதுவே கும்பலக்னம் போகும்பொழுது குரு கடகத்தில் இருந்தால் உச்சமாக
இருக்கும். இதுவே 2,11 க்கும் ALP லக்னத்திற்கு 6 வது வீட்டில் இருந்தால் ருண ரோக சத்ரு உபாதைகளை தருவார் வருமானத்தையும் தருவார் லாபத்தையும் தருவார் ,ஆனால் அதெல்லாம் ருண ரோக சத்ரு உபாதைகளில் செலவாகும்.
அதனால் வரக்கூடிய வருமானம் அவருக்கு தேவையில்லாத காரணங்களால் செலவாகிவிடும்.

மீன லக்னம் ALP லக்னமாக போகும்பொழுது குரு 8ம் இடத்தில் இருக்கார். லக்னத்திற்கும் 10க்கும் 1, 10 வீட்டின் வேலையை 8ம் வீட்டில் இருந்து செய்வார்.
அப்போ மீன லக்னத்திற்கு லக்னாதிபதி எட்டில் இருக்கலாமா? இருக்க கூடாது.
10ம் அதிபதியும் 8ல் இருக்க கூடாது.
அதனால் ஜாதகர் இந்த 10 வருட கால கட்டங்கள் , ஏன்னா? லக்னதியுடைய ஆதிபத்தியம் வாங்கும் பொழுது குரு 8ம் இடத்திலிருந்து வேலை செய்வதால் ஜாதகர் தன்னை நினைத்து, தொழிலை நினைத்து 8ம் வீடு வரும்பொழுது கஷ்ட நஷ்டங்களை சந்திக்கக்கூடிய காலகட்டமாக அமையும்.

அதேநேரம் 1, 10 க்கு அதிபதியாகி 8ம் வீட்டில் இருப்பதால் எதிர்பாராத ஒரு நேரத்தில் ஏதாவது வாய்ப்புகளை கொடுத்து யோகத்தை கொடுத்திடுவார்.

அட்சய லக்னம் மேஷ லக்னமாக போகும்பொழுது குரு வாங்கக்கூடிய ஆதிபத்தியம் 9ம் வீட்டினுடைய ஆதிபத்தியமும், 12ம் வீட்டு ஆதிபத்தியமும் வாங்குவார்.அவர் 7ம் வீட்டில் இருந்து வேலை செய்வார்.
அதனால் குரு உடைய தன்மைகள் 9 ,12க்கு அதிபதியாகி பாக்கியத்தையும் 7ம் வீட்டிலிருந்து கொடுப்பார் விரயத்தையும் 7ம் வீட்டில் இருந்து கொடுப்பார்.
அந்த வீட்டினுடைய காரகத்துவங்களையும் கணக்கில் எடுத்துக்கணும்.
அதனால் தந்தை சார்ந்த நிகழ்வுகள் 7ம் வீட்டில் இருந்து அவருக்கு லாபத்தை ஏற்படுத்தும்.
அதேசமயத்தில் அயன சயன போக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12ம் வீடு வரும் பொழுது இங்கு பிரச்சனைகளை கொடுக்கும்.
விரயம் உண்டு. விரயம் யாருக்கு ஏற்படும் , விரயாதிபதி 7ல் இருக்கும்பொழுது ஆணுடைய ஜாதகமாக இருந்தால் மனைவி சார்ந்த விரயமும்,
பெண்ணுடைய ஜாதகமாக இருந்தால் கணவன் சார்ந்த விரயமும்,பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

அட்சய லக்னம் ரிஷப லக்னமாக போகும்பொழுது ,ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கக்கூடிய காலகட்டம். ஏன்னா?ரிஷப லக்னத்திற்கு 8ம் வீட்டினுடைய ஆதிபத்தியமும், 11-ம் வீட்டு ஆதிபத்தியமும் 6வது வீட்டிலிருந்து செயல்படுத்துவார். இங்கு குரு உடைய தன்மைகள் சிறப்பாக இருக்காது. என்ன காரணம்? லக்னத்திற்கு 8ம் வீட்டுடைய ஆதிபத்தியம் அஷ்டமாதிபதி குரு 6ம் வீட்டிலிருந்து அவருக்கு பிரச்சனைகளை தரக்கூடிய காலமாக இருக்கும்.
அவரே 11ம் வீட்டிற்கும் அதிபதியாகிறார்.லாபத்தை தருவாரானா?அவர் இருக்கக்கூடிய இடம் ALP க்கு 6ம் வீடு. ருண ரோக சத்ரு உபாதைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பதால் பிரச்சனைகளை தான் அதிகமாக கொடுப்பார்.

அட்சய லக்னம் மிதுன லக்னமாக போகும்பொழுது , குரு 5வது வீட்டில் இருப்பார். 7வது வீட்டிற்கும், 10 வது வீட்டிற்கும் வேலையை 5வது வீட்டில் இருந்து செய்வார். ஜாதகருக்கு மிது லக்னத்திற்கு 7க்கு ஆதிபத்தியம் குரு ,10 க்கு அதிபத்தியம் குரு 5வது வீட்டில் இருந்து வேலை செய்யும்.
அதனால் அவருடைய எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகள் எல்லாம் கூட்டு தொழில் செய்யலாமா ,நல்ல லாபங்கள் கிடைக்குமா என்றஎண்ணங்களில் தான் போகும். அவர் செயல்படுத்துவரானா தொழில் ஸ்தானத்திற்கு பிரச்சனைக்குரிய காலமாக இருப்பதால் செயல் வடிவம் இங்கு ஆகாது.
யோசனையிலேயே காலத்தை நகர்த்துவார்.
திருமணம் சார்ந்த நிகழ்வு, நண்பர்கள் சார்ந்த நிகழ்வு ,கூட்டுத் தொழில் சார்ந்த நிகழ்வு, இவருக்கு யோகத்தை கொடுக்கும்.
ஏன்னா? 7ம் பாவகத்தின் மூலமாக குரு நல்ல பலன்களை கொடுப்பார்.

சகல ஐஸ்வர்யம் பெருக இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுங்கள் #alpastrology #alpnewmethod #alpjothidam

சகல ஐஸ்வர்யம் பெருக இந்த நேரத்தில் விளக்கு ஏற்றுங்கள் #alpastrology #alpnewmethod #alpjothidam

#அட்சய_லக்னம்_பத்ததி_ஜோதிடம்

#ஜோதிடம்

#அட்சய_லக்ன_பத்ததி_புத்தகம்

#அட்சய_லக்ன_பத்ததி_pdf

#ALP_astrology_contact_Alpjothidamnumber_9786556156

https://youtu.be/doG67ZNx6GE