அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு லக்னம் 10

வணக்கம்

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் ஒரு லக்னம் 10 வருடத்திற்கு
மேஷ லக்னத்திற்கு பார்த்தால் 6ம் பாவக அதிபதி அதாவது நோயினுடைய தன்மை, ஒரு டாக்டர் கிட்ட போனா Blood test எடுத்து பார்ப்போம் அதாவது இந்த நோயின் உடைய தன்மை இவ்வளவு இருக்கு என்று பகுத்து பார்த்தல்.அதாவது ஒரு மருந்து கொடுக்கும் முன்னாடி பகுத்துப் பார்ப்பாங்க.

அதுபோல் ஒரு ஜாதகர் ஒரு ஜோதிடரிடம் வரும் பொழுது இந்த காலகட்டத்தில் புதன் 6ம் அதிபதியாக லக்னத்தோடு தொடர்பில் இருந்தால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, ரத்தம் சம்பந்தப்பட்டதில் அழுத்தம் இருக்கு என்பதை முடிவு பண்ணனும்.
என்ன பிரச்சனை என்பதை கண்டுபிடித்தால்தான் 10 வருடத்திற்கு பிரச்சனை இருக்கா, இல்லை 4 வருடம், 5 மாதம் ,10 நாள் பிரச்சனை இருக்கா என்பதை மேலோட்டமாக பார்க்கும் பொழுது,
மேஷ லக்னத்தில் புதன் இருக்கக்கூடாது ,அப்படி மேஷ லக்னத்தில் புதன் இருந்தால் இந்த 10 வருடத்திற்கு ஜாதகருக்கு நோய்.
ஏதாவது ஒரு பிரச்சனை இவருக்கு வரும்.
நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை,தலைவலி, மூக்கு, சைனஸ் சம்பந்தப்பட்டது, மூளை அழுத்தம் சம்பந்தப்பட்டது,சில பேருக்கு மூளை heat னால் நிறைய பேருக்கு ரொம்ப உருக்கி எடுக்கும்.நரம்பு சம்பந்தப்பட்டது மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்,கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும்.
10 வருடத்திற்கும் இருக்கும் சில பேருக்கு தெரியும் சில பேருக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ரொம்ப அமைதியாக இருக்கனும்,ரொம்ப யோசிக்க கூடாது.
நடக்காத நிகழ்வுகளை நடக்கனும், நடக்கனும்னு இவர்களை அறியாமலே நிறைய நிகழ்வு போராட்டத்தை குறிக்கும்.

ரிஷப லக்னத்திற்கு சுக்ரன் , லக்னாதிபதி லக்னத்தில் இருக்கக்கூடாது.
நீங்கள் என்ன பண்ணாலும் சரி ,10 வருடத்திற்கு நோய் இருக்குமானா? வெவ்வேறு வகையில் வரும்.
6 மாதத்திற்கு உடம்பு வலிக்கும், 6 மாதத்திற்கு அலர்ஜியாக இருக்கும்,
6 மாதத்திற்கு மருத்துவ செலவு கை வலி, கால் வலி, மேல் வலி,தலையில் முடி கொட்டுவது, இப்படியே இந்த 10 வருட காலத்திற்கும் ஏதாவது ஒரு நோயை கொடுத்து விடும்.
அதனால் மேஷ லக்னத்திற்கு புதன் எப்படி இருக்க கூடாதோ அதேபோல் ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன் இருக்கக் கூடாது.

மிதுன லக்னத்திற்கு செவ்வாய் லக்னத்தில் இருக்கக் கூடாது.

அதேபோல் கடக லக்னத்திற்கு குரு உச்சமாக கூடாது. கடக லக்னத்திற்கு உச்சமானால் கை கால் மேல் எல்லா இடத்திலும் கொழுப்பு கட்டிகள் வரும்.
எப்பொழுதும் கொழுப்பு சம்பந்தப்பட்டது கட்டிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

அதேபோல் சிம்ம லக்னத்திற்கு சனி பகவான் லக்னத்தில் இருக்கக் கூடாது.

கன்னி லக்னத்திற்கும் சனிபகவான் லக்னத்தில் இருக்கக் கூடாது.

துலாம் லக்னத்திற்கு குரு பகவான் இருக்க கூடாது.

விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் இருக்க கூடாது .

தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் இருக்கக் கூடாது.

மகர லக்னத்திற்கு புதன் இருக்கக் கூடாது.

கும்ப லக்னத்திற்கு சந்திரன் இருக்கக்கூடாது

மீன லக்னத்தில் சூரிய பகவான் இருந்தால் 10 வருடத்திற்கு நீங்கள் ஒன்று கடன் ஆகணும்,இல்லை வழக்கு வரணும், இல்லை நோய் வரணும் இதில் ஏதாவது ஒன்று வரணும்.
இதில் முதன்மையாக நோய் அதிகமாக பாதிக்கும்.
இந்த 12 லக்னத்தில், உங்கள் லக்னத்தை ஆய்வு செய்து பாருங்கள்.

இப்படி வந்தால் அதை தடுக்க முடியுமா என்று கேள்வி வரும்.

ஒரு மருத்துவமனை போனால் அங்கு மருந்து மாத்திரைகள் இல்லாமல் ஏன் மருத்துவமனை போறோம்.
மருந்து மாத்திரை என்பது பரிகாரம் தான்.
நோய் வந்தால் அதை தடுப்பதற்கான வழி என்ன,இதை ஏதாவது ஒரு ஜோதிடரிடம் போகும் போது கண்டிப்பாக ஏதாவது ஒரு பரிகாரம் இருக்கும்,அவங்க சொல்ற பரிகாரத்தை அதை சரியாக செய்ய வேண்டும்.
ஆனால் பரிகாரத்தை யாரும் செய்வதில்லை,

இனிப்பு, புளிப்பு சாப்பிட்டால் உடம்பு வலிக்கும்.
நிறைய காரம், புளிப்பு சேர்ந்தால் மேல் வலிக்க ஆரம்பிக்கும்.
இனிப்பு சம்பந்தப்பட்டால் நிறைய மேல் வலிக்கும்.
அதே போல் நிறைய யோசிக்க வைக்கும்,
அப்போ இந்த உணவுகள் தான் ஒரு மனிதனை இயக்குகிறது.
லக்னத்தில் சுக்கிரன் இருந்தால் கண்டிப்பாக 10 வருடத்திற்கு நோய் வரும் அதனால் கவனமாக இருங்கள்.

பரிகாரம்:

உதாரணமாக லக்னத்தில் உங்களுக்கு மேல் வலிக்குதுனா இனிப்பு சம்பந்தப்பட்ட பொருளை முழுமையாக குறைத்து விடனும்.

இதுவே சிம்மம் லக்னத்தில் சனி இருந்தால் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை தொடவே கூடாது.
கடக லக்கின காரர்களும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை தொடக்கூடாது சிம்மம் கடகம் லக்னக்காரர்கள் தன்னை அறியாமலேயே எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருளை சாப்பிடுவார்கள்.
காரம், உப்பு, புளிப்பு, இனிப்பு இந்த 4 விஷயங்களில் நீங்கள் கட்டுப்பாடாக இருந்தால் நோய் சம்பந்தப்பட்டது வரவே வராது.
இப்படி இருந்தால் சந்தோஷமாக வாழலாம்.
நோய்க்கு காரணம் யாருமில்லை,ஜாதகர் தான்.
ஆனால் நீங்கள் மாறலாம்.இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் இது எல்லாத்தையும் குறைத்துக் கொள்ளலாம்.

இருக்கக்கூடிய காலத்தில் சம்பாதிப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷம் சம்பாதித்ததை சேமிப்பது அவசியம். சேமிப்பு என்பது நீங்கள் விரயம் பண்ணாமல் இருந்தாலே அதுவே சேமிப்பு.விரயம் என்பது மருத்துவ செலவு.

இவர்கள் சாப்பிடாமல் தானம் கொடுக்கலாமா?

ரிஷப லக்னத்திற்கு Sweet தானம் கொடுக்கனும்.

மிதுனலக்னத்திற்கு Mixer சம்பந்தப்பட்டது தானம் கொடுக்கனும்.

சிம்ம லக்னத்திற்கு தயிர் சாதம் தானம் கொடுக்கணும். தானம் கொடுப்பது நல்லது. அதைவிட நமக்கு நாமே உணவில் குறைத்துக் கொண்டால் தானம் கொடுக்க வேண்டியது இல்லை.

உங்கள் லக்னத்தை பதிவு செய்து பாருங்கள் google Play Store ல்
ALP Astrology என்ற மென் பொருள் உள்ளது.
அதில் பதிவு செய்து பாருங்கள்.

நன்றி.

 

|

காலகட்டத்தில் நிறையபேர் குழந்தை பாக்கியம் தடையினால்

வணக்கம்.

 

இன்றைய காலகட்டத்தில் நிறையபேர் குழந்தை பாக்கியம் தடையினால் நிறைய பேர் டெஸ்ட் டியூப் பேபி நோக்கி போயிட்டு இருக்காங்க. இதற்கு

எந்த மாதிரியான கிரகங்கள் காரணம்? ALP முறையில் இதை எப்படி பார்க்கலாம் அதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கா?

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் தனிப்பட்ட முறையில் தான் பலன் சொல்ல முடியும்.ஏன்னா இது ஒரு நபர் சார்ந்த நிகழ்வு அல்ல,இரண்டு பேருடைய முடிவு. கணவன் மனைவியுடைய அமைப்பு.

இப்போ,கை வலித்தால் இதற்கு காரணம் இதுதான் அப்படின்னு சொல்லலாம்.

ஆனால் குழந்தை இல்லனா கணவன் நிலையில் பிரச்சனை இருக்கா?

மனைவி நிலையில் பிரச்சினை இருக்கா ?என்பதை பார்க்கணும்.

ரொம்ப ரொம்ப கவனமாக பார்த்தால் தான் இதை சொல்லமுடியும்.

 

எல்லாரும் என்ன சொல்றாங்கனா, சார் நா நிறைய தடவ டாக்டர் பார்த்த, 2 தடவ டெஸ்டியூப் பேபி வச்சி பாத்த , ஆனால் எதுவும் நடக்கல இதனால் பொருளாதார செலவு ஒரு பக்கம், மன உளைச்சல் , உடலில் வேதனை இதெல்லாம் ரொம்ப ரொம்ப கஷ்டம்.

 

இதை பற்றி நிறைய நிகழ்வுகள் நான் ஆய்வு செய்தபோது , இரண்டு பேருவுடைய நிலையிலும் பிரச்சனை இருக்கும். மருத்துவம் என்று போய்ட்டால் பெண்ணுடைய பலமாக இருந்தால் கூட கருமுட்டை எடுத்து வளர்த்து கரு உண்டாக்கலாம்.

அதனால் பெண்ணுடைய ஜாதகத்தை முதலில் பார்க்கணும்.

 

 

இதுவே ALP லக்னம் மேஷ லக்னம் ஒருவருக்கு வந்தால் ,எப்பொழுதும் சனிபகவான் பல படனும். ஏன்னா? சனி பகவான் எங்கு இருக்கு என்று பார்த்துட்டு தான் பலன் சொல்ல முடியும். சனி பகவான் இருந்தால் சூரியனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு பார்கனும். சனி பகவானும், சூரியபகவானும் 6,8 ல் சஷ்டாஷ்டகமாக இருந்தால்,குழந்தை பிறப்பு, மருத்துவம் மூலமாக குழந்தை பிறப்பு ரொம்ப ரொம்ப கடினம்.

 

ALP ரிஷப லக்னம் வந்தால் இதற்கும் சனிபகவான் பலபடனும்.இல்லைனா ரொம்ப கஷ்டம்.புதனுக்கும் சனிக்கும் உள்ள தொடர்பு , புதனும் சனியும் Alp ரிஷப லக்னத்திற்கு 6 ல் இருந்தால், மருத்துவ செலவு உண்டு

அதுவே அட்டமத்தில் இருந்தால் எதிர்பார்த்த மாதிரி இருக்காது.

அகவும் ரிஷப லக்னத்திற்கு புதனும், சனியும் 11 ல் இருந்தால் குழந்தை பிறப்பு கிடையாது.

Alp முறையில் குழந்தை பிறப்பு வாய்ப்பு இருக்கு என்று சொல்ல காரணம் ஒரு கிரகம் பலமாக இருந்தால் வாய்ப்பு இருக்கு என்று சொல்லுவோம்.

2 கிரகம் பலமாக இல்லைனா இதற்கு முயற்சி செய்ய வேண்டாம்,வேற ஏதாவது தத்து குழந்தை எடுத்துக்கோங்கனு சொல்லிடுவோம்.

2 கிரகம் நல்லா இருந்தால் முயற்சி செய்யுங்கள், டாக்டர் அறிவுரை கேட்டுகோங்க.

அறிவியலுடைய அமைப்பு இன்றைக்கு நிறைய வளர்ச்சியடைந்துவிட்டது.

காரண காரியங்கள் சில பேருக்கு முன்கூட்டியேசில விஷயங்களை சொல்லும்.

 

முதலில் குழந்தை பிறப்புனா குரு பலப்படனும்.குரு பகவான் பலபட்டால் மட்டும்தான் அந்த குழந்தை பிறப்பு ஆத்மார்த்தமாக சந்தோஷமாக இருக்கும்.

இல்லை எனக்கு குருநீசமாக இருக்கு, குரு ராகுவோட சேர்ந்திருக்கு,இப்படி குரு ஏதாவது ஒரு கிரகத்தோடு சேர்ந்து இருந்தால்,

குருவும் சூரியனும் சேர்ந்திருந்தால் குழந்தை பிறப்பில் பெரிய அழுத்தத்தை கொடுக்கும்.

அப்படி ஒரு நிகழ்வு இருக்கு. ஆனால் எனக்கு குழந்தை பிறந்துட்டு

அப்படி சொன்னாங்கன்னா?

 

குழந்தை பிறப்பு பிறந்த பிறகு குழந்தை மூலமாக தண்டனை அனுபவிக்க வேண்டும் ஜாதகர் என்பது விதியாக இருக்கும்.

குரு பலபட்டால் மட்டும்தான் வம்சவிருத்தி என்பது ஒரு ஆணுக்கு செவ்வாய் பலப்படனும் , ஒரு பெண்ணுக்கு சுக்ரன் பலப்படனும் ,குழந்தைன்னா குரு பலப்படனும் இந்த மூன்று கிரகம் பலபட்டால் மட்டும்தான் குழந்தை பிறப்பு திருப்தியாக இருக்கும்.குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

 

ALP மிதுன லக்னம் வந்தால் எப்பொழுதும் சுக்கிரனும், குருவும் பல படனும்.

சுக்கிரன் குரு பலப்பட்டால் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கும்.

இல்லை சுக்கிரன் – குரு 6, 8 ,10 ,12 இல் இருந்தால் அந்த குழந்தை பிறப்பு எதிர்பார்த்தது போல் இருக்காது.

 

ALP கடகலக்னம் வந்தால் ,செவ்வாய் பல படனும்.

கடக லக்னத்திற்கு செவ்வாய் பலப்பட்டால் குழந்தை பிறப்பு நல்லா இருக்கும்.

கடக ராசி பொருத்தவரை சந்திரன் செவ்வாய் ஜாதகருடைய உடம்பு வீக்கா இருக்கும்.சாப்பிட மாட்டாங்க, சாப்பிட்டாலும் சரியாக சாப்பிட மாட்டாங்க,உடம்பு அவங்களை கெடுத்துக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுவாங்க.,சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாங்க.

 

ALP சிம்ம லக்னம் வந்தால், குரு பலபட்டால் கண்டிப்பாக பெரிய யோகத்தை கொடுத்துவிடும். அவர்கள் இருக்கக்கூடிய இடத்தாலேயே பிரச்சனையாகும்.

சிம்ம லக்னத்திற்கு உடம்பில் பிரச்சனை ஒரு பக்கம்,

அதேபோல் பெண்ணாக இருந்தால் நீர் கட்டி, நீங்குமிழி மூலம் பிரச்சனை,

ஆணாக இருந்தால் ஆணாலே பிரச்சனை வரும்.

அதுபோல் கனவு கற்பனைகள், ஆசைகள் மூலமாக கற்பனை மூலமாகவே வாழ்க்கை நடத்தக்கூடிய அமைப்பு சில நேரத்தில் உண்டுபன்னும்.

அந்த கற்பனைகள் மூலமாகவே குழந்தை பிறப்பு தள்ளிப் போகும்.

குரு பலப்பட்டால் மட்டும் தான் யோகத்தை கொடுக்கும்.

குரு சுக்ரன் சப்போர்ட் பன்னால் நல்லா இருக்கும்.

 

ALP கன்னி லக்னம் வந்தால், புதனும் சனியும் பலப்படனும். புதன் – சனி பலப்பட்டால் , புதன் சனி 6, 8,ல் இல்லாமல் இருந்தால் மருத்துவத்தின் மூலமாக குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு.

 

ALP துலாம் லக்னம் வந்தால் , சனியும் சந்திரனும் 10 வருட காலம் ALP லக்னத்தில் போனால் மிகமிக கவனமாக இருக்கனும். படுத்தி எடுக்கும்.

துலாம் லக்னக்காரர்கள் தான் குழந்தை தத்து எடுத்துடுவாங்க.

மேஷம், துலாம் தத்து பிள்ளை எடுப்பதில் முதலில் இருக்கும்.

ரொம்ப கஷ்டமாக இருக்கும் சில நேரம் தத்து பிள்ளை எடுக்கும் யோகத்தை கொடுக்கும், சில நேரம் தத்து பிள்ளை எடுத்து அவயோகத்தையும் கொடுக்கும்.

 

ALP விருச்சிக லக்னம் வந்தால், குரு பலப்படனும். விருச்சிக லக்னம் வந்தால் உடல் உபாதைகள் மூலம் தான் பிரச்சனை இருக்கும்.

உடலில் பிரச்சனை இருக்கும்.

விருச்சிகத்தில் வரும்பொழுது முழுக்க முழுக்க உடலில் தான் பிரச்சனை.

உடலில் கொடுக்ககூடிய சக்தி, பெறக்கூடிய சக்தி, தாங்கக்கூடிய சக்தி இருக்காது.

 

ALP தனுசு லக்னம் வந்தால் , செவ்வாய் பலப்படனும். செவ்வாய் பலப்பட்டு, புதனும் பலப்பட்டால் இந்த நேரத்தில் டாக்டரிடம் அணுகுமுறைகள் மூலமாகவே தடைபடும். சரியாக டாக்டர் சொன்னதை பின்பற்றினால் யோகம் உண்டு.

 

ALP மகரலக்னம் வந்தால், சுக்ரன் பலப்படனும், சுக்ரன் பலப்பட்டால் மகர லக்னத்திற்கு யோகத்தை கொடுக்கும்.

 

ALP கும்பலக்னம் , புதனும் செவ்வாயும் சம்பந்தப்பட்டால் ஏதோ ஒரு வகையில் பலமாக யோகத்தை கொடுக்கும். அறுவை சிகிச்சை, செயற்கை கருவூட்டல் மூலமாக தான் குழந்தை பிறக்கும்.

 

ALP மீன லக்னம் சந்திரனும் குருவும் சம்பந்தப்படனும், இது எதிர்பாரத யோகத்தை கொடுக்கும். சில நேரத்தில் இவர் களுக்கு வைக்கக்கூடிய குழந்தைகள் இரட்டை குழந்தையாக பிறக்கும் அமைப்பு இருக்கு.

 

வழிபாடு:

மருத்துவம் என்றால் தன் வந்திரி பகவான், அதில் பைரவர் வழிபாடு மட்டும்தான். வேறு ஒன்றும் இல்லை.

 

குழந்தை இல்லாதவர்கள் காலையில் 4:30 to 6 தலை குளிச்சிடனும்.

ஏன்னா இவர்களுடைய உடல் உஷ்ணம் அதிகரிக்க அதிகரிக்க கர்பப்பை வீக்காகும்.

அடிக்கடி தலைமுடி இறுக்கி பின்னி போடணும் என்று சொல்வேன். ஏன்னா? அந்த காலத்தில் தலைமுடி இறுக்கி பின்னினால் கர்பப்பை சந்தோஷமாக இருக்குமாம். தலைவிரிச்சி போட்டால் உஷ்ணம் அதிகமாகும்.

அதே போல் அந்த காலத்தில் கோலம் போடும் பொழுது பெண்களுக்கு கர்பப்பை விரிவடையும்.

மருதாணி அதிகமாக கை, கால் ல் போடுவாங்க,

நெற்றியில் பொட்டு குங்குமப்பொட்டு வக்கிறது

அந்த காலத்தில் இதெல்லாம் பன்னுவாங்க

இந்த காலத்தில் குல தெய்வம், குரு ஆசிர்வாதம் வேணும்.

ஆத்மார்தமாக திருப்தியாக வாழணும்னா அப்பா அம்மா ஆசிர்வாதம் வேணும்.

 

நன்றி.

 

வருமானம் வரவழைக்கும் பரிகாரக் கோவில்கள்

பணவரவு கிடைக்க 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பரிகாரங்கள் மேற்கொள்ளலாம்.

அவர்கள் செல்லக்கூடிய கோயில்கள் என்னென்ன?

 

அட்சய லக்னம் என்பது ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒரு லக்னம் மாறும்.

என்னுடைய வாழ்க்கையில் நான் என்ன விதைக்கிறேன் என்பது 10ம் வீடு. என்ன விதைக்கிறோமோ அதுதான் அறுவடையாக வரும்.

விதைக்கவே இல்லாமல் அறுவடை எதிர்பார்க்கக் கூடாது.

 

10ம் வீடு பலமாக அமைய அமைய தான் இரண்டாம் வீடு வெளிப்படும்.

2ம் வீடு வருமானம், குடும்பம், பேச்சு, சில பேருக்கு பேச்சே தொழிலாக மாறும்,

பத்தாம் வீடு சம்பந்தப்படாமல் இரண்டாம் வீடு பேச்சு திறமையால் சொற்பொழிவு ஆற்றுதல், வக்கீல்,ஜோதிடம் சம்பந்தப்பட்டது தரகுகள் மூலமாக இவையெல்லாம் உபதேசம் செய்வது மூலமாகவே வருமானம் வரும்.

 

அதனால் முதலில் 10ம் வீடு பார்க்கணும் பத்தாம் வீடு நல்லா இருந்தால் 2ம் வீட்டில் ஒரு வாய்ப்பு வரும்.

 

ALP லக்னம் மேஷ லக்னம் வந்தால் என்னுடைய வயதுடைய லக்னம் இன்றைக்கு அஸ்வினி,பரணி, கார்த்திகை 1ல் போனால் கண்டிப்பாக சேலத்திற்கு பக்கத்தில் இருக்கக்கூடிய சுகவனேஸ்வரர் கோவிலுக்கு நீங்கள் போனால் வருமானத்திற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி தருவார்.

இல்லை எனக்கு 40 ஆயிரம் வருமானம் வருகிறது என்றால் 60,000 வருமானம் வருவதற்கான வழியை காண்பிப்பார்.

 

ALP லக்னம் ரிஷபம் வரும் பொழுது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்

திருப்பத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்கு, போனால் ஆத்ம திருப்தி வருமானம் அந்த நிகழ்வு வருமானத்திற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்கும்.

 

ALP மிதுனம் லக்னம் வரும்பொழுது ,மிதுனம் காற்று ராசி ஒரு இடத்தில் தங்காது,மிதுன லக்னம் வரும் பொழுது கவனமாக இருக்கணும். Alp மிதுன ராசியும் மிதுன லக்னமும் போனால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்க மாட்டார்கள்.

அதனால் சந்திரமவுலீஸ்வரர், சந்திரசூடேஷ்வரர்,இந்த கோவில்களை வணங்கினால் ஒரு பரம திருப்தியான வாய்ப்பு கொடுப்பார்.

உழைப்பிற்க்கும், நம்பிக்கைக்கும் ,முயற்சிக்கும் வினா என்னவென்றால் கடவுளுடைய அதிர்ஷ்டம் வேண்டும்.

 

ALP கடக லக்னம் வரும்பொழுது, பண வருமானத்திற்கு காமேஸ்வரர்,

ALP சிம்ம லக்னத்திற்கு பச்சையம்மன் கோவில்,

சிம்ம ராசிக்காரர்கள் பச்சை அம்மன் கோவிலை கும்பிட்டால், இதுனால் வரையில் திருமணம் நடக்கவில்லை என்றால் திருமணத்திற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

குடும்ப அதிபதி, வருமானத்திற்கு அதிபதி, குடும்பத்தை அமைத்துக் கொள்வது, வருமானத்திற்கான பிரச்சனைகள்,இந்த கோயிலை பொறுத்தவரையில் குடும்பத்தில் ஒரு நிம்மதியான வாழ்க்கை கொடுக்கக் கூடியது.

அட்சய ராசி கேது திசை, சுக்கிர திசை வந்தால் பச்சையம்மனை கும்பிடும் பொழுது ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும்.

 

ALP கன்னி லக்னம் வரும்பொழுது எப்பொழுதும் கரடு முரடான நிகழ்வுகள்தான். எல்லாவற்றிற்கும் உழைக்க வேண்டியது தான் கன்னி லக்னம்.கன்னிலக்கணம் எப்பொழுதும் உழைப்பு அதிகம் ஆனால், ஊதியம்

ஏதோ கிடைக்கும் அவ்வளவுதான்.

அது யாராக இருந்தாலும் சரி.உழைப்பிற்க்கு ஏற்ற ஊதியம் இந்த கன்னி லக்கினத்திற்கு கிடைப்பது கஷ்டம்தான்.

கன்னி லக்னகாரர்கள் காமாட்சியம்மனை பிடித்துக் கொண்டால் ஒரு பரம திருப்தி கிடைக்கும்.எதுவும் கேட்காமல் மனப்பூர்வமாக சரணாகதி அடையுங்கள்.

 

ALP துலாம் லக்னம் வரும்பொழுது கூடுதுறை பவானி சங்கத்துறையில் உள்ள சங்கமேஸ்வரர்,மூன்று இடம் சங்கமிக்கும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஒரு தடவை சென்று வந்தால் ஒரு மாற்றம் உண்டாகும்.

பண யோகத்தை கொடுக்கும்.

 

ALP விருச்சிக லக்னம்வரும்பொழுது எதிர்பாராத யோகத்தை கொடுக்கக் கூடியது.படிப்பு, தொழில், அனுபவம் எல்லாமே வெவ்வேறு,

ஜாதகர் நிறைய கஷ்டப்படுவார்,ஆனால் விருச்சிக ராசிக்கு பணம் வரவு, அதிர்ஷ்டம், குருட்டு யோகம், வேலை எல்லாம் எதிர்பாராமல் எப்படி அமையும் என்றே தெரியாது. ஆனால் அமையும் ,

அவர்கள் உலகளந்த பெருமாள் கோவிலுக்கு போனால் ஒரு பெரிய மாற்றம் உண்டு.

 

ALP தனுசு லக்னம் வரும்பொழுது உலகத்திலேயே நேர்மையாக இருக்கிறேன் என்று தனுசு ராசி,வாழ்க்கையை தனக்குத்தானே சுருக்கி கொண்டு,வருத்திக் கொள்வது.

ஏன் இப்படி நடக்கும்னா ? அட்டமாதிபதி சந்திரனாக வருவார்.

எல்லா விவரங்களும் உள்ளுக்குள் இருக்கும் ஆனால், வெளிப்படுத்த தெரியாது.இல்லை வெளிப்படுத்தும் நேரத்தில் பிரச்சனையாக மாறும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாயகர், ரங்கநாயகி யை பலமாக பிடிக்க வேண்டும்.

ஒரு வாய்ப்பு உண்டு.

 

ALP லக்னம், மகரலக்னம் வரும் பொழுது காவல்தெய்வங்கள் அய்யனார், வீரன் , மதுரை வீரன்,இப்படி ஒரு நிகழ்வை பயன்படுத்தினாலே,பக்கத்தில் உள்ள அய்யனார் வணங்கினால் ஒரு பெரிய மாற்றம் உண்டாகும்.

 

ALP கும்ப லக்னம் வரும்பொழுது திருச்செந்தூர், பழனி கோவிலுக்கு போனால் பணம் வருமானத்தை கொடுக்கும்,ஒரு மாற்றம் உண்டாகும்.

 

ALP மீன லக்னம் வரும் பொழுது நரசிம்மர் , யோக நரசிம்மர்,சோளிங்கர் கோவிலுக்கு போயிட்டு வந்தால் மீன லக்னம், மீன ராசிக்காரர்களுக்கு ஒரு வாய்ப்பு உண்டு.

எதிர்பாராத சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய அமைப்பு.

 

இதுபோல் 12 ராசிக்காரர்களும் இந்த இடங்களை போய் பார்த்து வணங்கினால் ஏதாவது ஒரு நபர் வாய்ப்பு கொடுப்பார்.

அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அது ALP லக்னமாக போனால் கண்டிப்பாக ஒரு வாய்ப்பு கொடுக்கும்.

 

நன்றி.

SASTI TV LIVE

12 மணிநேர தொடர் நேரலை

அனைவருக்கும் வணக்கம்
அட்சய லக்ன பத்ததி என்ற புதிய ஜோதிட முறையில் ஒரு #புதுமுயற்சியாக இந்த #ALP ஜோதிட முறை பலருக்கும் பயன்படும் வகையில் #12மணிநேரம் #தொடர்நேரலை #sasti_TV https://youtu.be/uqpRDDoIMdY யில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட ஆய்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள்,அனுபவங்கள் மற்றும் நேயர்கள் பலருடைய ஜோதிட சந்தேகத்திற்கான விளக்கங்களை #அட்சயலக்னபத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய திரு சி.#பொதுவுடைமூர்த்தி அவர்களும் ALP Astrologer திருமதி #சாந்திதேவிராஜேஷ்குமார் அவர்களும் கலந்துரையாடல் மூலம் பலன் அளிக்க இருக்கிறார்கள், ஜோதிட நண்பர்களும், ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த அரிய வாய்பினை நீங்கள் மற்றும் உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களுடைய ஜாதகத்திற்கான கேள்விகளை #12 மணிநேர நேரலையில் உங்களோடு.

Please share