பொது பலன்

அரிய பல யோசனைகளை அடுத்தவர்களுக்கு எடுத்து வழங்கும் மிதுன ராசி நேயர்களே!

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். இந்த ஆண்டு நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உற்றார்- உறவினர்களின் உபசரணை உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். சிறப்பான புத்திர பாக்கியத்தையும் பெறுவர். பூர்வீகச் சொத்து வழியிலிருந்த பிரச்சினைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கல் யாவும் லாபம் தரும். எதிரிகள்கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, புதிய வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றிபல பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெற்று சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் ஆசியும் ஆதரவும் கிட்டும். சர்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 4-லும், கேது 10-லும் சஞ்சரிப்பதால், தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியால் குரு பகவான் 3-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் பண விஷயத்தில் கவனமுடனிருப்பதும், தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது.

உத்தியோகஸ்தர்கள் உயர்வடையும் காலமிது என்று சொன்னால் அது மிகையாகாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, கௌரவமான உயர்பதவிகள், பலரை வழிநடத்தும் நிர்வாகத்திறன் போன்றவை சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப் பளுவை குறைத்துக்கொள்ள முடியும். செய்யும் பணி யாவற்றிலும் உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். பயணங்களால் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும். சமுதாயத்தில் பெயர், புகழ் யாவும் உயரும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிட்டும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் யாவற்றிலும் வெற்றி கிட்டும். புதிய கிளைகளை உருவாக்கும் நோக்கம், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கம் போன்ற யாவும் நிறைவேறும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும், தொழிலாளர்களின் ஆதரவும் மேலும் மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்செல்லும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய புதிய வாய்ப்புகள் தேடிவருவதால் லாபமும் பெருகும்.

இந்த நாள் இனிய நாள். 12.01.2017

இந்த நாள் இனிய நாள்.
12.01.2017
வியாழ கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – சொந்த தொழில் முன்னேற்றம், கடன் வாங்குவீர்கள், புதிய முன்னோர் சார்ந்த செய்தி வரும், மக்கள் தொடர்பு சிறந்து விளங்கும்.
பரணி – குடும்பத்தார் உடல் நிலை கவனம் தேவை, வீண் வாதம் வேண்டாம், தேவையில்லாத பிரச்சினை வரலாம், காரிய தடை.
கார்த்திகை – கடன் வாங்குவீர்கள், வெற்றி உண்டு, புதிய மாற்றம் முன்னேற்றம் மகிழ்ச்சி.
ரோகிணி – இரு மனநிலையோடு செயல்பாடு, கவனம் .
மிருகசீரிடம் – உஷ்ணமான உடல் நிலை, காயம் எற்படலாம் கவனம், நிலம் சார்ந்த பிரச்சினை ஈடுபட வேண்டாம்.
திருவாதிரை – பண வரவு, புதிய நற்செய்தி.
புனர்பூசம் – வெற்றி, அப்பா அம்மா உடல் நிலை நிலையில் கவனம், கொழுப்பு சார்ந்த பொருளை சாப்பிட வேண்டாம்.
பூசம் – கவனம், கவனம் .
ஆயில்யம் – விரயச் செலவு கவனம் .
மகம் – பயணம், கோவில் வழிபாடு, செலவுகள் அதிகம்.
பூரம் – திடிர் அதிர்ஷ்டம்.
உத்திரம் – வீண் வார்த்தை தவிர்த்தல்
அஸ்தம் – காரிய வெற்றி .
சித்திரை – இரும்பு, வாகனம், வெப்பமான பொருள்களில் கவனம் .
சுவாதி – உடல் நிலை கவனம், பயணம், மருத்துவ செலவு.
விசாகம் – மகிழ்ச்சி.
அனுசம் – குடும்ப உறுப்பினர் உடல் நிலை கவனம் .
கேட்டை – எதிர் பாராத வெற்றி, பயணம்.
மூலம் – காரிய வெற்றி .
பூராடம் – வெற்றி, எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சி.
உத்திராடம் – விரயம், அப்பாவின் உடல்நிலை கவனம், கழுத்துவலி கவனம் .
திருவோணம் – புதிய நட்பு, மகிழ்ச்சி.
அவிட்டம் – கவனம், பொறுமை கோபத்தை தவிர்த்தல், அசைவம் வேண்டாம்.
சதயம் – பிரச்சினைகள் வராமல் பார்த்து கொள்ளவும்.
பூராட்டாதி – தேவையில்லாத பிரச்சினை, மன குழப்பம், விரக்தி கவனம் . பொறுமை அவசியம், வீண் வார்த்தை விபரி்தமுடிவு .
உத்திரட்டாதி – தொழில் முன்னேற்றம் புதிய வாய்ப்பு, வளர்ச்சி .
ரேவதி – கடன், அலைச்சல், கணக்கு விஷயத்தில் கவனம், பண நெருக்கடி .அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு செல்லரவும்.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

இந்த நாள் இனிய நாள் 10.01.2017

 

10.01.2017
செவ்வாய் கிழமை :
நீதிமன்றம் தலையீடு புதிய மாற்றம்,
போலிஸ் வழக்கு சார்ந்த பிரச்சினை வரலாம், குழப்பமான அரசியல் முடிவுகள்.விவசாயம்சார்ந்த புதிய அறிவிப்புகள்,
நட்சத்திர பலன்கள் :

அஸ்வினி நட்சத்திரம் – பண வரவு, உடல் நிலை கவனம் தேவை, தேவதை வழிபாடு, திடிர் பயணம், படிப்பு மேன்மை, நீதிமன்றம் சார்ந்த நபர்களை சந்தித்தல் .
பரணி – பெண் மோகம் அதிகம் கவனம் தேவை, உடல் உஷ்ணம்பித்த உடம்பு அலைச்சல் தவிர்க்கலாம்.
கார்த்திகை – உடன் பிறப்பு உடல்நிலை கவனம், வீண் விவாதம் வேண்டாம் திருட்டு போதல், அவப்பெயர் வாய்ப்பு கவனம் தேவை, நிலம் சார்ந்த பிரச்சினை ஈடுபட வேண்டாம். முன்னோர் வழிபாடு அவசியம்.
ரோகிணி – குழந்தைகளால் மகிழ்ச்சி, அரசு பணியில் புதிய மாற்றம், அறிவிப்பு வரலாம், அரசு வகை லாபம் உண்டு.குல தெய்வத்தை வணங்கவும்.
மிருகசீரிடம் – கனவு பலித்தல், பணம், பொருள் கவனம் தேவை, அப்பா அம்மா ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சி அடையவும் .
திருவாதிரை – வாகனம், இரும்பு, ஆகியவற்றில் கவனம் . புதிய நண்பரை சந்தி உரையாடுதல்.
புனர்பூசம் – வீண் அலைச்சல் .
பூசம் – கணக்கு சார்ந்தவைகளில் கவனம் , நண்பர்கள் உதவி, சூதாட்டம் வேண்டாம்.
ஆயில்யம் – பெண் நட்பு உதவி உண்டு, கோவில், மாளிகை, நகை கடை செல்ல வாய்ப்பு உண்டு.
மகம் – மகிழ்ச்சி. அருகில் உள்ள பிள்ளையார் கோவில் தரிசனம் செய்யவும்.
பூரம் – புதிய மாற்றம், முன்னேற்றம் உண்டு.
உத்திரம் – கவனம் தேவை.
அஸ்தம் – ராஜ பதவி, பணம், பதவி, அதிகாரம் உண்டு, அருகில் உள்ள அம்மன் கோவில் வழிபாடு
சித்திரை – வீண் அலைச்சல் தவிர்த்தல், மறதி, பயம் தவிர்த்தல்.
சுவாதி – சட்டத்திற்கு புறம்பான செயலை ஈடுபட வேண்டாம்.
விசாகம் – விவசாயம்சார்ந்த புதிய அறிவிப்பு கள், மகிழ்ச்சி.
அனுசம் – வேலை செய்யும் இடத்தில் கவனம், ஆள் பற்றாகுறை எற்படும், வீண் விவாதங்களை தவிர்த்தல்.
கேட்டை – திரைப்படம் செல்லுதல், பொதுவான நிகழ்வு கலந்து கொள்ளுதல், வீண் விவாதங்களை தவிர்க்கலாம்.
மூலம் _ பயணம், மரியாதை.
பூராடம் – அரசு வகைலாபம், அதிகாரத்தை பயன்படுத்தி காரியத்தை முடித்து கொள்ளுதல்.
உத்திராடம் – புதிய முடிவு, கூட்டுத் தொழில் முடிவு யோசித்து எடுக்கவும்.
திருவோணம் – குழப்பம், யோசனை கேட்க வேண்டாம்.
அவிட்டம் – கடன், தொழில் முன்னேற்றம், பயணம், சூதாட்டம்.
சதயம் – தேவதை வழிபாடு, எமாற வேண்டாம்.
பூராட்டாதி – குழப்பமான மனநிலை.
உத்திரட்டாதி – குறுக்குவழி லாபம், பேசியே காரியதை முடிப்பது, கலை சார்ந்த நண்பர்களை சந்திப்பது.
ரேவதி – வெற்றி, தொழில் மேம்பாடு உண்டு, பிரச்சினை பேசி தீர்த்து கொள்ளுதல், உற்சாகம்.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

மேஷம்

பொது பலன்
 download (2)
பாசத்தோடு பழகி, பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கையை கூட்டிக் கொள்ளும் மேஷ ராசி நேயர்களே!

உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எடுக்கும் பணிகளை முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை, பிறர் செய்யும் தவறுகளுக்கும் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை போன்றவை ஏற்படும். ஆண்டின் தொடக்கத்தில் அலைச்சல்களும் பணியில் நிம்மதிக் குறைவும் ஏற்பட்டாலும், வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் ஓரளவுக்கு கௌரவ மான நிலையினை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைய சற்று தாமதமாகும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நிறைய போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் போன்ற யாவும் உண்டாகும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடும், தொழிலாளர்களால் வீண் பிரச்சினைகளும் ஏற்படும். என்றாலும் 05-07-2015 ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயலாக்குவது நல்லது. பயணங்களால் சற்று அலைச்சல் ஏற்படும்.

ரிஷபம்

பொது பலன்
 images (6)
வருமானத்தைப் பற்றியும், வருங்காலத்தைப் பற்றியும் எந்த நேரமும் சிந்திக்கும் ரிஷப ராசி நேயர்களே!

உங்கள் ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் குடும்பத்திலுள்ளவர்களையும், உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளும் ஏற்படுக்கூடும். 3-ல் சஞ்சரிக்கும் குரு 7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள் கைகூடும். ஆண்டின் தொடக்கம் சற்று சாதகமின்றி இருந்தாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன வரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். உத்தியோ கஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங் களைப் பெற்று உயர்பதவிகளைப் பெறுவீர்கள். 5-ல் ராகு சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவு, பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. இந்த ஆண்டு எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நல்ல அனுகூலமான பலனைப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை அடையமுடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஜீவனாதிபதி சனி 7-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும், எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நினைத்த இலக்கை அடைந்துவிடமுடியும். உயரதிகாரிகளிடம் சற்று நிதானமுடன் பேசுவது, உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது நன்மையளிக்கும். இந்த வருடம் குரு சஞ்சாரமும் சுமாராக இருப்பதால் பணியில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். உயரதிகாரிகள் உங்களின் திறமைகளைப் பாராட்டுவதால் மனநிம்மதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். உங்கள்மீதிருந்த தேவையற்ற பழிச்சொற்கள் மறையும்.

உங்கள் ஜென்ம ராசிக்கு ஜீவனாதிபதியான சனி பகவான் கூட்டுத் தொழில் ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. வேலையாட்களாலும் வீண் வம்பு, வழக்குகளை சந்திக்கநேரிடும். தொழில்ரீதியாக நண்பர்களும் எதிரியாவார்கள். தொழிலிலும் மந்தமான நிலையிலேயே நடைபெறும் என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். போட்ட முதலீட்டினை எடுக்கும் அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூட்டாளிகளிடமும் கலந்தாலோசித்துச் செயல்படுவது அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள உதவும்.