பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி. யுகமாக யுகமாக உள்ள ஜோதிடத்தை அடுத்த நிலைக்கு அதாவது

alp astrologyu

வணக்கம்
ALP ஜோதிட முறை:
இது பாரம்பரிய ஜோதிடத்தின் பரிணாம வளர்ச்சி.
யுகமாக யுகமாக உள்ள ஜோதிடத்தை அடுத்த
நிலைக்கு அதாவது, இன்றைய காலகட்டத்திற்கு உடனடியாக பலன் சொல்லக்கூடிய ஒரு துல்லியமான முறை.
இந்த ஜோதிட முறையை கண்டுபிடித்தவர்
திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா, அவர்கள்,
Sir, என்ன சொல்றாங்கனா மனிதருடைய ஆயுள் 120 வருடம், 12 கட்டம் இருக்கு,
ஜென்ம லக்னம் எங்கு இருக்கிறதோ அங்கிருந்து இந்த 12 கட்டத்திற்கும் ஒரு 120 வருட காலத்தில்
பரவி வரும்பொழுது இந்த ,இந்த நிகழ்வுகள் இப்போ இப்போதான் நடக்கும் என்று துல்லியமாக சொல்லமுடியுது.
இதைப்பற்றிய நிறைய Videos youtube-ல்
இருக்கு. நீங்கள் அதைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
ஆனால், உங்கள் வயதிற்கேற்றது போல் லக்னம் மாறும்.என்பது தான் முக்கியம்.
ஒவ்வொரு 10 வருடமும் லக்னம் நகரும்.
ஆச்சரியமாக இருக்கா! வாங்க பார்க்கலாம்.
ALP ஜோதிட முறையை கண்டுபிடித்த
திரு.பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் , வீட்டிற்கு ஒரு ஜோதிடர் என்ற முடிவு எடுத்திருக்கிறார்.
ஏன்னா? வீட்டிற்கு ஒரு ஜோதிடர்,
என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேருக்கும் வழிநடத்தக் கூடிய அளவிற்கு இருக்கணும்.
ஏன்னா? நம் பிரச்சனை நமக்கு தான் புரியும்.
இன்னொருவருக்கு எந்த அளவிற்கு புரியும் என்று சொல்லமுடியாது.
அப்போ,சூழ்நிலை,பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டு,
அதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கனும்னா ?
உங்கள் பிரச்சனையை சரியாக புரிந்து கொண்டவர்கள் வீட்டில் இருப்பவர்கள் தான்.
வீட்டிற்கு ஒரு ஜோதிடர் வரணும்.
என்பதுதான் அவருடைய லட்சியம்.
ஏன்னா? அவருடைய கண்டுபிடிப்பை அவர் மட்டும் பயன்படுத்தாமல்,எல்லாருக்கும் பயன்படும்படி இருக்கனும் என்றுதான் இந்த வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
நீங்கள் இந்த ALP முறையை வெறும் 15 Class -ல்
நீங்கள் இதில் தேர்ச்சி பெற முடியும்.
இந்த வகுப்பு எப்பொழுது நடக்கும் என்றால்?
அதிகாலை 4:32 to 7 .
ஏன் இந்த நேரம் ?
இந்த நேரம் நம்முடைய மனம் தெளிவாக இருக்கும்.
உங்களுக்கு தொந்தரவு எதுவும் இருக்காது. வேறு எந்தகவனச்சிதறலும் இருக்காது.
உங்களுடைய கவனம் முழுவதும் இங்கு இருக்கும்.
நீங்கள் கவனமாக இருந்தால் மட்டும்தான் இந்த ஜோதிட முறையை கற்றுக் கொள்ள முடியும்.
அதனால்தான் இந்த நேரம்.
ஜோதிடம் கற்றுகொள்ள எனக்கு தகுதி இருக்கா? என்று ஒரு பொதுவான கேள்வி கேட்கறாங்க.
ஜோதிடம் கற்றுக்கொள்ள தகுதிகள் தேவையில்லை.
ஏன்னா? இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயம்.
நான் சம்பாதிக்க முடியுமா?
நான் வண்டி ஓட்ட முடியுமா?
இந்த மாதிரி கேள்வி அது.
எல்லாராலும் வண்டி ஓட்ட முடியும்,
எல்லாராலும் சம்பாதிக்க முடியும்,
அதற்கான ஒரு திறன் இருக்கு,
அதை கற்றுக் கொள்ளணும் அவ்வளவுதான்.
இதுபோல் ஜோதிடத்தில் இரண்டு பகுதியாக பிரித்துக் கொள்ளலாம்.
1) அன்றாட வாழ்வியலுக்கான ஜோதிடம் உங்களுக்குத் தெரிந்தே இருக்கணும்.
எனக்கு கணக்கு போட தெரியும் என்று, கணக்கை பயன்படுத்தி என்ஜினியர் ஆவது வேறு,
2) அதேபோல் கணக்கை உபயோகப்படுத்தி அன்றாட தேவைகளுக்கான கணக்குகள் தெரிவது வேறு.
உங்களுக்கு கணக்கு தெரிந்திருக்க வேண்டும், ஆனால்,இன்ஜினியர் ஆவது உங்களுடைய விருப்பம்.
இதுபோல் நீங்கள் மிகப்பெரிய ஜோதிடராக மாறுவதும்,
உங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய ஜோதிடத்தை தெரிந்து கொள்வதற்கும்,
வித்தியாசம் இருக்கு.
இங்கு Basic class என்பது உங்களுடைய அன்றாட வாழ்வியலுக்கான ஜோதிடத்தை உங்களுக்கு சொல்லித்தருவது.
உங்களுக்கு ஏற்கனவே ஜோதிடம் தெரிந்திருப்பது நல்ல விஷயம்,
உங்களுக்கு ஏற்கனவே அடிப்படை தெரியும் ,ஆனால் இங்கு இந்த வழிமுறையை ஐந்து வருடமாக கற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை இங்கு 15 வகுப்புகளில்
கத்துதராங்கனா,இங்கு இருக்கக்கூடிய அடிப்படைகள் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.
அதனால் நீங்கள் இதை என்னவென்று கற்றுக் கொண்டால்தான்,
நீங்கள் அடுத்த Advanced level – க்கு போவதற்கு தகுதியானவர்களாக மாறுவீர்கள்.
சேர்ந்தவர்கள் எல்லாருமே Advanced level-க்கு போவது இல்லை.
இதற்கு நாங்கள் தகுதிப்படுத்துகிறோம், இந்த தகுதி உள்ளவர்கள் மட்டும்தான் அடுத்த Advanced level-க்கு அறிமுகம் கொடுக்றோம்.
அதனால்,நீங்கள் ஜோதிடராக இருக்கலாம், நிறைய அனுபவங்கள் இருக்கும்,
உங்கள் அனுபவங்களை நாங்கள் மதிக்கிறோம்,
ஆனால் ALP -க்கு என்று இருக்கின்ற விதிகளையும்,
ALP க்கான அடிப்படைகளையும், நீங்கள் தெரிந்துகொண்டால்தான், Advanced level-க்கு நீங்கள் செல்ல முடியும்.
அதனால் இதுவும் உங்களுக்கு தேவை.
இது online வகுப்பாக Zoom App -ல் நடைபெறும்.
அதனால், நீங்கள் வீட்டில் இருந்தே உங்களுடைய சவுகரியத்தில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய முறை.
நீங்கள் Expensive Travel செய்ய வேண்டாம்,
எங்கேயும் தங்க வேண்டாம்.
ஆனால், தினப்படிக்கு நீங்கள் practice செய்து , practice செய்து வந்தால்தான்,உங்களுக்கு ஜோதிடம் அனுபவத்திற்கு வரும்.
இந்த 15 நாள் ,15 வகுப்பும் நீங்கள் ஜாதகம் கொண்டுவரப்போறீங்க, அதை Class – ல் உட்படுத்தி அதனுடைய பலன்களை உங்களையே சொல்ல வைக்கப்போறோம்.
அதுதான் இந்த வகுப்பின் நோக்கம்.
அதனால், உங்களுக்கு எவ்வளவு ஜாதகம் எடுத்துட்டு வர முடியுமோ, அவ்வளவு ஜாதகம் எடுத்துட்டு வாங்க.
ஏன்னா? ஜாதகம் உங்களுடையது,
அதனுடைய நல்லதும், கெட்டதும் உங்களுக்கு தெரியும்.
அதற்கு இந்த ஜாதகத்தில் நாங்கள் சொல்லக்கூடிய விதிகளை apply செய்தால் பலன் வருதா? இல்லையா ? என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.
அதுதான் உங்களுக்கு அனுபவமாக மாறும்.
அந்த அனுபவம் உருவாக்குவது தான் இந்த வகுப்பின் அடிப்படை.
அதனால் கட்டாயமாக உங்களுக்கு இது பயன்படும்படியாக இருக்கும்.
ஜோதிடம் கற்றுக்கொள்ளக்கூடிய முறைகளில் இரண்டு விஷயம் இருக்கு.
1) கணித முறை
2) பலன் சொல்லும் முறை
இந்த ஜோதிடம் எல்லாருக்கும் வராது என்று சொல்லக்கூடிய ஒரே காரணம்,
கணிதம் போடுவது என்பது எல்லோருக்கும் ஒத்து வராது
கணிதம் போடுவது ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும்.
முன் கணிதம் தெரியாதவர்களுக்கு ஜோதிடம் வராது என்ற நிலை இருந்தது.
இப்போ பொதுவுடைமூர்த்தி ஐயா,என்ன
செய்து இருக்காங்கன்னா, இந்த கணித முறைகளை எல்லாம் இரத்தின சுருக்கமாக்கி, அதை ஒரு Software – ஆக அதை Mobile -ல் use செய்யும்படியான ஒரு App – ஆக மாற்றிகொடுத்துள்ளார்.
free Software இருக்கு.
இந்த free Software இப்போது போதும் உங்களுக்கு.
Basic Class – Start செய்து முடியும் வரைக்கும் இந்த Software பயன்படுத்துவது போதுமானது.
உங்களுக்கு மேற்கொண்டு ஆர்வம் இருந்து, இது மேற்கொண்டு எனக்கு பயன்படும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் purchase செய்தால் போதும்..
உங்களுக்கு ஆரம்பத்திலே free Software வந்துவிடும்.
Class எவ்ளோ எளிமையாக இருக்கும் ?
இங்கு பெரிய மனப்பாடம் செய்வதோ, ஒப்பிப்பதோ,உள்வாங்குவதோ ரொம்ப இல்லை.
நட்சத்திரங்கள் பெயர் எனக்கு தெரியாது? கிரகங்கள் பெயர் தெரியாது?
ராசி பெயர் தெரியாது ?
வாங்க கற்றுக்கொள்ளலாம்.
இது எல்லாமே சொல்லி தருவோம்.
இதை மட்டும் தான் நீங்கள் மனப்பாடம் செய்ய வேண்டியதாக இருக்கும்.
விதிகள் பார்த்தால் இங்கு 5 விதிகள் தான்.
அதைக் கற்றுக்கொண்டால், அந்த 5 விதிகளை apply செய்தால் உங்களிடம் ஜாதகம் கொடுப்பவர்கள் என்ன கேள்விக்காக வந்திருப்பார் என்று நீங்கள் சொல்ல முடியும்.
அவர் என்ன பதில் எதிர்பார்க்கிறார் என்றும் நீங்கள் சொல்லலாம்.
இதை இரண்டையும் சொன்னால்தான் துல்லியமான பலன்.
நடக்குமா? நடக்காதா? இது நடக்கும், இது நடக்காது என்று அறுதியிட்டு சொல்ல முடியும் ALP முறையில், அதுதான் இதனுடைய சிறப்பு.
இதை கற்றுக் கொள்வதற்கு பெரிய திறன்கள் எதுவும் தேவையில்லை.
உங்களுடைய ஆர்வமும் ஈடுபாடும் தான் ரொம்ப முக்கியம்.
இந்த 15 நாள், 15 Class -யை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ALP Astrology Office Number : 9786556156
வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12/2023    அடிப்படை வகுப்பு துவக்கம்.
வாங்க வகுப்பில் சந்திப்போம்……

May be an image of 1 person, temple and text that says “ALP ASTROLOGY அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்பு ஜோதிட பேராசிரியர் முனைவர் பொதுவுடைமூர்த்தி D.T.Ed.,M.A.,B.Ed. M.A(Astrology)..Ph.D., அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தை உருவாக்கியவர் ஆகஸ்ட் மாதம் 12/2023     முதல் நாள் தோறும்  காலை 04.32-06.32        15-நாள் வகுப்பு ஆன்லைன் வகுப்பு நடைபெறும்.

முன்பதிவு அவசியம் அலுவலக எண் +91 97 86 556 156″

alp astrologyu

முருகப்பெருமான் அகத்தியருக்கு அருளிய தமிழை போல்

அனைவருக்கும் வணக்கம்.

அட்சய லக்ன பத்ததி ஜோதிடர் சாந்திதேவி ராஜேஷ்குமார் தஞ்சாவூர்.

ஒரு முருக பக்தரை பற்றி அறிந்து கொள்ளபோகிறோம்.

16 வருடங்களாக மாலை அணிந்து பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலுக்கும் பழனிமலைக்கு சென்று வருகிறார்.முருகப்பெருமான் அகத்தியருக்கு அருளிய தமிழை போல்

ஸ்ரீபாலதண்டாயுதபாணி அருள் பெற்று

அவர் உருவாக்கிய ஜோதிட முறையான அட்சய லக்ன பத்ததி ஜோதிடத்தில் முதன்முதலில் புத்தகம் எழுதிய காலத்திலிருந்து கூட இருந்த நபராக நான் உணர்ந்த அறிந்த ஆச்சரியப்பட்ட சில விஷயங்களை இந்த கட்டுரை வாயிலா சமர்ப்பிக்கின்றேன்.

 

தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் தென்னடார் நடுக்காட்டில் ப. சிங்காரவேலன் சி. பத்மாவதி அவர்களுக்கு மகனாக  பிறந்தார். ஆசிரியர் பயிற்சி கல்வியும், இளங்கலை பட்டப் படிப்பும், முதுகலை தமிழ் பட்டமும் பெற்றார். ஓலைச்சுவடி தமிழ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்து உள்ளார். ஓலைச்சுவடியில் ஜோதிடம் சார்ந்த

பதிப்புகள் செய்துள்ளார்.

ஜோதிடத் துறையில் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே அவருக்கு ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது. அவர் குடும்பத்தில் அவர் ஆசிரியராக வரவேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. அதற்கான படிப்பும் பயிற்சியும் பெற்றுள்ளார். ஆனால் அவரை ஏதோ ஒரு விஷயம் இந்த ஜோதிடத் துறைக்குள் இழுத்துக் கொண்டே இருந்தது. அதில் நிறைய தேடுதல்களும் நிறைய விஷயங்களை அறிந்து கொள்ளக்கூடிய தூண்டுதல்களும் அவருக்கு நிறையவே இருந்தது. அதன் காரணமாக நிறைய ஜோதிடம் சார்ந்த விஷயங்களை அவர் ஆழ்ந்து உற்று நோக்கிக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த ஆழ்ந்த உற்றுநோக்கின் காரணமாக ஜோதிடத்தில் ஏன் வெவ்வேறான பலன்கள் வருகிறது ஜோதிடம் என்பது ஒரு கணித முறை. கணிதத்தை எந்த முறையில் போட்டாலும் ஒரே விடைதானே வரவேண்டும். இதில் மட்டும் ஏன் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வெவ்வேறான பலன்கள் சொல்கிறார்கள் என்ற கேள்வி அவருள் எழுந்து கொண்டே இருந்தது

 

அதே போல் ஒரு அம்மாவுடைய கண்ணீர் துளிதான் அவருக்கு இந்த ஜோதிட துறையில் கண்டிப்பாக ஒரு மாற்றத்தை உண்டாக்கியே தீரவேண்டும் என்கிற ஒரு எண்ணத்தை அவருக்குள் விதைத்தது என்று சொல்லலாம், என்ன காரணம் என்றால் அந்த அம்மா உடைய பொண்ணுக்கு ரொம்ப நாளாகியும் திருமணம் நடக்கவில்லை. எல்லாருமே செவ்வாய் தோஷம் என்று சொல்லி ஜாதகம் பொருத்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அதனால் பொண்ணுக்கு வரன் அமையவில்லை அப்படின்னு அவங்க அழுத்தினால் அந்த கண்ணீர் வந்து அவருக்குள் ஒரு தீராத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனுடைய விளைவாக ஜோதிடத்தில் எப்படி ஒரு கிரகம் மட்டும் திருமண வாழ்க்கையை முடிவு செய்யும். அப்போ மற்ற கிரகங்கள் எல்லாம் வேலை செய்வது இல்லையா? என்பது போன்ற ஒரு தேடுதல் அவருக்குள்ளே தோன்ற ஆரம்பித்தது. அதை நோக்கி பயணம் செய்தார் அவருக்குள் நிறைய விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தது.

 

அவர் ஒரு தீவிரமான முருக பக்தர் அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் முருகன் மேல் மிகுந்த பற்றுதல் உள்ள ஒரு குடும்பம். எப்படி முருகப்பெருமான் வந்து அகத்திய மாமுனிவருக்கு ஆசி கொடுத்து இந்த தமிழ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த உலகுக்கு அகத்தியர் கொடுத்தாரோ அதே மாதிரி அந்த முருகனுடைய அருளாலும் கருணையினாலும் அந்த முருகன் அவருக்கு அருளிய மிகப்பெரிய நன்கொடை அப்படின்னு தான் சொல்லணும்.

இந்த ஒரு ஜோதிட முறை அவருக்குள்ள ஏற்பட்டதற்கு காரணம் அவருடைய முருக பக்தியும் இந்த ஜோதிட உலகிற்கு ஏதாவது ஒரு விஷயத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் காரணம். முருகன் மட்டுமல்ல அவர் தீவிரமான ஆஞ்சநேயர் பக்தரும் கூட, நிறைய தேடுதல்களால் நிறைய இடங்களுக்கு போயிருக்காரு இமயமலை பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வார். அப்படி ஒரு முறை இமயமலை போயிருந்த போது தான் அவர் நீம் கரோலி பாபாஜி ஆசிரமத்துக்கு சென்றுள்ளார். அங்கு அந்த பாபாஜியிடம் கேட்கிறார் யார் யாருக்கோ என்னன்மோ கொடுக்குறீங்க எனக்கு ஏதாது குடுங்க ஜோதிடத்தில்

ஒரே பலன்கள் மாதிரியான எல்லோராலும் சொல்ல முடிவதில்லை மக்களுக்கு, வெவ்வேறான பலன்கள் சொல்றாங்க, அப்போ ஒரே பலனை சொல்லக்கூடிய ஒரு ஜோதிட முறை என்ன அட்டிங்கிற மாதிரி சிந்தனை செய்து கொண்டே அவர் பார்த்த விஷயங்கள் எல்லாமே ஒரு வளரும் தோற்றத்தை தான் அவருக்கு உணர்த்தியிருக்கு

ஒரு ஆலமரத்தடியில் கண்ண மூடி தியானத்தில் இருக்காரு.

அப்போ அவருக்கு வந்த ஒரு உள்ளுணர்வு அவர் கண்ணு முன்னாடி அந்த ஆலமரத்தின் விழுதுகள் வளர்ந்த நிலையில் அவருக்கு காட்சி கொடுக்கிறது. அந்த காட்சியில் அந்த விழுதுகள் வளரும் பொழுது,

ஏன் லக்னம் வளர கூடாது அப்படின்னு யோசிச்சு அதுக்கு அப்புறம் அதுக்காக நிறைய கணிதங்களையும் நிறைய ஆய்வுகளையும் பல வருடங்களாக மேற்கொண்டு இந்த அட்சய லக்ன பத்ததி என்ற அற்புதமான ஜோதிட முறையை நமக்கு கொடுத்திருக்கார் . வளரும் லக்கன பாவக முறை லக்கனத்தை நகர்த்தி பலன் எடுக்கக் கூடிய ஒரு ஜோதிட முறையை ரொம்ப எளிமையாக எல்லாரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் கொடுத்திருக்கார்.

இது எத்தனை பேருக்கு புரியுதுனு தெரியல ஆனா இன்றைக்கு நிறைய பேரு புரிஞ்சுக்கிட்டு பார்க்கக்கூடிய ஒரு எளிமையான ஜோதிட முறையாக இன்னைக்கு நம்ம கையில அட்சய லக்ன பத்ததி என்கிற ஒரு ஜோதிட முறையையும், அதற்கான மென்பொருளும் இருக்கு. அப்படிங்கற போது இந்த காலத்தில் அவர் கூட நம்ம பயணிக்கிறோம், அவர் கூட நாம் இருக்கிறோம் என்பதே ஒரு பெரிய மகிழ்ச்சியான பாக்கியமான விஷயமாக உணர முடிகிறது.

 

வருங்காலத்தில் ஜோதிடத்தின் அடுத்த தலைமுறைகளுக்கு ஒரு பொக்கிஷமாக பலன் சொல்வதற்கு எளிமையான ஒரு துல்லிதமான ஒரு ஜோதிட முறையாக இந்த அட்சய லக்ன பத்ததி இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

 

இதை பற்றி நிறைய விஷயங்கள் பேசும்போது நான் சார் கிட்ட கேட்டு இருக்கேன். ஏன் சார் இந்த ஜோதிட முறைக்கு உங்க பெயர் வைக்கல ? அவங்கவங்க கண்டுபிடித்த ஜோதிட முறைக்கு அவங்கங்க பேரு வச்சிக்கிறாங்களே . உங்களுடைய இந்த அரிய உழைப்புக்காக நீங்க கண்டுபிடிச்ச இந்த ஜோதிட முறைக்கு ஏன் உங்க பேரு வைக்கலன்னு

அப்ப, அவங்க சொல்வாங்க இது தனிப்பட்ட என்னுடைய கண்டுபிடிப்பு அப்படினு நான் சொல்ல விரும்பல, இது இறைவன் எனக்கு அளித்த ஒரு கொடை. இதை மத்தவங்களும் பயன்படுத்தனும் என்பதற்காக கொடுக்கிறேன். இதில் என் தனிப்பட்ட பெயரை கொண்டு வரணும்னு நான் விரும்பல. அப்படினு சொன்னாங்க. அதனாலதான் இது வளர்தல் என்று ஒரு பொருள் படனும் அப்படிங்கிறதுக்காக அந்த வளரும் பெயருடைய தன்மையான அட்சய என்பதை பெயராக வச்சாங்க.

ஏன்னா என்னைக்குமே காலங்காலமாக அட்சய பாத்திரம் போல் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கக்கூடிய ஜோதிட முறையாக இருக்கும். ஒவ்வொரு லக்னமும் மாறிக்கொண்டே இருக்கும். எப்படி ஆளுடைய தோற்றம் வளர்கிறதோ அதே போல் அந்த லக்ன புள்ளியும் வளர்ந்து கொண்டே இருக்கும் அப்படிங்கிற பொருள் படும் விதமாக அட்சய லக்ன பத்ததி அப்படினு அதுக்கு பேரு வச்சிருக்காங்க.

 

வருங்கால ஜோதிட தலைமுறைக்கு இது ஒரு மைல்கல்லாக இருக்கும்.

 

ஏன் சார் லக்கனத்தை மட்டும் வைத்து பலன் பார்காம இப்படி லக்னம் மாறும் என்ற ஒரு விஷயத்தை கண்டு பிடிக்கணும்னு உங்களுக்கு தோணுச்சுனு நான் கேட்டேன். அப்போ வந்து பிறப்புடைய ரகசியத்தை தெரிந்து கொள்வதுதான் அந்த லக்ன புள்ளி. இந்த ஜென்மத்தில் நாம் என்னவாக இருக்கப் போகிறோம், என்ன அனுபவிக்கப் போகிறோம் அதை தெரிஞ்சுக்க கூடிய ஒரு ஆரம்பப் புள்ளி தான் நம்முடைய ஜென்ம லக்னம் பிறப்பின் லக்னம் என்பது. ஆனால் அதை எந்த வழியில் நாம் அனுபவிக்கப் போகிறோம். இப்போ ஒரு ஊருக்கு போகணும்னா எந்த பஸ்ல போகனும் எத்தனை மணிக்கு அந்த பஸ் வரும், அந்த பஸ் எந்த வழில போகும் அப்படிங்கிறதை தெரிஞ்சிக்கிற மாதிரிதான் இப்போ இந்த transit லக்கனமும். இப்ப நம்ம எந்தப் பாதையில் நாம் போகனும், எந்த பாதை வழியாக சென்று அனுபவிக்கப் போகிறோம், அந்த பாதைகள் எப்படி இருக்கும், கரடுமுரடாக இருக்குமா, இல்ல சீராக இருக்குமா, இல்ல நல்ல பைபாஸ் மாதிரி நல்லா இருக்குமா, என்பதை தெரிஞ்சிக்கூடிய ஒரு தன்மைதான் இந்த அட்சய லக்ன புள்ளின்னு அவங்க சொல்லும்போது

 

எப்படி யாருக்குமே தோன்றாத விஷயங்கள் இவருக்குள் தோணுச்சு? எப்படி இத அவங்க கொண்டு வந்தாங்க அப்படின்னு ஒரு தடவை இல்ல இரண்டு தடவை இல்ல ஒரு நூறு தடவை அவருடைய இந்த ஜோதிட ஞானங்களை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்.

 

ஒரு நேரத்தில் கஷ்டப்படுறவங்க ஒரு நேரத்தில் நல்லா இருப்பாங்க அது ஏன்? எப்போதுமே கஷ்டப்பட்ட ஜாதகரும் கிடையாது, அதே போல் எப்போதுமே நல்ல வாழ்ந்த ஜாதகமும் கிடையாது.

 

ஏதாவது ஒரு கால கட்டங்களில் அவங்க பிரச்சினைகளையும் கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள். இந்த மாதிரி இதுக்கெல்லாம் காரண காரியங்கள் என்ன அப்படிங்கற

தேடுதல்களை மேற்கொண்டு அந்த தேடுதலின் விடை தான் நமக்கெல்லாம் இன்றைக்கு ஒரு அரிய பொக்கிஷமாக இருக்கக்கூடிய இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை என்று

சொல்லலாம்.

அதேபோல் 6 வருட கடுமையான உழைப்பில் தான் மென்பொருள் தயாரிச்சிருக்காங்க. ஏன்னா? இந்த கணிதம் என்பது எல்லோருக்கும் எளிமையாக இருக்கணும், எல்லாரும் புரிஞ்சுக்கூடிய அமைப்பில் இருக்கணும் என்பதற்காகவே அவங்க வந்து இந்த அட்சய லக்ன பத்ததி மென்பொருளை உருவாக்கி அதற்காக நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து யார் பலன் சொன்னாலும் ஒரே பலன்தான் வரணும் அப்படிங்கிறத்துக்காக எளிமையாக அதனுடைய கால அளவுகளை ஒரு 360° டிகிரி கொண்ட ஒரு ராசி மண்டலத்தில் 120 வருட விம்சோத்தரி தசா வருடங்களை இணைத்து 10 வருடத்திற்கு ஒரு லக்னம் மாறும் 1 வருடம், 1 மாதம் , 10 நாள் ஒரு நட்சத்திர பாதத்தில் travel பண்ணும் அது எந்த தேதியில் இருந்து எந்த தேதிவரை செயல்படும் என்ற கணித முறையை மென்பொருளில் கொடுத்துள்ளார்.

 

இன்றைக்கு நிறைய மாணவர்கள் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். கிட்டதட்ட ஒரு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை கற்றுக்கொண்டு இருக்காங்க.

அதேபோல் 200 மாணவர்கள் வந்து இதில் பலன் சொல்லும் அளவுக்கு ரெடியாகி அவங்க வந்து பலன் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அந்த அளவுக்கு ஒரு எளிமையான ஒரு ஜோதிட முறையாக இந்த அட்சய லக்ன பத்ததி இருக்கு.

 

அவங்களுடைய

அந்தப் போராட்டங்கள், அவங்க வாழ்க்கையில் அவங்க அனுபவித்த கஷ்டங்கள், அதுக்காக அவங்க தியாகம் செய்த காலங்கள், இது எல்லாமே நாம கூடவே இருந்து பயணித்ததனால் எங்களால் நிறைய விஷயங்களை புரிஞ்சிக்க முடிஞ்சது, உரை முடிந்தது.

 

சார்பலன் சொல்லும் போது ஆச்சரியமான நிறைய விஷயங்கள் சொல்லி இருக்காங்க. அது வந்து கணிதத்திற்கும் அப்பாற்பட்டு அவங்க சொன்ன விஷயங்கள் அப்படிங்கறது எங்களால் நிறைய நேரத்துல புரிஞ்சுக்க முடிஞ்சது.

ஏன்னா?

ஒரு விஷயத்தை ஜாதகத்தை கணித்து பாத்து சொல்லனும் என்பதை விட அவங்க வந்தவுடனேயே அவங்களுக்கு இப்படித்தான் நடக்கும் என்பதை எண்ணங்கள் மூலமாக வெளிப்படுத்தும் போது அது ரொம்ப ஆச்சர்ய படக்கூடிய ஒரு விஷயமாகவே இருந்தது.

ஒரு நாள் ஒரு ஜாதகர் வரும்போது அவர் வந்து இந்த இடத்துக்கு போகலாமா வேண்டாமான்னு அவர் நினைத்து 3 தடவை சட்டையை கழட்டி மாட்டி இருக்காரு. அந்த விஷயத்தை அவர் வந்து உட்கார்ந்த Second la சொன்னாரு, ஏய்யா வந்திங்க, உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் தானே 3 மூணு தடவை சட்டையை கழட்டி மாத்தினிங்க, இப்ப ஏன் வந்தீங்கனு கேட்கும் போது எங்களுக்கெல்லாம் அவ்வுளவு ஆச்சரியம். எப்படி இத கேட்க முடிந்தது.

 

இந்த மாதிரி ஒரு நிகழ்வு கிடையாது பல ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நம்மலால் சொல்ல முடியும், அத சொல்றதுக்கு இந்த ஒரு கட்டுரை எனக்குப் போதாது அப்படின்னு தான் சொல்லணும். ஏன்னா அந்தளவுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு.

 

அதே மாதிரி அவங்க இந்த ஆய்வில் 18 புத்தகம் இந்த அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை பற்றி அவங்க எழுதறாங்க. இந்த பதினெட்டு புத்தகத்துல என்ன எழுதனும் என்னென்ன விஷயங்களை மக்களுக்கு கொடுக்கணும் முடிவு பண்ணின அப்புறம் தான் இந்த மாதிரி ஒரு ஜோதிட முறையே இருக்கு அப்படிங்கறத அவங்க வெளியிட்டாங்க.

 

இந்த ஜோதிட முறையை அவங்க Copyright பண்ணி இருக்காங்க. ஏன் சார் இதற்கு உங்க பேரு வைக்கல, ஆனா Copyright மட்டும் பண்றீங்களே எதனால அப்படினு சொல்லி நான்

கேட்ட போ என்ன சொன்னாங்க தெரியுமா அப்பாவது இந்த ஜோதிட முறையை Copyright பண்ற அளவுக்கு இதுல என்ன இருக்கு அப்படின்னு யாராவது வந்து பார்ப்பாங்க அப்படிங்கறதுக்காக தான் இந்த Copyright பண்ணதா கூட சொன்னாங்க. அந்த மாதிரி அவருடைய அந்த உழைப்பு இந்த ஜோதிடமுறை காக அவர் அற்பணிச்சது என்பது நிறைய இருக்கு.

 

 

அட்சயலக்ன பத்ததியில் கிரகங்கள், நட்சத்திரங்கள் ஒவ்வொரு வயதுக்குத் தகுந்த மாதிரிதான் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று முதன்முதலில் சொன்னது இவர்தான். அதே போல் லக்னம் நகரும் என்று சொன்னது இவர் தான். அதுவும் 12 கட்டங்களுக்கு பத்து பத்து வருடம் 12 கட்டத்திற்கு 120 வருடம் நகரும்னு ரொம்ப எளிமையாக சொல்லி எல்லாருக்கும் புரிய வைத்திருக்கிறார். அதுக்கு ஒரு தனி மென்பொருளே கண்டுபிடித்து இருக்கிறார். இந்த சாப்ட்வேர் உருவாக்கறத்துக்கு மட்டும் அவருக்கு 6 வருடம் உழைத்திருக்கிறார். அதில் உள்ள கணக்கு முறைகளை நாம கையாள கணக்கு போட்டம்னா ஒரு நாளைக்கு ஒரு ஜாதகம் கூட முழுமையாக நம்மால் பார்க்க முடியாது. ஏன்னா? அந்த அளவுக்கு ஒரு கடுமையான கணக்கு முறைகளை ரொம்ப எளிமையாக்கி அந்த மென்பொருள்ல கொடுத்து இருக்கதனால இன்றைக்கு நிறைய பேர் அதை பயன்படுத்த முடியுது.

 

அதே போல அந்த மென்பொருளிலும் முன்ஜென்மத்தை பற்றியும் தனியாக ஆய்வு பண்ணிருக்காங்க. மறுஜென்மத்தை பற்றியும் ஆய்வு செஞ்சு இருக்காங்க. ஆனால் மறு ஜென்மம் என்பது புரிபட்டால் யாரும் இந்த ஜென்மத்தில் வாழ முடியாது அப்படிங்கறதுக்காக அதை பற்றி வெளில அவங்க யாருக்கும் சொல்லல அதேபோல் முன் ஜென்ம ஜாதகத்தையும் இப்ப உள்ள ஜாதகத்தையும் ஒப்பீடு பன்றாங்க. ஒப்பீடு பண்ணி அந்த காரணகாரியங்கள் எதனால் இந்த ஜென்மத்துல நல்லாஇருக்காங்க, எதனால் கஷ்டபடுறாங்க அப்படிங்கறதையும் அவங்க தெரிந்து அதையும் அவரால் சொல்ல முடியும். கடந்த காலத்தில் எந்த வருடம் பிறந்திருக்காங்க என்பதை கூட ஒரு அனுமானமாக சொல்லும் அளவிற்கு மென்பொருளை உருவாக்கி இருக்காங்க.அந்த ஜாதகத்தையும் தற்போதைய நிகழ்வுகளையும் ஒப்பிடு செய்கிறாங்க. அது தான் அவருடைய ஆய்வுகள். எல்லாமே ஒரு சாதாரண மனிதருடைய ஆய்வுகள் அல்ல. அதை யாராலும் தற்போது புரிந்துகொள்ளமுடியாது. போக போக புரிந்து கொள்வார்கள்

 

எல்லாருக்கும் ஜாதகம் பார்ப்பது கிடையாது அவங்க சில பேருக்க தான் பாக்குறாங்க.

 

வேறு ஒருவர் புத்திக்கு இந்த ஜோதிட முறை எட்டி இருந்தால் இப்போது பல கோடி பில்லியன்களை குவிச்சிருப்பாங்க. ஆனால் இவர் அப்படி நினைக்கல. தேவைகளுக்கு மட்டுமே பணம் பெறுகிறார். இருந்தால் கொடு, இல்லைனா விடு அப்படி சொல்லிடுறாங்க.

 

மெடிக்கல் அஸ்ட்ராலஜிக்குனு தனிய ஆய்வு செய்திருக்கிறார்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்க்கும் கிரகங்கள் அமைப்பு எப்படி இருக்கும், அன்றாட நிகழ்வுகளில் கூட ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும், என்பதை ஜோதிடம் தெரியாத ஒரு நபர் கூட அறிந்து கொள்ளக்கூடிய வகையில் அந்த மென்பொருளை வடிவமைத்திருக்கிறார். அதில் எல்லாமே குறியீடு மூலமாகவும், எண்கள் மூலமாகவும், சதவிகித மூலமாகவும் குறிச்சிருக்காங்க.

 

எண் கணிதத்தை ALP லக்னத்தோடு பொருத்தி 10 வருட கிரகங்கள் நன்றாக இருந்தால் அவர் அந்த கிரகங்களுக்குரிய எண்களையோ, பெயர்களையோ மாற்றி அமைத்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்பதையும் மென்பொருளில் வடிவமைத்துள்ளார்.

 

திருமணப் பொருத்தம் பார்த்து செய்யும் திருமணங்கள் பல விவாகரத்தில் முடிவதின் காரணகாரியங்களை ஆராய்ந்து அதை தவிர்க்கும் வகையில் அட்சய லக்ன பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதற்கான மென்பொருளையும் உருவாக்கியுள்ளர்.

 

18 புத்தகங்களில் 4 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 5, 6 ம் அச்சுப் பதிப்பில் இருக்கு. அடுத்தடுத்த பதிப்புகளும் வரவிருக்கிறது.

 

2017ல் இந்த ஜோதிட

முறைக்காண புத்தகத்தை Copyright செஞ்சிருக்காங்க. இந்திய அரசால் அந்த Copyright அவருக்கு வழங்கப்பட்டிருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் வெளிநாடுகளில் இருந்தும் நிறைய பேர் படிக்கிறாங்க இவர்கிட்ட. பொது நிகழ்சிகளில் நிறைய உலகியல் ஜோதிடத்தை ஆய்வு செஞ்சு செல்லி இருக்காங்க. அதிலும் குறிப்பாக இந்த 2021 மே மாதம் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் கணிப்பில் 29ம் தேதி ஏப்ரல் மாதமே மாலை முரசு பத்திரிகையில் தி.மு.க பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும், ஜெயிக்கும் என்று சொல்லி இருக்கார். இதுபோல நிறைய விஷயங்களை இவரால் கணிக்க முடியும். அமானுஷ்ய விஷயங்களாக இருக்கட்டும் முன்ஜென்ம விஷயங்களைப் பற்றியும் நிறைய இவரால் பார்க்க முடியும். கடந்தகால ஜாதகத்தையும் பதிவு செய்திருக்கிறார். இந்த வினைப்பயன் யாருடையது அப்பா வழியில் வந்ததா , அம்மா வந்ததா , ஜாதகரின் சுய கர்ம வினைப் பயனால் வந்ததா, என்பதையும் ஆய்வு செஞ்சு ரொம்ப எளிமையாக அதை எல்லோருக்கும் புரிகிற மாரி சொல்லிருக்காங்க. புத்தகங்களையும் அது சம்பந்தமான விளக்கங்களையும் கொடுத்திருக்காங்க. அதே போல் ஒரு சில ஜாதகங்களை மட்டும் தான் நம்மளால் இயக்க முடியும் இயக்க வைக்க முடியும். பரிகாரம் என்பது எல்லோ ஜாதகங்களுக்கும் பொருந்தாது. சில ஜாதகங்கள் மட்டுமே பரிகாரம் செய்து இயங்கவைக்க முடியும் | சில ஜாதகங்கள் எவ்ளோ பரிகாரம் செய்தாலும் அதை இயக்கவைக்க முடியாது, அந்த வினைப்பயனை அவங்க அனுபவித்து மட்டுமே தீர்க்கணும் அப்படின்னு அவங்க ரொம்ப துல்லிதமாக சொல்லி இருக்காங்க. இது எல்லாமே அவங்க சொல்லும்போதும் அவங்க எழுதும் போது அது எல்லாமே நமக்கு ரொம்ப ஆச்சரியமான ஒரு நிகழ்வுகளாக தான் இருக்கும்.

 

அதே மாதிரி நிறைய அமானுஷ்யமான நிகழ்வுகளை கூட இருந்து பார்த்ததினால் இதெல்லாம் எங்களால் உணர முடிஞ்சுது ஒருநாள் கோவில ஒரு அம்மா வருதத்தோட உட்கார்ந்திருந்தாங்க. அம்மா உன் பேரனுக்கு நல்ல மார்க்கு கிடைக்கும். மெடிக்கல் சீட்டு கிடைக்க போகுது ஏன் கவலைபடுறிங்க, இந்த கல்லை கொண்டுபோய் வீட்டில் வைத்து சாமி கும்பிடுங்கன்னு சொல்லி, பக்கத்தில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவங்க கையில் கொடுத்தார்.

 

அந்த அம்மாவுக்கு ஒன்னுமே புரியல என் பேரன் மெடிக்கல் காலேஜுக்காக பரிட்சை எழுதிருக்கான். அத நெனச்சு தான் நான் கவலையோட உட்கார்ந்திருந்தேன். நீங்க எப்படி ஐயா இதை கரெக்டா சொன்னீங்கனு சொல்லி அவங்களுக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

 

அந்த மாதிரி போறபோக்கில் நிறைய பேருக்கு ஒரு வாக்காக அவங்க கொடுத்திருக்காங்க. அதனால தானோ என்னமோ அவங்களுக்கு வாக்கு யோகி என்ற பெயரும் அவங்களுக்கு இருக்கு. இன்னும் சொல்லபோனால் ஒவ்வொரு விஷயங்களையும் ஆழ்ந்து , உற்று நோக்கி , ஒரு ஜோதிடராக இருக்கக்கூடியவருக்கு 360°ளையும் கண்கள் இருக்கனும்னு பல தடவை அவங்க சொல்லுவாங்க. தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஒரு சின்ன தவறு கூட செஞ்சிரக்கூடாது ,

ஏன்னா? எல்லாரும் ஒரே விதமான பலன்களை சொல்லணும். அது தான் அவருடைய ஆசை. ஜோதிடம் அப்படிங்கறதுனா அது ஒரு கணக்கு தான்.அந்த கணக்கு என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி தான் இருக்கணும். அது வசதியானவங்களுக்கு ஒரு கணக்கு, ஏழைகளுக்கு ஒரு கணக்கு அப்படிங்கற மாதிரி எல்லாம் கிடையாது. அதே மாதிரி வெவ்வேறான பலன்களையும் தராது. இந்த கிரகங்கள் இந்த நட்சத்திரத்தில் பயணம் செய்யும் பொழுது அது இந்த விதமான விளைவுகளை மட்டும் தான் கொடுக்கும். இந்த ஆதிபத்தியங்களின்

பலன்களை தான் கொடுக்கும் அப்படிங்கறதா ரொம்ப எளிமையாக சொல்லிகொடுக்கிறார்.

 

இது எல்லாமே ஒரு சாதாரண மனிதரால் இதெல்லாம் கண்டிப்பா சாத்தியமே கிடையாது. ஒரு இறைநிலை, அல்லது இறை சக்தி அதிகம் பெற்ற ஒரு மகானால் மட்டும்தான் இதெல்லாம் சாத்தியமாகும். ஏன்னா? அந்த அளவுக்கு அவருக்கு பக்தியும் அதிகமாகவே இருந்தது. வருஷம் தவறாமல் கிட்டதட்ட 16 வருடமாக மாலை போட்டு பிள்ளையார்பட்டிக்கும் பழநிமலை முருகன் கோவிலுக்கும் போய்ட்டு வருவார். அதேமாதிரி இமயமலைக்கும் அடிக்கடி போயிட்டு வருவார். இது ஏதோ ஒரு இறை சக்தி அல்லது ஏதோ ஒரு சித்த ஆத்மாக்கள் தான் இவருக்குள்ள இருந்து இந்த மாதிரி ஒரு ஜோதிட முறையை மக்களுக்கு வெளிக்கொண்டுவந்து அதனால் மக்கள் பயன்பெறணும், ஒரே விதமான பலன்கள் எல்லாருக்கும் கிடைக்கனும். ஒரே விதமான ஜோதிடம். ஜோதிடம்னா? இந்த ஜோதிடத்தில் யார் பலன் சொன்னாலும் ஒரே மாதிரி பலன் தான் வரணும் அப்படிங்கிறத எல்லாருக்கும் புரிய வைக்க இவர் மூலமாக ஜோதிட உலகிற்கு வழங்கிக்கொண்டிருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன்.

இந்த மாதிரி நிகழ்காலத்தில் வாழக்கூடிய ஒரு மனிதர் இருக்கக்கூடிய ஒரு காலத்திலேயே நாமும் வாழறோம் அவர் பக்கத்துல இருக்கிறோம், என்பதை ஒரு பெருமைக்குரிய விஷயம்னு தான் சொல்லணும்.

 

நிறைய விஷயங்கள் இருக்கு இதுல, நிறைய கணித முறைகள் இருக்கு, ஒவ்வொரு விஷயத்தையும் அவங்க ரொம்ப ரொம்ப பார்த்து பார்த்துதான் பண்ணிட்டு இருக்காங்க, அதுல பங்குச் சந்தைக்கான ஆய்வுகளும் நிறையவே பண்ணி இருக்காங்க, ஆனா அதை யாருக்கும் இப்ப சொல்லிக்கொடுக்கல, எத்தனையோ பேரு ரொம்ப request பண்ணி கேட்டும் அவங்க யாருக்கும் சொல்லிக் கொடுக்க விருப்பபடல. ஏன்னா? அந்த ஆய்வு முழுமையடையல அதனால் இப்ப அதை சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாங்க. அந்த மாதிரி அவருடைய சிறப்புகள் வந்து ரகசியமாகவும் ,அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். இருக்கு, அப்படிங்கறத தான் நாம புரிஞ்சுக்கனும்.

 

அவருடைய ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் , எல்லாமே ஒரு வீட்டுக்கு ஒரு ஜோதிடராவது இருக்கணும்னு அப்படிங்கறது தான்.ஏன்னா? நாம எதுக்காக இந்த பூமியில் பிறப்பெடுதிருக்கோம், என்ன காரணத்துக்காக படைக்கப்பட்டிருக்கோம், எந்த நோக்கத்துக்காக நம்ம போராட போறோம், எந்த வழியில் பயணம் செய்யப் போறோம் அப்படிங்கறத ஒரு குடும்பத்துல ஒருத்தர் உணர்ந்துட்டாலே அந்த குடும்பத்தையே வழிநடத்திச் செல்வாங்க என்பதில் அவருக்கு அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை இருக்கு. அதனால் எல்லாருமே வீட்டுக்கு ஒருவராவது ஜோதிடராகனும் என்பது தான் அவருடைய லட்சியம்.

அதற்காக அவங்க நிறைய வகுப்புகள் எடுத்துட்டு இருக்காங்க. நிறைய அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் வெளிக்கொண்டு வந்து எல்லாருக்கும் புரியும் படியாக ரொம்ப எளிய முறையில் அவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க. ஆனால் இது எத்தனை பேரை சென்றடைய போகுதுனு தெரியல ஆனால் இதை யாரெல்லாம் கற்றுக் கொண்டார்களோ, யாரெல்லாம் இந்த முறையில் பலன் பாக்குறாங்களோ, அவங்க எல்லாருமே பாக்கியம் செய்தவர்கள்.

 

நிறைய பேருக்கு அவங்க வந்து பலன் சொல்லும்போது ரொம்ப ஆச்சரியமா இருக்கும். அதுக்கு எல்லாமே கணக்கு முறைகள் இருக்கு அப்படின்னு தான் சொல்லுவாங்க ஆனால் கணக்கு முறைகள் மட்டும் காரணமல்ல எல்லாமே கணக்கு முறைகள் தான், ஆனால அந்த கணக்குமுறைகள் அவங்களுக்கு தேவையான விஷயத்தில் அது வெளிப்படுத்துகிறதா அப்படிங்கறது தான் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். ஒருத்தங்க என்ன தேவைக்காக வருவாங்க, என்ன நோக்கத்துக்காக வருவாங்க, அவங்க என்ன கேள்வி எல்லாம் கேப்பாங்க, அப்படிங்கறத இந்த வளரும் அட்சய லக்ன பத்ததி முறையில் ரொம்ப எளிமையாக சொல்ல முடியும்னு நிருபிச்சிருக்காங்க.

 

உதாரணமாக ஒரு பிறப்பு லக்னத்தில் இருந்து ஒரு மூன்றாவது லக்கனத்தில் ஒரு ஜாதகர் வராரு, ஒரு 20 to 30 வயசுக்குள்ள ஒருத்தர் ஜாதகம் பார்க்க வராருனா, அவருடைய முயற்சி பற்றிய கேள்விகள் தான் அதிகமாக இருக்கும். திருமணம் சார்ந்த விஷயங்கள் இருக்கும், குழந்தை பிறப்பு சார்ந்த விஷயங்கள் அதிகமாய் இருக்கும், அப்படிங்கறதா அவங்க பதிவு செய்றாங்க. அதைப் போல ஜென்ம லக்கினத்திற்கு ஐந்தாவது லக்னமாக அட்சய லக்னம் வரும்போது ஜாதகரை பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும். குழந்தைகள் பற்றிய கேள்விகள் அதிகமாக இருக்கும், அப்படிங்கறத பதிவு செய்றாங்க. அதேபோல் 6ம் இடம் அட்சய லக்கனமாக செல்லும்போது ஒருத்தர் வராருனா அவங்களுக்கு ருண, ரோக, சத்ரு உபாதைகளை அனுபவிக்கக் கூடிய ஒரு காலமாக தான் இருக்கும். அப்படிங்கறத பதிவு செய்றாங்க.

 

ஒருவர் பிறக்கும்போது அவருடைய வினைப்பயன் எத்தனை சதவீதம் இருந்தது அவருடைய தற்போதைய வினைப்பயன் எத்தனை சதவீதம் உள்ளது, அவருடைய சாதகமான ஒரு சூழ்நிலை அமைப்புகள் எப்படி இருக்கு, அந்த பாதகமான ஒரு சூழ்நிலைகளை தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கா? அது எத்தனை சதவீதம் உள்ளது அப்படிங்கறதை எல்லாமே இதில் வந்து ரொம்ப ஈசியா நம்மளால் அறிஞ்சு பலன் சொல்ல முடியும்.

 

இப்படி ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒரு ஜாதகர் வயதுக்கு ஏற்ப தான் பலா பலன்களை அடைவார் அப்படிங்கறததையும் அதுவும் தசாபுக்திகளை வைத்துப் பார்க்கும்போதும் அந்த வயதுக்குரிய தசை தான் அவங்களுக்கு பலன்களைத் தரும்.

 

20 வயசில ஒருத்தருக்கு சுக்கிர தசை நடக்குது, 60 வயசுல ஒருவருக்கு சுக்கிர தசை நந்தால் 20 வயசில் நடக்கக்கூடிய அந்தச் சுக்கிர தசை அவருக்கு சுகபோகங்களையும், பெண்களால் ஆதாயத்தையும், திருமண உறவுகளால் பாக்கியத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்,

 

ஆனால் அதுவே 60 வயதில் அந்த சுக்கிர திசைனா அவருக்கு அந்த மாதிரி ஆதாயங்களை தராது இல்லையா, அது மாதிரி ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு வயதிற்கும் தகுந்த பலன் தான் இன்றைக்கு நமக்கு நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவரும் அப்படிங்கறத இந்த நவீன உலகத்திற்கு ஏற்ற மாதிரி நவீன ஜோதிட முறையாக இந்த அட்சயலக்ன பத்ததி ஜோதிட முறையை நமக்கெல்லாம் தந்துருக்காருனா அது ரொம்ப பெருமைப்படக்கூடிய விஷயம்.

 

இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தை சொல்லணும், நம்முடைய தமிழ் புலவர் பாரதியார் அவர் எழுதின கவிதைகள் எதுவுமே அவர்கள் இருக்கும்போது பிரபலமாகல, அவரைப் பற்றி யாருக்கும் தெரியல, ஆனால் அவருக்கு அப்புறம், அவர் காலம் ஆனதுக்கு அப்புறம் தான் அவர் எழுதிய கவிதைகள் என்பது இன்றைக்கும்

“ஓடி விளையாடு பாப்பா நீ

ஓய்ந்திருக்கலாகாது ”

இந்த மாதிரியான அவருடைய பாடல் வரிகள் மக்கள் மனதில் இன்றும் நிலைத்து இருக்கு. அது பாடப்புத்தகத்திலும் இருக்கு, அவருடைய கவிதைகள் இன்றைக்கும் இன்னும் பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் அப்படின்னா அது வந்து அவர் இருக்கும்போது உணர்திருந்தா எவ்வுளவு சந்தோஷமா இருந்திருக்கும், அதை அவர் எவ்வளவு சந்தோஷமாக கொண்டாடி இருப்பார், இன்னும் எவ்வளவு கவிதைகளை நமக்கு கொடுத்து இருப்பார், அந்த மாதிரி ஒருத்தர் இருக்கும்போது அவருடைய திறமைகளை வந்து நம்ம அங்கீகரிக்கிறது இல்லை, அவரை Appreciate பண்றது இல்லை, அவருக்கு ஊக்கம் கொடுக்கிறது இல்லை, அந்த விஷயத்துக்கு நாம மதிப்பு கொடுக்கறதே இல்லை, என்ன பெருசா கண்டுபிடிச்சிட்டாரு, அல்லது வயது ஒரு காரணமாக அமைஞ்சிடுது, இது ஒரு கலைக்கு, ஒரு கண்டுபிடிப்புக்கு வயதுங்கறதெல்லாம் ஒரு காரணமே கிடையாதுங்க, அதேபோல் இவரின் இந்த விஷயத்தை கண்டுபிடிச்சிருக்காரு, இந்த ஜோதிட முறையில் இதுவரைக்கும் யாருமே செய்யாத ஒரு புதிய முயற்சியை செஞ்சு நமக்கு எளிமையாக பயன்படக்கூடிய ஒரு வகையில இது கொடுத்திருக்காரு, அப்படின்னா அது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம், அதுவும் ஒரு தமிழ்நாட்டில் ஒரு தமிழர் கண்டுபிடித்திருக்கிறார் அப்படிங்கிறபோது அதை அங்கீகரிக்கிறத்துக்கு நம்மளால் என்ன முடியுமோ அதை நாம கண்டிப்பா செய்யணும். அப்படி செஞ்சாதான் இந்த ஜோதிட உலகிற்கு நாம செய்யக்கூடிய ஒரு சிறு உதவியாக இருக்கும். அந்த சித்தர் பெருமக்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறாங்க அப்படிங்கறது இவர் மூலியமாக அது வெளிப்பட்டு இருக்கு, அத நம்மளால் முடிஞ்ச அளவு மக்களுக்கு வெளிப்படுத்துவோம்.

 

கடவுள் நமக்கு இவர் மூலமாக ஒரு அரிய பொக்கிஷத்தை, ஒரு அரிய ஒரு விஷயத்தை நமக்கெல்லாம் கொடுத்தது ஒரு வரபிரசாதம். இதை நாம எத்தனை பேர் பயன்படுத்திக்க போறோம், எத்தனை பேரு அத உணரப்போறோம் என்பது எனக்கு தெரியல.

 

நான் உணர்ந்தேன் அப்படிங்கற முறையில் இதை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

 

அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கு ஜோதிட உலகிற்க்கு அறிமுகபடுத்திய

 

திரு.பொதுவுடைமூர்த்தி சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.