நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்
நமது வான மண்டலத்தில் குறிப்பாக நமது சூரிய மண்டலத்தில் இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்கள் உள்ளன அவை பன்னிரண்டு ராசி மண்டலங்களுக்குள் உள்ளன. இந்த பன்னிரண்டு ராசி மண்டலங்களும் பன்னிரண்டு மாதங்களை குறிக்கின்றன. ஒரு நட்சத்திர மண்டலம் நான்கு பாவங்களாக (முதலாம் பாவம், இரண்டாம் பாவம், மூன்றாம் பாவம், நான்காம் பாவம் ) பகுக்கப்பட்டுள்ளன. ஒரு ராசி மண்டலமானது ஒன்பது பாவங்களை கொண்டது.
அதாவது 27×4= 108 108/12=9 அதாவது ஒன்பது நட்சத்திர பாதங்கள் கொண்டது ஒரு ராசி. ஒரு நட்சத்திரம் 4 பாதம் என்றால் ஒரு ராசியில் 3 நட்சத்திரங்களின் பாதங்கள் இருக்கும். அதை கீழுள்ள அட்டவணைவிளக்கும்.
ஒரு உயிர் பிறக்கும்போது எந்த நட்சத்திரத்தில் மற்றும் எந்த நட்சத்திர பாவத்தில் பிறந்தாரோ அந்த நட்சத்திரத்தில் சந்திரன் குடி கொண்டு இருப்பார். அதுவே ஒருவருடைய ராசியாகும்.
ராசி என்றால் என்ன? ராசியின் தன்மைகள் யாவை?
நாம் பிறக்கும் பொது சந்திர கிரகம் எந்த ராசி மண்டலத்தில் பிரவேசித்தாரோ அதுவே நமது ராசியாகும். மொத்தம் பன்னிரண்டு மாதங்கள் ஒரு வருடத்திற்கு. அதே போல் ஒரு ஜாதகத்திற்கு பன்னிரண்டு ராசிகள். ஒவ்வொரு ராசி மண்டலங்களும் ஒவ்வொரு மாதத்தை குறிக்கின்றது. இன்றைய தினம் கோள்கள் எந்த எந்த ராசி மண்டலத்தை சுற்றி வருகிறதோ அதை வைத்து நடப்பு பலன்களை அறிவதற்கு பெயர் கோள்சாரம் ஆகும்.
டெலிவிசன், தின பத்திரிக்கைகள் போன்றவற்றில் ராசி பலன் என்ற தலைப்பில் எழுதப்படும் பலன்கள் இந்த சந்திரனின் ஜனன மற்றும் கோள்சார நிலைகளை கொண்டே எழுதப்படுகின்றன. நடப்பு வாழ்வில் இந்த கோள்சார பலன்கள் ஒரு பொதுவான பலனாகவே கருதப்படுகின்றது. ஒருவருடைய ஜென்ம லக்ன ரீதியான பலன்கள் மோசமாக இருக்கும்போது, கோள்சார பலன்கள் காப்பாற்ற வாய்ப்பு இருக்கலாம் என்று ஜோதிடம் சொல்கிறது.
உதாரணமாக ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலைமையில் இருந்து சந்திர திசை நடத்தி வரும் வேளையில் அவருக்கு கோள்சார ரீதியாக ஏழரை சனியோ அட்டமத்து சனியோ நடந்தால் அவருடைய ஜனன ஜாதகத்தின்படி யோகம் செய்ய வேண்டிய கிரகம் கோள்சார பாதிப்பான ஏழரை, அட்டமம், அர்த்தாஷ்டமம், ஜென்ம குரு, அட்டமத்து குரு போன்ற கிரகங்களின் சுற்றுப்பாதை பயணத்தினால் யோகங்கள் தடை படுகின்றன.
ஆக ஒரு ராசியைகொண்டு ஒருவருக்கு நடக்கப்போகும் கோள்சார ரீதியான பலன்களை அறிந்து கொள்ள முடியும்.
ஒரு ஜாதகத்தின் பலன் என்பது லக்னம், தசா, புக்தி, ராசி, நட்சத்திர சாரம், அம்சம், பாவம், என பல கோணங்களை பல தொலை நோக்கு பார்வையில் ஆராய்ந்து அதன் பின்பே முடிவு செய்ய முடியும். அவ்வாறு முடிவு செய்வதில் ஒருவருடைய ராசி முக்கிய பங்கு வகிக்கிறது.
ராசி மண்டலங்கள் மொத்தம் பன்னிரண்டு. அவையாவன:
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுர், மகரம், கும்பம், மீனம்
மேற்கூறிய ஒவ்வொரு ராசிக்கும் சொந்தமாக அதிபதி கிரகங்கள், தெய்வங்கள், தேவதைகள், கற்கள், உலோகங்கள், திசைகள், நட்பு கிரகங்கள், ஆட்சி கிரகங்கள், உச்ச கிரகங்கள், நீச்ச கிரகங்கள், என பலவகை தனி தன்மைகள் உண்டு. அவற்றை தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் பக்கத்தில் நீங்கள் காணலாம்.

கேந்திரம்
ஜோதிடத்தில் கேந்திரம் என்றால் லக்னம் முதல் ஒன்றாமிடம், நான்கமிடம், ஏழாமிடம், பத்தாமிடம் ஆகிய நான்கும் லக்ன கேந்திரம் எனப்படும். இதுவே சந்திரனில் இருந்து ஒன்றாமிடம், நான்கமிடம், ஏழாமிடம், பத்தாமிடம் ஆகிய நான்கும் சந்திர கேந்திரம் எனப்படும்.
லக்ன கேந்திரத்தில் (1,4,7,10) இயற்கையான அசுப கிரகங்கள் சுப கிரகங்களாகிறது. இயற்கையான சுப கிரகங்கள் லக்ன கேந்திரத்தில் நன்மைகள் செய்தாலும் சில கிரகங்கள் பலன் தருவதில்லை.
உதாரணமாக கேந்திரங்களில் குரு (சுபர்)தனித்து இருந்தால் பலன் கொடுக்க மாட்டார் என்பது பொது விதி.
இயற்கையான சுப கிரகங்கள் லக்னத்தில் இருந்து நான்கு, ஏழு, பதினொன்று (4,7,11,) ஆகிய இடங்களில் இருந்தால் கேந்த்ராதிபத்திய தோஷம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட கேந்த்ரதிபத்திய தோஷம் ஏற்பட்ட கிரகங்கள் நன்மை செய்ய இயலாது.

திரிகோணம்
திரிகோணம் என்றால் மூன்று கோணம் என்று பொருள். தமிழ் ஜோதிடத்தில் லக்னம் முதல் வீடாக கொள்ளப்படுகிறது. முறையே 5, 9, இடங்கள் திரிகோணம் எனப்படுகிறது. அதாவது 1,5,9 ஆகிய வீடுகள் திரிகோணம் ஆகும். சுப கிரகங்கள்

பணபரம்
பணபரம் என்ற சொல் ஜோதிடத்தில் ஒருவருடைய ஜாதகப்படி ஒருவருக்கு பணம் வரும் வழிகளை ஆராய்வதற்கு பயன்படுகிறது. லக்னத்தில் இருந்து 2,5,8,11 போன்ற இடங்கள் பணபர ஸ்தானம் என்று கருதப்படுகிறது. இதில் இரண்டாமிடம் ஒருவரின் பண வருவாய் விகிதத்தினை சொல்கிறது, ஐந்தாமிடம் ஒருவர் முற்பிறவியில் செய்த நல்வினை சார்ந்து இப்பிறவியில் ஏற்படும் தனயோகத்தினை குறிப்பிடுகிறது. எட்டாமிடம் எதிர்பாராத மற்றும் மறைவான தனங்களை சுட்டி காட்டுகிறது. பதினொன்றாம் இடம் தனது தொழில் மற்றும் உத்தியோகம் மூலம் ஏற்படும் தனவரவு மற்றும் லாபத்தினை குறிக்கிறது.
பணபரம் கொண்டு ஒருவருடைய பொருளாதார நிலைமையை அறிந்து கொள்ள இயலும்.
உபஜெயம்
உபஜெய ஸ்தானம் என்பது ஜோதிடத்தில் ஒரு ஜாதகரின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய இடங்களை சுட்டிக்காட்டுகிறது. ஒருவர் ஒரு செயலில் வெற்றி கொள்ளுவதற்கு இந்த இடங்களை கூடுதலாக ஆராய வேண்டும் என்பதால் உப ஜெய ஸ்தானம் என்று பொருள் பெற்றது.
லக்னம் முதல் 3,6,10,11 ஆகிய இடங்கள் உபஜெய ஸ்தானம் எனப்படுகிறது. இயல்பாகவே ஒருவருக்கு மூன்றாமிடம் தைரியத்தை பற்றியும், ஆறாமிடம் எதிரிகள், நோய், பகை என்பதை பற்றியும், பத்தாமிடம் ஒருவரின் கர்மம் என்ற கடமை மற்றும் செயல்பாடு பற்றியும், பதினொன்றாமிடம் ஒருவர் அடையும் லாபத்தினை பற்றியும் ஜோதிடம் கூறுகிறது.
ஆக ஒரு ஜாதகரின் செயல் வெற்றியை அவர் ஜாதகத்தில் உள்ள மூன்று, ஆறு, பத்து, பதினொன்று ஆகிய நான்கு இடங்களை ஆராய்ச்சி செய்து முடிவு செய்யலாம். இதுவே உபஜெயம் எனப்படும்.