சனி பகவான் தனுசு ராசியில்

இன்றைய காலகட்டத்தில்
கோச்சாரம் ஆக சனி பகவான் தனுசு ராசியில் அமர்ந்துள்ளார்.இது வியாழ பகவான் வீடாகும் .வியாழனின் காரகத்துவம் அனைத்தும் பாதிப்படையும் காலகட்டம். வியாழன் காரகத்துவம் தங்கம் விலை மாற்றம் சர்க்கரை விலையில் மாற்றம் பொருளாதார மாற்றம் ஆன்மீகத்தில் புதிய சட்டங்கள் வியாழன் குருவாக இருப்பதால் ஆசிரியர்களுக்கென புதிய சட்டங்கள் வங்கிகளில் புதிய திட்டம் மற்றும் தனுசில் அமர்ந்த சனி பகவான் ஏழாம் பார்வையாக மிதுனத்தையும் பத்தாம் பார்வையாக கன்னியையும் மூன்றாம் பார்வையாக கும்பத்தையும் பார்வை செய்கிறார் புதன் எழுத்தாளர்களையும் ஜோதிடர்களையும் குறிப்பதால் எழுத்தாளர்கள் மறைவு ஏற்பட்டதும் ஜோதிடர்கள் மறைவு ஏற்பட்டதும் புதனுடைய காரகத்துவத்தை பாதித்தது .

மேலும் சனி பகவான் பத்தாம் பார்வையாக கன்னி ராசியை பார்வை செய்வதால் ஆசிரியர்களுக்கு உத்தியோகம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுடைய திறமையை சோதிக்கவும் வாய்ப்பு வந்து சேரும் . இதுபோன்று வங்கி ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். ஆசிரியர்கள் கவனமாக செயல்பட வேண்டும் இந்த பாதிப்புகள் தஞ்சாவூர் திருச்சி பகுதிகளிலும் கன்னியாகுமரி பகுதிகளிலும் கோவை பகுதிகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு

காரணம் மிதுனம் என்பது திருச்சியின் தென்புறமும் தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரை உள்ள வடக்குப் பகுதியும் திருச்சியின் தென்பகுதியிலிருந்து தஞ்சாவூர் வரை மிதுன ராசி ஆகும் இது சனி பகவான் பார்வை செய்யும் இடமாகும்

இதுபோன்ற கன்னி ராசி கன்னியாகுமரி மாவட்டத்தை குறிக்கும்

தனுசு கொங்கு மாவட்டத்தை குறிக்கும்

ஆதலால் இந்தப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு

மூன்றாம் பார்வையாக கும்பத்தை பார்வை செய்வதால் கோவில் சொத்துக்களுக்கு புதிய சட்டம் வரும்
இதுபோன்ற இந்தியாவை எடுத்துக்கொண்டால் மிதுன ராசியில் ஆந்திராவின் வடக்கு மேற்கு பகுதிகள் கர்நாடகாவின் வடக்கு கிழக்கு பகுதிகள் அதுபோன்று கன்னிராசியில் மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதி மகராஷ்டிராவின் கிழக்குப்பகுதி அதுபோன்றே கும்ப ராசியின் ராஜஸ்தானின் வடக்கு மேற்கு பகுதி பஞ்சாபின் மேற்கு பகுதி. மேலே குறிப்பிட்ட பகுதிகள் சனி பகவானின் பார்வை படுவதால் 2020 ஜூன் வரை சனிபகவானின் பார்வை படும்

இந்த பாதிப்பை சந்திப்பவர்கள் இதற்காக ராமேஸ்வரம் சென்று ராமலிங்க சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு.
சில அரசு ஊழியர்கள் கட்சி முத்திரை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

லயோலா கல்லூரி உதயம்

ருத்ரோத்காரி வருடம் மாசிமாதம்27ம்தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதியும் கூடிய நாளில் 10 3 1924 வருடம் காலை 10 மணி அளவில் லயோலா கல்லூரி உதயம்.

லயோலா கல்லூரி பரணி நட்சத்திரத்தில் ஆரம்பித்துள்ளது. பரணி தரணி ஆளும் என்பதற்கேற்ப இக்கல்லூரி ஆரம்பிக்கும்போது முதல்வராக இருந்தவர் டாக்டர் பிரான்சிஸ் பெற்றாம் .இவருடைய பெயருக்கு தமிழில் அர்த்தம் ஒளிமயம் என்று பெயர்.

ஒளிமயமாக ஆரம்பமானது இக்கல்லூரி என்பது உண்மை .
கல்லூரி மேஷ லக்னம் மேஷ ராசியில் ஆரம்பமானது. லக்னாதிபதி செவ்வாய்.

பெயர் புகழ் செல்வாக்கு அந்தஸ்து என்று சொல்லக்கூடிய ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து பெரும் புகழையும் சிறப்புமிக்க பெரும் தலைவர்களையும் மத வேறுபாடின்றி உருவாக்கித் தந்தது.

குரு பகவான் பாக்கியாதிபதியாய் எட்டாமிடத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக 12-ஆம் இடத்தையும் ஏழாம் பார்வையாக2ம் இடமான கல்வி ஸ்தானத்தையும்,9ம்பார்வையாக4ம்இடமான உயர்கல்விஸ்தானத்தை நோக்குவதாலும் இக்கல்லூரியானது கடல் கடந்து கல்வியில் பெயர் பெற்று மிகச்சிறந்த ஓர் கல்லூரியாக இருந்தது.

குரு பகவான் 12 ஆண்டுக்கு ஒரு முறை ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேருவார்.

அதேபோன்று குரு பகவான் ஏழு சுற்று 84 வருடம் அதாவது 1924 முதல் 2008 வரை ஏழு சுற்று முடிந்து எட்டாவது சுற்றான தனது ஆயுள் சுற்றை நடத்துகிறார்.

எனவே இந்த காலகட்டத்தில் கல்லூரி நிர்வாகம் ஆனது கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் .

பெயரை கெடுத்து கொள்ளக் கூடாது.இந்த எட்டாவது சுற்று முடிவுக்கு வரும் காலகட்டத்தில் சிக்கலான காலகட்டத்தில் நிர்வாகம் மிக கவனமாக இருக்க வேண்டும்.2020 வரை கவனம் தேவை.

இதில் மதத்தை கையில் எடுத்து எட்டாவது சுற்று பூர்த்தி செய்ய விடாமல் ஆகிவிடக்கூடாது.

ஆரம்பத்தில் பரணியில் ஆரம்பித்த இந்த கல்லூரி சுக்கிர திசை இருப்பு 12 வருடம் ஒரு மாதம் 22 நாள் இருப்பு இருந்தது. அதன்பின் சூரிய தசை 6 வருடம் அதன்பின் சந்திரன் தசை 10 வருடம் செவ்வாய் திசை 7 வருடம் ராகு தசை 18 வருடம் குரு தசை 16 வருடம். சனிதசை 19 வருடம்.

இந்த ஏழு திசைகளும் 1.5.2012 வரை நடைபெற்றது.

எட்டாவது தசை புதன் தசை நடைமுறையில் உள்ளது. இதுவும் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம். எட்டாவது தசை புதன் தசை என்பது புதன் வித்யாகாரகன் என்று பெயர்.

மேஷ லக்னத்திற்கு புதன் சத்துரு ஸ்தானாதிபதியாய் தன் தசையை நடத்துவதால் மேஷ லக்னத்திற்கு பதினோராம் இடமான பாதக ஸ்தானத்தில் இருந்து நடத்துவதால் புதன் தசை இக்கல்லூரிக்கு பாதகத்தை கொடுக்கும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும் .

இந்த புதன் திசையில் சூரிய புத்தி வரும் ஜூன் மாதம்2019 வரை நடைபெறுவதால் சூரியனும் பாதகஸ்தானத்தில் இருப்பதால்,கேது உடன் இருப்பதால், அரசாங்கம் மற்றும் அரசு அதிகாரிகளால் கேள்வி கணைக்கு ஆளாக நேரும்.

மேலும் மேஷ லக்னத்தில் ஆரம்பம் கண்ட இக்கல்லூரி லக்னாதிபதி செவ்வாயாக வருவதாலும் செவ்வாய் தனுசு ராசியில் அமர்ந்திருப்பதாலும் இந்த செவ்வாய் பகவான் மீது தற்போதைய காலகட்டத்தில்கோச்சாரத்தில் சனிபகவான் ஆகிய முடவன் அமர்ந்திருப்பதால் இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

கல்லூரி நிர்வாகம் கவனமுடன் இருக்க வேண்டும்.

பரிகாரம்
செவ்வாய் பகவான் தனுசில் அமர்ந்துள்ளதால் கோயம்பேடு அருகில் உள்ள குறுங்கால் ஈஸ்வரர் கோவில் சென்று கல்லூரி பெயரில்பொறுப்பில் உள்ள முக்கியஸ்தர் சென்றுஅபிஷேகம் அர்ச்சனை செய்வது நல்லது. கும்பத்தில் சூரியன் புதன் அமர்வதால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் அபிஷேகம் அர்ச்சனைசெய்தால் நன்மை பயக்கும் .

மத ஒற்றுமை காப்போம்

பிற மதத்தை காப்போம்
உலகத்தை ஆட்டிவைக்கும் கிரகங்கள் ஒருவரையும் விட்டு வைப்பதில்லை.

தெய்வ வக்ஞர்

பரிகாரம் என்பது, செய்வதும், தாம் முன்னின்று
செய்வதும் விளையாட்டா
ஜோதிடர் என்பவர் இதை மனதில் கொண்டு
செயல்பட வேண்டும்.

உருவாக்கும் பிரம்மாவும்,படிஅளக்கும்
பரமனும்,துஷ்ட்டர்களை அழிக்கும் விஷ்ணுவும்
இதில் பங்கு பெறுகின்றனர்.

பிரம்மன் உருவாக்கிய ஒரு ஜாதகத்தை எடுத்து
பொருத்தம் பார்க்கும் பொழுது இந்த ஜாதகம் சரியில்லை
என்று கூறும் பொழுது பிரம்மன் படைப்பு சரியில்லை
என்று ஆகிவிடுகிறது.

பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு உயர்த்துவதும்
தாழ்த்துவதும்,கிரகங்களுடைய வேலை.
இந்த கிரகங்களின் பணிகளை இடர்பாடு செய்யவும்,
சரிசெய்யவும்,ஆண்டவன் ஒருவனால்
தான் முடியும்.

அந்த கிரகங்கள் செய்யும் பணியை
ஜோதிடர்கள் இடர்பாடு செய்தால் ஜோதிடர்களின்
6,8,12 பாவங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

எனவே ஜோதிடர்கள் இறைபக்தியும்,கவனம்
பிசகாமலும்,பணம்மட்டுமே குறிக்கோள் இல்லாமலும்
இருக்க வேண்டும்.
அடுத்து ஜோதிடர்களின் 1,5,9,12 பாவங்கள்
வலுத்து இருந்தால் இவர் சொல்லும்
பரிகாரத்தால்,ஜோதிடர் சொல்லும் பரிகாரத்தால்
இடர்பாடு ஏற்படாது.

கவனம் அது கொள்க

மற்றவர்களுக்கும் பிரச்சனை தீர வழிவகுக்கும்

ஆக ஜோதிடர்கள் பரிகாரம் சொல்லும் போது
6,8,12 பாவங்கள் பணி செய்தாலும் 1,5,9,12 பாவங்கள்
வலுத்து பரிகாரம் சொன்னால் தெய்வம் செய்ய
வேண்டிய வேலையை வழிவகுத்து கொடுக்கும்.

அவரே தெய்வ வக்ஞர் ஆகிறார்.

குருப்பெயர்ச்சியாகிவிட்டது

“எனக்கு குருப்பெயர்ச்சியாகிவிட்டது”….

நேற்று ‘குமார் ‘ என்ற நபரின் (முன்பின் அறிமுகமில்லாதவர்) நட்பு கிடைத்தது …

நான் ரிசப லக்னம் ராசி.. 7ல் (விருச்சிகம் )குரு வருகிறார் …..

7ம்மிடம் என்பது நட்பை குறிக்கும் பாவம் ….

குருவுக்கு குமார் என்ற காரகப்பெயர் உண்டு…

உங்களுக்கும் குரு, குமார், பிரபு, செல்வம்,ராஜா, சுந்தரம்,இதுப்போன்ற குருவின் காரக பெயருள்ள நபர்கள் தொடர்பில் வரும் போது குருவின் பெயர்ச்சியின் பலன்கள் கிடைக்க கூடும் ….

குரு இப்போது விருச்சிகத்திற்க்கு வருகிறார் …..

விருச்சிகத்தில் யாருக்கெல்லாம் கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தோடு கோச்சார குரு சேரும் போது ஏற்படும் சேர்க்கையின் காரக பெயருள்ள நபர்கள் சந்திப்பு ஏற்ப்பட்டாலும் குருவின் பெயர்ச்சிக்கான பலன் கிடைக்கும்…..

உதாரணமாக ….

விருச்சிகத்தில் சூரியன்
குரு +சூரியன் – சிவக்குமார், குமரேசன், துரைராஜ்,

சந்திரன் +குரு
ராஜசேகரன், தனசேகரன், சந்திரசேகரன்,

செவ்வாய் +குரு
குமரன், செந்தில்குமார், செந்தில்ராஜா,

புதன் +குரு
ரமேஷ், ராஜேஷ், வேங்கடநாதன்,

சுக்கிரன் +குரு
சுகுமார், விஜயக்குமார்,

சனி+குரு
பெரியசாமி, பொன்னுசாமி,
வரதராஜன்,
பெரியபாண்டி, தங்கபாண்டியன் (செவ்வாய் வீடு என்பதால் ),

ராகு +குரு
நாகராஜ், சாய்குமார் (செவ்வாய் வீடு என்பதால்),

கேது+ குரு
செல்வகணபதி, லிங்கராஜா, கணேஷ்குமார்,

இதுப்போன்ற பெயருள்ள நபர்கள் தொடர்பில் வரும் போது குரு பெயர்ச்சி பலன் கிடைக்கும்…..
மேற்கூரிய யாவும் மேலோட்டமான பொதுவான காரகப்பெயர்கள் தான்… இதில் குரு மற்றும் விருச்சிகத்தில் உள்ள கிரகம் வாங்கிய சாரம், அந்த கிரகத்தின் பாவக காரகம் அடிப்படையிலும் பெயர்கள் உள்ள நபர்கள் வருவார்கள் …

இந்த முறையினை மற்ற ஜோதிடமுறையோடு சேர்த்து பலன் கூறும் போது சிறப்பான பலனாக இருக்கும் ….

அதாவது “அவையோடு இவை “யை சேர்த்து பலன் கூறுவது …..

இந்த பிரபஞ்சம் எனக்கு ஒரு நபரை அறிமுகம் செய்யும் போது அந்த நபரால் அடையபோவது என்ன என்பதனை அந்த நபரின் பெயரின் காரக கிரகத்தின் மூலம் அறிய பயிற்றுவித்த
மரியாதைக்குரிய “நெல்லை வசந்தன் “ஐயாவின் பாதம் பனிந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்…..

இந்த பதிவினை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எனது குருநாதர் அவர்களுக்கு சமர்பிக்கிறேன்…..

NKV SYSTEM…..

https://m.facebook.com/story.php?story_fbid=2031072866945060&id=100001270993224

உண்மை சம்பவம்

அனுபவ கட்டுரை :

ஒரு வருடத்திற்கு முன்பு மதுரையிலிருந்து ஒரு போன்,

செய்தியை சொல்லவும் என்றேன்.

எனக்கு வலது கையில் எப்போதும் வலி என்னால் தாங்க முடியவில்லை அதற்கு தங்களிடம் பார்க்க வேண்டும் என்று கூகையில்,

(சென்னை பிரபல நபரின் பெயரைக் கூறிக் கொண்டார்.)

பதினைந்து நாள் கழித்து தேதியை கூறி விட்டேன்,

அன்றைய நாளில் அப்பாவும், மகனும் வந்து அமர்ந்தனர்,

நான் பார்க்காத மருத்துவமனை இல்லை, மருத்துவர் இல்லை, மற்றும் கூறிக் கொண்டே இருந்தார்,

அவரின் அன்றைய நாள் நிகழ்வு வரை தனியாள் மதிப்பீடு செய்து கொண்டேன்,

தற்போது உடலில் பிரச்சினை அதுவும் கை மட்டும் எப்போதும் வலி என்ற பிரச்சினையின் தாக்கம் அறிந்து கொண்டு,

ஆழ்மன பயிற்ச்சியாளர் சி.பொதுவுடை மூர்த்தி வேதாரண்யம்.

ஆழ்மனம் சிகிச்சை தொடங்கியாச்சு,

கண்கள் மூடியன,

ஆழ்நிலைக் காண சத்தம் ஒலிக்க தொடங்கியது,

வயதுகளின், காலம் குறைய தொடங்கியது,

கேட்கும் கேள்விகளும் பதில்களும் மாறி மாறி அமைந்தது,

அவரின் வயது 14,

9ம் வகுப்பு படிக்க போகும் போது பஸ்லில் மேலூரில் இருந்து மதுரையை நோக்கி சென்ற போது இரு வேறு விபத்துகளை கண் முன்னே பார்க்கிறார்,

கண் முன்னே விபத்தில் சிக்கியவர்கள் இறந்து போக,

அழுகை வேற

கேரளாவின் ஒரு குடும்பம் சுற்றுலா பயணிகள் காரில் பயணம், லாரி மோதல் அதில் ஒருவருடைய கை மட்டும் துடித்த ஒரு விஷயத்தை தன் கண் முன்னே பதிய வைத்து விட்டார்,

அதன் பிறகு அந்த கையின் ஞாபகம் தன் கையின் மீது உணர்வுகளை எற்படுத்தியுள்ளார் அன்று முதல் ஆரம்பம்

தெரிந்துவிட்டது பிரச்சினை

வலியை நீக்குதல்,

விபத்தின் முந்தைய நாள் சென்று இது மாதிரியான சம்பவம் ஒன்று நடைபெறவில்லை,
என கூறுதல்,

கையின் வலி நீக்கப்பட்டுவிட்டது என உணர வைக்கும் இடம் ஆழ் மனதில் இப்போது அன்றைய நாளுக்கு வந்து இப்போது

வலி எப்படி உள்ளது என்றேன்,

வலி இல்லை என்றார்

அவர்களின் முகத்தில எற்பட்ட சந்தோஷம் நம்ளை நூறு வருடம் வாழ வைக்கும்,

வாழ்வில் இது போன்ற செயல்கள் செய்ய அனுமதி அளித்த பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் பல

இது உண்மை சம்பவம்,

இது போல பல அனுபவ கட்டுரை உங்களின் விருப்பத்திற்கு எற்ப விரைவில்,

இது போது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ள

பின்னோட்ட பதிவுகள் செய்யவும்,

நட்புடன்:

ஜோதிடர் சி. பொதுவுடை மூர்த்தி ஆழ்மன பயிற்சியாளர்,
பட்டுக்கோட்டை , வேதாரண்யம்.

தொடர்புக்கு: 9788518230.