ஜோதிடவியல் மாநாடு

அனைத்துலக வானியல் மற்றும் ஜோதிடவியல் மாநாடு.
நாள் : 01.03.2015 (வரும் ஞாயிறு )
இடம் : குரு ஞானக் கல்லூரி, வேளச்சேரி,சென்னை.

 

11016075_715830341871429_2720593967961078118_n


கே‌ள்‌வி ப‌தி‌ல்-2

விடைகள்: 1) முதல் நட்சத்திரம்-அஸ்வினி, கடைசி நட்சத்திரம்- ரேவதி 2) ஆருத்ரா / திருவாதிரை 3) ரோஹிணி 4) முருகப் பெருமான், புத்தர் பெருமான் 5) திரு ஓணம் 6) சதயம் (சதய விழா) 7) தமிழ் பழமொழிகள்: அவிட்ட நட்சத்திரம் தவிட்டுப் பானை எல்லாம் தங்கம் 8) ஆண்மூலம் அரசாளும் 9) கார்த்திகை 10) கிருஷ்ணன் 11) புனர் பூசம் 12) மிருகசீர்ஷம் 13) ரேவதி 14) சித்திரா நட்சத்திர பவுர்ணமி 15) சுவாதி நட்சத்திரம் 16) பூசம், புனர்பூசம் 17) அகஸ்திய நட்சத்திரம் 18) அருந்ததி 19) துருவன் 20) சப்த ரிஷி மண்டலம் 21 ) திரு ஓணம் (விஷ்ணு), திரு ஆதிரை (சிவன்)

கே‌ள்‌வி ப‌தி‌ல் -1

kl

1) 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் எது? கடைசி நட்சத்திரம் எது?

2)சிவனுக்குகந்த நட்சத்திரம் எது?

3)நிலவின் முகம் தேய்ந்து பிறையாகக் காரணம் சந்திரன், 27 பெண்களில் ஒருத்திக்கு சாதகமாக நடந்துகொண்டான். அந்த ஒருத்தி பெயர் என்ன?

4) வைகாசி விசாக நட்சத்திரம் வரும் பவுர்ணமியில் எந்த இருவருக்கு பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன?

5) மலையாளிகள் கொண்டாடும் முக்கியப் பண்டிகை எந்த நட்சத்திரத்துடன் தொடர்புடையது?

6) ராஜ ராஜ சோழன் தன் பிறந்த நட்சத்திரத்தன்று பெரியவிழா கொண்டாடினான். அந்த நட்சத்திரம் எது?

7) தவிட்டுப்பானை எல்லாம் தங்கம் தரும் நட்சத்திரம் எது?

8) அரசாளும் நட்சத்திரம் எது?

9) முருகனை வளர்த்த 6 பெண்களின் பெயருடைய நட்சத்திரம் எது?

10) ரோஹினி நட்சத்திரத்தில் பிறந்த இந்துக் கடவுள் யார்?

11) ராமர் பிறந்த நட்சத்திரம் எது?

12) மான் தலை என்று பெயர் உடைய நட்சத்திரம் எது?

13) பலராமனின் மனைவி பெயர் உடைய நட்சத்திரம் எது?

14) எந்த நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியில் மதுரையில் பெரிய திருவிழா நடைபெறும்?

15) எந்த நட்சத்திர நாளில் பெய்யும் மழை சிப்பியின் வாயில் விழுந்து முத்து ஆகும்?

16) ஜெமினி எனப்படும் நட்சத்திரத் தொகுப்பிலுள்ள இரண்டு நட்சத்திரங்களின் பெயர் என்ன?

17) தென் வானத்தில் ஜொலிக்கும் ஒரு நட்சத்திரத்துக்கு எந்தப் பிரபல முனிவரின் பெயர் சூட்டப்பட்டது?

18) கற்புக்கு அணிகலனாகத் திகழும் நட்சத்திரத்தின் பெயர் என்ன?

19) புகழ்பெற்ற ஒரு சிறுவனின் பெயரையுடைய நட்சத்திரத்தின் பெயர் என்ன?

20. பெருங் கரடிக் கூட்டம் என்று மேலை நாட்டார் அழைக்கும் நட்சத்திரத் தொகுப்புக்கு இந்துக்கள் கொடுத்த பெயர் என்ன?

21. எந்த இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் ‘திரு’ அடைமொழி உடையன?

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

ufiy

அன்னையெனும் சமயபுர அன்புருவே வா வா வா !
ஆனந்த மணிவிளக்கே அழகொளியே வா வா வா !!
இன்னவிருள் அகற்றிடுவோர் இன்னமுதே வா வா வா !!!.
ஈகை மனங்கொண்டோரின் இசை மலரே வா வா வா !!!!.
என்றெழைத்தவுடன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்து பேரறிவான பேரொளியாய் ஒர் நாமம், ஒர் உருவம் ஒன்று இன்றி நிற்கும் பராசக்தி சிருஷ்டி முதலிய கிருத்தியங்களில் ஆற்றலும் அவ்வாற்றலையுடைய வளுமாக சேர்ந்து சரஸ்வதி, வைஷ்ணவி, ரௌத்ரீ, மாஹேஸ்வரி மனோன்மணி என்ற பெயர் பூண்டு ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி வடிவம் கொண்டு உயிர்களை உய்விக்க வேண்டும் எனும் பெருங்கருணையிலே தியான பூஜா நிமித்தமாய் அளவற்ற உருவமும் பெயரும் கொண்டு விறகில் தீ போலவும், பாலில் வெண்ணெய் போலவும், நின்று அருளும் இடமாகிய சமயபுரம் எனும் கண்ணனூரிலே, கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யாசோதையின் குழந்தையாக மாயா தேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி – வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களை தரித்துத்தோன்றினாள். அத்தேவியே ’மகா மாரியம்மன்” என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீவினைகளையும், தீராத நோய்களையும், தன்னுடைய வேப்பிலை மகிமையால் தீர்த்து வைக்கும் ஆயிரங்கண்ணுடையவளாய் அருள்பாலிக்கிறாள். மாரியம்மன் உற்சவத் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப்பெற்று வந்ததென்றும், அந்த ஆட்சிக்கு தளர்ச்சி நேர்ந்த போது பல்லக்கைத்தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை சமயபுரத்தில் கீழே இறக்கி வைத்து உணவு உட்கொள்ள சென்றார்கள் எனவும், பின்னர் வந்து பல்லக்கை தூக்க முயலும் போது, தூக்க இயலவில்லை எனவும், பிறகு விஜயரங்க சொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் எனவும் செவிவழிச் செய்தி கூறுகிறது. இதனாலேயே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் இருந்துவருகிறது.

 தலச் சிறப்பு
      இத்திருக்கோயிலில் மூலவர் அம்மன் சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களையும் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். அம்பாளின் திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால் அம்பாளை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோசம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் அம்பாளை அமாவாசை பௌர்ணமி காலங்களில் வழிப்பட்டால் உச்ச பலன் கிடைக்கும் என்பது தனிச்சிறப்பாகும்.

திருவானைக்காவல்(அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்)

gfn

சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது, பஞ்ச பூத தலங்களில் “நீர்” தலமானது. பிற்காலத்தில் ஜம்பு என்னும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.

        சிவன் அவருக்கு காட்சி கொடுத்து, நாவல் பழ பிரசாதம் கொடுத்தார். பழத்தை உண்ட முனிவர், அதன் புனிதம் கருதி விதையையும் விழுங்கி விட்டார். அவர் விழுங்கிய விதை வயிற்றுக்குள் முளைத்து, தலைக்கு மேலாக மரமாக வளர்ந்தது. அவர் சிரசு வெடித்து முக்தி பெற்றார்.
நாவல் மரத்துக்கு “ஜம்பு” என்றும் பெயருண்டு. அம்பிகையால் அமைக்கப்பட்ட நீர் லிங்கம் இந்த மரத்தின் கீழ் அமைந்தது. பக்தராகிய ஜம்புவுக்கு முக்தி தந்ததால், சுவாமி “ஜம்புகேஸ்வரர்” என பெயர் பெற்றார்.

 தலச் சிறப்பு;

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பஞ்சபூத தலங்களில் இத்தலம் நீருக்கு உரிய தலம்.

        கணவன், மனைவியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப்பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.