30 வருடம் வாழ்ந்தவரும்

jothidam tv 17

ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் எங்கு சஞ்சரிக்கின்றாரோ அதையே அவரின் ஜென்ம ராசியாக கணக்கில் கொள்கிறோம். ஜென்ம ராசியை வைத்து பலன் கூறுவதே கோட்சாரப் பலன் ஆகும். கோட்சார ரீதியாக ஒவ்வொரு கிரகங்களின் நிலையையும் ஆராயும்போது ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய கிரகமாக சனிபகவானே இருக்கிறார்.

சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்றே கூறலாம். சனி பகவான் 12 ராசியை சுற்றிவர 30 வருடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதனால்தான் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை. 30 வருடங்கள் தாழ்ந்தவரும் இல்லை என்ற பழமொழி உள்ளது. பொதுவாக ஒருவருக்கு சனியின் முதல் சுற்று மங்கு சனி என்றும் இரண்டாவது சுற்று பொங்கு சனி என்றும் கூறுவர்.

குறிப்பாக சனிபகவான் 3, 6, 11-ல் சஞ்சரிக்கும் காலங்களில் எல்லா வகையிலும் முன்னேற்றமான பலன்களை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதார மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் தொழில் வியாபார உத்தியோக ரீதியாக உயர்வுகள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமை வல்லமை. உடல்நிலையில் ஆரோக்கியம் போன்ற அனுகூலமான நற்பலன்கள் உண்டாகும்.

ஆனால், சனி பகவான் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது அதிகப்படியான சோதனைகளை உண்டாக்குவார். குறிப்பாக 12, 1, 2-ல் சஞ்சரிக்கும் காலங்களை ஏழரை சனி என்று கூறுவார்கள். ஜென்மராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1-ல் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்ம சனி என்றும் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை குடும்ப சனி, பாத சனி என்றும் கூறுவார்கள்.

இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்புகள் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள், தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள், உத்தியோகத்தில் தேவையற்ற அவப்பெயர் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகளைக் கொடுக்கும். தேவையற்ற விரயங்கள் உண்டாகும். சனி 4-ல் சஞ்சரிக்கும் காலங்களை அர்த்தாஷ்டம சனி என்கிறோம்.

இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். சனி 7-ல் சஞ்சரிப்பதை கண்ட கனி என்கிறோம். இக்காலங்களில் உடல்நிலையில் பாதிப்பு, கணவன்-மனைவி யிடையே கருத்து வேறுபாடு, நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடு, கூட்டுத் தொழிலில் வீண் பிரச்சினைகள், விரயங்கள் உண்டாகும். சனி 8-ல் சஞ்சரிக்கும்போது, அஷ்டம சனி உண்டாகிறது.

இக்காலங்களில் அதிகப்படியான சோதனைகளையும் எதிர்கொள்ள நேரிடும். உடல்நிலையில் பாதிப்பு, நெருங்கியவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். குறிப்பாக சனிபகவான் சாதகமற்று சஞ்சரிக்கும்போது சிலருக்கு அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தும். சனி ஜெனன காலத்தில் நீசம் பெற்றிருந்தாலும் அஷ்டம சனி, ஏழரை சனி காலங்களில் பிறந்திருந்தாலும் பாதிப்புகள் அதிகரிக்கும்.

தொழில் ஸ்தானமான 10-ல் சனி சஞ்சரிப்பதும் நல்லதல்ல. சனி சாதகமற்ற பலன்களை ஏற்படுத்தும் என்றாலும் ஜெனன காலத்தில் ஆட்சி உச்ச வீடுகளாகிய மகரம், கும்பம், துலாகத்தில் அமைந்திருந்தாலும் சனியின் நட்சத்திரங்களாகிய பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சனியால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது

பனை மரம்

பனை மரம்:

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும் மரம்.jothidam12

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்

ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இந்த தாழிப்பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மரத்தில் இதுவரை இல்லாத வகையில் உலகத்திலேயே மிகப்பெரிய பூங்கொத்து பூத்துள்ளதும். அரிய வகையான தாழிப்பனை குறித்து, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், மிகவும் அரிதான மரம் தாழிப்பனை (கோரிபா அம்ப்ராக்ரி பெரா). சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும். சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது.

The problem

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடிjothidam11

டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது  வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?

சந்திரன்

jothidam


 

 

சந்திரன்:

நம்முடைய, பாரத நாட்டின் ஜோதிடக்கலை சூரிய, சந்திரர்களை அடிப்படையாக வைத்தே ரிஷிமுனிகளாலும், ஜோதிட மேதைகளாலும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. சூரியனை விதி என்றும் சந்திரனை மதியென்றும் குறிப்பிடுவார்கள். சூரியனின் அன்றைய கதியை வைத்து லக்னத்தையும், சந்திரனின் நிலையை வைத்து ராசியையும் கணிக்கலாம். லக்னத்தை வைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை, அமைப்பு என்ன என்றும், ராசியை வைத்து தற்கால கிரக நிலைகள் (கோச்சாரம்) தங்களுக்கு என்ன செய்யும் என்றும் கூறலாம். மேலும் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத தசா புத்தி கணக்கீடுகளும், அதனைக் கொண்டு, உங்களின் வாழ்க்கையில் எந்த தசா காலத்தில் என்ன நடக்கும் என்றும் கூறலாம். தசா புத்திகள் நீங்கள் பயணம் செய்யும் பாதையை அமைத்து கொடுக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. இந்தப் பாதையின் தொடக்கத்திற்கு யார் காரணம் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல நம்முடைய கிரேட் சந்திரன் தான்.

ஜாதகர் பிறக்கும் பொழுது, சந்திரன் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறாரோ, அந்த நட்சத்திரத்திற்கு சொந்தக்காரரின் தசையே தங்களின் ஆரம்ப தசையாக இருக்கும். இவ்வாறு, பிறந்தவுடன் உங்களுக்கு எந்த தசை தொடங்க வேண்டும் என்று தீர்மானிப்பவர் சந்திரனேயாவார். மேலும் பெரும்பாலானயோகங்கள் சந்திரனை வைத்தே கூறப்படுவதால் சந்திரனுக்கு நமது ஜோதிடத்தில் மிக முக்கிய பங்கு உண்டு. பஞ்சாங்க விஷயங்கள் (திதி, நட்சத்திரம் போன்றவை) சந்திரனை வைத்தே கணக்கீடு செய்யப்படுவதால், நமது ஜோதிடமுறையை லூனார் அஸ்ட்ரோலோஜி என்றும் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மேலைநாட்டு வெஸ்டர்ன் ஜோதிடத்தை சோலார் அஸ்ட்ரோலோஜி என்றும் கூறுவர்.

சந்திரன் அறிவியல்

நாம் ஏன் சந்திரனுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றால், பூமிக்கு மிக அருகாமையில் இருப்பதால் தான். மிக அருகாமையில் இருப்பதால், பூமியின் மீதான அதன் தாக்கம் மிக அதிகம். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கடல் அலைகள் பெரிதாவதும், கடல் மட்டம் உயர்வதும், நாம் அறிந்ததே. சந்திரனின் இந்த செயலால், மனிதன் அறிவியல் துணைக்கொண்டு டைடல் பவர் ஜெனரேஷன் என்ற முறையில் மின்சாரம் தயாரிக்கிறான்.

பூமியில் வாழும் மனிதர்கள் மீதான அதன் தாக்கம் மிக அதிகம். அமாவாசை, பவுர்ணமி காலங்களில் பல மனநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதனை மனநோய் மருத்துவம்லுனாட்டிக் என்று குறிப்பிடுகிறது. இன்றும் தமிழக மக்கள் இழுத்துக்கொண்டு இருக்கும் பெரிசுகளை, அமாவாசை வரை தாங்குமா என்று கேட்பது வழக்கம்

சந்திரன் நமது துணைக் கோளாகும். அதாவது பூமி சூரியனை சுற்றி வருகிறது, ஆனால் சந்திரன் பூமியை சுற்றி வருகிறது. சந்திரன் பூமியை சுற்றுவதால், அது பூமிக்கு துணைக்கோளாகிறது. விட்ட அளவில் பூமியைவிட 4 மடங்கு குறைவு, எடையில் 81 மடங்கு குறைவு. அதன் புவியீர்ப்பு விசை பூமியை விட 6 மடங்கு குறைவு. ஒரு கிழவன் பூமியில் 2 அடி உயரம் எகிறி குதிக்கலாம் என்றால் சந்திரனில் 12 அடி உயரம் எகிறி குதிக்கலாம். ஓடி விளயாடு தாத்தா என்று பாடலாம். சமீபத்தில் நமது சந்திராயன் – 1, சந்திரனில் நீர் உறைந்து இருப்பதாக கண்டு பிடித்துள்ளது. வாழ்த்துவோம், சந்திராயன் திட்ட இயக்குனர், இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களை, தமிழன் என்று பெருமைப்படுவோமாக.

சந்திரன் காரகத்துவம்

சந்திரன் மாத்ருகாரகன். ஜாதகரின் தாயின் நிலையை சந்திரனை வைத்து அறியலாம். அவனை மனோகாரகன் என்றும் நம்முடைய ஜோதிடம் கூறுகிறது. சந்திரனுக்கும், மனநிலை பிறழ்வுகளுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது என்று மருத்துவ அறிவியலும் ஏற்றுக் கொள்கின்றது, என்னே நமது ஜோதிடக்கலை. போட்டி, பொறாமை, ஈகோ போன்ற பலவித மன உணர்வுகளை, ஜாதகத்தில் சந்திரனின் நிலையை வைத்து அறியலாம். இந்த நட்சத்திரத்தில், இந்த ராசியில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்று பொதுப்பலன் கூறுவதும் சந்திரனை வைத்தே. இன்னும் பல விஷயங்களுக்கு சந்திரன் காரகன். பருத்தும், இளைத்தும் இருக்கும் உடல் அமைப்புக்கும், குளிர்ச்சியான நோய்களுக்கும், உறக்கத்திற்கும், புகழ், மச்சம், விவசாயம் போன்றவற்றிற்கும் சந்திரனே காரகன் ஆவார்.

பரிகாரங்கள்

images (5)1) வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும். மேலும் வெள்ளை உடைகள் நல்லவற்றை, பணத்தை ஈர்க்க உதவும். அதை அதிகம் உபயோகித்தால் நலம் தரும்.
(2) செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி வியரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.
(3) சுத்தமான மலை தேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமி அறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வியாபாரிகள் சுத்த தேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.
(4) வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம். மேலும் வியாழன் அன்று மட்டும் அதற்கு சுத்தமான பாலை வார்த்து வரவும்.
(5) மேற்கு பார்த்த வீடு கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டி வைக்கலாம். மற்ற திசை உள்ளோர்கள் சிகப்பு துணி அல்லது ரிப்‌பன் கட்டலாம்.
(6) குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க நலம் மிகும்.
(7) ஏழை எளியோர், தானம் கேட்போர் (பிச்சை) ஆகியோருக்கு மஞ்சள் லட்டு மற்றும் மஞ்சள் வாழை வாங்கி கொடுக்கவும். தினசரி முடிந்தாலும் செய்யலாம். காளை மாட்டிற்க்கு வெல்லம் கொடுத்து வரலாம்.
(8) வெள்ளை எள் உருண்டையை ஓடும் ஆற்றில் 43 நாட்கள் விட்டு வரலாம்.
(9) குங்கும பூவை உணவில் முடிந்த போதெல்லாம் சேர்த்து வரவும். தினசரி பசுவிற்க்கு மஞ்சள் லட்டு ஒன்று கொடுத்து வரலாம். மேலும் பசு வதையை தடுப்பது மிக சிறந்த நன்மையும், செய்த பாவங்களை, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கங்களையும் களையச்செய்யும்.