​திருவிளக்கு பூஜை

​திருவிளக்கு பூஜை 

..

எந்தப் பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் குத்து விளக்கு இடம் பெறும். சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.. குத்து விளக்கு இல்லாதவர் காமாட்சி விளக்காவது வைத்து ஏற்றுவது நல்லது..  

..

தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. வீட்டில் மங்களங்கள் உண்டாகி நிலைத்து நிற்கும்.. 

..

விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

ஒரு முகமும் ஏற்றி வழிபடுவது-மத்திய பலன்

இரண்டு முகம் ஏற்றி வழிபடுவது-குடும்ப ஒற்றுமை பெருகும்

மூன்று முகம் ஏற்றி வழிபடுவது-புத்திர சுகம் தரும்

நான்கு முகம் ஏற்றி வழிபடுவது-பசு, பூமி இவற்றைத் தரும்

ஐந்து முகம் ஏற்றி வழிபடுவது-செல்வத்தைப் பெருக்கும்.

தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் முறுபடியும் ஏற்றக்கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

..

அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம், ஏற்றி வழிபட வேண்டும். துர்க்கை அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்றவேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

..

சர்வ மங்கள மாங்கல்யே 

சிவே ஸர்வார்த்த சாதிகே .. 

சரண்யே திரயம்பிகே கௌரி 

நாராயணி நமோஸ்துதே..

வாழ்வியல் நீதி

​எமதர்மராஜன் ஒரு குருவியை 

வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். 
அடடா… இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த 

கருடபகவான், 
உடனடியாக அந்தக்குருவியை தூக்கிக் கொண்டு 

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த ஒரு மரப்பொந்தில் பாதுகாப்பாக வைத்தது.
அந்த பொந்தில் வசித்து வந்த 

ஒரு பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் 

அந்த குருவியை விழுங்கிவிட்டது. 
குருவியைக் காப்பாற்ற நினைத்து அந்த 

குருவிக்கே எமனாகி விட்டோமே என்று நினைத்து

கருடபகவான், 
குருவி இறந்த துக்கத்தில் மீண்டும் எமதர்மராஜன் இருந்த இடத்திற்கே திரும்பி வந்தது.
“நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றார் எமதர்மராஜன்”
நான் அந்தக் குருவியை உற்று நோக்கக் காரணம், 
“அந்த குருவி சில நொடிகளில் 

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் 

வசித்த ஒரு பாம்பின் வாயால் 

இறக்க நேரிடும்” என எழுதப்பட்டிருந்தது; 
அது எப்படி நிகழப் போகிறது? 

என்பதை யோசித்துக் கொண்டு இருந்தேன். 
அதற்குள் விதிப்படியே நடந்து விட்டது என்று கூறினார்.
*_”வாழ்க்கையில் என்ன நடக்கவேண்டுமோ அது நிகழ்ந்தே தீரும். அதனால் அதுகுறித்துக் கவலை பட்டுக்கொண்டே இருக்காமல், செய்வதை திறம்பட சிறப்பாய் செய்வோம் என்பதே வாழ்வியல் நீதி!”_*

படித்ததில் பிடித்தது.

சிறுகதை

ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று  நடப்பட்டது.
  ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும்இருந்தது.
 வாழைக்கன்று

 தென்னங்கன்றிடம் கேட்டது, *” நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே? “*

 

தென்னங்கன்று சொன்னது, 

*” ஒரு வருஷம் “.*
“ஒரு வருஷம்னு சொல்றே ,  ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? *எதாச்சும் வியாதியா ?”* கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது.?

  

தென்னங்கன்றோ? அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.?
           ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின்? வளர்ச்சி பெரிதாக  இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றை?விட உயரமாக வளர்ந்துவிட்டது. 
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது.  தென்னங்கன்றோ? எப்போதும் போல  சலனமில்லாமல் புன்னகைத்தது.
         வாழைக்கன்றை? நட்டு  ஒரு வருடம்  ஆவதற்குள் தென்னங்கன்றைவிட?  இருமடங்கு  உயரமாகி விட்டது.
 தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
*”கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!*
நீ  இருக்குற மண்ணில் தான்  நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான்  எனக்கும் கிடைக்குது.  ஆனா பாரு , நான் மட்டும்  எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல ” என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது. 
 தென்னங்கன்றிடம் புன்னகை? தவிர வேறெந்த பதிலும் வரவில்லை. 
         இன்னும் சிறிது காலம் சென்றது.  அதிலிருந்து  அழகான குலை வெளிப்பட்டது.  அது பூவும் ,  காய்களுமாக அழகாக மாறியது. 
அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானது.  இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக்  கழித்தது. 
        நல்ல  உயரம் .  பிளவுபடாத அழகிய இலைகள்,  கம்பீரமான குலை .  வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது.  இப்போது காய்கள் முற்றின .
        ஒரு மனிதன்  தோட்டத்துக்கு வந்தான்.  வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்.  வாழைக்காய்களைத் தட்டிப்  பார்த்தான்.  தென்னை மரத்தைத்  திரும்பிக்கூடப் பார்க்கவில்லை .
 இதை விட வேறென்ன  பெருமை வேண்டும்?  வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.  முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள ,  அதன் குலைகளை வெட்டி எடுத்தான். 
 வாழை மரம் கதறியது.  அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது.  மரண பயம் வந்துவிட்டது.  அது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்தது.  
ஆம்   வாழைமரம் வெட்டி சாய்க்கப்

பட்டது.  
ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத்  தோலுறிக்கப் பட்டது.

 

                 தென்னை மரம்  இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது.  அதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம்  என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கும்  எத்தனை கேலிகள் இது போல?

கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் ,  வேகமாகவே காணாமல் போகும்.
” ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது,

 பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.
✍படித்ததில் பிடித்தது..✍

மரணம் எப்படி இருக்கும்

“மரணம்:”

மரணம் எப்படி இருக்கும்?!

மயக்கம்-தூக்கம்-மரணம் என மூன்று நிலை உள்ளது.

மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை.
உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம். மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.

தூக்கம் – நம் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலை கொள்ளும் நேரம், ஒடுங்கும் நேரம். நாடு உடலில் ஒடுங்கும். மிக குறைந்த அளவில் உணர்வு இருக்கும்.

மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.

மரணம் நம் கையில்!? தடுக்கலாம்!?

மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும்.

உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.

உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ?!

அங்கேயே அதை பத்திரப்படுத்துவது தான் புத்திசாலித்தனம்!

அங்கே இருக்கச்செய்து விட்டால் அது தான் ஞான சாதனை! தவம்!!

பிறந்தது இறப்பதற்கல்ல! இறப்பை வெல்வதற்கு! அதுவே ஞானம்.

இதை உரைத்ததுவே சனாதானதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும்.

“தூங்கி விழிக்க மறந்தவன்” என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.

இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான்.

சாப்பிடதான் வாழ்கிறான் அதற்குதான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான்.

ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான்!

பிறப்பதே சாப்பாட்டுக்காகத்தான்!

சாப்பாடு அல்ல! சாவுக்கான பாடு சா- பாடு!?

சாவதற்காக படாத பாடுபடுகிறான். எப்படியோ சாகிறான்!

சாககூடாது என்பதே சித்தர்கள் உபதேசம்!

“நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்”

“ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்”
படித்ததில் பிடித்தது.