ஸ்ரீ அகத்தீஸ்வரர் ,ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி ஸ்தல வரலாறு பட்டுக்கோட்டை

ஸ்தல வரலாறு

மூலவர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் .
அம்பாள் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி .
தல விருஷம் அரசமரம்.
தீர்த்தம் அகத்திய தீர்த்தம்.
பழமை காலம் தெரியவில்லை.
ஊர் பொன்னவாராயண் கோட்டை.
தாலுக்கா பட்டுக்கோட்டை.
மாவட்டம் தஞ்சாவூர்.
மாநிலம் தமிழ்நாடு .

திருவிழா :

மகா சிவராத்திரி , பங்குனி உத்திரம்

தல சிறப்பு :

அடிநாதம் அரசமர வேரிலிருந்து சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கம்.

திறக்கும் நேரம் :
காலை 6.00 மணி  முதல் 1.00 மணி மாலை 4.00 மணி இரவு 9.௦௦ மணி   வரை

தல பெருமை :

அம்மனும் அய்யனும் ஒரே  சந்நிதானத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்தலம்

 

அமைதியான சுழலில் இயற்கை எழில் கமழும் தென்னைமர காடுகளுக்கு நடுவில் அரசமரதடியில் அமைத்துள்ளது இந்த கோயில். இங்குள்ள அமைதியே அற்புதமான தெய்வீகம் . தென்னையின் தென்றல் தாலாட்டை அரசம் அசைந்து கேட்பது போல்.  இங்குள்ள அரசமர அடிவேருடன் தொடர்புடையது இந்த லிங்கம். தனியாக பிரிக்க முடியாத வேர்களுடனும் , மரத்தோடும் தொடர்புடைய சிவலிங்கம் பெருமான்                 ஸ்ரீ அகத்தீஸ்வரர். அய்யனின் சொரூபம் வேறு எங்கும் காணமுடியாத தோற்றமாக இருக்கும். தெய்வீகத்தை ரசிக்க தெரிந்தவர்களே லிங்கத்தின் அழகை அறியமுடியும்.
இத்தலத்தில் உள்ள அம்மன் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அதி சக்தி வாய்ந்த அம்மன். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை போக்கும் சக்தி .  நேர் திசையில் இல்லாமல் தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது கண் கொள்ள காட்சி. அம்மன் அந்துனை அழகு. தாயரில் கண்கள் மிகவும் விசேஷமானவை. ஒரு கண் அப்பன்         ஸ்ரீ அகத்தீஸ்வரையும் இன்னொரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களையும் காணும். இதில் இன்னொரு அம்சம்  கோபமுடைய முகமாகவும், சிரித்த முகமாகவும் காட்சி அளிக்கும் இந்த அம்மன் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு.  

இங்குள்ள முருக பெருமானின் சிலை மிக மிக அழகான தோற்றமுடிய இந்த சிலை பழனி முருகனின் சிலை வடிவிலே இருக்கும். கார்த்திகை , ஷஷ்டி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட தொழில் சிறக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

ராகு கேது என தனியே கொண்டுள்ள இந்த கோயிலில் நவகிரகங்கள் இல்லை. நாக தோஷம் , களத்திர தோஷம் , காள சர்ப்ப தோஷம் என ராகு , கேதுக்களால் ஏற்ப்படுகின்ற தோஷங்களை போக்கும் ஸ்தலம். அமாவாசை , பௌர்ணமி நாட்களில் பாம்பு சிவனின் பின்னால் உறைவிடமாக கொள்ளுமாம். ராகு கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி வழிபடுதல் தோஷம் நீங்கி சுபநிகழ்ச்சிகள் கை கூடும்.   
தல வரலாறு :

அகத்திய குறுமுனி மிக முக்கிய மருந்து தேவைக்காக தேவையான மூலிகை கிடைக்காமல் யோசித்த நேரம் வேதாரண்யம் வேதபுரீஸ்வர் தோன்றி வேதாரண்யம் அருகில் உள்ள மூலிகை வனத்தில் அந்த மூலிகை கிடைக்கும் என சொல்ல , அகத்தியர் தன் சிஷ்ய கோடி பரிவாரங்களுடன் புறப்பட்டார். செல்லும் போது வழியில் இந்த இடத்தை கடந்த போது அசரரி வாக்கு கேட்க அவ்விடத்தில் அடிவேருடன் தொடர்புடைய லிங்கம் பெருமானை மகிழ்ச்சி அடைத்து லிங்கத்தை எடுத்து பிரத்ஷ்டை செய்து வழிபட்டு சென்றரர். பின் வேதபுரிஸ்வரரை தரிசனம் செய்து மூலிகை மருத்துகளை எடுத்து கொண்டு செல்லும் போது இந்த லிங்கத்தின் அழகை காண மறுபடியும் வந்து தரிசனம் செய்ததாக செப்பேடு கூறுகிறது. அதனால் அய்யன் ஸ்ரீ  ஸ்ரீ அகத்தீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

தற்போது :

நாளடைவில் மறைத்து போன இவ்விடத்தை பொன்னவாராயண் கோட்டை திரு. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு அம்மன் நேரில் அருள் பாலித்து காட்சியளித்து மறுபடியும் இத்தலம் புத்துயிர் பெற்றுள்ளது நிகழ்கால வரலாறு.  இங்கு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற பெரும் உதவிகளை அம்மன் ஆருளால் செய்து வருகிறார். அவரில் இறை பணி சிறக்க அம்மன் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அருள வேண்டும் என்பதே பயனடைந்த மக்களின் வேண்டுதல்.

சிறப்பம்சம் :

துஷட்ட சக்தி (பேய்) பிடித்தவர்களை விரட்டும் இடம் , ராகு & கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடை , குழந்தையின்மை ஆகியவற்றை போக்கும் ஸ்தலம்.

நேர்த்திகடன் :

தெய்வங்களுக்கு  வஸ்திரம் , மஞ்சள், கற்பூரம், பத்தி , நெய், விளக்கேற்ற எண்ணெய் , சந்தனம்,

இந்த ஆலயத்தை நம்பினோர் வீழ்வதில்லை

 

தொகுப்பு

 நன்றி ;பிரவீண் குமார், பட்டுக்கோட்டை.

மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி வரலாறு

?மகாசிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
சிவராத்திரி என்றால் என்ன?
?சிவனுக்குப் பிரியமுள்ள ராத்திரியே சிவன் ராத்திரி. சிவராத்திரி என்பதில் சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் இன்பம் என்று பொருள் கொள்ளலாம். மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம்.
?இந்த நாளில் சிவன் கோவில்களுக்குச் சென்று வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். மாசி மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகாசிவராத்திரியாகும்.
சிவராத்திரி வரலாறு :
?மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தின் போது பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில் இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை அதாவது சிவராத்திரி என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
? சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை சிவன் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டுமென்று அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி தோன்றிய விதம் :
?ஒருமுறை பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள், உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள் பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
? சிவனாரை வழிபட்ட பார்வதியாள் இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார், அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகாசிவராத்திரி.

?புராணங்கள் போற்றும் மகாசிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால் துன்ப இருள் அகன்று சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும்.

மீள் பதிவு.

யாருக்கு பொருத்தம் பார்க்கத்தேவையில்லை

 

[wdps id=”0″]1. முறைப்பெண்ணும்,முறைப்பையனும் திருமணம் செய்துகொள்வதற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.
2. ஒரு குழந்தை கர்பத்திலிருக்கும்போதே ,அக்குழந்தை பெண்ணாய் பிறந்தால் இன்னார் மகனுக்கு திருமணம் செய்துவைப்பேன் என நிச்சயிப்பது, அக்குழந்தை ஆனாய் பிறந்தால் இன்னாருக்கு பிறக்கும் மகளுக்கு திருமணம் செய்துவைப்பேன் என நிச்சயிப்பது கர்ப்ப நிச்சிதம் எனப்படும்.இந்த வகை திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.
3. காந்தர்வ திருமணம் என்பது காதல் திருமணமாகும். காதல் திருமணங்களுக்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.
4. யாருக்காவது தெய்வ அருள் வந்து அவர் இன்னார் மகளை இன்னார் மகன் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என அருள் வாக்கு கூறினால் அது தெய்வ நிச்சிதம் எனப்படும். இந்த வகை திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.
5. ஆன்மீக குரு ஒருவர் ஆண்,பெண் இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளுங்கள் எனக்கூறுவது குரு நிச்சிதம் எனப்படும். இந்த வகை திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.
6. வது,வரன் இருவர்களுக்கிடையே சந்திப்பு நிகழும்போது சுப சகுனங்கள் தோன்றினால் பொருத்தம் பார்க்காமலேயே திருமணம் செய்துகொள்ளலாம்.
7. வது,வரன் இருவருக்கும் பூரண மனப்பொருத்தம் இருந்தால் இந்த வகை திருமணத்திற்கு ஜாதகப்பொருத்தம் தேவையில்லை.