மனத்திரையில் தோன்றும் காட்சிகள்

மனத்திரையில் தோன்றும் காட்சிகள்?
?மனதில் தோன்றும் காட்சிகள் நமது கற்பனையால் உருவாக்கப்படுகின்றன. இந்தக் கனவுகள்தான் வாழ்க்கையில் முன்னேற்றத் திற்கான ஆரம்பப் படிகளாக அமைகின்றன.
?தகவல்கள் நமது மனதில் மூலப் பொருள்களாக நுழைந்து எண்ணங்களாக உருவெடுக்கின்றன. அதே வகையில், கற்பனையில் உருவாகும் விஷயங்கள் கூடத் தகவல்களாக மனதை வந்தடைகிறன.
தகவல்களைக் கட்டுப்படுத்தினால், எண்ணங்களைக் கட்டுப்படுத்தலாம். அதன் வழியாக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தலாம். விளைவுகளை நமக்குச் சாதகமாக அமைத்துக் கொள்ளலாம்
?மனம் ஐம்புலன்கள் வழியாகக் கிடைக்கும் தகவல்களுக்கும் வித்தியாசம் பாராட்டாது. இதையும் மெய்யான தகவல் என்று பாவித்து, பதப்படுத்தி எண்ணங்களாக மாற்றித் தரும்.
?கனவுகள் நிஜமாகும். . இந்தக் கனவுகளில் வரும் தகவல்கள் நமது மனதை மீண்டும் மீண்டும் அடைந்து, நமக்கு நல்ல எண்ணங்களைத் தயார் செய்துகொடுக்கும். அதன் விளைவாக நமது முயற்சியில் பெரிய மாறுதல் ஏற்படும். வெற்றி வாய்ப்புகள் பெருகும்.
?கனவுகள் காணுங்கள். உங்கள் கனவுகள் பிரம்மாண்டமானவைகளாக அமையட்டும். நீங்கள் அதில் கதாநாயகனாக/ கதாநாயகியாக பல சாதனைகளை நடத்துங்கள். அனைவரும் உங்களைப் போற்றும் அந்தக் காட்சியைக் கண்டு மகிழுங்கள். பாராட்டுக்களைக் கேட்டு சந்தோஷப்படுங்கள்.
?1.கனவுகள் அதாவது கற்பனைக் காட்சி துல்லியமானதாக இருக்கவேண்டும்
?2. மீண்டும் மீண்டும் அந்தக் காட்சியை மனதில் தருவித்து கண்டு களிக்கவேண்டும்
?3. அந்தக் காட்சியோடு உணர்ச்சிபூர்வமாகக் கலந்துவிட வேண்டும்.
?காட்சி துல்லியமாக அமையாவிட்டால், மனம் அந்தத் தகவலை நிராகரித்துவிடும், ஏற்றுக் கொள்ளாது.
?நாம் ஒரு வெற்றியைச் சாதிக்க விரும்பினால் அந்தச் சாதனைக்கான அளவுகோலை துல்லியமாக நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த அளவைச் சாதித்துவிட்டதாகக் கனவு காண வேண்டும்.
?இன்ன சாதனை செய்யவேண்டும் என்று தீர்மானித்த பிறகு, அதைச் செய்து முடித்துவிட்ட நிலையில் ஏற்படும் சந்தோஷ நிலையை மனதில் கற்பனை செய்து பார்க்கும்போது மனம் அந்தத் தகவலைப் பதப்படுத்தி வெற்றி எண்ணத்தைத் தயார் செய்து தருகிறது.
?அந்த எண்ணம் தீவிரம் அடையவேண்டும் என்றால், ஒருமுறை கற்பனை செய்தால் போதாது, மீண்டும் மீண்டும் அந்த வெற்றிச் சித்திரத்தை மனதில் திரையிட்டுப் பார்க்க வேண்டும்.
?அடிக்கடி இந்தக் காட்சி நமது மனத் திரையில் ஓடும்போது, ‘வெற்றி’ தகவல் மீண்டும் மீண்டும் மனதில் திணிக்கப்படுகிறது. அடிக்கடி இப்படி ஒரு கனவு நிலைக்குச் சென்றுவிட வேண்டும். நிஜ வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கும் முன்பே அதைச் சாதித்துவிட்ட மனநிலையை அடைந்துவிட வேண்டும்.
?அப்படி ஒரு நிலையை அடைவதற்கு உணர்ச்சிகள் கற்பனையோடு பிணைந்திருப்பது அவசியம். உணர்ச்சிப்பூர்வமாக அந்தக் கனவுக் காட்சியில் லயித்துவிடும்போது இந்த எண்ணம் மிக ஆழமாகப் பதிந்துவிடுகிறது. இடையில் ஏற்படும் சிக்கல்களால் இந்த ஆழமான எண்ணத்தை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது.
?மேலோட்டமான எண்ணங்களால் சிக்கல்களை எதிர்க்க முடியாது. பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்துத் தாக்குபிடிக்க முடியாது. அதனால் கனவோடு உணர்ச்சிபூர்வமாக லயித்துவிட வேண்டும்.
?ஆண்டாள் மனிதப் பெண்ணாகப் பிறந்து, கடவுளான கண்ணணையே கணவனாக அடைய வேண்டும் என்று கனவு கண்டாள். உலகத்தவர் அனைவரும் இது ஈடேறாது என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் அதைப் பொருட் படுத்தவில்லை. அந்தக் கனவிலேயே லயித்திருந்தாள். கண்ணணுக்கும் தனக்கும் நடக்கவிருக்கும் திருமணக் கோலாகலத்தைத் தனது கற்பனையில் துல்லியமாகக் கண்டுகளிக்கிறாள்.
“வாரணமாயிரம்…” என்று துவங்கி திருமண வைபவத்தில் தனக்கும் கண்ணணுக்கும் நடக்கும் (நடக்கவிருக்கும்) ஒவ்வொரு சடங்கையும் கற்பனையில் விவரித்துப் பார்க்கிறாள். “மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத் தாமங்கள் நிறைந் தாழ்ந்த பந்தர்க் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்”.
மனித வாழ்க்கையில் நடக்கவே வாய்ப்பில்லாத அந்தத் தெய்வத் திருமணத்தைக் கூடத் தனது கனவினால் சாதித்துக் காட்டினாள் ஆண்டாள்.
?கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்” என்றார் மகாகவி பாரதி. கிட்டத்தட்ட அவரது கனவுகள் அனைத்துமே இன்று நிஜமாகிவிட்டன.
?எப்படி நமது மனம் என்னும் தொழிற்சாலை ஐம்புலங்களின் வாயிலாக வரும் தகவல்களை உள்வாங்கி, பதப்படுத்தி எண்ணங்ளைத் தயார் செய்கிறதோ அதேபோலக் கற்பனையில் வரும் நிகழ்வுகளையும் உள்வாங்கி அதிலிருந்தும் எண்ணங்களை உற்பத்தி செய்கிறது. இந்த எண்ணங்களால் நமது நடவடிக்கைகள் திறம்படுகின்றன, வெற்றி பெறுவது திண்ணம்

படித்ததில் பிடித்தது

copy paste

ஜாமக்கோள் பிரசன்ன வகுப்புகள்

 

 

 

 

 

ஜாமக்கோள் பிரசன்ன வகுப்புகள் .

பிரசன்னமுறைகளில் மிகவும் துல்லிய முறையானதும் மிக மிக எளிமையான
ஜாமக்கோள் அற்புதமான பிரசன்ன சூட்சும வகுப்புகள்.

வந்தவர் எதற்காக வந்துள்ளார்

கேள்வி கேட்கமலேயே வந்தவரின் நோக்கத்தைச் சோல்வது

பிரச்சனையின் வீரியம்

அவை தீருமா தீராதா

தீரும் என்றால் எப்போது தீரும்

நினைத்த சம்பவம் எப்போது நடக்கும் என துல்லியமான கால நிர்ணயம்

குலதெய்வ பலம் அறிதல்

காணமல் போன பிரசன்னம்

செய்வினை தோஷம் அறிதல்

நீரோட்டம்(போர்வெல்) எந்த திசையிலிருந்து நீர் வருகிறது.போர் போட்டால் நீர் உண்டா.

துல்லியமாக பிரசன்னத்தில் திருமண பொருத்தத்தின் ஆழம்

இன்னும் பல வியக்கத்தகு அற்புத முறை

விரைவில் இடம் நாள் அறிவிப்பு.

ஜாமக்கோள் பிரசன்ன ஜோதிடர்

அவினாசி ஜோதிலிங்கம்

Avinashi Jothilingam

80120 27947

02.02.2017இந்த நாள் இனிய நாள்.

இந்த நாள் இனிய நாள்.
02.02.2017
வியாழ கிழமை
நட்சத்திர பலன்கள் :
அஸ்வினி நட்சத்திரம் – புதிய முயற்சிகள் கவனம் தேவை.
பரணி – மகிழ்ச்சி.
கார்த்திகை – பட்டம், பதவி, புகழ், பயணம் என மகிழ்ச்சியாகும்.
ரோகிணி – புதியநற் செய்தி , கணவன் மனைவி உறவுகள் மேம்படும்.
மிருகசீரிடம் – இரும்பு, ஆயில்,எண்ணெய் , கவனம் தேவை.
திருவாதிரை – அரசியல் எதிர்பார்பு வெற்றி, அலைச்சல் .
புனர்பூசம் – நினைத்தது ஜெயம்.
பூசம் – பண வரவு .
ஆயில்யம் – எந்த வகையிலாவது வெற்றி பெறுவீர்கள்.
மகம் – உ டல் நிலை கவனம் .
பூரம் – வீண் வார்த்தை வேண்டாம்.
உத்திரம் – தொழில், வேலையில் சிறப்பு உண்டாகும்.
அஸ்தம் – வெளிநாடு பயணம், மகிம்ச்சி .
சித்திரை – கவனம் .
சுவாதி – அரசு வகை தொல்லை.
விசாகம் – நிச்சியம் வெற்றி பெறுவீர்கள்.
அனுசம் – பேசியே காரியத்தை வெற்றி பெறுவீர்கள்.
கேட்டை – நிம்மதியான வாழ்வு.
மூலம் – சந்தோஷம், மறக்க முடியாத நாள்.
பூராடம் – உயர் பதவி உண்டு, இடமாற்றம், பயணம்.
உத்திராடம் – அம்மன் கோவில் செல்ல வேண்டும்.
திருவோணம் – சொத்து சேரும், மகிழ்ச்சி, சுபசெய்தி உண்டு.
அவிட்டம் – தனசேர்க்கை .
சதயம் – நம்பிக்கை இருந்தால் நீங்கள் எடுத்த காரியம் வெற்றி நிச்சயம்.
பூராட்டாதி – இடமாற்றம், அலைச்சல், ஜீவ சமாதி வழிபாடு.
உத்திரட்டாதி – வாகனம் புதிதாக சேரும்,தனவரவு, மகிழ்ச்சி.
ரேவதி – பிரச்சினை, மன உலைச்சல் ,தேவை இல்லாத பிரச்சினை கவனம் தேவை.
நன்றி, அன்புடன்உங்கள் #ஜோதிடர் #பொதுவுடைமூர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்.வேதாரணியம்.

www.jothidam.tv

​நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது 

​நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி ?
 தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில் சுற்றிப்பார்த்து விடலாம்.
1, திங்களூர் (சந்திரன்):
 நவகிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன. இதன் மூலம் பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.30 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 7 மணிக்கு கும்பகோணம் கிளம்பலாம்.
2, ஆலங்குடி (குரு) :
  கும்பகோணத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு 8.30 மணிக்கெல்லாம் ஆலங்குடி கிளம்ப வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்ல எண்ணற்ற பேருந்துகள் கிடைக்கின்றன. அதோடு கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 30 நிமிடங்களுக்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 9.30 அல்லது 9.45 மணியளவில் கும்பகோணத்திற்கு திரும்பலாம்.
3, திருநாகேஸ்வரம் (ராகு) :
 கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.45 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி ஆலயம் 100 தூண்களை கொண்ட பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகும். பின்னர் 11.15 மணிக்கு கும்பகோணம் திரும்ப வேண்டும்.
4, சூரியனார் கோவில் (சூரியன்) :
 சூரியனார் கோவில் கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எனவே நீங்கள் 11.45-க்கு புறப்பட்டால் கூட 12.15 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.45 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5, கஞ்சனூர் (சுக்கிரன்) :
 சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் பேருந்து அல்லது கார் மூலமாக 10 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 1 மணிக்கு முன்பாகவே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் கால் மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :
 நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் பேருந்தில் ஏறினால் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 அல்லது 2.15 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். அதன் பின்பு மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.15 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.45 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 4.30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7, திருவெண்காடு (புதன்) :
 வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 4.30 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு 5.30 மணிக்கு கிளம்ப வேண்டும்.
8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
 திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் அடைந்து விடலாம். இந்த கீழ்பெரும்பள்ளம் கோயிலையும் தஞ்சாவூரில் இருக்கும் பிரகதீஸ்வரர் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று இங்கு அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.
9, திருநள்ளாறு (சனி) :
 நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து 6.15 அல்லது 6.30 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக 8 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் தரிசிக்கலாம்