பரிகார முறைகள்

20 பரிகார முறைகள்
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.
(7)அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
(8)செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
(9) 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
(10)வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
(11)ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
(12)படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.
(13)வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வவரவை,வசீகர சக்தியைப் பாதிக்கும்.

வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.
(14)உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..
(15)உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல்

போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
(16)சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
(17)வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்.

18.வில் கொடி,கொடிமரம்,கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள்.இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று.

இதற்குப் பரிகாரம்:

வீட்

டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம்,கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று
(19)சுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.

இதற்குப் பரிகாரம்:

ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங்கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்
(20)கோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.

மீள் பதிவு. நன்றி.

எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.

கடவுள் வந்தார்…!
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்..
அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..
முதல் மனிதன் : 
“எனக்கு கணக்கிலடங்கா காசும், 

பெரிய பிஸினஸும் வேண்டும்..!”
இரண்டாம் மனிதன்: 
“நான்  உலகில் சிறந்தோங்கி 

பெரிய பதவியை அடைய வேண்டும்..!”
மூன்றாம் மனிதன் : 
“உலப்புகழ் பெற்ற நடிகர் போல் 

மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..!”
நான்காம் மனுஷி: 
“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! 

உலகமே அதில் மயங்க வேண்டும்..!”
இப்படி.. 
இன்னும் ஐந்து பேரும் 

தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..!
கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..! 
பத்தாவது மனிதன் கேட்டான்:
 “உலகத்தில் 

ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் 

மன நிறைவோடும் வாழ முடியுமோ, 

அந்த நிலை எனக்கு வேண்டும்..!”
ஒன்பது பேரும் 

அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..!
“ *மனநிம்மதி, மன நிறைவு*…
 நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..?
 விரும்பியது கிடைத்தால்  மனநிறைவு கிடைத்து விடுமே..?”
கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :
 “நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! 
நீங்கள் போகலாம்..!” என்று கூறிவிட்டு,
 பத்தாவது மனிதனைப் பார்த்து : 
“நீ இரு..! 

நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..  
சிறிது  நேரம் கழித்து வருகிறேன்..”  என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..!
இப்போது, 
அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! 
கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்; 
என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! 

துடித்தது..!
அவர்கள் விரும்பியது எதுவோ 

அது கையில் கிடைத்த பின்னும்,
 இன்னும் எதுவுமே கிடைக்காத 
அந்த 

பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! 
நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..!
 தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! 

அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, 

அந்த இடத்திலேயே, 
அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..!
பத்தாவது மனிதன், 
கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! 
கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே 

அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..!
நாம் 

*பத்தாவது* மனிதனா..?

 

இல்லை 

*பத்தாது* என்கிற மனிதனா..? 

முடிவு எடுங்கள்.. 
*எண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.*
இனிமையான எண்ணங்களுடன்

​ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான ஸ்தலங்கள்

ஸ்ரீ காலபைரவரின் அஷ்ட வீரட்டான ஸ்தலங்கள்:

மும்மூர்த்திகளில் பிரம்மாவுக்கு பூமியில் கோவில்கள் கிடையாது;அப்படிப்பட்ட சாபத்தை அவர் தனது தவற்றினால் பெற்றுவிட்டார். மஹாவிஷ்ணு நம்மை காக்கும் கடவுள். நம்மை அவர் காப்பதற்கு உதவி புரிவது அவரது துணைவி மஹாலட்சுமி! அழிப்பவர் ருத்ரன்(சிவன் அல்ல) இங்கே அழிப்பது என்பது நம்மை அழிப்பது அல்ல. நமது கர்மவினைகளை அழிப்பது ருத்ரன். இந்த மும்மூர்த்திகளையும் நேரடியாக நிர்வகித்துவருபவரே ஸ்ரீகால பைரவர்!

காலம் என்னும் சக்கரத்தை இயக்கிக் கொண்டிருப்பதால் இவருக்கு கால பைரவர் என்று பெயர் வந்தது. எட்டுவிதமான பைரவர்களில் நம்மால் வழிபடக்கூடியவர் இரண்டே இரண்டு பேர்கள் மட்டுமே! ஒருவர் ஸ்ரீகால பைரவர், மற்றவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்!! இந்த இருவரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் எட்டு பைரவர்களையும் விடவும் உயர்ந்தவர்;

முருகக்கடவுளின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்களே அறுபடைவீடுகளாக இருக்கின்றன.திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையிலும் தமிழ்நாடெங்கும் முருகக்கடவுளின் அறுபடைவீடுகள் பரவிக்கிடக்கின்றன.

அதே போல, அட்டவீரட்டானங்கள் என்பது ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் ஆகும்.மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்தைச் சுற்றிலும் நான்கு வீரட்டானங்களும்,திருவாரூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,பண்ருட்டிக்கு அருகே ஒரு வீரட்டானமும்,தஞ்சாவூருக்கு அருகே ஒரு வீரட்டானமும்,திருஅண்ணாமலைக்கு அருகே ஒரு வீரட்டானமும் அமைந்திருக்கிறது. சுமாராக நானூறு சதுர கி.மீ.தூரத்துக்குள் அட்டவீரட்டானங்களும் அமைந்திருக்கின்றன. இந்த அட்ட வீரட்டானங்களிலும் ஒன்றிரண்டு மட்டுமே பிரபலமான சிவாலயமாக அமைந்திருக்கிறது. அங்கே தினமும் சில ஆயிரம் பேர்கள் வந்து செல்லும் ஆலயங்களாக இருக்கின்றன.

இந்த அட்டவீரட்டானங்களிலும் ஸ்ரீகாலபைரவப்பெருமான் மூலஸ்தானத்தில் சிவபெருமானாகவே காட்சியளிக்கிறார்.இந்த அட்டவீரட்டானங்களின் வரலாறு பல நூற்றாண்டுகளாக பிரபலமடையவில்லை.

இந்த அட்டவீரட்டானங்களை முழுமையாக தரிசிக்க நான்கு நாட்கள் தேவைப்படும். 

ஒரு நாளுக்கு காலை ஒரு வீரட்டானம். மாலை ஒரு வீரட்டானம் வீதம் நான்கு நாட்களில் எட்டு வீரட்டானங்களுக்குச் செல்ல முடியும்.இவைகளில் பெரும்பாலானவை பிரதான சாலையிலிருந்து விலகியே இருக்கின்றன.ஸ்ரீகாலபைரவரை சிவனாக தரிசித்தே ஆகவேண்டும் என்ற வேட்கை/தாகம் யாருக்கு வருகிறதோ அவர்கள் மட்டுமே தரிசிக்க முடியும்.

முதன் முதலில் அப்படி தரிசிக்கும்போது நாம் என்ன வேண்டுகிறோமோ அந்த வேண்டுதல் உடனே நிறைவேறிவிடும் என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த உண்மை ஆகும்.நம்ப முடியவில்லையா? டெஸ்ட் செய்து பாருங்கள்.

அட்டவீரட்டானங்களும் அவைகளுக்கான வழித்தடங்களும்:

முதல் வீரட்டானம்=திருக்கண்டியூர்

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.இதன் வேறு பெயர் ஆதிவில்வாரண்யம் ஆகும்.

திருமூலப் பெருமானும்

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்

தலையத் தடிந்திட்டுத் தானங்கியிட்டு

நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்

தலையைப் பரிந்திட்டு சந்தி செய்தானே(திருமந்திரம் 340)

மூலவரின் பெயர்:பிரமசிர கண்டீஸ்வரர்.இந்த தலத்துக்கு ஸ்ரீகாலபைரவரை தரிசிக்க வேண்டுமென்ற வேட்கையோடு சென்று வழிபட்டால் மறுபிறவியில்லை.

இரண்டாவது வீரட்டானம்:திருக்கோவிலூர்

கோவல்நகர் வீரட்டம்,தென்பெண்ணை நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கிறது. திரு அண்ணாமலைக்கு அருகில் திருக்கோவிலூர் அமைந்திருக்கிறது.

கருத்துறை அந்தகன் தன் போல் அசுரன்

வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்

வருத்தஞ் செய்தா னென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கை கொண்டு கொன்றானே(திருமந்திரம் 339)

மூலவரின் பெயர்:அந்தகாசுர சம்ஹார மூர்த்தி,மூலவளின் பெயர்:சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி!

மூன்றாவது வீரட்டானம்:திருவதிகை

பண்ருட்டிக்கும் சீர்காழிக்கும் இடையே அமைந்திருக்கிறது. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்

முப்புரமாவது மும்மல காரியம்

அப்புரம் எய்தமை யாரறிவாரே! (திருமந்திரம் 343)

மூலவர்:வீரட்டானேஸ்வரர்

நான்காவது வீரட்டானம்:திருப்பறியலூர்

மாயவரம் என்ற மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் செல்லும் சாலையில் செம்பொன்னார் கோயில் என்ற ஊருக்கு வர வேண்டும்.அங்கிருந்து பரசலூருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று விசாரிக்க வேண்டும்.திருப்பறியலூரின் உள்ளூர் பெயரே பரசலூர் ஆகும்.

மூலவரின் பெயர்: வீரட்டேஸ்வரர்;

மூலவளின்பெயர்:இளங்கொம்பனையாள்

ஐந்தாவது வீரட்டானம்: திருவிற்குடி என்ற விற்குடி

திருவாரூரிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் ஒரு யூ வடிவ சாலை வளைவு வரும்;அந்த வளைவைக் கடந்த உடனே விற்குடி என்ற சாலையோர வழிகாட்டி தெரியும்.அந்த வழிகாட்டியின் படி பயணித்தால் ஒரு சிறிய பாலம் தென்படும்;அந்த பாலத்தைக் கடந்ததும்,விற்குடி என்னும் கிராமம் வரும்;அந்த கிராமத்தின் மையத்தில் இந்த வீரட்டானம் அமைந்திருக்கிறது.

எங்கும் பரந்தும் இரு நிலந்தாங்கியும்

தங்கும் படித்தவன் தாளூணர் தேவர்கள்

பொங்கும் சினத்துள் அயன் தலை முன்னற

அங்கு அச்சுதனை உதிரங்கொண்டானே(திருமந்திரம் 341)

மூலவர்:ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி

ஆறாவது வீரட்டானம்:வழுவூர்

மிக எளிதாகச் செல்லக்கூடிய ஆனால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வீரட்டானம் இது.ஏன் இப்படி நமக்கு மெய்சிலிர்க்கிறது என்பதற்கான காரணத்தை அறிய நமக்கு தகுந்த குரு இந்த பிறவியில் அமைந்தால் தெரியும்.இல்லாவிட்டால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க வேண்டியதுதான்.இவரை பார்த்த உடனே நமக்குள்ளே இருக்கும் அத்தனை அகங்காரமும் கரைந்து காணாமல் போய்விடும்.

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் வழுவூர் பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது.இந்த நிறுத்தத்தில் இறங்கி,சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு உள்ளே பயணித்தால் மிகப்பிரம்மாண்டமான ஆலயத்தைக் காணலாம்.இவ்வ்வளவு பெரிய்ய்ய்ய கோவிலாக இருந்தும் கூட ஒரு நாளுக்கு பத்து பக்தர்கள் வருவதே அதிகம் போலும்!அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமிநாட்களில் உள்ளூர் பக்தர்கள் ஓரளவு கணிசமாக வருவதாகக் கேள்வி!!

ஏழாவது வீரட்டானம்:திருக்குறுக்கை

இருந்த மனத்தை இசைய இருத்திப்

பொருந்தி இலிங்க வழியதுபோக்கி

திருந்திய காமன் செயலழித்தங்கண்

அழுந்தவ யோகங்கொறுக்கை அமர்ந்ததே(திருமந்திரம் 346)

மயிலாடுதுறை எனப்படும் மாயவரத்திலிருந்து சுமார் எட்டுகி.மீ.தூரம் பயணித்து,அங்கிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் சுமார் மூன்று கி.மீ.தூரம் சென்றால் உள்ளடங்கிய கிராமமான கொறுக்கைக்குள் அமைந்திருக்கிறது.

மூலவர்:வீரட்டேஸ்வரர் மூலவள்:ஞானாம்பிகை

காமம் சார்ந்த பிரச்னைகளால் கடந்த சிலபல வருடங்களாக படாத பாடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் இங்கே வந்து தொடர்ந்து வழிபட,வழிபட மனதில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் காணாமல் போகும்;முதல் தடவை வந்து சென்றதுமே நமது மனது பரிசுத்தமாகிவிடும் என்பதை உணரலாம்.

எட்டாவது வீரட்டானம்:திருக்கடவூர்

மூலத்துவாரத்து மூளும் ஒருவனை

மேலைத் துவாரத்து மேலுற நோக்கி முற்காலுற்று

காலனைக் காய்ந்தங்கி யோகமாய்

ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே(திருமந்திரம் 345)

எப்போதும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து செல்லும் வீரட்டானம் இது;காரணம் இங்கே 60 ஆம் கல்யாணம் மிகச் சிறப்பாகவும்,காலம் காலமாகவும் நடைபெற்றுவருகிறது.இந்தக் கோவிலின் புராதனப்பெயர் வில்வாரண்யம்.

மூலவர்: அமிர்தகடேஸ்வரர் மூலவள்:அபிராமி

கொன்றாய் காலனை;உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு, மான் கன்றாருங் காவாக் கடவூர் திருவீரட்டத்துள்

என் தாதை பெருமான் எனக்கு யார் துணை நீயலதே(தேவாரம்)

“ ? *ஓம் நமசிவாய* ? “courtesyramachandralu