வெளியூர் பயணங்களை தொடங்கும்

வெளியூர் பயணங்களை தொடங்கும் ===============================போது கவனத்தில் கொள்ளவேண்டிய
=================================
முக்கியமான விசயங்கள்
=====================

வெளியூர் பயணம் தொடங்கும் போது நடப்பில் உள்ள பிரசன்ன லக்கினத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1-4-7-10 இந்த இடங்களில் எதாவது ஒருகிரகமாவது இருக்கும்போது நாம் பயணத்தை தொடங்கவேண்டும்.

பிரசன்ன லக்கினத்திற்கு 1-4-7-10 இந்த இடங்களில் என்ன கிரகம் உள்ளதோ அந்த கிரகம் நமக்கு உரிய பாதுகாப்பை வழங்கும்.

பிரசன்ன லக்ன கேந்திரங்களில் உள்ள கிரகங்களுக்குரிய மந்திரங்களை பாராயணம் செய்தல் மற்றும் அந்த கிரகங்களுக்குரிய தெய்வங்களை ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு பயணத்தை தொடங்குவது நமக்கு நல்ல பாதுகாப்பை அளிக்கும்.

மேலும் 1-4-7-10 ல் உள்ள கிரகங்களுக்குரிய காரகத்துவங்களில் உள்ள உறவினர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு செல்லுதலும் நன்மை அளிக்கும்.

முதலில் குல தெய்வத்திடமும் நன்கு பிரார்த்தனை செய்துவிட்டு பயணத்தை தொடங்குவது நன்மையாகும்.

இந்த முறைகளை கடைபிடித்து பயணத்தை தொடங்கினால் பயணம் பாதுகாப்பாகவும், இனிதாக அமையும் .

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879
நன்றி.

பரிகார திருத்தலங்கள்

பரிகார திருத்தலங்கள்
===================

பிருகுநந்தி நாடிமுறையில் செவ்வாய் புதன் சேர்க்கை பகை கிரக சேர்க்கையாகும். இந்த சேர்க்கை உடையவர்களுக்கு அவர்களுடைய சகோதரர்களிடையே ஒற்றுமை இருக்காது. அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். கல்வி கற்பதிலும் தடை உண்டாகும். தோல்சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

செவ்வாய் புதன் சேர்க்கையுடையவர்கள் கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவிலில் உள்ள முருகப்பெருமானை வணங்கிவரவும். இக்கோவிலில் உள்ள முருகன் பெருமாளுக்குரிய சங்கு சக்கரத்துடன் காட்சிதருகின்றார்.

செவ்வாயின் அதிதேவதை – முருகன்
புதனின் அதிதேவதை – பெருமாள்
பெருமாளின் ஆயுதங்கள் – சங்கு சக்கரம்.

செவ்வாய் புதன் சேர்க்கையுடையவர்கள் இந்த திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு நன்மையடையவும்

ஜோதிடர்& ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879
நன்றி.

பிருகு நாடி முறையில் பரிகார சூட்சுமம்

பிருகு நாடி முறையில் பரிகார சூட்சுமம்
=================================

படிக்கும் குழந்தைகளுக்கு புதன் கேது சேர்க்கை இருந்தால் ஞாபகமறதி ஏற்படும். சிந்தனையை ஒருமுகப்படுத்தி படிக்க முடியாது. இதனால் மதிப்பெண் குறைவாக எடுக்கும் வாய்ப்புகள் உள்ளது.

புதன் கேது சேர்க்கை பெற்ற இளம் வயதினர்
காதல்வலையில் விழ நேரிடும்.

புதன் கேது சேர்க்கையால் தைராய்டு பிரச்சினைகளையும் உருவாக்கும்.

இதற்குப்பரிகாரமாக திருநங்கைகளிடம் அடிக்கடி ஆசிர்வாதம் வாங்கிவரவும்.
புதன் கேதுவால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

(குறிப்பு : ஜோதிட நண்பர்கள் இந்த பதிவிற்கு மூலநூல் ஆதாரம் கேட்கவேண்டாம். நிச்சயம் என்னிடம் இல்லை.

நான் சற்று முன்னர் டீகடைக்கு சென்று டீ குடித்துவிட்டு வரும்போது ஒரு சிறுவன் திருநங்கையிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டிருந்தான். இது பிருகுநந்தி நாடி ஜோதிடத்தில் என்ன கிரகச்சேர்க்கைக்கு பரிகாரமாக வரும் என சிந்திக்கும்போது கிடைத்த தகவல்தான் இது

திரு நங்கை – புதன்
ஆசிர்வாதம் – கேது )

பிரபஞ்சம் ஏதாவது ஜோதிட செய்தியை எப்போதும் வழங்கிக்கொண்டேதான் இருக்கும். நாம் மிகவும் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்.
சிவ காளீஸ்வரமூர்த்தி
7418796879

“மகிழ்ச்சி”

உலகியல் ஜோதிடம்

உலகியல் ஜோதிடம்
==================

உலகியல் ஜோதிட பலன் காணும் போது 12 பாவகங்களை பிரித்து தெரிந்துகொண்டால் பலன் காண்பது கொஞ்சம் எளிதான ஒன்றாக இருக்கும் .

முதல் பாவகம்
=============

நாட்டின் முக்கிய பிரமுகர்கள், நாட்டின் சுய கௌரவம், அதிகாரம், கௌரவமான நடத்தைகள். மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருத்தல், முன்னெச்சரிக்கைகள் .

இரண்டாம் பாவகம்
=================

ஒரு நாட்டின் செல்வங்கள், நிதித்துறை, அரசாங்கத்தின் உத்தரவுகள், அரசாங்கத்தின் வாக்குறுதிகள்.

மூன்றாம் பாவகம்
================

ஒருநாட்டின் அரசாங்கத்தின் பத்திரங்கள், அரசாங்கத்தின் கடிதங்கள், தகவல் தொடர்புத்துறை , போக்குவரத்துத்துறை.

நான்காம் பாவகம்
================

நாட்டு அரசாங்கத்தின் கட்டிடங்கள், கல்வித்துறை ,அரசாங்க அலுவலகங்கள், ஏரி, குளம் ,குட்டைகள், கிணறுகள். அரசாங்க அலுவலக வளாகங்கள்.

ஐந்தாம் பாவகம்
===============

ஒரு நாட்டின் விளையாட்டுத்துறை , கலைத்துறை, சுற்றுலாத்துறை, அரசாங்கம் நடத்தும் நிகழ்ச்சிகள் .

ஆறாம் பாவகம்
==============

நாட்டின் கடன், வழக்குகள், அரசாங்க பணியாளர்கள், எதிரிகள் , மருத்துவத்துறை, வேலைவாய்ப்பு அலுவலகங்கள்.

ஏழாம் பாவகம்
=============

நீதித்துறை, பொதுநலத்துறை, நட்புறவு கொள்பவர்கள், மக்கள் நல மேம்பாட்டுத்துறை.

எட்டாம் பாவகம்
==============

அரசாங்கத்தின் சொத்துகள் திருடப்படுதல், நிலுவையில் உள்ள நீண்டகால வழக்குகள்,பெரும் தலைவர்களின் இழப்புகள், பெரிய விபத்துகள்,சேதங்கள், கட்டுப்படுத்த முடியாத நோய்கள், அரசாங்க தண்டனைகள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள், மறைமுக எதிரிகள் , அச்சுறுத்தல்கள்.

ஒன்பதாம் பாவகம்
================

அரசாங்க வங்கிகள், அறநிலையத்துறை, பல்கலை கழகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், கோவில்கள், ஆயுதக் கிடங்குகள், ராணுவம்.

பத்தாம் பாவகம்
==============

நாட்டிற்கு பாராட்டு கிடைத்தல், வேலை வாய்ப்புத்துறைகள், வணிக வளாகங்கள், உயர் விருதுகள், வெற்றிச்சின்னங்கள், கனிம வளங்கள்.

பதினொன்றாம் பாவகம்
=====================

அரசாங்க உதவிகள், நினைவுச் சின்னங்கள், வணிக வரிகளின் முலம் லாபம் கிடைத்தல், அதிசயமான பொருட்கள், நாட்டு மக்களின் மகிழ்ச்சி.

பனிரண்டாம் பாவகம்
===================

அரசாங்க மருத்துவமனைகள், உளவுத்துறை, பட்ஜெட் ,ஜெயில் பூங்காக்கள், நாட்டின் எல்லைகள்.

தொடரும்…….

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879.

ஜோதிட சிந்தனை

ஜோதிட சிந்தனை
================

சந்தை
======

கால புருசதத்துவப்படி ஏழாமிடமான துலாம் ராசி சந்தையை குறிக்கும். துலாம் ராசியின் குறியீடு தராசு .துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகின்றது. சனி உச்சம் அடைகின்றது. சூரியனின் நீச்சம் அடைகின்றது.

துலாம் ராசியின் குறியீடான தராசு அங்குள்ள அனைத்துகடைகளிலும் இருக்கும்.

சுக்கிரனின் ஆட்சிவீடாக துலாம் இருப்பதால் சந்தைக்கு வருகின்றவர்களில் பெண்மணிகளே அதிகம் வருகின்றார்கள். அங்கு வியாபாரம் செய்யும் அனைவருக்கும் வியாபாரம் நன்றாக நடைபெறுகின்றது. . சுக்கிரனின் காரகங்களான ஆடை அலங்காரப்பொருட்களை சந்தையில் வாங்கும் வழக்கம் மக்களிடையே உள்ளது.

உச்சம் அடைந்த சனியினால் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. மக்கள் கூட்டத்தை குறிப்பவர் சனியாவார். சந்தைக்கு வருகின்ற மக்களில் ஏழை எளிய மக்களே அதிகம். ஏழை எளிய மக்களை குறிப்பவர் சனியாவார்.
மேலும் சனிகிரகம் வயது முதிர்ந்தவர்களையும் குறிக்கும். வயதான மூதாட்டிகளும் சந்தையில் வியாபாரம் செய்வதை காணமுடிகின்றது.சந்தைக்கு சென்று செருப்பு வாங்கும் வழக்கம் உள்ளது. செருப்பு சனியின் காரகமாகும்.

சூரியனின் நீட்சவீடு துலாம் எனவே நிழல்பாங்கிற்காக சந்தை முழுவதும் கூடாரத்தினால் மூடியுள்ளனர். மேலும் மரநிழலிலும் கடைகளை வைத்து வியாபாரம் செய்கின்றனர். மேலும் சூரியன் அஸ்தமித்த இரவு நேரத்திலேதான் அதிகமாக வியாபாரம் நடைபெறுகின்றது.

ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர்
சிவகாளீஸ்வரன்
7418796879
நன்றி.