திருவாதிரை நட்சத்திரம் 1 ம் பாதம்:

திருவாதிரை நட்சத்திரம் 1 ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையில் ஏதாவது சந்தோஷமான நிகழ்வு நடந்து விடாதா என்ற கேள்வி வரும்.

நான் எப்படி இருப்பேன், என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

ஒவ்வொரு நட்சத்திர பாதமும் 405 நாள் இயங்கும். 405 நாள் 45 நாள் இயக்கும். 45 நாள் 5 நாளை இயக்கும்.
அந்த 5 நாள் 13 மணி 20 நிமிடம் இயங்கும்.
13 மணி 20 நிமிடம் 1 1/2 மணி நேரம் இயங்கும்.
11/2 மணி அடுத்த 10 நிமிடத்தை இயக்கும்.

பத்து நிமிடத்தை ஒரு கிரகம் இயக்கினால் ஒவ்வொரு பாவகத்துக்கும் 12 பாவகமாக பிரித்து
ஒவ்வொன்றுக்கும் 10 நிமிடம் தனித்தனியாக கிரகம் இயங்கும்.

இந்த அட்சய நட்சத்திர புள்ளிக்கு
ALP லக்னம் மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் 1ஆம் பாதம் அவருடைய வாழ்க்கையில் எப்படி இருக்கும்?

திருவாதிரை நட்சத்திரம் 1ஆம் பாதம் 1வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும். தாத்தா பாட்டிகளிடம் இருந்து வரக்கூடிய சொத்து இந்த நட்சத்திர பாதம் வரும்பொழுது வந்துவிடும்.

பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்டது.
சொத்துக்கள் சம்பந்தப்பட்டது.
தாத்தா உடைய வாரிசு அடிப்படையில் வேலைகள் சம்பந்தப்பட்டது.
எதிர்பாராத சந்தோஷங்கள் சம்பந்தப்பட்டது.
குலதெய்வம் சம்பந்தப்பட்டது.
கோயில் சம்பந்தப்பட்டது.
மந்திரம், மாயம் இந்த விஷயங்களை ஜாதகர் நோக்கி பயணிப்பார்.

வாய்ப்புகள் தரக்கூடிய இந்த கால கட்டங்கள் எதிர்பாராத திடீர் திருமணங்கள்.
மதம் மாறிய திருமணங்கள்.
கலப்பு திருமணங்கள்.
காதல் திருமணங்கள் இப்படி எதிர்பாராத திருமணங்கள் நடைபெறக் கூடிய வாய்ப்பு உள்ளது.
சந்தோஷமான காலம்.

இவர் வேலையில் மட்டும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

என்னுடைய அட்சய லக்ன புள்ளி திருவாதிரை 1ஆம் பாதம் சென்றால் கவனமாக இருக்க வேண்டும்.

உங்களை சுற்றி நடக்கக்கூடியது கற்பனை உலகமாக இருக்கும்.
அதை புரிந்து உங்கள் வாழ்கையில் நடந்தால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இந்த அட்சய லக்ன புள்ளி மாறும்.
1வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரம் மாறி எப்படி பலன் அளிக்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://play.google.com/store/apps/details?id=com.guruvashishta.akshayalagnapaddati&hl=ta&gl=US

திருவாதிரை நட்சத்திரம் 2ம்பாதம்:

திருவாதிரை நட்சத்திரம் 2ம்பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி.
“அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் இரண்டாம்
பாதம்.

திருவாதிரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் இந்த ஜாதகருக்கு 1,5,9,8 சம்பந்தப்படும் பொழுது ஜாதகருக்கு எதிர்பாராத கனவு கற்பனைகள் தடைகளை ஏற்படுத்தும்.

இந்த காலகட்டத்தில் அவருக்கு தீய வினைகள் செய்தால் இந்த காலகட்டத்தில் தான் புரியும்.
திருவாதிரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் ஜாதகர் இவராவே ஏதாவது ஒரு கற்பனை செய்துகொள்வார்.

இந்த காலகட்டத்தில் கனவு கற்பனை சித்த பிரம்மை புதையலைத் தேடி அலைவது,
தேவையில்லாத அலைச்சல், தேவையில்லாத விரயங்கள், தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்படுவது,
திருவாதிரை நட்சத்திரம் இரண்டாம் பாதம் போராட்டத்திற்கான வாய்ப்பு உள்ளது.
ராகு பகவான் பலமாக இருந்தால் தப்பித்துக் கொள்வார்.

மந்திர தந்திரங்களுக்கு நிறைய பேர் செலவு செய்கிறார்கள், மந்திர தந்திரங்கள் இருப்பது உண்மைதான், ஆனால் அவருடைய கிரக நிலைகள் நன்றாக இல்லை என்றால் மட்டுமே ஜாதகரை பாதிக்கும் தவிர அதுவரைக்கும் கண்டிப்பாக உள் செல்லாது.

நல்ல நிலையில் இருக்கும் பொழுதே ஜாதகங்களை பார்த்து தன்னுடைய வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

திருவாதிரை நட்சத்திரம் 2ம் பாதம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய போராட்டங்களை ஏற்படுத்தும்.
எது எடுத்தாலும் பிரச்சனைகள் தான் தேவையில்லாமல் உருவாகும்.
மிக கவனமாக இருக்க வேண்டும்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

http://alpairfoundation.org/

திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம்:

திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம்.

ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திர பாதம் 1வருடம்,1 மாதம், 10 நாள் கடந்து செல்லும்.

திருவாதிரை நட்சத்திரம் 3ஆம் பாதம் வந்தால் தன்னுடைய பூர்வபுண்ணியம் சம்பந்தப்பட்டது.
தன்னுடைய முன்னோர்கள் சம்பந்தப்பட்டது.
குலதெய்வம் சம்பந்தப்பட்டது.
குழந்தைகள் சம்பந்தப்பட்டது. தோல்நோய் சம்பந்தப்பட்டது.
அலர்ஜி சம்பந்தப்பட்டது.
மந்திரம் தந்திரம் சம்பந்தப்பட்டது.
இந்த பிரச்சனைகளுக்கு தான் ஜாதகர் வருவார்.

ராகு உடைய நட்சத்திரம் திருவாதிரை, சுவாதி,சதயம் செல்லக்கூடிய காலகட்டங்களில் ஜாதகர் வந்தால் இது சம்பந்தப்பட்ட கேள்விகளை அதிகமாக வைத்திருப்பார்.

வெளிநாடு செல்லலாமா? செல்லலாம்.
ஆனால் தன்னுடைய இன்ப துன்பங்கள், சந்தோஷங்கள், மகிழ்ச்சிகள், வருமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்,
குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டும் அதிகமாக இருக்கும்.
மற்றபடி ஜாதகர் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை கடந்து செல்லும் காலம் இந்த 1 வருடம், 1 மாதம், 10 நாள்.

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம்.

பூர்வ புண்ணியம் சம்பந்தப்பட்ட முன்னோர்களுடைய பெயரை காப்பாற்றுவது இந்த திருவாதிரை நட்சத்திரம் 3ம் பாதம்.

இதுநாள் வரையில் குழந்தைகள் இல்லையா? குழந்தைகள் உண்டு.
திருமணம் நடக்குமா? நடக்கும்.
பெண் வீட்டில் இருந்து வருவார்கள்.

தாத்தா பாட்டி பார்த்த, அம்மா பார்த்த, திருமண பொருத்தம் ஆண், பெண் இருவருக்கும் பார்க்கவேண்டாம்.

கோவிலில் பூக்கட்டி பார்க்கக்கூடிய திருமணங்களுக்கு ஜாதகம் பார்க்கக் கூடாது என்பதுதான் விதி.
திருவாதிரை நட்சத்திரம் மூன்றாம் பாதம் இதை செய்யலாம்.

ராகு கேது நட்சத்திரம் வரும் பொழுது பெண்ணிற்கோ ஆணிற்கோ, சந்திரனிலோ, லக்னத்திலோ
ராகு கேது சம்பந்தப்படும்.
இதுதான் அட்சய லக்ன பத்ததி.

google Playstore ல் Alp Astrology app உள்ளது.
அதை பதிவிறக்கம் செய்து பாருங்கள். இலவச மென்பொருள்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.youtube.com/channel/UCDDgx1ug0tzbJUMKSHJJf4A

திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்:

திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் எந்த நேரம் அதிர்ஷ்டமான நேரம் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதில் ஒவ்வொரு நட்சத்திர பாதம் 1 வருடம், 1 மாதம், 10 நாள் இயங்கும்.

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்.

இது பொதுவான பலன்:

திருவாதிரை 4ஆம் பாதம் வரும்பொழுது தொழில் சம்பந்தப்பட்ட கேள்விக்காக வருவார்.

வெளிநாடு செல்லவேண்டும்,
வெளியூர் போக வேண்டும்,
புதிதாக ஒரு விஷயத்தை தொடங்க வேண்டும்,
இல்லையென்றால் யாரையும் கேட்காமல் ஒரு தொழிலைத் தொடங்க கூடிய காலம் திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்.

உங்களுடைய ஜென்ம லக்னத்தில் இருந்து திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் அட்சய லக்னமாக சென்றால்,
அதாவது மிதுன லக்னம் திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் சென்றால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

இரண்டு மூன்று தொழில்களில் ஈடுபட்டு இதைவிட அது சிறந்ததாக இருக்கும் என்று உங்களுடைய வாழ்க்கையில் போராடக்கூடிய நிலைமை ஏற்படும்.

குழந்தைகள் சம்பந்தபட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
வெளிநாடு சென்றாலும் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்வார்.
சரியான செயல்களைச் செய்யக்கூடிய காலகட்டம்.

சூதாட்டம் மாயமந்திரம் இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபட கூடாது.
அதுவும் மந்திரவாதியாக இருந்தால் திருவாதிரை 4ம் பாதம் செல்லக்கூடிய காலகட்டத்தில் உடல் உபாதைகள் பாதிக்கும்.
மந்திரவாதிகளுக்கு சித்த பிரம்மை பிடிக்கக்கூடிய காலகட்டம் திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம்.

ஒவ்வொரு நட்சத்திர பாதம் ஒரு காலக்கண்ணாடி,
நீங்கள் யார்? எப்படி கடந்து செல்கிறீர்கள்?
ஜென்ம காலத்தில் நீ பிறக்கும் பொழுது ராகு பகவான் எங்கு இருக்கிறார்?
ராகு பகவானிற்கு கோச்சார ராகு எங்கு இருக்கு?
திருவாதிரை நட்சத்திரம் நாலாம் பாதம் செல்லக்கூடிய காலகட்டத்தில் அதுதான் நடக்கும்.

திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் ராகுவோடு சம்பந்தப்பட்டது.
5ல் இருந்தால் ஐந்தாம் வீடு பாதிக்கப்படும்.
10ல் இருந்தால் பத்தாம் வீடு பாதிக்கப்படும்.
எட்டாம் வீடு இருந்தால் ஜாதகரே அதை அனுபவிப்பார்.

உங்கள் அருகில் ஜோதிடர்கள் ஜோதிடம் பார்த்தால்
அட்சய லக்ன பத்ததி முறையில் ஜோதிடம் பார்க்க முடியுமா என்று கேளுங்கள்.
யூட்யூபில் நிறைய விஷயங்கள்
அட்சய லக்ன பத்ததி முறையில் ஜாதகங்களை எப்படி கணிப்பது என்ற வீடியோக்கள் உள்ளது.
அதை பாருங்கள்.
அப்பொழுதுதான் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை உங்களுக்கு புரியும்.

இதனுடைய சாப்ட்வேர் google Playstore ல் இலவச மென்பொருள் உள்ளது.
அதை பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்து பாருங்கள்.

உங்களுடைய பிறந்த தேதி,
பிறந்த நேரம், பிறந்த ஊர் போட்டு ஆய்வு செய்து பாருங்கள். உங்களுடைய ஜென்ம லக்னம் உங்களுடைய அட்சய லக்ன வரும்.

திருவாதிரை நட்சத்திரம் 4ம் பாதம் வந்தால் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.

https://www.alpastrology.com/

பூசம் நட்சத்திரம் 1ம் பாதம்:

பூசம் நட்சத்திரம் 1ம் பாதம்:

அனைவருக்கும் வணக்கம்.
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
நான் உங்கள் பொதுவுடைமூர்த்தி. “அட்சய லக்ன பத்ததி ”
ஜோதிட ஆராய்ச்சியாளர்.

அதிர்ஷ்டம் தரும் அட்சய நேரம்:

இன்றைக்கு பார்க்கக்கூடிய நட்சத்திரம் பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை உண்டு.
சனி பகவானுடைய நட்சத்திரத்தில் வரக்கூடிய நட்சத்திரங்கள் புதன், பூசம் நட்சத்திரம்.

பேரின்பம், சிற்றின்பம் என இரண்டு உள்ளது.
அதில் பேரின்பம் என்பதற்கான முதல் நட்சத்திரம் பூசம் நட்சத்திரம்.
நிறைய கஷ்டங்கள் வாழ்க்கையில் அடிபட்டு ஒரு பேரின்பத்தை பெறக்கூடிய நட்சத்திரம் இந்த பூசம் நட்சத்திரம்.

பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் வரக்கூடிய நாள் எப்படி இருக்கும் எதிர்பாராத திருமண வாழ்க்கை, எதிர்பாராத சந்தோஷங்கள், எதிர்பாராமல் வாழ்க்கையில்
நடக்க கூடிய கடன், வம்பு, வழக்கு, நோய்நொடி போன்ற விஷயங்கள்.
வாழ்க்கையில் நடக்கக் கூடிய அத்தனை விஷயங்களுக்கும் அதிபதியாக வருபவர் இந்த பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

கண்டிப்பாக கவனமாக இருந்து செயல்பட வேண்டும்.
யாராக இருப்பார் என்றால் ஜாதகரே.
இதற்கு மூலாதாரம் குடும்பம்.
பணம் என்ற விஷயத்தை நோக்கி பயணிக்க கூடிய காலம் இந்த பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

எதிர்பாராத திடீர் திருமணங்கள். குழந்தைப்பேறு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
சுப நிகழ்வுகள்.
எதிர்பாராத குழந்தைப்பேறு ஏற்படும் காலம் பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம்.

முகூர்த்தம் குறிக்கக்கூடிய நாள் மிக முக்கியம் என்று என்னால் உணர முடிந்தது.

பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்டது, வெளியூர் சம்பந்தப்பட்டது,
பதவி உயர்வு சம்பந்தப்பட்டது, இதுநாள்வரையில் படித்த படிப்பிற்கு வேலை இல்லை என்பவர்களுக்கு வேலை நிச்சயம் கிடைக்கும்.

டாக்டர்கள் சம்பந்தப்பட்ட படிப்பு படிக்கலாம்.
மறைபொருள் ஆய்வு சம்பந்தப்பட்ட கல்வி படிக்கலாம்.
அதற்கு சனிபகவான் உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் யோகத்தையும்,
தீய நிலையில் இருந்தால் அவ யோகத்தையும் கொடுக்கும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் வரும் பொழுது கண்டிப்பாக யோகம் உண்டு.

ஒவ்வொரு மாதத்திலும் பூசம் நட்சத்திரம் வரக்கூடிய நாள் சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபடுங்கள்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபடுங்கள்.
எதிர்பார்ப்பு வரும் பொழுது தான் தோற்று விடுவோம்.

1 வருடம், 1 மாதம், 10 நாள்
பூசம் நட்சத்திரம் 1ஆம் பாதம் இயங்கும்.
சரணாகதி அடையுங்கள்.

மீண்டும் ஒரு இனியதொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.

https://www.amazon.in/dp/B09636FC97